வேமாண்டம்பாளையம் பள்ளியில் தற்காலிக கணினி ஆசிரியரை நியமிப்பதற்கான தொகையை அவர்களிடம் சேர்பிப்பதற்கு இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது. பள்ளியின் தலைமையாசிரியர் பெயரில் அவர்களிடம் வங்கிக் கணக்கு இல்லை. அதுதான் தாமதத்திற்கு காரணம். வேறு வழிகளும் தெரியவில்லை. நிசப்தம் அறக்கட்டளை என்ற பெயரில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தாகிவிட்டது. ஆனால் ஒரு வங்கிக் கணக்கைத் தொடங்க முடியவில்லை. வங்கிகளில் ஆயிரத்தெட்டு காரணங்களைச் சொல்கிறார்கள். அறக்கட்டளை என்றாலே வருமான வரித்துறையில் இருந்து கேள்வி கேட்பார்கள் என்றெல்லாம் காரணங்களை அடுக்குகிறார்கள். தொலைந்து போகட்டும் என்று விட்டுவிட்டேன். ஊருக்குப் போகும் போது தெரிந்த வங்கி மேலாளரிடம் சொல்லி ஒரு கணக்கைத் தொடங்கிவிடலாம்.
எதற்கு இந்த அறக்கட்டளை, வங்கிக் கணக்கு எல்லாம்? இப்படியே உதவுபவர்களிடம் சொல்லி பயனாளர்களின் கணக்குக்கு நேரடியாக பணத்தை அனுப்பச் சொல்லிவிடலாம்தானே என்று கேட்கலாம்தான். அப்படித்தான் நானும் நினைத்திருந்தேன். ஆனால் ஐம்பதாயிரம் ரூபாய் மட்டும் தேவைப்படும் ஒருவரின் வங்கிக் கணக்கைக் கொடுத்தால் விடிந்து எழுவதற்குள் ஒன்றரை லட்சம் ரூபாயை கணக்கில் போட்டுவிடுகிறார்கள். உதவி பெறுபவர்களிடம் உபரியைத் திருப்பி கேட்கவா முடியும்? சற்று அதிகமாகக் கொடுப்பது தவறில்லை. ஆனால் மூன்று மடங்கு அதிகமாகக் கொடுக்க வேண்டியதில்லை அல்லவா? உபரிப்பணம் ஒரு லட்சத்தைக் கொண்டு இன்னும் இரண்டு பேருக்கு உதவியிருக்கலாம்.
இன்னொரு சம்பவமும் கூட நடந்தது. அதை வெளியில் சொல்லலாமா என்று தெரியவில்லை. உதவுபவர்களின் மின்னஞ்சல், தொடர்பு எண் போன்றவற்றை உதவி பெறுபவர்களிடம் கொடுப்பது ஒரு விதத்தில் நல்லது என்று நினைத்திருந்தேன். ஆனால் அப்படியில்லை போலிருக்கிறது. ஒருமுறை உதவி பெற்றவரே இரண்டாவது முறையும் அவர்களை நேரடியாக அணுகி உதவி கோருவது என்பது எனக்கு சரியானதாகப்படவில்லை. அப்படித்தான் நடந்திருக்கிறது. இரண்டாவது முறையாக அந்த நபர் உதவி கேட்டது அவ்வளவு முக்கியமில்லாத காரியம். ஆனால் இவர் நேரடியாக அணுகிக் கேட்டதாலோ என்னவோ முதல் முறை உதவியவர்களே மீண்டும் ஐம்பதாயிரம் வரைக்கும் கொடுத்திருக்கிறார்கள். எனக்கும் தகவல் தெரியவில்லை. கேட்ட போது ‘ப்ரெண்ட்ஸ் உதவினாங்க’ என்று சொல்லி முடித்துவிட்டார். என்னிடம் சொல்ல வேண்டும் நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இப்படி முக்கியமில்லாத காரியத்திற்காக கொடுக்கப்பட்ட அந்த ஐம்பதாயிரம் இருந்திருந்தால் இன்னொரு மாணவனுக்கு உதவியிருக்கலாம் என்பதுதான் வருத்தம். சங்கடமாக இருந்தது.
இதையெல்லாம் வெளியில் சொல்கிறான் என்று தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். மேம்போக்காக பார்த்தால் இவையெல்லாம் தவறில்லைதான். ஆனாலும் தவறாகத்தான் படுகிறது.
உதவுபவர்கள் யாரும் பணத்தை மரத்திலிருந்து பறித்துக் கொடுக்கவில்லை அல்லவா? அவர்களது உழைப்பு அது. ‘இன்னாருக்கு உதவுங்கள்’ என்று கோரிக்கை விடுத்து எழுதுவதும் பேசுவதும் சுலபம். செய்துவிடலாம். ஆனால் சட்டைப்பையிலிருந்து ஒற்றை ரூபாயை வெளியில் எடுப்பதுதான் சிரமம். அதற்கான மனம் வேண்டும். அப்படியான மனது அமைந்து கொடுக்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் அவர்களது குடும்பத்திற்கான உரிமைப் பொருள். அதை மற்றவர்களுக்காகத் திசை திருப்பும் போது எவ்வளவு நேர்மையாகவும் effective ஆகவும் பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் பாவம் வந்து சேரும்- ஏழேழு தலைமுறைக்கும்.
அதற்காகத்தான் இந்த அறக்கட்டளை, வங்கிக் கணக்கு எல்லாம். நம்மால் முடிந்த அளவுக்கு ஒழுங்குபடுத்துதல் இருக்கும் அல்லவா? சுமையைத் தூக்குகிறேன் என்று தெரியும். ஆனால் செய்கிறேன் என்று இறங்கிவிட்டு இந்தச் சுமைக்கு பயப்படுவதுதான் தவறு.
