Jul 4, 2014

உனக்கு என்ன அருகதை?

அன்பு மணி,

WMD பூச்சாண்டிக் காட்டி அமெரிக்கா படையெடுத்த ஆரம்ப நாள்கள். என் சக உழியன் - அமெரிக்கன் - சொன்னான். “என்ன வேணாலும் பண்ணட்டும். எனக்கு gas (பெட்ரோல்) சகாய விலையில் கிடைக்கணும்” நான் அவன் முகத்தைப் பார்த்து பேச்சற்றுப் போய் நின்ற செய்தி இங்கு எதற்கு என்பதைப் பிறகு தொடர்கிறேன். 

அதற்குமுன் -

எது வெற்றியில் தென்பட்ட தங்களின் கவலையும் ஈராக்கில் சுடப்பட்டு சாவும் அப்பாவி முஸ்லிம் ஆடுகளையும் பார்த்து தாங்கள் வடிக்கும் கண்ணீரும் தங்களது பிம்பத்தைப் பெருமளவு உடைக்கின்றன.

Robert Fisk என்றொரு பத்திரிகையாளர். அறிந்திருப்பீர்கள். மத்திய கிழக்கு அரசியல்தான் அந்த ஐயாவின் ஏரியா. அந்த ஆயிலில் மூழ்கிக் கிடப்பவர். கட்டுரைகள் அருமையாக இருக்கும். அவரது If history and petropolitics... என்ற கட்டுரையில்... And has everyone forgotten – for not a soul mentioned this yesterday – that this was the scene of the most infamous US war crime in Iraq, the massacre by US marines of 24 unarmed men, women and children in November 2005, a slaughter supposedly carried out in revenge for the killing of a marine in the town என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்படியான ஒரு நிகழ்வு உங்களுக்குத் தெரியுமா மணி?  இலட்ச ரூபாய்க்கு - வெறும் நூறு ஆயிரம் ரூபாய்க்கு - ஆப்கனில் உள்ள அப்பாவி முஸ்லிம் ஆடுகளுக்கு ரேட் நிர்ணயிக்கப்பட்ட கதை தெரியுமா மணி? வெளிவந்தது நூறு, வெளிவராதது ஆயிரம் என்று இத்தகைய நிகழ்வுகள் ஏராளம். அவற்றையெல்லாம் தேடித் தேடிப் படித்திருக்கிறர்களா?

போகட்டும்.

கோத்ரா 59 = குஜராத் 2000 "பழிவாங்கல்" சரியானதே என்ற வன்மம் இணையம் முழுவதும் பரவிய போதும் கருப்பையில் வளர்ந்து கொண்டிருந்த குழந்தையை வெட்டிக் கொன்று தீயிலிட்டுக் கரிக்கட்டையாக்கிய போதும் பிஸியாக இருந்தீர்களா? அவர்களெல்லாம் அப்பாவி ஆடுகளில்லையா? ஏதோ ஒரு குழந்தையின் கழுத்தில் வைக்கப்படும் துப்பாக்கியின் நுனி நம் வீட்டு குழந்தையின் கழுத்தைத் தொடுவதற்கு வெகுநாட்கள் ஆகிவிடாது. எங்கேயோ தலை சிதறிச் சாவும் பெண்ணின் நிலைமை நம் வீட்டுப் பெண்களுக்கு நிகழும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்று எழுதுகிறீர்கள். காந்தி பிறந்த மண்ணில் அப்பாவி முஸ்லிம் ஆடுகள்மீது அரசாங்கம் முன்நின்று நடத்திய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட செய்திகளையெல்லாம் படித்துவிட்டு யார் வீட்டுக் குடிசையோ பற்றி எரிகிறது என்று கிடந்த தங்களுக்கு இன்று எப்படி கண்ணீரும் கவலையும்? 

நிகழ்த்தப்படுவது வன்முறையாக இருந்தால் கண்களை மூடிக் கொண்டு எதிர்க்கத் துவங்குவோம். அப்பாவிகளைக் கொன்றுதான் அந்தச் சித்தாந்தம் வெற்றியடைய வேண்டுமானால் அந்தச் சித்தாந்தம் வெற்றியடையவே தேவையில்லை என்ற மனநிலை நமக்கு வர வேண்டும். ஆனால் அவர்களை எதிர்க்காவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் அவர்களை ஆதரிப்பதை நிறுத்துவோம் என்றெல்லாம் எழுதுகிறீர்கள். நன்று. காந்தி பிறந்த மண்ணில் நிகழ்ந்த கொடுமைகளை நீங்கள் எதிர்க்காவிட்டாலும் பரவாயில்லை. அதை முன்நின்று நடத்தியவர்களை வரிந்து கட்டிக்கொண்டு ஆதரித்தல்லவா எழுதினீர்கள்? உங்கள் வீட்டுப் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் குஜராத் முஸ்லிம் ஆடுகளுக்கு ஏற்பட்ட கதி ஏற்படாது என்ற நம்பிக்கை அந்த எழுத்துக்கெல்லாம் காரணமோ?

தனக்கு வந்தால்தான் தெரியும் தலை வலியும் திருகு வலியும் என்பது வெறும் பழமொழி மட்டுமன்று மணி. ‘இப்போ ஆதரிக்கிறேன். வந்த பிறகு தப்பு செஞ்சா என்ன செய்வேன்? திட்டி எழுதுவேன்’ என்று அன்று எழுதினீர்கள். இப்பொழுது after all உங்களது கார், பைக் டேங்கிற்கும் கிச்சன் சிலிண்டருக்கும் ஆப்பு வந்ததுமே ‘வாயில் சாணி கரைச்சு ஊத்தப்போறானோ இந்த மனுசன்’ என்று வாயில் அடித்துக்கொள்ளாத குறைாக எழுதுகிறீர்கள்.

இப்பொழுது முதல் பத்திக்கு வருகிறேன். அந்த அமெரிக்கனுக்கும் உங்களுக்கும் இடையே பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை மணி. இதுவரை பொறுமையுடன் இந்த மடலைத் தாங்கள் படித்திருந்தால் நன்றி.

அன்புடன்,
-நூருத்தீன்

                                                   ***

அன்பு நூருத்தீன், 

முட்டாள்களையும், முரடர்களையும் மிக எளிதில் எதிர்கொண்டுவிடலாம். எதையாவது பேசுவார்கள். அமைதியாக இருந்தால் போய்விடுவார்கள். மீறிப்போனால் கன்னத்தில் ஒரு அறை கொடுப்பார்கள். வாங்கிக் கொண்டால் அவர்களது வெறி அடங்கிவிடும். ஆனால் படித்து செட்டிலாகிவிட்டு மதத்தைத் தாண்டி வராமல் யோசிக்கும் உங்களைப் போன்றவர்களை சமாளிப்பதுதான் சிரமம் நூருத்தீன். 

அன்பு மணி என்று ஆரம்பித்து கத்தியைத் தொண்டைக்குழியில் இறக்கும் கடிதங்கள்தான் பதறச் செய்பவை. உங்களைக் குறை சொல்லவில்லை. ஆனால் மொத்தக் கடிதத்திலும் எனக்கு ஒன்றே ஒன்றுதான் தெரிகிறது. ஈராக்கிலும், சிரியாவிலும் அப்பாவிகள் கொன்று குவிக்கப்படுவதை வெளிப்படையாக ஆதரிக்கிறீர்கள். இல்லையா? இந்தச் சம்பவத்தைப் பற்றி பேசுவதற்கு உனக்கு எந்த அருகதையும் இல்லை என்று சொல்வதற்காக இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறீர்கள்.

