நேற்று பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்திற்குச் சென்றிருந்தேன். சிறைக்கு வந்த பிறகு தமிழகத்திலிருந்து சசிகலாவுக்கு நிறையக் கடிதங்கள் வருவதாகச் சொன்னார்கள். அதை விசாரிப்பது ஒன்றும் பெரிய காரியமில்லை. சிறைக்குள் ஒரு காவலரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறேன். பொதுவாக அவர் வளாகத்தின் வெளியில்தான் காவலுக்கு இருப்பார். இத்தகையை தகவல்களை அவரிடம் கேட்டால் சொல்லிவிடுவார். ஏகப்பட்ட கடிதங்கள் வருவதாகவும் பெரும்பாலானவை திட்டியும் வசைபாடியுமே வருவதாகவும் சொன்னார். ஆச்சரியமாக இருந்தது. அந்தளவுக்கு நம் மக்களுக்குத் தைரியம் இருக்கிறதா என்று யோசனை வராமல் இல்லை. ஆனால் பலரும் தமது தெளிவான முகவரிகளோடு திட்டி அனுப்புகிறார்கள் போலிருக்கிறது.
அதிசயமாக, தினத்தந்தியின் பெங்களூரு பதிப்பிலும் கூட செய்தியாக வெளியிட்டிருக்கிறார்கள். சசிகலாவுக்கு எதிராகச் செயல்படும் ஏதாவதொரு தரப்பு கூட இதைச் செய்தியாக வெளியிடச் சொல்லி அறிவுறுத்தியிருக்கலாம். எப்படியிருப்பினும் கடிதங்கள் வருகின்றன என்பது உண்மைதான். சசிகலா தரப்புக்கான மக்கள் செல்வாக்கு இதுதான். இப்பொழுதெல்லாம் சிறைச்சாலைக்கு வந்து பார்ப்பதற்குக் கூட ஆட்கள் இல்லை. இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் மட்டும் சிறை வளாகத்திற்கு அருகாமையிலேயே ஒரு வீடு பார்த்து குடியிருக்கிறார் போலிருக்கிறது. அவர்தான் அடிக்கடி சிறைக்குள் வந்து செல்வதாகக் காவலர் சொன்னார். மற்றபடி சிறை வளாகம் காற்று வாங்கிக் கொண்டிருக்கிறது. கேட்பாரில்லை.

ஜெயலலிதா மறைந்த போது சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆன போதும், சசிகலா சிறைக்குள் செல்லும் போதும் டிடிவி தினகரன் கட்சியின் துணைப்பொறுப்புக்கு வந்த போதும் கட்சியின் அதிகாரத்தை முழுமையாக அவர்கள் எடுத்துக் கொண்டதாகவும் இனி படம் காட்டுவார்கள் என்றும் பிம்பம் உருவாகாமல் இல்லை. ஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. கட்சியின் தலைமையைக் கைப்பற்றிவிட்டால் காசு கொடுத்து வாக்குகளைச் சேகரித்துவிடலாம் என்பதெல்லாம் மனக்கணக்குத்தான்.
மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலிலேயே நிலைமை தெரிந்துவிடும். உத்தேசமான கணிப்புப்படி மூன்றாமிடத்தைப் பிடிப்பதற்கே கூட தினகரன் மென்று தண்ணீர் குடிக்க வேண்டியிருக்கும் என்றுதான் தோன்றுகிறது. அதிகாரம் வேண்டும் என்பதற்காக அமைச்சர்களாகவும் எம்.எல்.ஏக்களாகவும் இருக்கிறவர்கள் குழைந்து நெளிவதால் மக்களிடையே செல்வாக்கு இருக்கிறது என்று அர்த்தமில்லை. சாலையில் செல்கிற சாமானிய மனிதர்கள் யாரிடம் வேண்டுமானாலும் பேசிப் பார்க்கலாம். பெங்களூரில் ப்ரண்ட்டன் சாலையில் ஒரு குடிகாரர் இருக்கிறார். தினசரி சப்போட்டா பழம் விற்று வருகிற வருமானத்தைக் குடித்துவிட்டுச் செல்கிற மனிதர். ஜெயலலிதாவின் நிழற்படத்தை சட்டைப்பையிலேயே வைத்துக் கொண்டு கிடப்பார். அவரிடம் பேச்சுக் கொடுத்தால் நாறடிக்கிறார். இவர் சொல்வதுதான் வேத வாக்கு என்ற அர்த்தத்தில் குறிப்பிடவில்லை. ஒரு பானை சோற்றில் ஒரு சோறு அவர். அவ்வளவுதான்.

