Aug 10, 2015

வருங்கால அமெரிக்க ஜனாதிபதிஒரு மொட்டைப்பாறை மீது கையை தலைக்கு முட்டுக் கொடுத்து படுத்தபடியே யோசித்துக் கொண்டிருந்த போது அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்ற முடிவுக்கு வர முடிந்தது. தினமும் விடிந்தால் சோற்றுப் போசியைத் தூக்கிக் கொண்டு அலுவலகத்துக்கு வருவதும் பொழுது சாய்ந்தால் வீட்டுக்குச் சென்று காலை நீட்டுவதுமாக சலிப்பாக இருக்கிறது. வாழ்க்கையை வண்ணமயமாக மாற்றிவிடலாம். சினிமா அல்லது அரசியல். சினிமாவில் நடிக்க தலை நிறைய முடி வேண்டும் சூர்யாவைவிட உயரம் கூடுதலாக வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் விதிக்கிறார்கள். வில்லன் காமெடியன் என்பதெல்லாம் வேண்டாம். மணந்தால் மகாதேவி மாதிரி நடித்தால் அனுஷ்காவுக்கு நாயகன் இல்லையே சினிமாவே வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அனுஷ்காவுக்கு நாயகன் என்றால் ‘உன் உசரத்துக்கு காலுக்கு கீழாக ஏணியைத் தான் கட்ட வேண்டும்’ என்கிறார்கள். வேறு வழியில்லை. அடுத்த களம் அரசியல்தான்.

கேப்டனிலிருந்து தனியரசு வரைக்கும் மாநில மாநாடுகளை அறிவித்துவிட்டார்கள். வைகோவிலிருந்து ஸ்டாலின் வரைக்கும் ஆளாளுக்கு ஒரு போராட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டார்கள். அன்புமணியிலிருந்து சரத்குமார் வரைக்கும் அறிக்கைகளால் செய்தித்தாள்களை நிரப்புகிறார்கள். ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டுமானால் ஒன்று கூட மிச்சமில்லை. தீக்குளித்து கவனத்தை ஈர்க்கலாம்தான். ‘எவன் சாவான்?’ என்று காத்திருக்கும் கழுகுகள் பாடைக்கு முன்பாக நின்று செல்ஃபி எடுத்து ஆளாளுக்கு ஸ்கோர் செய்து நம்மை மண்ணுக்குள் போட்டு அமுக்கிவிடுவார்கள். ‘அம்மாவுக்காக தீக்குளித்த மணிகண்டனுக்கு நிவாரண நிதி’ என்று ஆறேழு லட்சத்தைக் கொடுத்துவிட்டு விடிய விடிய ஜெயா டிவியில் மானத்தை வாங்குவார்கள். இவர்களோடு மல்லுக்கட்ட முடியாது. 

பேசாமல் அமெரிக்க ஜனாதிபதி ஆகிவிடலாம். உங்களுக்கு சிரிப்பு வருமே. ஆனானப்பட்ட ஆபிரகாம் லிங்கனையே பார்த்து சிரித்த உலகம். நம்மைப் பார்த்துச் சிரிக்காதா? சிரிக்கட்டும். ஆனால் இது பெரிய காரியமாகவெல்லாம் தெரியவில்லை. எதுவா? அதுதான். அமெரிக்க ஜனாதிபதி ஆவது. பத்து வருடங்களுக்கு முன்பாக மோடி பிரதமர் ஆவார் என்று எத்தனை பேர் எதிர்பார்த்தார்கள்? அவர் ஆகவில்லையா? அப்படித்தான்.

சில அதிரடித் திட்டங்கள் இருக்கின்றன.

‘ஒபாமா அரசே சாராயத்தை நிறுத்து’ என்றவொரு போராட்டத்திலிருந்து ஆரம்பிக்கலாம். அமெரிக்காவில் பூரண மதுவிலக்கு கோரி உண்ணாவிரதம் இருக்கலாம்.‘துருப்பிடித்த அரசு...நீதி கேட்கும் பேரணி’ என்று கலிபோர்னியாவில் மாநாட்டுப் பந்தலைப் போட்டு லாரியில் ஆட்களைக் கொண்டு வந்து இறக்கலாம். ஒவ்வொரு மாகாணத்திலும் நடைபயணம் ஆரம்பிக்கலாம். செல்போன் டவர் மீது ஏறுதல், வெள்ளை மாளிகைக்கு முன்பாக ஹிலாரி, ஒபாமாவின் கொடும்பாவிகளை எரித்தல், நியாயம் கேட்டு கும்பல் கும்பலாக மொட்டையடித்தல், தீச்சட்டி ஏந்துதல், மண்சோறு சாப்பிடுதல், நியூயார்க்கிலிருந்து வாஷிங்கடன் வரை மனிதச் சங்கிலி என நிறைய சாத்வீகத் திட்டங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றையும் வரிசையாக இறக்கலாம். அமெரிக்காவே அல்லோகலப்பட வேண்டும். இப்பொழுதே எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் எதிராளிகள் விழித்துக் கொள்ளக் கூடும் என்பதால் ரகசியம் காக்க வேண்டியிருக்கிறது.