அருகதையில்லாதவானகவே இருந்து கொள்கிறேன். சாலையில் போகும் பிச்சைக்காரனைப் பற்றியும், சென்னை பேருந்தில் தொலைந்து போன பையைப் பற்றியும் எழுதியபடியே கூட காலத்தை ஓட்டிவிடுவேன். எழுதாவிட்டாலும் கூட யார் குடியும் மூழ்கிவிடப் போவதில்லை. அதனால் இந்த விவகாரத்தைப் பற்றி பொதுவெளியில் பேசாமல் இருப்பதில் எனக்கு நட்டமில்லை. அடங்கிக் கொள்கிறேன். ஆனால் இவர்களுக்கு போராளிகள் என்று பெயர் சூட்டி ஆதரிக்கிறீர்கள் பார்த்தீர்களா? இந்த ஆதரவுதான் நடுக்கமூட்டுகிறது. 

ஈராக்கிலும், சிரியாவிலும் வேட்டையாடுபவர்கள் போராளிகளாகவே இருந்து கொள்ளட்டும். மொத்த பூமியிலும் தங்களுக்கு விருப்பமான கொடியை ஏற்றட்டும். எதிர்படும் ஒவ்வொரு மனிதனையும் மதம் மாற்றட்டும். எதிரி ராணுவத்தினரைக் கொல்லட்டும். அரசாங்கங்களைச் சாய்க்கட்டும். அதைப் போராட்டம் என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ஏன் அப்பாவி மக்களைக் கொல்கிறார்கள்? குழந்தைகளைக் கொல்கிறார்கள். பெண்களைச் சுடுகிறார்கள். 

தயவு செய்து அவர்கள் அப்பாவிகளைக் கொல்லவில்லை என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள். Live Leak இணையத்தளத்தில் வீடியோக்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவர்களே படம்பிடித்த வீடியோக்கள்.

ஒரு வீடியோவைக் கூட முழுமையாகப் பார்க்க முடிவதில்லை. நள்ளிரவு தாண்டிய நேரங்களில் பார்த்துவிட்டால் தூக்கமே வருவதில்லை. எப்படி வரும்? கழுத்தை துண்டாக வெட்டியெடுத்து வெற்றிச் சின்னத்தைக் காட்டுகிறார்கள். புறமண்டையில் சுடும் போது ரத்தத் துளிகள் தெறிக்கின்றன. குண்டு பாய்ந்தவுடன் துளி சப்தமில்லாமல் ஒருவன் சரிவதை படுக்கையில் அமர்ந்து பார்த்துவிட்டு எப்படித் தூங்க முடியும்? 

இந்த விவகாரத்தைத்தான் பேசுகிறேன். இதையெல்லாம் எதிர்க்காவிட்டாலும் பரவாயில்லை ஆதரிக்காமல் இருப்போம் என்கிறேன். நீங்கள் என்னைப் பார்த்து ‘உனக்குத் தகுதியே இல்லை’ என்கிறீர்கள். 

இருக்கட்டும்.

உங்களின் கடிதத்தை இரண்டே வரிகளில் சுருக்க முடியுமானால்-

1) அமெரிக்காக்காரன் கொல்லும் போது விட்டுவிட்டு இன்று இசுலாமியன் இன்னொரு இசுலாமியனைக் கொல்லும் போது ஏன் துள்ளுகிறாய்?

2) மோடியை ஆதரித்த நீ இன்று முஸ்லீம் கொல்லப்படும் போது பேசுவதற்கு என்ன யோக்கிதை இருக்கிறது?

சரி. 

‘நீ இதைப் பற்றி பேசாதே’ என்று அடக்கிவிட்டு நீங்கள் இவர்களை ஆதரிப்பதற்கான காரணங்களைச் சொல்ல முடியுமா? அவர்களை ஆதரிப்பதைக் கூட தவறு என்று சொல்லவில்லை. அவர்களின் செயல்களை ஆதரிக்கிறீர்கள் அல்லவா? என்ன காரணம்? தயவு செய்து உண்மையைச் சொல்லுங்கள். எனக்கு ஒரே காரணம்தான் தெரிகிறது- மதம்.

ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்- மோடியை நான் ஆதரித்ததற்கு மதம் துளி கூட காரணம் இல்லை. இந்த தேசம் முழுவதும் காவிக் கொடி பறக்கட்டும் என்பதற்காகவோ இந்த நாட்டில் இசுலாமியர்களும், கிறித்துவர்களும் துன்பப்படட்டும் என்பதற்காகவோ மோடிக்கு ஆதரவாக இருக்கவில்லை. இசுலாமியர்களுக்கு உலகின் பிற எந்த நாட்டைவிடவும் இந்தியா பாதுகாப்பானது என முழுமையாக நம்புகிறேன். மோடியைவிட மும்மடங்கு மதவாதி வந்தாலும் இங்கு இசுலாமியர்கள் நன்றாக வாழ்வார்கள் என நீங்களும் என்னைப் போலவே நம்பலாம்.

ராகுலைவிடவும், மம்தாவைவிடவும், ஜெயலலிதாவைவிடவும், முலாயமைவிடவும், மம்தாவைவிடவும் மோடியின் தலைமை நன்றாக இருக்கும் லட்சக்கணக்கானவர்களைப் போலவே நானும் நம்பினேன். மாஸ் சைக்காலஜி. ஆதரித்து எழுதினேன்.

வேறு எந்த விவகாரத்தைப் பேசினாலும் ‘நீ மோடியை ஆதரித்தாயே’ என்று கோர்த்துவிடுவதை தயவு செய்து நிறுத்துங்கள் நூருத்தீன். மோடிக்கும் எனக்கும் எந்தவித கொடுக்கல் வாங்கலும் இல்லை. அப்பொழுது நம்பினேன். ஆதரித்தேன். பிரதமர் ஆனார். இப்பொழுது விமர்சிக்க காரணங்கள் இருக்கின்றன. விமர்சிக்கிறேன். தேர்தலுக்கு முன்பாக ஆதரித்த காரணத்திற்காக இப்பொழுது அவர் என்ன செய்தாலும் ஆதரிக்க வேண்டும் என்பதில் என்ன நியாயம் இருக்கிறது? என்னளவில் ஹானஸ்டாகத்தான் இருக்கிறேன் நூருத்தீன். மதம், சாதி போன்ற எந்தச் சிக்கலும் எனக்கு இல்லை. முடிந்தவரை நேர்மையாகத்தான் இருந்து கொண்டிருக்கிறேன்.

உங்கள் கடிதத்தை தாண்டிவிட்டு போயிருக்க முடியும். தாருல் இஸ்லாம் குடும்பத்தின் மீதான மரியாதையின் காரணமாக இந்த விளக்கத்தை எழுதியிருக்கிறேன்.

தயவு செய்து கண்ணாடியை கழற்றிவிடுங்கள். 

