பெங்களூரிலிருந்து ஊருக்கு வரும்போதெல்லாம் நான்கைந்து சமணர்களையாவது பார்க்க நேரிடுகிறது. முன்பு திகம்பரர்கள் என்கிற நிர்வாண நிலையை அடைந்தவர்களும் நடந்து செல்வார்களாம். திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட கலாச்சாரக்காவலர்கள் தாக்கத் துவங்கிய பிறகு அவர்களைப் பார்க்க முடிவதில்லை. இப்பொழுது வெண்ணிற உடையில் செருப்பில்லாமல் நடந்து செல்வபவர்கள் பெரும்பாலும் கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில்தான் கண்ணில் படுகிறார்கள். அதன் பிறகு எங்கே செல்கிறார்கள் என்று தெரியவில்லை. கர்நாடகாவில் இன்னமும் சமணம் உயிர் பிடித்திருக்கிறது. தமிழகத்தில்தான் காலியாகிவிட்டது.
வலுவுள்ளவன்தானே எப்பொழுதும் வரலாற்றை எழுதுகிறான்?
சமணர்கள் கெட்டவர்கள், அப்பரைக் கொடுமைப்படுத்தினார்கள் என்றெல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் இவை அனைத்துமே விருமாண்டி ஸ்டைல்தான்- சிவனை பரம்பொருளாக ஏற்றுக் கொண்ட சைவர்களால் எழுதப்பட்ட குறிப்புகள். இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கும் என்று தெரியவில்லை. எழுத்தாளர் பெருமாள்முருகன் முன்பொருமுறை எழுதியிருந்த மின்னஞ்சலிலும் இதையேதான் சொல்லியிருந்தார்- சமணர்கள் வன்முறையாளர்கள் என்பதற்கு எந்தத் தரவும் இல்லை என்று. அவர் பொ.வேல்சாமியிடமும் பேசியிருக்கிறார். வேல்சாமி அவைதீகம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டிருப்பவர் - சமணர்கள் வன்முறையாளர்கள் என்பதற்கான எந்தக் குறிப்பும் இல்லை என்றுதான் வேல்சாமியும் சொன்னாராம். பெரியவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
சமணர்களை ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே திருஞானசம்பந்தர் தமிழகத்தில் வேட்டையாடத் துவங்கிவிட்டார் என்று யாராவது சொன்னால் சில இந்துக்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் மதுரையில் எந்நூறு சமணர்களை கழுவில் ஏற்றிக் கொன்றார்கள் என்பதெல்லாம் கட்டுக்கதை. அப்படியே இருக்கட்டும்.
சமணர்கள் கெட்டவர்கள், அப்பரைக் கொடுமைப்படுத்தினார்கள் என்றெல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் இவை அனைத்துமே விருமாண்டி ஸ்டைல்தான்- சிவனை பரம்பொருளாக ஏற்றுக் கொண்ட சைவர்களால் எழுதப்பட்ட குறிப்புகள். இதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கும் என்று தெரியவில்லை. எழுத்தாளர் பெருமாள்முருகன் முன்பொருமுறை எழுதியிருந்த மின்னஞ்சலிலும் இதையேதான் சொல்லியிருந்தார்- சமணர்கள் வன்முறையாளர்கள் என்பதற்கு எந்தத் தரவும் இல்லை என்று. அவர் பொ.வேல்சாமியிடமும் பேசியிருக்கிறார். வேல்சாமி அவைதீகம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டிருப்பவர் - சமணர்கள் வன்முறையாளர்கள் என்பதற்கான எந்தக் குறிப்பும் இல்லை என்றுதான் வேல்சாமியும் சொன்னாராம். பெரியவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
சமணர்களை ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே திருஞானசம்பந்தர் தமிழகத்தில் வேட்டையாடத் துவங்கிவிட்டார் என்று யாராவது சொன்னால் சில இந்துக்கள் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் மதுரையில் எந்நூறு சமணர்களை கழுவில் ஏற்றிக் கொன்றார்கள் என்பதெல்லாம் கட்டுக்கதை. அப்படியே இருக்கட்டும்.