இந்த லட்சியத்தை அடைய அணி திரட்ட வேண்டும். மாணவரணி, இளைஞரணி, தொண்டரணி, மகளிரணி, குறிப்பாக உளவு அணி, குசலம் பேசும் அணி என்று இதுவரை உலக அரசியல் வரலாற்றிலேயே இல்லாத சகல அணிகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்க வேண்டிய வேலை இருக்கிறது. அதற்கு முன்பாக உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். ஒருவனே எல்லா வேலைகளையும் செய்து ஜனாதிபதி ஆவது லேசுப்பட்ட காரியமில்லை. அதனால் ‘மிஸ்டு கால் கொடுத்தால் உறுப்பினராகலாம்’ என்று அறிவிப்பை வெளியிட வேண்டும். 

அமெரிக்காவில் குடிசைகள் ஏதேனுமிருப்பின் கணக்கெடுத்து அவர்களோடு சேர்ந்து கஞ்சி குடிக்க வேண்டும். குளத்து வேலை, சாலைப் பணி போன்றவற்றைச் செய்து கொண்டிருப்பவர்களுடன் நிழற்படங்களை எடுத்து ஏழைப் பங்காளனே வருக எங்கள் தேசத்துக்கு ஏற்றம் தருக என்று சொந்தக் காசைப் போட்டு போஸ்டர் அடிக்க வேண்டும். 

இப்படி ஆயிரமாயிரம் கனவுகளும் அதற்குச் செய்ய வேண்டிய வேலைகளும் இருக்கின்றன. இனி தூங்கப் போவதில்லை. காலில் சக்கரத்தையும் தோள்பட்டைகளில் இறக்கையையும் கட்டிக் கொண்டு சுழல வேண்டும்.

செப்டம்பர் 18 ஆம் தேதி கட்சியின் தலைமையகமான டென்வரில் கட்சியின் செயற்குழு கூட்டத்தை நடத்தலாம். அக்டோபர் 24 வரை முழுநேர கட்சிப்பணிதான். அதுவும் அமெரிக்காவிலேயே. களப்பணியென்றால் என்னவென்று ஒபாமாவுக்கு காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. கட்சியின் கொடி, சின்னம், வேட்பாளர்கள் எல்லாம் அங்கு வைத்தே அறிவிக்கப்படும். அதன் பிறகு 2016 அமெரிக்க அதிபர் தேர்தல் வரைக்கும் நம்முடைய ராஜ்ஜியம்தான். தேர்தலில் வென்றபிறகு உலகமே நம்முடைய ராஜ்ஜியம்தான். 

முடியாது என்கிறவனுக்கு சிறுகுன்றும் பெரு மலைதான். முடியும் என நினைக்கிறவனுக்கு இமயமலையும் சிறு கரடுதான். நம்பிக் களமிறங்குவோம். நாளைய அமெரிக்கா நம் கையில். 

கட்சியின் உறுப்பினரிலிருந்து பொதுச்செயலாளர் வரைக்கும் அத்தனை பொறுப்புகளும் காலியாகத்தான் இருக்கின்றன. யார் வேண்டுமானாலும் அணுகலாம். 

ம்ம்ம்...தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும். 2016 லட்சியம்! 2020 நிச்சயம். 

குறிப்பு: நிஜமாகவே அமெரிக்கா வருகிறேன். ஐந்து வாரங்களுக்கு அங்கு தங்க வேண்டியிருக்கிறது. டென்வரில் யாராவது இருந்தால் தெரியப்படுத்தவும். ‘வீட்டிற்கு சாப்பிட வருகிறேன். அதனால் இட்லியும் சாம்பாரும் வேண்டுமென்றோ, மாலை நேரத்தில் பிராந்தி வாங்கித் தரவும்’ என்றெல்லாம் சொல்லி ஜெர்க்கினும் ஜீன்ஸ் பேண்ட்டும், செருப்புமாக வந்து நின்று கடுப்பேற்ற மாட்டேன். தோதாக இருந்தால் சந்திக்கலாம். இல்லையென்றால் சில ரகசியமான இடங்களைப் பற்றி அதிரகசியத் தகவல்களைச் சொன்னால் போதும். கமுக்கமாக பார்த்துவிட்டு வந்து அனுபவங்களைக் கட்டுரைகளாக எழுதுவதற்கு ஏதுவாக இருக்கும். அதற்குத்தான். 

21 எதிர் சப்தங்கள்:

Mahesh said...