மற்றபடி, கண்ணீர் வடிப்பதற்கும், நடிப்பதற்கும் எனக்கு எந்த அவசியமும் இருப்பதாகத் தெரியவில்லை. மோடியை ஆதரித்ததற்கும், சிரியாவிலும், ஈராக்கிலும் வேட்டையாடும் தீவிரவாதிகளை எதிர்ப்பதற்கும் எந்த தனிப்பட்ட காரணங்களும் இல்லை. மனதில் பட்டதை எழுதிக் கொண்டிருக்கிறேன். எனது பிம்பம் உடைகிறது என்பதற்காகவெல்லாம் என்னை Restrict செய்து கொள்ளப் போவதில்லை. எல்லாவற்றிலும் வழவழா கொழகொழாவாக இருந்து எதைச் சாதிக்கப் போகிறோம்? இது போன்ற சிக்கலான விவகாரங்களை வெளியில் பேசும் போது மூன்று பேர் பாராட்டினால் பன்னிரெண்டு பேர் அடிக்க வரத்தான் செய்வார்கள். 

நன்றி.

31 எதிர் சப்தங்கள்:

sivaraman75 said...

மத மதம் பிடித்து திரிபவர்கள் எந்நாளும் மாற மாட்டார்கள். மதம் என்ற ஒன்று உருவாவதற்கான காரணத்தையே அழித்துவிட்டார்கள். கோத்ரா...கோத்ரா என்று கூப்பாடு போடுபவர்களில் ஒருவரேனும் கோத்ராவுக்கு வித்திட்ட சபர்மதி ட்ரயின் தீ வைப்பு பற்றி வாயே திறக்கமாட்டார்கள். எவ்வகையிலும் தீவிரவாதத்தை வெறுக்கின்றேன். ஒன்று மட்டும் புரிகிறது....முழு உலகமும் இவர்கள் கீழே வந்தாலும் இவர்கள் கொல்வதை மட்டும் நிறுத்தவே மாட்டார்கள். அது முடியாது....ஏனெலில் அதுதான் மத மதம்!!! மனிதத்தை போதிக்காதது எவ்வகையிலும் எந்நிலையிலும் மதமாகாது.....அது இந்துவானாலும் சரி, இஸ்லாம் ஆனாலும் சரி!!!

Muthuram Srinivasan said...

மிகவும் சரியான பதில் மணி... நூருத்தீனின் ஒவ்வொரு எழுத்தும் என்னை பதறச் செய்தன. இவர்களுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது மணி?
என்ன பிரச்னை இவர்களுக்கு? இவர்கள் ஒருபோதும் தம்மை இந்தியர்களாக உணர்ந்தவர்களாக தெரியவில்லை. எப்போதும் இஸ்லாமியர்களாக மட்டுமே நினைக்கிறார்கள். அதனால் தான் ஒரு இஸ்லாமியன் என்ன செய்தாலும் எந்த நாட்டை சேர்ந்தவனானாலும் அவனுக்கு வக்காலத்து வாங்குவார்கள்.
குஜராத் துயர சம்பவம் எந்த விதத்திலும் நியாயப்படுத்த கூடியது அல்ல. அது பெரும்பான்மை ஹிந்துக்களின் விருப்பமும் அல்ல. வாக்கு வங்கியை குறிவைத்து நடத்தப்பட்ட அப்பட்டமான அரசியல். அதில் சம்பந்தப்பட்ட யாரும் தப்பிக்க கூடாது. கலவரம் நடந்த இடத்தில் அதில் ஈடுபட்ட அனைவருமே ஒரு கூலிப்படையின் மனோ நிலையிலோ அல்லது தூண்டப்பட்ட நிலையிலோ அறிவிழந்து செயல்பட்டு உள்ளனர். (mob mentality).அவர்கள் மோசமான எஜமானனின் அம்புகளே...இதனை பெரும்பான்மையான இந்துக்களே எதிர்க்கத்தான் செய்கிறார்கள். ஆனால் உங்களைப்போன்றோர்கள் தான் தொடர்ந்து மத துவேஷம் பற்றி பேசி ஒட்டு மொத்த இஸ்லாமியர்களையும் சந்தேகிக்க வைக்கிறீர்கள். இவர்களுக்கு இது தேவைதான் என எண்ண வைக்கிறீர்கள். இஸ்லாமின் உண்மையான எதிரிகள் நீங்கள்தான்.நீங்கள் மேலே எழுதிய கருத்துக்கள் ஏதாவது ஒன்றாவது இஸ்லாத்திற்கு ஏற்புடையதுதானா என்பதை உங்கள் தீர்மானத்திற்கே விட்டு விடுகிறேன். இந்த ஒரு குஜராத் சம்பவத்தை மட்டும் சாக்காக வைத்துக்கொண்டு ஏதோ இந்தியா முழுக்க இஸ்லாமியர்கள் ஒடுக்கப் பட்டு , இரண்டாம் தர குடிமக்களாக, இந்துக்களின் அடிமைகளாக இருப்பதைப் போல படம் போடாதீர்கள் நண்பரே..இன்றும் எனக்கு நிறைய இஸ்லாம் நண்பர்கள் உள்ளனர். ஒரு நாள் கூட நாங்கள் மதத்தை ஒரு எல்லையாக பார்த்ததே இல்லை. சத்தியமாக 90% இந்துக்களுக்கு மதம் பற்றிய ஒரு உணர்வே இல்லை. நம்புங்கள் நண்பரே!!!.ஒரு சொற்ப சதவீதம் தவிர்த்து பெரும்பான்மை இந்துக்களுக்கு இந்து மதம் சார்ந்த எந்த ஒரு பிடிப்பும் இல்லை. தமிழ் நாட்டில் அரசியல் வியாதிகளால் அதிகம் விமர்சிக்கப் படுவது இந்து மதம் மட்டுமே. ஆனால் அதனால் என்றாவது ஒரு சிறு சலனமாவது ஏற்பட்டது உண்டா? அவ்வளவுதான் இந்துக்களின் மத உணர்வு... உண்மையிலேயே நூருத்தீன் உங்கள் எழுத்து என்னை அச்சம் கொள்ள வைத்திருக்கிறது...
இவ்வளவு பேசும் நீங்கள்... மும்பை துப்பாக்கி சூடு நடக்கும் போது எங்கே போய் இருந்தீர்கள்?

vasan said...

எழுத்தில் நேர்மையும்
அதனால் துணிவும் இருக்கிறது.
நேர்பட வாழ்வோம்.

அதிரைக்காரன் said...

ஈராக்கில் நடைபெறும் யுத்தத்தில் ISIL போராளிகள் குறித்த செய்திகளில் பல, அவர்கள் ஸிரியாவுக்கு எதிராகப் போராடியபோது வந்த செய்திகளுக்கு மாறாக உள்ளன என்பதையும் கவனிக்க வேண்டும்.

சிரியாவில் அவர்களுக்கு சவூதி மற்றும் சிலநாடுகள் உதவியது வெளிப்படையானது. அதுபோல் ஈராக்கிலும் தொடக்கத்தில் உதவியிருக்கக்கூடும். ஆனால், தற்போது ஈராக் எல்லையில் சவூதி ராணுவத்தை அனுப்பி இருப்பதன்மூலமும், மன்னரின் அறிவிப்பின் மூலமும் சவூதியில் பங்கு ISIL விவகாரத்தில் இல்லை என்பதும் தெளிவாகிறது.