உண்மையோ பொய்யோ- சம்பந்தரின் வாழ்க்கை அதிசுவாரசியங்களால் நிறைந்தது. சம்பந்தரின் இயற்பெயர் வேறு என்னவோ. அவரது அப்பா சிவபாத இருதயர்- பிராமணர் - சீர்காழி கோவில் குளத்தில் குளிக்கச் செல்லும் போது சம்பந்தரையும் அழைத்துச் சென்றாராம். சம்பந்தரை குளக்கரையில் நிறுத்திவிட்டு அவர் நீருக்குள் மூழ்கி அகமருட மந்திரத்தை ஓதிக் கொண்டிருந்த போது சம்பந்தர் தனது அப்பாவைக் காணவில்லை என்று கதறியிருக்கிறார். அம்மந்திரத்தை எவ்வளவு நேரம் ஓதுவார்கள் என்று தெரியவில்லை. வெகுநேரம் கழித்து வெளியில் வந்த போது சம்பந்தரின் வாயோரத்தில் பால் இருந்திருக்கிறது. ‘எச்சி பால் குடிச்சயாடா படவா?’ என்று குச்சியைக் காட்டி மிரட்டினாராம். அசையாத சம்பந்தர் கடவுளை நோக்கி கை நீட்டியிருக்கிறார். அந்த ஈசனின் மனைவியே பால் கொடுத்தாள் என்று அவரது அப்பா நம்பிக் கொண்டார். இறைவியிடமே பால் குடித்து சம்பந்தம் உருவாக்கிக் கொண்டதால் அதன் பிறகு அவரது இயற்பெயர் மறைந்து ‘ஞான சம்பந்தம்’ என்றாகிவிட்டார். இதெல்லாம் நடந்த போது ஞான சம்பந்தருக்கு வயது ஜஸ்ட் மூன்றுதான்.
அதன் பிறகு தனது அப்பாவின் தோள் மீது ஏறி அமர்ந்து கொண்டு ஒவ்வொரு ஊராக தல யாத்திரை செல்லத் துவங்கினார். கூடவே நான்கைந்து பேர் வருவார்கள். ‘இத்துனூண்டு பையன் எவ்வளவு அருமையாக பாடுகிறான்’ என்று கூட்டம் சேரத் துவங்கியிருக்கிறது. சம்பந்தரின் புகழ் பரவத் தொடங்கியது.
இடையில், பையன் நன்றாக பாடுகிறானே என்று கடவுளே வந்து பொன்னால் செய்யப்பட்ட பொன் தாளம் கொடுத்தாராம், ஒரு வணிகர் தன் மகள் இறந்துவிட அவளது அஸ்தியை வீட்டில் வைத்திருந்தராம். சம்பந்தர் அந்த வீட்டுக்குச் சென்று பதிகம் பாடிய போது அந்தப் பெண் உயிர் பெற்று அஸ்திச் சட்டியை உடைத்துக் கொண்டு வெளியே வந்தாள் என்று சம்பந்தரின் வரலாற்றுக்குள் ஏகப்பட்ட குட்டிக் கதைகள் உண்டு. இதையெல்லாம் நம்புவதும் நம்பாததும் அவரவர் இஷ்டம்- நான் நம்பவில்லை.
அப்பர், சுந்தரர், சம்பந்தர் மற்றும் மாணிக்கவாசகரால் தமிழுக்கு தேவாரம் கிடைத்தது; அற்புதமான திருவாசகம் கிடைத்தது என்பதெல்லாம் சரிதான். ஆனால் இடையிடையே புகுத்தப்பட்ட இந்தப் புனைவுகள் எல்லாம் டூ மச். சம்பந்தர் சட்டிக்குள் சாம்பலாக இருந்த பெண்ணை உயிர்ப்பித்தார் என்றால், சுந்தரர் அவிநாசியில் முதலை விழுங்கிவிட்ட ஒரு குழந்தையை தனது வழிபாட்டால் மீட்டுக் கொடுத்தாராம். மதத்தை பரப்புவதற்காக செய்யும் அற்புத சுவிஷேசங்களுக்கு எந்தவிதத்திலும் சளைக்காத புனைவுகள்தான் இவை.
இந்த புனைவுகள் சம்பந்தர் காலத்திலேயே நல்ல பலன்களைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டது. அவரது காலத்திலேயே (கி.பி.ஏழாம் நூற்றாண்டு) சைவம் தழைக்கத் தொடங்கிவிட்டது. ஊர் ஊராகச் சென்று மக்களை மாற்றினார் பிறகு பாண்டிய மன்னனையும் சைவத்திற்கு மாற்றினார்.
பாண்டியன் சைவத்திற்கு மாறிய கதைதான் இன்னமும் சுவாரசியம். அதுவரை பாண்டியன் சமணத்தை தழுவியவனாக இருந்திருக்கிறான். பாண்டியன் வேறு யாரும் இல்லை- த பாப்புலர் கூன் பாண்டியன் தான். அவனது அரசியும் அமைச்சரும் சைவப் பிரியர்கள். அரசி சம்பந்தருக்கு தூது அனுப்பியிருக்கிறாள். ‘இங்க சமணம் கெட்ட ஆட்டம் போடுது...நீங்க வந்தால்தான் கொட்டத்தை அடக்க முடியும்’ என்று.