ஹஹஹா குசும்பு தாங்க முடியல:)

தங்கள்இன் அமெரிக்க பயணம் நல்லபடி அமையட்டும். அப்பரம் அந்த ரகசியமான இடங்கலைப் பற்றி மரக்காம்அ எழுதவும்:)))

Anonymous said...

இன்னைக்கு வூட்டுல அடி கன்பார்ம்

சேக்காளி said...

//பார்த்துவிட்டு வந்து அனுபவங்களைக் கட்டுரைகளாக எழுதுவதற்கு ஏதுவாக இருக்கும். அதற்குத்தான்//
அப்ப அமெரிக்கா போன ஒடனே கோவா ஆன்மீக சுற்றுலா கட்டுரையா? தலைவரே!

சேக்காளி said...

//தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்//
படமே வெளியாகல. அதுக்குள்ள ஏஏஏஏஏஏஏன்?

சேக்காளி said...

//மாணவரணி, இளைஞரணி, தொண்டரணி, மகளிரணி, குறிப்பாக உளவு அணி, குசலம் பேசும் அணி என்று//
வலைத்தள அணி?

SYED said...

போட்டோ யார் எடுத்தது பாஸ் ?? ஒரு பெரிய டீம் வேலை செய்கிறது போல ... இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலை ...

சேக்காளி said...

//இப்படி ஆயிரமாயிரம் கனவுகளும் அதற்குச் செய்ய வேண்டிய வேலைகளும் இருக்கின்றன. இனி தூங்கப் போவதில்லை//
வேலையும் குடுத்து அமெரிக்காவுக்கு விசாவும் வாங்கிக் குடுத்த கம்பெனி ஓனர் ஒங்களுக்கு ஏதாவது கேட்குதா?

Bonda Mani said...

நீங்க இந்திய உளவு பிரிவு "ரா" ஏஜென்ட் என சந்தேகிக்க வாய்ப்பு இருக்கிறது.
அமெரிக்க மண்ணில் இறங்கியவுடன் கூலிங் கிளாஸ்சை கழட்டி விடவும்.

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

நீங்கள் ஏற்கனவே சரியாக தூங்காததன் வீளைவு .
சரி போகட்டும் ,என் கனவை உங்களுக்கு சொல்கிறேன் .உங்கள் வண்டி மிக வேகமாக போய்க் கொண்டு இருக்கிறது எதேச்சையாக சைடு மிர்ரரை சரி பண்ணும் போது நீங்கள் பார்த்து விடுகிறீர்கள் அது CIA யின் கூலிப்படை வண்டி (USA iந்த கட்டுரையை வாசித்து விட்டார்கள் போல!).ஒரு கணம் உங்களுக்கு வியர்த்து கொட்டுகிறது ..கை நடுங்கிறது என்னால் உணர முடிகிறது .பின்னால் நான் உட்கார்ந்து இருக்கிறேன் .சார் குதித்து தப்பித்து விடுங்கள் என்கிறேன் (இங்கு எனக்கு ஒரு குழப்பம் நாம் இரண்டு சக்கர வானத்தில் போகிறோமா நான்கு சக்கர வாகனத்தில் போய் கொண்டு இருக்கிறோமா தெரியவில்லை .!) நீங்கள் மறுக்கிறீர்கள் .CIA நெருங்கி விட்டது .சில இன்ஞ் கேப்பில் நான் புரிந்து கொண்டேன் mission impossible ( இன்னும் பார்க்கவில்லை ட்ரைலர் பார்த்த எஃபெக்ட் !) நான் வம்படியாக உங்களை தள்ளி விடுகிறேன் .சட்டெனெ ஒரு பாலம் அந்த இடத்தில் CIA வண்டிக்கு கண்ணில் தூசியை தூவி விட்டு தள்ளி விட்டதால் நீங்கள் தப்பிகிக்றீர்கள் .நான் மட்டும் வண்டியில் இப்போது mission possible நான் அந்தரத்தில் தூக்கி வீசப்படுகிறேன் .என் உடல் மட்டும் கீழ் நோக்கி வருவதை நானே பார்கிறேன் !
அடுத்த நாள் உங்கள் பதிவில் நான் கொட்டை எழுத்தில் வருந்தப் படுகிறேன் .விசயம் கொந்தளிக்கிறது.நம் பார்லிமெண்ட் மூலம் அமெரிக்க பார்லிமெண்டில் இன்னும் கொளுந்து விட்டெறிகிறது அங்குள்ள எதிரி கட்சிகள் உங்களை அவர்கள் சார்பில் நிறுத்துகிறது .நீங்கள் அமெரிக்க ஜனாதிபதி ஆகிவிட்டீர்கள் .நிசப்தம் அறக்கட்டளைக்கு உலகெங்குமிருந்தும் நிதிகள் குவிகிறது .
சில மாதங்களூக்கு பிறகு ஒரு நள்ளிரவு நேரம் இந்தியாவில் , ஒசாமா பின்லேடனை கொல்ல அமெரிக்க சீல் 6 படையினருக்கு உதவிய நைட்விஷன் ஹெலிகாப்டர் ஓசையில்லாமல் பறக்கிறது .அது அனுஷ்கா வீடு .( எங்கோ ஒரு புளிய மரத்தில் உட்காந்து கொண்டு என் ஆத்மா சிரிக்கிறது !)