ISIL இன் மீளெழுச்சியை ரசித்தவர்களுக்கு, அவர்கள் அனைத்தையும் இழந்தபிறகு, தங்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகவும், முன்பு கொடுமை செய்தவர்கள், எதிரிகளுக்கு உதவிய நயவஞ்சகர்கள் ஆகியோரையே பழிதீர்க்கிறார்கள் என்ற காரணமே பலருக்கும் இருந்தது. உண்மையில் பாதிக்கப்பட்டவன் திருப்பி தாக்குவதை ரசிப்பவர்களாகவே நாம் இருக்கிறோம் என்பதற்கு சினிமாவில் அத்தகைய சாகசங்களை கதாநாயகன் செய்யும்போது கைதட்டி, விசிலடித்து மகிழ்வதில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

ஈராக்கின் உண்மை நிலவரத்தை வெளியாகி இருக்கும் வீடியோக்கள் மூலம் உறுதிப்படுத்த முடியாது. அதனால் அவசரப்பட்டு சார்பு நிலையோ எதிர்ப்பு நிலையோ கொள்ள வேண்டியதில்லை. நம் மீது அடக்குமுறையும், யுத்தமும் திணிக்கப்படாத வரையில் அத்தகையோரின் செயல்களை விமர்சிப்பது நியாயம் அல்ல.

அவர்கள் அல்லாஹ்வுக்காகப் போரிட்டால் அல்லாஹ் அவர்களுக்கு உதவுவான். மாறாக, வேறு நோக்கமிருந்தால் அல்லாஹ் உதவமாட்டான். இஸ்லாத்தின் வரம்புகளை மீறுபவர்களை அல்லாஹ் விரும்புவதில்லை.

அதிரைக்காரன் said...

ஈராக்கில் நடக்கும் யுத்தம் குறித்தும், ISIL போராளிகள் குறித்து வெளியாகியுள்ள முரன்பட்ட காணொளிகளையும் மட்டும் ஆதாரமாகக்கொண்டு அதன் நியாய, தர்மங்களை அளவிட முடியாது.

அநீதி இழைக்கப்பட்டவருக்கு ஆதரவளிக்க வேண்டியது நல்ல மனம் படைத்தவர்களின் தார்மீக கடமை. அதேயளவுக்கு அவர்கள் வரம்புமீறும்போது கண்டிப்பதும். அநீதி இழைக்கப்பட்டபோது வாய்மூடி மெளனிகளாக இருந்துவிட்டு, வேறுவழியின்றி திருப்பித்தாக்கும்போது அதை விமர்சிப்பதும் குற்றஞ்சொல்வதும் எவ்வகையான தர்மம் என்று தெரியவில்லை.

நூருத்தீன் அவர்களின் மடலில், ஈராக்கில் நடத்தப்படும் வரம்பு மீறல்களின் ஒருதரப்பை மட்டும் விமர்சிப்பது ஏனென்ற கேள்வியே மேலோங்கியுள்ளது. இதில் என்ன தவறு கண்டீர்கள்? அவ்வாறு ஒரு முஸ்லிம் கேட்கக்கூடாது என்பதுதான் உங்கள் நிலைப்பாடா? அப்படிக் கேட்டால் அவர் தீவிரவாதத்தை ஆதரிப்பதாகச் சொல்வது சரியா?

அதெப்படி சார், ஈராக்கில் நடந்தால் தீவிரவாதம் குஜராத்தில் நடந்தால் அது வெறும் எதிர்வினை என்பதாக உங்களால் நிலைப்பாடு எடுக்க முடிகிறது? மனிதனுக்கு மதம் இருக்கலாம் மனிதாபிமானத்திற்குமா மதம் இருக்கும்?

பெண்கள், குழந்தைகள், கல்விகற்ற அறிஞர்கள், மதகுருக்கள் போன்றோரை எதிரிகளாக இருந்தாலும் போரில் கொல்லக்கூடாது என்பது இஸ்லாத்தின் கட்டளை. இதைப்பேணாத எந்த அமைப்பும் இஸ்லாத்திற்கோ முஸ்லிம்களுக்கோ மட்டுமின்றி மனிதகுலத்துக்கே எதிரிதான். இதுபோன்ற வழிகாட்டல்கள் எதுவும் மற்றவர்களிடம் உண்டா?
ஈராக்கில் ISIL போராளிகள் (அவர்கள் வரம்புமீறாதவரை போராளிகளே என்பதுதான் என் நிலைப்பாடு) குறித்த நியாயத்தை வெறும் பேஸ்புக்கிலும் யூடூபிலும் வெளியாகும் செய்திகளைக் கொண்டு அளவிட முடியுமா? அவ்வாறு வெளியிடப்படும் வீடியோவில் இருப்பவர்கள் எல்லாம் முகத்தைமூடி இருந்தபோதும் எப்படிசார் நம்புகிறீர்கள்? ஒவ்வொரு தாக்குதலின்போதும் அல்லாஹு அக்பர் என்று ஒலித்தால் அவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்பதுதானே உங்கள் புரிதல்?

தீவிரவாதத்தை எதிர்ப்பதுதான் உங்கள் நோக்கம் என்றால் நான் மட்டுமல்ல நூருத்தீன் போன்ற நூறாயிரம்பேர் உங்களுடன் சேர்ந்துகொண்டு எதிர்க்கத் தயார். அதேபோல் உங்களால் சொல்ல, எழுத முடியுமா? முடியும் எனில் குறைந்தபட்சம் காந்திஜி படுகொலையிலிருந்து தொடங்க வேண்டியிருக்கும்.

குஜராத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது காரில் அடிபட்ட தெருநாயின் உயிருக்கு இணையானதாகக் கருதியவரை ஆதரித்த நீங்கள் மனிதாபிமானம் பற்றி எழுதுவது சிரிப்பை வரவழைக்கிறது நண்பரே. இதைத்தான் நூருத்தீன் சுட்டிக்காட்டியுள்ளார். அது உங்களைச் சுட்டதால் அவரது நோக்கத்தை திசை திருப்ப முனைந்துள்ளீர்கள் அவ்வளவுதான்.

நன்றி.

Unknown said...

மதம் ன்றது வெறும் பள்ளிக்கூடம் , அது கற்று கொடுக்கிற கல்விஅறிவுதான் ஆன்மிகம். இங்க 1000 பள்ளிக்கூடம் (மதம்) இருக்கலாம் ஆனா எல்லாம் ஒரே கல்வியறிவ தான் (ஆன்மிகம்) சொல்லிகொடுக்கும் .. எது முக்கியமோ (கல்வி - ஆன்மிகம்) அதா விட்டுட்டு என்பள்ளி கூட கக்கூசு பெருசு உன் பள்ளிகூட கக்கூசு சிறுசு நு சண்டை போடுகிடிருகோம் ....

இதலாம் விடுங்க, இன்னைக்கு தேவை என்ன?..

அமைதியான நிம்மதியான வாழ்க்கை வேணும் நான் பிறந்த இடத்திலேயே!!

உலகம் முழுவதையும் ஒரே மதத்துக்கு மாத்தவே முடியாது ன்றது வரலாறு நமக்கு கற்றுகொடுத்த பாடம் ... அப்படிதான?..

அப்பனா நம்ம என்ன பண்ணலாம்?..

ஒரு வழி இருக்கு... எல்லா மத கடவுளும் உண்மை தான் அப்படினு முழுசா மொத நம்பனும்.. நான் என் கடவுள கும்புடுறேன் நீ உன் கடவுள கும்புடு.. எல்லாரும் எல்லா கடவுளையும் மதித்து நடக்கணும். மதம், கடவுள விட ஆன்மிகம் தான் முக்கியம் நு சொல்லணும்... அவ்வளவு தான் மத சண்டையே வராது...

அடுத்து என்ன... ஏழை பணக்கார சண்டை, ஜாதி சண்டை, கருப்பு வெள்ளை இனம், etc

joomladev said...