விடுவாரா சம்பந்தர்? வீறு கொண்டு கிளம்பினார்.
சம்பந்தர் மதுரையை அடைந்து ஒரு மடத்தில் தங்கியிருந்த போது சமணர்கள் அந்த மடத்திற்கு தீ வைத்துவிட்டார்கள். இந்த தீ வைப்பு சம்பவத்தில் பாண்டியனுக்கும் உடந்தை உண்டு. இது சம்பந்தருக்கு புரிந்துவிட்டது. ‘எனக்கா தீயை வைக்குறீங்க இருங்க’ என்று ஒரு பாடலை பாடிவிட்டார். சாபம்தான். பாண்டியனின் உடல் முழுவதும் கோடைக் கொப்புளம் மாதிரி ஏதோ ஒரு வெப்ப நோய் வந்துவிட்டது. நோயில் திணறிக் கொண்டிருக்கும் பாண்டியனின் உடலை சமணரும், சம்பந்தரும் பங்கு பிரித்துக் கொண்டார்கள். ‘இந்தப் பார்ட் எனக்கு. அந்தப் பார்ட் உனக்கு’ என்று.
ஞானசம்பந்தர்தான் தியாகராஜ பாகவதருக்கு முன்னோடி ஆயிற்றே. இந்த ஸீனில் ஒரு பாடல் வருகிறது. பாடலின் வீரியத்தால் சம்பந்தர் பிரித்துக் கொண்ட உடற்பகுதியில் இருந்த வெப்பு நோய் குணமடைந்துவிட்டது. ஆனால் சமணர்களின் பார்ட் அப்படியே இருந்திருக்கிறது. கூன் பாண்டியன் சம்பந்தர் பக்கமாக சாய்ந்துவிட்டான். ‘யப்பா சாமி நீயே சரி செய்துவிடு’ என்று சரணடைந்துவிட மிச்ச மீதி கொப்புளத்தையும் சம்பந்தர் நீக்கிவிட்டிருக்கிறார்.
அதன்பிறகுதான் கழுவிலேற்றும் படலம்.
‘சைவம் பற்றி நீ எழுது; சமணம் பற்றி நாங்கள் எழுதுகிறோம்’ அந்த ஏட்டை தீயில் வீசுவோம். எது எரியாமல் தப்பிக்கிறது என பார்க்கலாம் என்றார்களாம். என்ன நடந்திருக்கும் என்று யூகித்துவிடலாம். யெஸ். சமணர்கள் தோற்றுப் போனார்கள்.
‘சரி முதல் முறை நீ ஜெயிச்சுட்ட...இந்த முறை நெருப்புக்கு பதிலாக ஏடுகளை ஆற்று நீரில் விடலாம்..எது தப்பிக்கிறதோ அவர்கள் வென்றார்கள்’ என்றார்களாம்.
அரசிக்கு டென்ஷன் ஆகிவிட்டது. ‘இப்படியே போட்டிக்கு மேல போட்டி நடத்துனா எப்படி தம்பீகளா? இதுதான் கடைசிப் போட்டி. தோத்தாங்காளிக்கு பயங்கரமான தண்டனை’ என்று அறிவித்துவிட்டாள். ஆற்று நீர் போட்டியிலும் எதிர்பார்த்தபடியேதான் முடிவு அமைந்தது. சமணர்களின் ஏடு எங்கேயோ போய்விட்டது. சம்பந்தரின் ஏடு கரையேறிவிட்டது.
இதன் பிறகுதான் சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டார்கள்.
குழந்தையாக இருந்த போது தனக்கு இறைவி பால் கொடுத்தது, அப்பா தோளில் அமர்ந்து திருத்தலங்களுக்குச் சென்றது என அனைத்தையும் துல்லியமாக பதிவு செய்த சம்பந்தர் இந்த நிகழ்வை மட்டும் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. அதை வைத்துத்தான் கழுவேற்றம் நடக்கவே இல்லை என்று சைவ ஆதரவாளர்கள் பேசுகிறார்கள். ஆனால் சம்பந்தர் வழியில் பின்னால் வந்த நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், ஒட்டக்கூத்தர் எல்லாம் கழுவிலேற்றிய நிகழ்வு நடந்ததாகவே எழுதி வைத்திருக்கிறார்கள்.
கழுவில் ஏற்றியது பொய்யாகவே இருக்கட்டும் ஆனால் தமிழகத்தில் சமணர்களை ஒடுக்கத் துவங்கியது சம்பந்தரின் காலத்தில்தான்.