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு தமிழகத்தில் உருவாகியிருக்கும் அரசியல் வெற்றிடத்தை பாஜக அறுவடை செய்ய விரும்புகிறது என்பது உண்மைதான். ஆனால் கி.வீரமணி மாதிரியானவர்கள் சொல்வது போல ‘சசிகலாவால்தான் பா.ஜ.க உள்ளே வருவதைத் தடுக்க முடியும்’ என்ற நம்பிக்கையைவிட வேறு அபத்தம் இருக்க முடியாது. ஒருவேளை மன்னார்குடி வகையறா ஒதுக்கி வைக்கப்பட்டால் அதிமுக தப்பி வலுவான கட்சியாகச் செயல்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இந்த வகையறா இப்படியே திரியுமென்றால் மக்களிடையே இவர்கள் தரப்புக்கு பல்லிளித்துக் கொண்டிருக்கிற செல்வாக்கு லட்சணத்துக்கு ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட இயக்கத்துக்கு ஒவ்வொரு அடியாகக் குழி தோண்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.
சசி- ஓபிஎஸ் என இரு தரப்பும் அடித்துக் கொள்ளும் போது இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுவிடும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் இந்த முடக்கத்தை வைத்துக் கொண்டு வரலாறு திரும்புகிறது என்றெல்லாம் கற்பிதம் செய்து கொள்ள வேண்டியதில்லை. எண்பதுகளின் இறுதியில் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகான அதிமுகவில் ஜெயலலிதாவின் எழுச்சியை தினகரனுடனும் சசிகலாவுடனும் இன்னபிற மன்னார்குடி உறுப்பினர்களுடனும் எந்தவிதத்தில் ஒப்பிட முடியாது. அன்றைக்கு ஜெயலலிதாவுக்கு கூட்டத்தை ஈர்க்கிற திறமை இருந்தது. ராஜ்யசபாவில் எம்.பியாக இருந்த போது அவர் டெல்லியில் திரட்டி வைத்திருந்த தொடர்புகளும், ராஜீவ்காந்தியின் ஆதரவும் அவருக்கு பக்க பலமாக இருந்தன. தேர்தலில் கிட்டத்தட்ட முப்பது தொகுதிகளில் வென்றார். இப்படி எல்லாமுமாகச் சேர்ந்து அவரால் இரட்டை இலையை மீட்டெடுக்க முடிந்தது.
இதில் எந்த யோக்கியதை சசி தரப்புக்கு இருக்கிறது?
பணம் மட்டுமே அரசியல் இல்லை. மக்கள் சற்றேனும் விரும்ப வேண்டும். மக்களிடையே செல்கிற அளவுக்கேனும் தகுதி வேண்டும். எதுவுமேயில்லாமல் வரலாறு திரும்புகிறது என்று எப்படி வாய் கூசாமல் சொல்ல முடியும்? ஜெயலலிதாவுக்கு இருந்த கவர்ச்சியில் ஒரு சதவீதம் கூட இந்த முகங்களுக்கு இல்லை என்பதை வெளிப்படையாகவே பேசலாம். எம்.ஜி.ஆரின் மறைவுக்கு முன்பாகவே ஜெயலலிதா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்திருந்தார். மக்களும் ‘இனி அடுத்தது இந்தம்மா’தான் என்கிற மனச்சாய்வுக்கு வந்திருந்தார்கள். எதிர்ப்பு இருந்த அதே அளவுக்கு அவருக்கு ஆதரவும் இருந்தது.
இன்றைக்கு அதிகாரத்திற்காக குழைந்து கொண்டிருக்கும் கட்சி நிர்வாகிகளைத் தாண்டி சசிகலா தரப்புக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது?