அதிரைக்காரன் குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்டவர்கள் 750 முஸ்லிம்கள், ஆனால் இராக்கிலும், சிரியாவிலும் இந்த ISIS பயங்கரவாதிகளால் இதுவரை கொல்லப்பட்டவர்கள் 5000முஸ்லிம்கள். உங்களுக்கு முஸ்லிம்கள் சக முஸ்லிம்களையோ பிற மத மனிதர்களையோ கொன்றால் உங்களுக்கோ ஒரு பிரச்சனையும் இல்லை கொஞ்சம் சந்தோஷமும் படுவீர்கள் ஆனால் மற்ற மதத்தவர்கள் முஸ்லிம்களுக்கு எதாவது ஒரு சிறு தீங்கு செய்தலும் அதையே பல நூறு வருடங்களுக்கு சொல்லிக்கொண்டே இருப்பீர்கள். குஜராத், குஜராத் என்று எப்பொழுது பார்த்தாலும் ஓலம் வைக்கிறீர்களே பாகிஸ்தான்லையும், பங்களாதேஷ்ளையும் பல லட்சம் ஹிந்துகளை கொன்று குவித்த முஸ்லிம் அரசுகளை பற்றி என்றைகாவது ஒரு சிறிய கண்டனமாவது செய்து இருக்கிரீர்களா?

சேக்காளி said...

//ஒரே காரணம்தான் தெரிகிறது- மதம்//
எனக்கென்னவோ அப்படி தெரியவில்லை.சொல்லபடுவதற்கும்,ஒன்றிணைப்பதற்கும் சொல்லப்படும் காரணம் அல்லது பெயர் மட்டுமே "மதம்" ஆனால் உண்மையான அதுதான் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. உளப்பூர்வமாய்(அடிக்கோடிடப்பட்டுள்ளது) "முல்லைக்கு தேர் கொடுத்த பாரியின் செயலை" சிலாகிக்கும் மனம் வாய்த்த ஒருவரால் குரூரமாய் செயல் பட முடியும் என தெரியவில்லை. யாரிடமும் "யார் உயர்ந்தவன்" என்ற எண்ணம் உருவாகதவரை பிரச்னை இருக்காது. நான் உயர்ந்தவன் என நினைக்கும் போது அல்லது செயல் படும் போது, நான் உயர்ந்தவன் இல்லை என்பதை நிரூபிக்க நீங்கள் முற்படும் போது உங்களையறியாமலேயே நீங்கள் உயர்ந்தவர் என்பதை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகிறது. அந்த சூழ்நிலையில்எதிராளி (எனக்கு நீங்கள் உங்களுக்கு நான்) உருவாகி விடுகிறான். அப்புறமென்ன நூறு குரூப்பா அல்லது டன் குரூப்பா ன்னு ஒரு குரூப்புல சேர்ந்து விட வேண்டியது தான். ரெண் டு குரூப்பு பேக்ரவுண்டும் கல்வியில் பெருசாத்தான் இருக்கு. எந்த குரூப்புல சேர ன்னு முடிவெடுக்க முடியாம வெலவாசி கூடிப்போச்சு.

AAR said...

As long as the Muslim population remains around 1% of any given country they will be regarded as a peace-loving minority and not as a threat to anyone. In fact, they may be featured in articles and films, stereotyped for their colorful uniqueness:

United States — Muslim 1.0%
Australia — Muslim 1.5%
Canada — Muslim 1.9%
China — Muslim 1%-2%
Italy — Muslim 1.5%
Norway — Muslim 1.8%

At 2% and 3% they begin to proselytize from other ethnic minorities and disaffected groups with major recruiting from the jails and among street gangs:

Denmark — Muslim 2%
Germany — Muslim 3.7%
United Kingdom — Muslim 2.7%
Spain — Muslim 4%
Thailand — Muslim 4.6%

From 5% on they exercise an inordinate influence in proportion to their percentage of the population.

They will push for the introduction of halal (clean by Islamic standards) food, thereby securing food preparation jobs for Muslims. They will increase pressure on supermarket chains to feature it on their shelves — along with threats for failure to comply. (United States ).

France — Muslim 8%
Philippines — Muslim 5%
Sweden — Muslim 5%
Switzerland — Muslim 4.3%
The Netherlands — Muslim 5.5%
Trinidad &Tobago — Muslim 5.8%

At this point, they will work to get the ruling government to allow them to rule themselves under Sharia, the Islamic Law. The ultimate goal of Islam is not to convert the world but to establish Sharia law over the entire world.

When Muslims reach 10% of the population, they will increase lawlessness as a means of complaint about their conditions ( Paris –car-burnings) . Any non-Muslim action that offends Islam will result in uprisings and threats ( Amsterdam – Mohammed cartoons).

Guyana — Muslim 10%
India — Muslim 13.4%
Israel — Muslim 16%
Kenya — Muslim 10%
Russia — Muslim 10-15%

After reaching 20% expect hair-trigger rioting, jihad militia formations, sporadic killings and church and synagogue burning:


Ethiopia — Muslim 32.8%

At 40% you will find widespread massacres, chronic terror attacks and ongoing militia warfare:

Bosnia — Muslim 40%
Chad — Muslim 53.1%
Lebanon — Muslim 59.7%

From 60% you may expect unfettered persecution of non-believers and other religions, sporadic ethnic cleansing (genocide), use of Sharia Law as a weapon and Jizya, the tax placed on infidels:

Albania — Muslim 70%
Malaysia — Muslim 60.4%
Qatar — Muslim 77.5%
Sudan — Muslim 70%

After 80% expect State run ethnic cleansing and genocide:

Bangladesh — Muslim 83%
Egypt — Muslim 90%
Gaza — Muslim 98.7%
Indonesia — Muslim 86.1%
Iran — Muslim 98%
Iraq — Muslim 97%
Jordan — Muslim 92%
Morocco — Muslim 98.7%
Pakistan — Muslim 97%
Palestine — Muslim 99%
Syria — Muslim 90%
Tajikistan — Muslim 90%
Turkey — Muslim 99.8%
United Arab Emirates — Muslim 96%

100% will usher in the peace of ‘Dar-es-Salaam’ — the Islamic House of Peace — there’s supposed to be peace because everybody is a Muslim:

Afghanistan — Muslim 100%
Saudi Arabia — Muslim 100%
Somalia — Muslim 100%
Yemen — Muslim 99.9%

Of course, that’s not the case. To satisfy their blood lust, Muslims then start killing each other for a variety of reasons.

‘Before I was nine I had learned the basic canon of Arab life. It was me against my brother; me and my brother against our father; my family against my cousins and the clan; the clan against the tribe; and the tribe against the world and all of us against the infidel.

Nooruddin said...

அன்பு மணி. எனது மடல் ISIS-க்கான வக்காலத்து நோட்டீஸ் அன்று. அதை ஆதரிப்பதாக நான் ஒரு வார்த்தைகூட எழுதவில்லை. முனைந்து திரித்திருக்கிறீர்களே ஏன்?

அன்றும் சரி; இன்றும் சரி. துப்பாக்கியையும் ஆயுதங்களையும் ஓங்கியவர்கள் யாராக இருந்தாலும் என்ன காரணத்துக்காக இருந்தாலும் அதற்குப் பலியான அப்பாவி முஸ்லிம்களைப் பற்றி மட்டுமே அம்மடலில் குறிப்பிட்டிருந்தேன்.