சம்பந்தர் இறந்ததும் கூட சுவாரசியமான புனைவுதான். சம்பந்தருக்கு திருமண பந்தத்தில் பெரிய ஈர்ப்பு இல்லை. ஆனால் பெரியவர்கள் நிர்பந்திக்கிறார்களே என்று சம்மதித்துவிட்டார். திருமண நாளும் வந்தது. மணப்பெண்ணை கையில் பிடித்துக் கொண்டே ‘எனக்கு கல்யாணம் வேண்டாம் எனக்கு கல்யாணம் என வேண்டாம்’ என பாடியிருக்கிறார். ஒரு ரொமாண்டிக் பாடல் வர வேண்டிய இடத்தில் தத்துவப்பாடல். கடவுளுக்கே பொறுக்கவில்லை போலிருக்கிறது- திடீரென்று கோவிலில் தீ எரிந்திருக்கிறது. அதே சமயம் மேலிருந்து ஒரு குரல் கேட்டிருக்கிறது. ‘ சம்பந்தரே! நீங்க, உங்க வீட்டுக்காரம்மா மற்றும் இங்க இருக்கிறவங்க அத்தனை பேரும் ஜோதியில் கலந்து என்னிடம் வாருங்கள்’ என்று அந்தக் குரல் உத்தரவிட்டிருக்கிறது. அந்தக் குரல் சாட்சாத் சிவபெருமானுடையதுதான். மொத்தமாக அத்தனை பேரும் ஜோதியில் ஐக்கியமாகிவிட்டார்கள். சம்பந்தர் இறக்கும் போது அவருக்கு வயது வெறும் பதினாறுதான். பதினாறு வயதிலேயே செம கலக்கு கலக்கிவிட்டார். எழுபது அல்லது எண்பது வருடங்கள் வாழ்ந்திருந்தால் மொத்த வரலாற்றையும் புரட்டிப் போட்டிருப்பார்.
சம்பந்தர் இறந்துவிட்டார். அடுத்து என்ன செய்வது? திருமணத்தின் போது தீ விபத்து நடந்து சம்பந்தர் இறந்துவிட்டார் என்று எழுதி வைத்தால் பின்னால் வரும் சந்ததியினர் எப்படி அவரை முருகனின் அவதாரம் என்று சொல்வார்கள்? பார்த்தார்கள்- பதினாறு வயதிலேயே சம்பந்தர் சிவ பெருமானின் ஜோதியில் ஐக்கியமாகிவிட்டார் என்று எழுதி வைத்துவிட்டார்கள். சம்பந்தர் தனது பாடல்களை எல்லாம் தாண்டி அவதாரம் ஆகிவிட்டார்.
இதை நாம் சொன்னால் அடிக்க வருவார்கள்.
வல்லோன் வகுத்ததே வாய்க்கால் மட்டும் இல்லை வல்லோன் வகுத்ததுதான் வரலாறும்.
வல்லோன் வகுத்ததே வாய்க்கால் மட்டும் இல்லை வல்லோன் வகுத்ததுதான் வரலாறும்.
30 எதிர் சப்தங்கள்:
அப்போ THIRUNANASAMBANDHAR Airtel சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் winner
:) :)
:) :)
written in a very bad taste. i dont want to counter any of your thoughts or writings. but the taste this is written shows your wickedness. ya.. you are growing (grown) tamil writer and you should write in this way to be called as "murpokku".. ...
//பெரியவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.// this is for the other side. but when it comes to hinduism //வல்லோன் வகுத்ததே வாய்க்கால் மட்டும் இல்லை வல்லோன் வகுத்ததுதான் வரலாறும்.//
whattey mindset sirji.. :(((
//இதை நாம் சொன்னால் அடிக்க வருவார்கள்.//
ivlo muttalthanama pesuna adikka varama, madiyila vacha konjuvaanga?
பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தக் கட்டுரை எள்ளல் தொனியுடன் எழுதப்பட்டதால் மேலோட்டமாக எழுதியதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உழைத்திருக்கிறேன். இராசமாணிக்கனாரின் பெரிய புராண ஆராய்ச்சி, சு.வேங்கட்ராமனின் இந்திய இலக்கியச் சிற்பிகள், சொ.சிங்காரவேலனின் திருஞானசம்பந்தர் வரலாற்று ஆராய்ச்சி ஆகியனவற்றின் பின்னணியில்தான் எழுதியிருக்கிறேன், இந்தக் கதைகளுக்குப் பின்னால் சமூக அல்லது வரலாற்றுக் காரணிகள் இருக்கலாம். ஆனால் இந்த வரலாறுகளுக்கு பின்னால் இருக்கும் அரசியல் காரணிகள் என்னென்ன என்பதை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். இவை அபத்தம் என்றிருக்கட்டும். ஆனால் முதலை உண்ட பாலகன், அஸ்தியிலிருந்து எழும் பெண் என்பதெல்லாம் எந்தவிதத்தில் சாத்தியம்? தன் சொந்தக் குழந்தையை அரிந்து சிவனடியார்களுக்கு அமுது படைத்தார்கள் என்பது வரை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அந்தக் குழந்தை உயிர் பெற்று வந்தது என்பது எப்படிச் சாத்தியம்? சைவ, வைணவ கதைகள் மட்டுமில்லை பெரும்பாலான மத, சமய புராணங்கள்- அவை எந்த மதமாக இருந்தாலும் பெரும்பகுதி புனைவுதான் என்று உறுதியாக நம்புகிறேன். அதன் பின்னால் சமூக, வரலாற்று, இலக்கியக் காரணிகளைத் தாண்டி மிக வலுவான அரசியல் காரணிகளும் இருக்கின்றன.
சமணரைக் கழுவிலேற்றிய படலம் சேக்கிழாரின் பெரிய புராணத்தில் வருகிறது, தக்கயாப்பரணியில் ஒட்டக்கூத்தர் குறிப்பிடுகிறார், நம்பியாண்டார் நம்பியும் எழுதி வைத்திருக்கிறார். திருவிளையாடற்புராணத்திலும் இருக்கிறது. இந்தக் குறிப்பில் எழுதியிருப்பது போல சம்பந்தர் இது பற்றி எதுவும் எழுதவில்லை. ஆகவே சமணர் கழுவேற்றம் என்பது சம்பந்தரின் காலத்துக்குப் பிறகு உருவாக்கப்ப்ட்ட புனைவாக இது இருக்கவும் வாய்ப்புகள் உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் சம்பந்தரின் காலத்திற்குப் பிறகுதான் சமணம் மட்டுப்படுத்தப்பட்டது என்பது உண்மை. அப்பொழுதிருந்துதான் தெய்வீக அற்புதங்கள் என்ற பெயரில் நிறைய புனைவுகள் உருவாக்கப்பட்டன. சங்க இலக்கியத்திலிருந்து பெரும்பாலானவற்றையும் புனைவு என ஏற்றுக் கொள்ளும் நாம் ஏன் பக்தி இலக்கியத்தை மட்டும் உண்மை என ஏற்றுக் கொள்ள வேண்டும்?
well said manikandan, the epic Mahabharatha is also a exaggerated version of the small fiction.. when you read the romila thapar you understand., the mahabharatha the main characters are lived in the later vedic period ,and the war was between the tribal chiefs., and the krishna is also a one of the tribal chief who supported the pandavas.., there are several research conducted about mahabaratha the written style has a several layers.this is not written by single persion vyasa and also it is exaggrated in various periods and added to the original text....
hi manikandan ji
do read page 57 of the book "kalapirar aatchiyil tamilagam"in the link - http://www.padippakam.com/document/M_Books/m000191.pdf
the book is written by mayilai.cheeni.venkadasami who is the author of various books on samana and boudham in tamilnadu and a supporter of samanam.he himself gives explanation for yennayiram. just for your read.
my question is this. When it comes to Jainism you just callout some names and quote your views as they said. there is no proof for that and you are ready to accept it as naked truth without any doubt (not even question it) as it is said by 'elders' . But you dont apply the same scale to Hinduism. for Hinduism anything small written in literature (bhakthi or sangam) is a foolish. You have two scales for each sides. thats not fair.
Jainism : //பெரியவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.//
Hinduism : //வல்லோன் வகுத்ததே வாய்க்கால் மட்டும் இல்லை வல்லோன் வகுத்ததுதான் வரலாறும்.//
As you yourself as a writer I dont know how could you take all written in a literature is true words. You should know that all literature have have some truth and some fancied material in it. this is selective judgement and puts your mindset in question. then whats the difference between a research report and literature. You are not the only person to do this and there is a lot of precedence for you. I just dont like the hate that you give it for one side alone. I dont argue that Hinduism is a perfect. It has its own limitation and black marks. but why not the same scale is applied to other side? (any relegion it may be).
//பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்// There is no need for this. As you have not given any proof to counter or say it is wrong. You have just run through your thoughts. I can counter facts and not thoughts. Sick thoughts and selective judgement.