ஜெயலலிதாவின் காலத்திலும் வாக்குக்கு பணம் கொடுத்த போது மக்கள் வாங்கிக் கொண்டுதான் வாக்களித்தார்கள். ஆனால் அப்பொழுது மக்கள் ‘ஜெயலலிதாவுக்கு வாக்களிக்கவே கூடாது’ என்ற வெறுப்பில் இருந்ததாகச் சொல்ல முடியாது. அப்படி மக்கள் நினைத்த தருணங்களில் எவ்வளவுதான் கொடுத்தாலும் தோற்கடித்தார்கள். மற்றபடி, தமிழகத் தேர்தல்களைப் பொறுத்தவரையிலும் ஜெயலலிதாவா? கருணாநிதியா என்ற கேள்விதான் எழும். இருவரையுமே சகித்துக் கொள்ள மக்கள் பழகியிருந்தார்கள். அந்த மனநிலையில் இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுத்தார்கள். இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. சசிகலாவின் தரப்பைத் தேர்ந்தெடுத்துவிடக் கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தத் தரப்பை சகித்துக் கொள்கிற மனநிலையில் பெரும்பான்மையான மக்கள் இல்லை என்பதுதான் நிதர்சனம். ‘ஆட்சி அவர்களிடம் இருக்கிறது..எதற்கு வம்பு?’ என்று அடங்கியிருப்பதனால் மக்கள் ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தமில்லை.
ஆனால் ஒன்று- அரசியலைப் பொறுத்தவரையில் ‘நமக்கு ஒத்து வராது’ என்று தாமாகவே ஒதுங்கிக் கொள்கிறவர்களின் எண்ணிக்கை எப்பொழுதுமே வெகு குறைவு. மிக மோசமாக தோற்கடிப்பட்டு மக்களால் ஒதுக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கைதான் அதிகம். விதி அப்படித்தான் என்றால் யாரால் என்ன செய்ய முடியும்?
6 எதிர் சப்தங்கள்:
தினகரன் நான்காம் இடம் பிடிப்பார் என நினைக்கிறேன்.
பாஜக ஒரு அரசியல் கட்சி. ஒரு வெற்றிடம் ஏற்படும் பொது, அது நுழைய முற்படுவதில் தப்பு இல்லை. ஆனால் வீரமணி கூறுவது போல் சசிகலாவால் தான் பாஜகவை தடுக்க முடியும் என்பது அபத்தம்.
ஊழல் பற்றிய தெளிவு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இது தான் உண்மை.
I think you are seriously underestimating Sasi and overestimating Jaya. Never ever write off anyone in politics. The situation is volatile. A lot of AIADMK thondans are on the fence. My dad's generation viscerally hated Jaya - we all know what happened. There is also a reason why Jaya won the 2016 elections - if not for the Chennai floods she would have won ~ 15-20 more seats. If Dhinakaran wins, which is very much a possibility then they more or less will survive. OPS is being projected as a doer CM which he is not - in fact is links with Vaikundarajan are well known. AFAIK, no party can aim to rule Karnataka and TN at the same time. BJP can make a choice here for the bigger state - TN. Otherwise, they simply cannot win here.Anyway interesting times ahead.
அய்யா பரமசிவம்,
இவ்வளவு நேரம் வா.மணி வாயில் நுரை தள்ள என்ன சொல்லிக்கொண்டிருந்தார் ??
சொன்னதை சொன்னவரே திருப்பிச்சொன்னால் மகா எரிச்சல் வரும். இதில் நீங்க வேற கமெண்ட் போடுகிறேன் என்று repeat அடித்தால், எனக்கிருக்கும் ஒன்பது ஓட்டைகளிலிருந்தும் புகை வராமல் என்ன செய்யும் ???
dinakaran has some plan to win so only he is contesting at great risk. lets see. i'm eager to see jaya TV on election result day if dinakaran looses. that day will be interesting.
சொல்வதற்கு ஒன்றும் இல்லை. தேர்தல் முடிவுகள் வரட்டும்.
இருக்கிற 4 வருட ஆட்சியைத் தக்க வைத்து எவ்வளவு அடிக்க முடியுமோ அடித்து விட்டு ஏற்கனவே பாலை வனமாகி விட்ட தமிழ் நாட்டிலிருந்து வெளியேறி வாங்கிய/ வாங்கும் தீவுகளில் sun bath எடுக்க, குடும்பத்துடன் சென்று அங்கேயே தங்கி விடுவார்கள்.;)
Post a Comment