அன்றும் சரி; இன்றும் சரி. அப்பாவி மக்களைக் கொன்றுக் குவிக்கும் எந்த விடியோவையும் நான் பார்த்ததும் இல்லை; சிலாகித்ததும் இல்லை. ஏனெனில் என்னால் 24 மணி நேரமும் நோன்பிருக்க முடியாது.

தாங்கள், அன்று அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுவதைப் பற்றி எழுதவில்லை. இன்றிலிருந்துதான் தொடங்கியிருக்கிறேன் என்கிறீர்களா? நல்லது. ஆனால் அந்த அப்பாவி முஸ்லிம்களின் இன்றைய சீரழிவின் விடியோக்களை மட்டும் தேடித்தேடிப் பார்த்து கவலைப்படுவதுடன் நில்லாமல் அவர்களது மற்ற சீரழிவின் சற்று பழைய செய்திகளையும் தேடிப் படித்துவிட்டு எழுதுங்கள். தங்களது கவலைக்குச் சரியான பரிமாணம் கிடைக்கக்கூடும். நான் சொல்ல விழைவது அவ்வளவே!

அன்புடன்,
-நூருத்தீன்

? said...

அப்புடி போடுங்க நூருத்தீன், ஆனா மணிகண்டன் மாதிரி காபிர்களை குத்தம் சொல்லி என்ன புண்ணியம். டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு பாக்தாத் பையன் பேட்டி கொடுத்திருக்கான்... நம்ம தீவிரவாதிகளை விட அமெரிக்க ஆர்மிக்காரன் கதவை தட்டுவது மேல், ஏன்னா அமெரிக்காரன் கையில் மாட்டினால் உயிரோடு தப்பிக்க வாய்ப்பாவது இருக்கும். ஆனா நம்மாளுக கையில மாட்டுனா ஆள் காலின்னு.

உங்களை மாதிரி ஆளுக பண்ணுற கஷ்டப்பட்டு பண்ற பிரச்சாரத்தை உண்மை சொல்லி ஒரே செகண்டுல காலி பண்ணீடுறானுக. சுட்டா செத்து தொலைய வேண்டியதுதானே?

Salahuddin said...

//ஆனால் மொத்தக் கடிதத்திலும் எனக்கு ஒன்றே ஒன்றுதான் தெரிகிறது. ஈராக்கிலும், சிரியாவிலும் அப்பாவிகள் கொன்று குவிக்கப்படுவதை வெளிப்படையாக ஆதரிக்கிறீர்கள். இல்லையா? //

நூருத்தீனின் கடிதத்தில் அவர் ஈராக், சிரியாவில் அப்பாவிகள் கொல்லப்படுவதை ஆதரிப்பதாக ஒரே ஒரு வார்த்தைகூட தெரியவில்லையே மணிகண்டன்? அவர் எழுதிய கடிதத்தில் நீங்கள் வெளியிடாத பகுதி ஏதேனும் இருக்கிறதா? அல்லது அவரது ஃபேஸ்புக் சுவற்றில் அக்கொலைகளை ஆதரித்து ஏதாவது பதிவிட்டிருக்கிறாரா? அல்லது அவர் சொல்லாத கருத்தை அவர் மீது நீங்கள் திணிக்கிறீர்களா?

ஈராக்கிலும் சிரியாவிலும் அப்பாவிகள் கொல்லப்படுவது கொடூரம்தான். கண்டிக்கப்படவேண்டிய விஷயம்தான். ஃபேஸ்புக்கில் ஆக்டிவாக இருக்கும் பல முஸ்லிம் சகோதரர்கள் அதைக் கண்டித்து பதிவுகள் எழுதியிருக்கிறார்கள். அவையெல்லாம் உங்கள் கண்பார்வையில் படவில்லை போலும். என்னைப் பொறுத்தவரை, என்னைப் போன்ற, நூருத்தீனைப் போன்ற, ஏராளமான முஸ்லிம்களின் பார்வையில் ஈராக், சிரியாவில் நடப்பது கொடூரம்; அவை கண்டிக்கப்பட வேண்டும்; அவற்றை செய்வது யாராக இருந்தாலும் அவர்கள் தடுக்கப்பட வேண்டும். இஸ்லாத்தின் வழிகாட்டல்களை நன்கு அறிந்த ஒரு முஸ்லிம் அப்படித்தான் செய்வார். கொடூரச் செயல்கள் ஈராக்கில் நடந்தாலும், குஜராத்தில் நடந்தாலும், இரண்டையும் ஒரே தராசில் வைத்துத்தான் பார்க்க முடியும் ஒரு முஸ்லிமால்.

இன்று ஈராக், சிரியாவில் நடக்கும் கொடுமைகளுக்குச் சற்றும் குறைவில்லாமல், அதைவிட அதிகமாகவே கூட குஜராத்தில் கொடூரங்கள் நடந்தேறின. அதுவும் அரசாங்கம், காவல்துறையின் ஆதரவுடன். கர்ப்பிணிப்பெண்ணின் வயிறு கிழிக்கப்பட்டு கண் திறக்காத அந்தச் சிசு சூலத்தால் குத்தி எடுக்கப்பட்டு எரியும் நெருப்பில் வீசி எரியப்பட்டதையும் முன்னாள் காங்கிரஸ் எம்பி இஹ்சான் ஜாஃப்ரி அவரது குடும்பத்தினருக்கு முன்பாகவே கண்டதுண்டமாக வெட்டப்பட்டு, அவரது சடலம் கூட கிடைக்காமல் எரித்து சாம்பலாக்கப்பட்டதும் யூட்யூபில் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் அச்செயலைச் செய்தவர்கள் தெஹல்கா நிருபரிடம் ஒப்புக்கொண்ட வீடியோக்கள் இருக்கின்றன. மோடியின் ஆதரவு மட்டும் இல்லையென்றால் நாங்கள் இதையெல்லாம் செய்திருக்க முடியாது என்று அவர்கள் வெளிப்படையாகவே சொல்வதையும் காணலாம். மேலும் அசீமானந்தாவின் வாக்குமூலங்கள், போலி என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வன்சராவின் வாக்குமுலங்கள்.. இவை அனைத்தும் அந்தக் குற்றச் செயல்களில் மோடியின் பங்கு உண்டு என்பதை உறுதிப் படுத்துகின்றன. எந்த மோடி? நீங்கள் வரிந்துக் கட்டிக் கொண்டு ஆதரித்தீர்களே.. அதே மோடி!!

மோடியை வெளிப்படையாக ஆதரித்த உங்களுக்கு ஈராக் குற்றவாளிகளை கண்டிக்க என்ன அருகதை இருக்கிறது என்பதுதான் நூருத்தீனின் கேள்வி என்பது எனக்குப் புரிகிறது. அந்தக் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் 'ஈராக் குற்றவாளிகளை ஆதரிக்கிறீர்களா?' என்று அவருடைய தொண்டைக்குழியில் கத்தியை இறக்குகிறீகளே நண்பரே? இது என்ன நியாயம்?

Ram said...

>>>> அன்பு மணி. எனது மடல் ISIS-க்கான வக்காலத்து நோட்டீஸ் அன்று. அதை ஆதரிப்பதாக நான் ஒரு வார்த்தைகூட எழுதவில்லை. முனைந்து திரித்திருக்கிறீர்களே ஏன்?