//முதலை உண்ட பாலகன், அஸ்தியிலிருந்து எழும் பெண் என்பதெல்லாம் எந்தவிதத்தில் சாத்தியம்? தன் சொந்தக் குழந்தையை அரிந்து சிவனடியார்களுக்கு அமுது படைத்தார்கள் என்பது வரை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அந்தக் குழந்தை உயிர் பெற்று வந்தது என்பது எப்படிச் சாத்தியம்?//
I cant resist my laugh after reading this. Do you beleive this as such? oh man.. come on grow up. These myths should be looked upon as just myths and the Moral out of them is more important. in scholls we have Moral Sceince as subject and there are stories read through (not taught) in that class and finally the teacher tells the moral of each story. These are just stories and dont treat them Research reports.
//அதன் பின்னால் சமூக, வரலாற்று, இலக்கியக் காரணிகளைத் தாண்டி மிக வலுவான அரசியல் காரணிகளும் இருக்கின்றன.//
I completely agree. but give some solid proof. Dont just callout names. If you are adding your idea or perception to the proofs then apply the same scale to both sides.
//சங்க இலக்கியத்திலிருந்து பெரும்பாலானவற்றையும் புனைவு என ஏற்றுக் கொள்ளும் நாம் ஏன் பக்தி இலக்கியத்தை மட்டும் உண்மை என ஏற்றுக் கொள்ள வேண்டும்?//
It is you who take one part fo the Bhakthi lit as "Punaivu" and the other part as "Truth". Read your previosu comment fully. You quote few stories of the bhakthi lit as Truth and the reject the other part as "story". I say everything is a story, reject the story and take the moral out of it. Thats the whole purpose of the story. "Sugar Coated".
சமணமும் பௌத்தமும் ஒரு காலத்தில் செழித்து இருந்தன. சைவமும் வைணவமும் அரசை கைக்குள் வைத்துகொண்டு இரண்டையும் அழித்தன என்பது வரலாறு .பெளத்த விகாரைகள் அனைத்தும் கோயில்களாக மாற்றப்பட்டன.சமணர் உறி கட்டிக்கொண்டும் படுகைகளிலும் வாழ்ந்ததால் பிரச்சினை இல்லை.அது மட்டுமல்லாது பெரும் எண்ணிகையிலான தமிழ் நூல்கள் தீக்கிரையாக்கபட்டன.அதே நேரத்தில் தெய்வ பாஷையை விட்டு தமிழ் உயர்வு பற்றி பேசப்பட்டது ,ஏனென்றால் இந்த பாழும் சமணரும் பௌத்தரும் தமிழில் போதனை செய்தார்கள் .
சமணரும் பௌத்தரும் சாமான்யர்கள் அல்ல.இவர்களை கபளீகரம் செய்த வைதிகர்கள் இவர்களை காட்டிலும் பெரிய தில்லலங்கடி போலும் .பௌத்தர்கள் நாளடைவில் வைதிக மதம்போல மிகபெரிய ஆடம்பர விகாரைகள் ,சொகுசான வாழ்வு ,பொன்னாலான சிலை என்று அழிந்தனர் .சமணரை அழிப்பதே பெரிய சவாலாக இருந்து இருக்க வேண்டும்
இந்த இரு சமயங்களின் கொல்லாமை பற்றிய செல்வாக்கே நம் சிவன்,விஷ்ணு மற்றும் குதிரை ,ஆடு ,பசுவை பொசுக்கி தின்னவர்களை சைவமாக மாற வைத்தது.புதுமைபித்தன் கூட இதனை வேதாளம் சொன்ன கதையில் நக்கலடிப்பார்.
மயிலை சீனி வேங்கடசாமியின் பௌத்தமும் தமிழும் / சமணமும் தமிழும் ஆகிய இரண்டும் சிறந்த ஆய்வு நூல்கள்
பூமணியின் அஞ்ஞாடி படித்துவிட்டீர்களா? ஒரு படலம் முழுதுமே ஞானசம்பந்தர் பற்றி வரும். சமண கழுவெற்றத்துக்கு பின் வரும் பேய்களின் அகோர விருந்து பகுதி... படித்துப் பாருங்கள் :)
4096 எழுத்துக்களுக்கு மிகுந்ததால் அடியேனின் கருத்துக்களை மின்-அஞ்சலில் அனுப்பியுள்ளேன். சீர்தூக்கிப் பார்க்கவும். ஆமருவி தேவநாதன் ( www.amaruvi.com)
அன்புள்ள மணி,
நீங்கள் ஆதாரமாகக்குறிப்பிடும் நம்பியாண்டார் நம்பி, சம்பந்தருக்கு கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டுகள் பின்வந்தவர் என்கிறார் திரு.பி.ஏ.கிருஷ்ணன்.