பொன்.முத்துக்குமார் said...

// பேசாமல் அமெரிக்க ஜனாதிபதி ஆகிவிடலாம். //

ஆவலாம்தான், ஆனா அதுக்கு இங்கேயே பொறந்திருக்கணுமாம். அதனாலதான் ஆனானப்பட்ட ஆர்னால்டே, நமக்கு கலிஃபோர்னியா கவர்னர் பதவியே போதும்னுட்டு கம்-னு இருந்துட்டாராம்.

இல்ல, ஜனாதிபதிதான்-னு அடம்புடிச்சா நீங்க செய்ய வேண்டிய மொதல் போராட்டம் “நாட்டாம .. தீர்ப்ப மாத்து”-தான்.

அன்பே சிவம் said...

ஆத்தாடியாத்தா இந்த ஊருல இருக்குற இடமே தெரியாம இருக்குற என்ன மாதிரி ஆளுங்களை காதல் பரத் மாதிரியாக்கி பின்ன ஒரு மாதிரி ஆக்கி பாக்குற உங்க திட்டம் தெரிஞ்சு போச்சு. (என்ன மாதிரி ஆளுங்க சார் நீங்க) ஏற்கனவே அங்கனயே ஒருத்தர் தான் தான் வருண்'கால அமேரிக்க அதிபர் என்று சொல்லிக்கொன்று கொண்டிருக்கிறார். இதுல நீங்க வேற ?!

Shankar said...

Welcome to the US.
It is a pity that I am presently in Atlanta and leaving for Chennai in five weeks.
I would have loved to host you and take you around here.
Better luck next time.
But, looking forward to your juicy escapades during your trip.

regards

Shankar

Ravi said...

Dear Mani,

Good to know about your visit. Would you be visiting Los Angeles?

Regards,
Ravi.

Kavthai priyan said...

kolkai parubu chyalar pathavi enaku.....

hapyy journey, Obamava ketennu solunga.

pongaluku urkuku varan sonanar varumbothu karumbu marakama vangi varasolunga thalivare.

baskar

Sundar Kannan said...

5வது பத்தியிலேயே தெரிந்துவிட்டது, மணியை அமெரிக்காவுக்கு அனுப்ப போகிறார்கள் என்று.
சென்று வென்று வருக . ஜெயி ஹிந்த்

பரமசிவம் said...

வருக, வருக. ஆனால் நான் நியூ ஜெர்சியில் இருப்பதால் வருக வருக மட்டும் தான்.

Vinoth Subramanian said...

Happy journey sir!!! Have a great trip!!! Every plan is okay. Latest news... Obama wants to join your party. Accept him please... Have a great time in America sir. Let it be a successful journey. All the very best!!!

SiSulthan said...

///Krishna moorthy said..எங்கோ ஒரு புளிய மரத்தில் உட்காந்து கொண்டு என் ஆத்மா சிரிக்கிறது //..தொடருமா? இன்னொரு பேய் கதையா??அநுஸ்கா கதாநாயகியா?
தாங்குமா தமிழகம்??

Prabhu Jayaprakasan said...

On behalf of every Indian living abroad, but are deeply connected to basic roots in India & sincerely appreciate your good deeds, please accept our heartfelt Welcome to USA!

Do you have any plans to visit East Coast ?
We live in Boston, and would love to have you over here during your trip.

Take care.

- Prabhu Jayaprakasan
781-330-6343
joyprabhu@gmail.com

சேக்காளி said...

//ஜனாதிபதிதான்-னு அடம்புடிச்சா//
அமெரிக்கா மேல படை எடுத்து கைப்பற்றி பின் அங்குள்ள சட்டத்தினை கரட்டடிபாளையம் வா மணிகண்டனும் ஜனாதிபதி தேர்தல் ல நிக்கலாமுன்னு மாத்தி அப்புறம் தேர்தல் ல நின்னு ஜெயிச்சு ஜனாதிபதி ஆயிருவாருல்ல.
கொக்கு தலயில வெண்ணெய் பழமொழி ஞாவத்துக்கு வந்தா வேற இங்க வெளக்கம் கேக்கக்கூடாது.

Anonymous said...

Happy Journey.
2nd photo is not correct.. Instead of straight you should give side pose looking up :-)

-Sam