எனக்கும் அது அப்பட்டமாகத் தோன்றியது. நண்பர் மணியின் மீது எவ்வித வெறுப்பும் இல்லை, ஆனால் இவ்விஷயத்தில் நண்பர் நூருத்தீனின் கேள்விகளுக்கு மணியின் பதில்கள் நழுவல், திசைதிருப்புதல் ரகம். குற்றம் சாட்டுபவரையே திரும்ப குற்றம் சாட்டி தப்பிக்க நினைக்கும் உத்தி.

ஒரு அயோக்கியன் வந்துதான் இந்தியாவுக்கு சிறந்த நிர்வாகம் அளிக்க முடியுமென்றால் அந்த சிறந்த நிர்வாகமே தேவையில்லை என்று கூறியிருந்தால் மட்டுமே 'அப்பாவிகளைக் கொன்றுதான் அந்தச் சித்தாந்தம் வெற்றியடைய வேண்டுமானால் அந்தச் சித்தாந்தம் வெற்றியடையவே தேவையில்லை என்ற மனநிலை நமக்கு வர வேண்டும்.' என்று கூற தகுதி உண்டு. ஆனால் இவ்விஷயத்தில் மணியிடம் முரண்பாடு உள்ளது. இந்த இரட்டை நிலைதான் நூருத்தீன் கடிதத்தின் சாரம். சரியா நூருத்தீன்? முடிந்தால், இதற்கு மட்டும் திரிக்காமல் பதில் சொல்லுங்கள் மணி.

பாலு said...

I had lot of muslim friends. But when it comes to religion they put everything else behind. Even friendship takes a back seat. Aftermath of their reactions to these killings and support of Pakistan cricket teams' victory kind of things (esp in Bangalore), we have to rethink about their friendships. For example, I was shattered when in a (Tamil) muslim Friend's FB status said "first Sri Lanka Killed Tamils; now they kill Muslims". Why it is like that? Do they think that Muslims can never be Tamil or there is no Tamil Muslim? They are incorrigible and Manikandan is too soft on them. In that article nothing malignant about that community is written..

Jafarullah Ismail said...

பொய் வழக்கில் ஆயிஷா கைது செய்யப்பட்டபோது, 'மனித வெடிகுண்டு ஆயிஷா கைது' என எழுதியவர்கள், பின்னர் அவர் குற்றமற்றவராக விடுவிக்கப்பட்டபோது பதுங்கிக் கொண்டார்கள்.

'கோவை குண்டுவெடிப்பின் பின்னணியே மதானிதான்' என்று அட்டைப்பட செய்தி வெளியிட்டவர்கள், பின்னர் அவர் அவ்வழக்கில் குற்றமற்றவராக விடுதலையானபோது பம்மி விட்டார்கள்.

'ரயிலில் குண்டுவைத்தது குணங்குடி ஹனீபாதான்' என கட்டுரை தீட்டியவர்கள், பின்னர் அதில் அவருக்குத் தொடர்பில்லை என தெரியவந்ததை மறைத்து விட்டார்கள்.

'பாகிஸ்தான் உளவாளி தமீம் அன்சாரி கைது' என பரபரப்பு ஏற்படுத்தியவர்கள், அவரை வெறும் வெங்காய வியாபாரிதான் எனச் சொல்லி நீதிமன்றம் விடுவித்ததை அமுக்கி விட்டார்கள்.

'திருவள்ளூர் இந்துமுன்னணி கொலை வழக்கில் அல்-உம்மாவினர் கைது' என தலைப்புச் செய்தி வாசித்தவர்கள், கைது செய்யப்பட்ட இளைஞர்கள் அப்பாவிகள் என விடுவிக்கப்பட்டதை சொல்ல மறுக்கின்றார்கள்.

இராக்கில் தீவிரவாதிகள் இந்திய செவிலியர்களை கடத்திவிட்டார்கள், கொடுமைப் படுத்தி விட்டார்கள், கொடூரமாக நடத்தி விட்டார்கள் என்றெல்லாம் கடந்த ஒருமாத காலமாக ஓயாமல் கதை வசனம் எழுதியவர்கள், இப்போது மீண்டு வந்த செவிலியர்களின் வாக்குமூலத்தைக் கேட்டு, தமது தவறுகளுக்காக மன்னிப்பா கேட்பார்கள்?

இராக்குக்குள் உனக்கென்னடா வேலை என அமெரிக்காவை கேள்வி எழுப்ப எவனுக்கும் துப்பில்லை. இராக்கை ஏகாதிபத்திய கைக்கூலிகள் ஆள்வதை எடுத்துரைக்க எவனும் தயாரில்லை. இராக் வளத்தை அம்மண்ணுக்குத் தொடர்பில்லாத எவனோ ஒருவன் சுரண்டுவதை அம்பலப்படுத்த எவனுக்கும் துணிவில்லை. அம்மண்ணின் மைந்தர்கள் துப்பாக்கி தூக்கினால் மட்டும், கதை வசனம் எழுத வரிசை கட்டி வந்துவிடுகிறார்கள்.

வெள்ளையனே வெளியேறு என நேதாஜி ஆயுதம் ஏந்தினால், அவர் விடுதலைப் போராளி. அதையே இராக் மக்கள் செய்தால் அவர்கள் தீவிரவாதி.

ஊடகங்களே! உங்கள் பொய்ப் பரப்புரைகளின் ஆயுள் மிக மிக குறைவு என்பதை, இராக்கிலிருந்து நாடு திரும்பியிருக்கும் செவிலியர்களின் வாக்குமூலங்கள் உணர்த்திவிட்டன.

மோடியை தூக்கிப் பிடித்தீர்கள்; முப்பது நாட்களிலேயே அம்பலப்பட்டீர்கள்.
இராக் கிளர்ச்சியை இழிவு செய்தீர்கள்; இருபது நாட்களிலேயே அசிங்கப்பட்டு நிற்கிறீர்கள்.

வாய்மையே வெல்லும்!

-ஆளூர் ஷாநவாஸ்

அ.மு.அன்வர் சதாத் said...

மாய்ந்து மாய்ந்து தரப்படும்
பதில்களில் காணப்படும்

துள்ளல் வகை திரிப்பு
விழைவிற்கு நிஐ பதில் சொன்ன

எம் தேசம் திரும்பிய
எம் செவிலியர் சகோதரிகளுக்கு

நன்றி ... !

ஹுஸைனம்மா said...

//அன்பு மணி. எனது மடல் ISIS-க்கான வக்காலத்து நோட்டீஸ் அன்று. அதை ஆதரிப்பதாக நான் ஒரு வார்த்தைகூட எழுதவில்லை. முனைந்து திரித்திருக்கிறீர்களே ஏன்?//

எனக்குத்தான் தமிழ் புரியலையோன்னு நினைச்சு, மீண்டும் மீண்டும் வாசிச்சுப் பார்த்தேன்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் - இந்த “திரித்தல்” பதில்/வு.

//துள்ளல் வகை திரிப்பு
விழைவிற்கு நிஐ பதில் சொன்ன

எம் தேசம் திரும்பிய
எம் செவிலியர் சகோதரிகளுக்கு //

”முஸ்லிம் பெண்கள் பழங்களைப் போல் சுவையாக இருந்தார்கள்” என்ற வாக்கியம் உயிருள்ளவரை என்னை நடுங்கச் செய்யும் வாக்கியம். நினைவு வரும்போதெல்லாம் மனம் மரத்துப் போகச் செய்யும்.