மட்டுமல்ல, நிறைய குறியீடுகளை நேரிடையாக புரிந்துகொள்வது குழப்பத்தைத்தான் தரும். உதாரணமாக சம்பந்தரின் ஏடுகள் ஆற்று நீரை எதிர்த்துவந்தமை, காலவெள்ளத்தை எதிர்த்து, தாண்டி அவரது படைப்பு உயிரோடு இருந்ததை குறிப்பதாக புரிந்துகொள்ளலாம்.
மேலும் ’கூட்டம் கூட்டமாக கழுவேற்றப்பட்ட நிகழ்வுகள் பல அது சைவர்கள் தங்களை வலுத்தவர்களாக காட்டிக்கொள்ள இட்டுக்கட்டியவையாக இருக்கலாம் என்றும், சமணர்கள் ஆவணப்படுத்துவதில் முக்கியமானவர்கள், அவர்களது ஆவணக்குறிப்புகளில் இதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை’ என்றும் ஒரு தமிழகத்தின் சமண மடத்துறவி ஒருவருடன் நடந்த உரையாடலில் தெரிவித்ததாக ஜெயமோகன் குறிப்பிடுகின்றார். (அவர் வள்ளுவரே, ஒரு சமணத்துறவி என்பதற்கு குறளை முன்வைத்தே வாதிடுகிறார்)
உங்களது கவனத்திற்காக திரு.பி.ஏ.கே அவர்களது கட்டுரையின் முழு வடிவமும்.
http://www.kalachuvadu.com/issue-167/page09.asp
அன்புடன்
பொன்.முத்துக்குமார்
வினவு வாடை தூக்கலாக அடிக்கிறது நண்பரே....இதென்ன புதுக்கூத்து ?
when lot of people praised your other posts and some of your activities you thought of yourself as a great person?
now we have to doubt all your other deeds..you are doing everything for your cheap publicity and writing for cheap fame...very bad character..the real manikandan came out...i wish you get lost and all the people who praised you stay away from you now on..you could see that here..lot of normal people who motivate you are staying away from commenting here...this should teach you where you area...
நல்ல அலசல்
சமணர் கழுவேறியதற்கு பெரிய புராணத்தை சான்றாக ஏற்கும்போது சமணர்கள் அப்பரை கொடுமைப்படுத்தினர் என்பதற்கு பெரிய புராணத்தை சான்றாக ஏற்க மறுக்கிறீர்களே!
சமணர் கழுவேறியது குறித்து சமண மத நூல்களில் குறிப்பேதும் இருக்கிறதா?
சம்பந்தர் செய்த அற்புதங்கள் மத நம்பிக்கையினால் விளைந்த புனைவுகள் தானே. இவை வரலாறா என ஆராயப் புகுந்தால், பிள்ளையார் அம்மையப்பனை சுற்றி வந்ததும் வரலாறா என ஆராய வேண்டி வருமல்லவா?
திரு வா.மணிகண்டன் அவர்களே!, எல்லாம் நன்றாகத்தானே போய்க்கொண்டு இருந்தது? பின்பு ஏன் இப்படி திடீரென்று?
வம்பு வளர்க்கும் தலைப்புகளில் வம்பு வளர்பதற்க்காகவே எழுத நிறைய பேர் இருக்கிறார்கள். நீங்கள் எதற்கு அதை செய்கிறீர்கள். சம காலத்தில் நடக்கும் மிக முக்கிய பிரச்னையை பற்றி பெரும்பாலான இணைய வாசகர்களிடம் ஒரு பிரக்ஞையை உருவாக்குவதே பெரிய பாடு. சும்மா படித்துவிட்டு போய்விடுவார்கள். அதற்க்குப்பின்பு உருப்படியாக ஒரு செயலும் பெரும்பாலும் இருப்பது இல்லை. ஆனால் கால் பணத்திற்கு கூட பெறாத இத்தகைய வம்புகள் மிக எளிதாக பற்றிக்கொள்ளும். சண்டை அடுத்தடுத்த கட்டங்களுக்கு சராமாரியாக முன்னேறும். அதனால் என்ன பயன்?
நான் மிக விரும்பி படிக்கும் உங்கள் எழுத்துக்கள் வீணான விஷயங்களுக்கு விரயமாவது துரதிர்ஷடமானது.
கிட்டத்தட்ட இந்து முஸ்லிம் பேதங்களுக்கு இணையாக இங்கே அடித்துக்கொள்ள ஆரம்பித்திருப்பதை நீங்கள் பார்க்கலாம். இதை நீங்கள் விரும்புகிறீர்களா?