உதவுபவர்கள் யாரும் பணத்தை மரத்திலிருந்து பறித்துக் கொடுக்கவில்லை அல்லவா? அவர்களது உழைப்பு அது. ‘இன்னாருக்கு உதவுங்கள்’ என்று கோரிக்கை விடுத்து எழுதுவதும் பேசுவதும் சுலபம். செய்துவிடலாம். ஆனால் சட்டைப்பையிலிருந்து ஒற்றை ரூபாயை வெளியில் எடுப்பதுதான் சிரமம். அதற்கான மனம் வேண்டும். அப்படியான மனது அமைந்து கொடுக்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் அவர்களது குடும்பத்திற்கான உரிமைப் பொருள். அதை மற்றவர்களுக்காகத் திசை திருப்பும் போது எவ்வளவு நேர்மையாகவும் effective ஆகவும் பயன்படுத்த வேண்டுமோ அப்படி பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் பாவம் வந்து சேரும்- ஏழேழு தலைமுறைக்கும்.
அதற்காகத்தான் இந்த அறக்கட்டளை, வங்கிக் கணக்கு எல்லாம். நம்மால் முடிந்த அளவுக்கு ஒழுங்குபடுத்துதல் இருக்கும் அல்லவா? சுமையைத் தூக்குகிறேன் என்று தெரியும். ஆனால் செய்கிறேன் என்று இறங்கிவிட்டு இந்தச் சுமைக்கு பயப்படுவதுதான் தவறு.
வேமாண்டம்பாளையம் பள்ளிக்கு திரு.சங்கர் ரூ.15000மும் திரு. விஷ்ணு ரூ.10000மும் அனுப்பிவிட்டார்கள். தொகையை பெற்றுக் கொண்டதாக பள்ளியிலிருந்தும் உறுதிப்படுத்திவிட்டார்கள். திரு.ஈஸ்வரனின் ரூ.5000மும் திரு. சத்தியமூர்த்தியின் ரூ.10000மும் ஆன் த வே. அநேகமாக இன்று கணக்கில் சேர்ந்திருக்கும். இன்னொரு நண்பர் திரு. குமார் இன்றோ அல்லது நாளையோ ரூ.10000 அனுப்பி வைப்பதாகச் சொல்லியிருக்கிறார். ஆக ஐம்பதாயிரம் ஆகிவிட்டது. தற்காலிக ஆசிரியருக்கு மாதம் ஐந்தாயிரம் வீதம் பத்து மாதங்களுக்கான சம்பளத் தொகை இது. வேமாண்டம்பாளையம் பள்ளிக்கான வேலை முடிந்து விட்டது.
இந்த ஐம்பதாயிரம் ரூபாய் போக திரு.ராஜேஷ் ரூ.25000மும், திரு.ராகவன் ரூ.10000மும் மற்றும் திரு.மோகன் ரூ.5000மும் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள். இப்போதைக்கு வாங்கவில்லை. அவர்களிடமே இருக்கட்டும். தேவைப்படும் போது வாங்கிக் கொள்ளலாம். ஆக, கைவசம் நாற்பதாயிரம் ரூபாய் இருக்கிறது.
ஒரு நண்பர் இந்த இணைப்பை அனுப்பி இந்தப் பையனுக்கு உதவலாமா என்று கேட்டிருந்தார். இந்த மாணவர் அஜீத்திடம் பேசினேன். திமுக பொருளாளர் திரு.ஸ்டாலின் அவர்கள் இருபத்தைந்தாயிரம் கொடுத்துவிட்டாராம். ஸ்டாலின் வாழ்க! அது போக அவருக்கு வேறு சில உதவிகளும் வந்திருக்கின்றன. ‘இப்போதைக்கு ஆடைகள் வாங்கவும் மெஸ் பீஸூம் மட்டும் கிடைத்தால் போதும்’ என்றார். தி இந்துவில் எழுதியிருக்கிறார்கள் என்பதால் அவருக்கு தேவையான உதவி நிச்சயம் கிடைத்துவிடும். அடுத்த வாரத்தில் மீண்டும் ஒரு நாள் விசாரிக்கலாம். அவருக்கு உதவி தேவைப்படுமானால் மட்டும் உதவலாம்.
நல்லா ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோருக்கும் பெய்யும் மழை.
இத்தனை நல்லவர்கள் இருக்கிறார்கள். காவிரியில் ஏன் வெள்ளம் பெருகாது? அனைவருக்கும் நன்றி.
நல்லா ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோருக்கும் பெய்யும் மழை.
இத்தனை நல்லவர்கள் இருக்கிறார்கள். காவிரியில் ஏன் வெள்ளம் பெருகாது? அனைவருக்கும் நன்றி.
6 எதிர் சப்தங்கள்:
உண்மைதான் எப்பொழுதும் நேர்மையாய் இருபதில் பல சிக்கல்கள்....
முப்பதில் சரியாகி விடும். :-)
நல்ல மனம் வாழ்க!!!
உதவும் கரங்களைப் பாராட்டுவோம்
தொடருங்கள்
பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!
http://paapunaya.blogspot.com/2014/08/blog-post.html
உதவி செய்வதிலும் சில உபத்திரவங்கள் இருக்கத்தான் செய்கின்றன! அதையும் சகித்துக்கொண்டு உதவும் தங்களுக்கு வாழ்த்துக்கள்!
You are undertaking a noble task. Keep it up.
Post a Comment