இக்கொடூரர்களின் வெளிப்படையான - முகத்தை மூடாமல், எக்ஸ்ட்ரா கோஷங்கள் எதும் பேக்ரவுண்டில் இல்லாமல்- பெருமையடிக்கும் வாக்குமூலங்கள் இணையம் முழுதும் பரவிக்கிடந்த போதும், ”நல்லாட்சி தருவார்கள்” என்று நம்பியவர்களை என்ன சொல்வது? சீரழிக்கப்படுவது முஸ்லிம் பெண்கள் மட்டும்தானே என்ற நல்லெண்ணம் போல.

Lareena said...

பொதுவாக சகோதரர் மணிகண்டனின் பதிவுகள் எனக்குப் பிடிக்கும். சிலவற்றைப் பகிர்ந்துமுள்ளேன். என்றாலும் இந்தப் பதிவில் அவர் சகோதரர் நூருத்தீன் தன் மடலில் சொல்ல வந்த கருத்தை அப்படியே வலிந்து திசைதிருப்பி இருப்பது வருந்தத் தக்கது. சகோதரர் நூருத்தீனின் கருத்தின் சாராம்சம் என்ன? அநீதி எங்கு நடந்தாலும் ஒரே அளவுகோலோடு அதை அணுகவேண்டும்; ரத்தம் - தக்காளிச் சட்னி அணுகுமுறை வடிகட்டிய அயோக்கியத்தனம் என்பதே (ஏதோ, அவர் மடலைப் படித்துப் பார்த்ததில் என் சாதாரணத் தமிழறிவுக்கு எட்டியதுங்கோ.). இதில் அவர் ஈராக்கில்/ சிரியாவில் நடக்கும் கொடூரங்களை எங்குமே ஆதரிக்கவில்லை. ஒரு தார்மீகக் கோபத்தில் அவர் எழுதிய மடலும் அதன் கருத்துக்களும் இப்படி திரிபுக்கு உள்ளாக்கப்படுவது அழகல்ல என்பதே அடியேனின் தாழ்மையான அபிப்ராயம். நானும் மத நம்பிக்கை உள்ளவள்தான். ஆக, இந்த கருத்துக்காக என்னையும் அன்போடு பேசி, தொண்டைக்குழிக்குள் கத்தியை இறக்கும் கொடூரமானவளாக உருவகப்படுத்துவதானாலும் ஆட்சேபனை எதுவும் இல்லை. அதில் யாருக்கேனும் அற்ப மகிழ்ச்சி வாய்க்குமானால், நாம் ஏன் அதைத் தடுப்பான்? எல்லோரும் நலமுற்றிருத்தல் தவிர வேறு எதையும் வேண்டேன், பராபரமே! :)

Unknown said...

”தயவு செய்து கண்ணாடியை அணிந்துக்கொள்ளுங்கள்” தோழர் மணி அவர்களே....

உங்களுடைய பார்வையில் கிட்டப்பார்வை;தூரப்பார்வை பிரச்சனையுள்ளது.

Unknown said...

ஆனால் மொத்தக் கடிதத்திலும் எனக்கு ஒன்றே ஒன்றுதான் தெரிகிறது. ஈராக்கிலும், சிரியாவிலும் அப்பாவிகள் கொன்று குவிக்கப்படுவதை வெளிப்படையாக ஆதரிக்கிறீர்கள். ///

கடிதத்தில் அவர் அதை ஆதரிக்கும் வரியை மேற்கோள் காட்டுங்க மணி சார், நோன்பு வச்சிருப்பதாலோ என்னவோ எனக்கு அந்த ஒண்ணே ஒண்ணும் தெரியவே இல்ல.

/// இல்லையா? ///

ஓ அப்போ நிஜமாவே இல்லையா?
அப்போ எனக்கும் பசி மயக்கம் இல்ல.

தருமி said...

wonder why BOTH of my comments were not accepted.

Vaa.Manikandan said...

இல்லையே சார்..நான் எந்த கமெண்ட்டையும் Reject செய்வதில்லை. உங்கள் கமெண்ட் எதுவும் இந்தப் பதிவுக்கு வரவில்லை.கடைசியாக ‘இந்த உலகம் எப்பொழுதுதான் நம்பியிருக்கிறது’ என்ற பதிவுக்குத்தான் உங்கள் கமெண்ட் வந்தது.

Unknown said...

உங்கள் மனசாட்சியும் மனிதமும் விடுமுறை வாங்கி சென்ற நாளில் ..ஏன் நீங்கள் கேட்கவில்லை என்று சொன்னால் உங்களால் எப்படி பதில் சொல்ல முடியும் மணி சார் ..

சகோ நூருத்தின் கடிதத்தில் isis ஐ ஆதரித்து எழுதியது ஏன் என்னுடைய கண்ணில் மட்டும் படாம போனுச்சு என்று நினைத்தால் ..எவர் கண்ணிலும் படவில்லை

Unknown said...

enna mani sir tamil.one.india comments page mari ayiduchu unga blog......he he....free ya vidunga boss....ivanugala pathi engaluku nallave teriyum......vakanaya pesunvanuga....still love your writing...:) :)

Aba said...

மணி சார்... தப்பான இடத்துல காலை விட்டுட்டீங்க. எப்படி இந்தப் பதிவு மட்டும் எல்லா முஸ்லிம்களுக்கும் போச்சுன்னு தெரியல. இனிமே இணையத்துல அமெரிக்க அடிவருடி, முதாளித்துவ ஏகாதிபத்தியத்தின் ##$% ஆர்.எஸ்.எஸ் & சிவசேனா பிரச்சார பீரங்கி என்று பல பட்டங்களை சூட்டப் போறாங்க...

தருமி said...

//ஒவ்வொரு தாக்குதலின்போதும் அல்லாஹு அக்பர் என்று ஒலித்தால் அவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்பதுதானே உங்கள் புரிதல்? //

இல்லையா பின்னே?

anbudanezhil said...

true

தருமி said...

//எப்படி இந்தப் பதிவு மட்டும் எல்லா முஸ்லிம்களுக்கும் போச்சுன்னு தெரியல//

இது வழக்கம் தானே! அத்தனைக் கட்டுப்பாடும், கட்டுக் கோப்பும் அவர்களிடம் உண்டு. (ஆனாலும் 35க்கு குறைவானவர்களாக இருப்பது ஒரு ஆச்சரியம்!)

இன்னும் மணிகண்டன் தொடர்ந்து எழுதினால் எல்லோரும் ஒதுங்கி விட, ஒருவர் அல்லது இருவர் மட்டும் வந்து தொடர்ந்து பொருதுவார்கள்; மனம் சோராமல் மணிகண்டன் மேலும் தொட்ர்நதால் அவர்கள் அதன்பின் மெளனமாகி விடுவார்கள். சத்தமில்லையே என்று கேட்டால் எல்லா பதிலும் சொல்லி விட்டோமே என்று ஒருமித்து சொல்லி விடுவார்கள்.

நீநீநீநீண்ட என் அனுபவத்தின் பிரதிபலிப்பே இது!

Anonymous said...

அதிரைக்காரன், How come your are thinking like this? I worked in Saudi Arabia more than 4 years. I know about Islam law and rules. The fight is happening for two communities for power. Not about Islam.

Try to understand that first.

Anonymous said...

Ithaiyum parunga
http://www.cnn.com/2014/08/06/world/meast/iraq-crisis-minority-persecution/

Anonymous said...

Hilarious.... http://suvanappiriyan.blogspot.com/2014/08/blog-post_32.html