Your research is good. But still strong argumrnts are required to prove your point. Jainism as a tradition is still exists in Tamil Nadu in Chengi, Vandavasi and Tindivanam belt. The names of places in Kongu region like Arachalur, Vellodu, Seenapuram, Vijayamangalam bears testimony to jain traditions once prevalent in the region.In fact, the Nettai Gopuram temple in Vijayamangalam is a Jain temple which people treat as a Hindu temple. Also u may refer to the Book by Pulavar Raasu: Kongu Naadum Samanamum which says much about Jain religion around Kongu region.
Jainism doesnt documents any thing irrational and contrary to common sense. Even the idelogies are scientific and make sensible arguments when compared Saivism. Saivism largely manifests as a casteist identity in the post 7 th century new agrarian economy, often on the top layers of feudal stratification.
Siva, Chennai
mani sir...சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.
Manikandan sir, Till date I had great regards for you. This seems to be of against a particular religion. I agree that there are some exaggerations in the history and it is always written by the mighty or the winners. But your content is particularly targeting one particular group.
Can you prove that other religions and other sections in hindu religions doesn't have this kind of exaggerations.
One has to take the good things from any religion and leave away with stories. You are targeting against one section , saivaittes, request you to do analysis and bring out a series of similar stories in other sections and religions.
திரு மணிகண்டன் அவர்களுக்கு, நான் தங்கள் பல பதிவுகள் படித்துள்ளேன். ரசித்துள்ளேன். இப்பதிவு படித்து மனம் வருந்துகிறேன். திரு ராஜீவ் பாலச்சந்திரன் எழுதி உள்ளது போல், நீங்கள் ஒரு பகுதி மக்களை குறிப்பிட்டு தாக்குவது வருத்தம் அளிக்கிறது. வெத்துவெட்டு மற்றும் விஜய் வீரப்பன் சாமிநாதன் கூறுவது போல் நானும் மனம் வருந்துகிறேன். என் செய்வது. அமைதி விரும்பி, தன் வழியே, அமைதியாக வாழும் மக்களைத் தான் இங்கு வருந்த வைக்கிறார்கள். பழகி விட்டது. நானும் பெங்களூரில் தான் (என் மகனுடன்) உள்ளேன். என்னால் ஒரு அமைதி காக்கும் சமணரையும் காண முடியவில்லை. சென்னையை சேர்ந்த எனக்கு இந்த இந்து வெறுப்பு என்பது புதிது அல்ல. ஆனால் இங்கு Koramangala அமைதியாக உள்ளது. இப்போது உங்கள் பதிவு படித்து, ஏன் படித்தோம் என ஆகி விட்டது. இந்துக்களை,(சைவர்களை) தாங்கள் இகழ்ச்சியாக எழுதியது போதும். நீங்கள் யாரை உத்தமர் என எண்ணுகிறீர்களோ, நம்புகிறீர்களோ,அவர்களைப் பற்றி மட்டும், இனி எழுதுங்கள். மற்றவர்களைப் பற்றி இகழ்ச்சியாக எழுத வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.
நாங்கள் நாத்திகர்கள் பாரபட்சம் பார்க்காமல் எழுதுவது வேறு விஷயம். ஆனால், "நான் இந்து. கடவுளை நம்புகிறேன்" என்று சொல்லிக்கொண்டு இவ்வாறு எழுதுவதற்கு ஒரு தில் வேண்டும். வாழ்த்துக்கள். நீங்கள் உங்கள் மனதுக்குப் பட்டதை எழுதுங்கள் சார். வாசகர்களின் ரியாக்ஷனை பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். நீங்கள் செய்யும் உதவிகள் மூலம் உங்கள் தொடர்ச்சியான வாசகர்களுக்கு உங்கள் முகம் தெரிந்திருக்கும். மற்றவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.
உண்மையைச் சொன்னால், ஒரு நேர்மையான சைவனால் தான் சைவத்தின் அக்கப்போர்களை சுட்டிக்காட்ட முடியும். பல நேர்மையான கிறிஸ்தவர்கள்தான் சர்ச்-இன் கொடுமைகளை தட்டிக்கேட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் தப்பித்தவறி மாற்று மதத்தின் குறைகளை சுட்டிக்காட்டினால், "நீ மட்டும் என்ன யோக்கியமா? உன் மதம் யோக்கியமா?" என்று வந்துவிடுவார்கள். ஒரு விழிப்பையும் ஏற்படுத்த முடியாது. ஒரு கிறிஸ்தவன் சைவத்தை (நியாயமாகவேனும்) குறைகூறி திருத்த முடியாது. இதை சைவன் செய்யாவிட்டால் வேறு யாரும் செய்ய மாட்டார்கள். (இஸ்லாம் பற்றி கேட்காதீர்கள், அது வேறு கதை)
இந்த சைவன், கிறிஸ்தவன் என்று பிரித்து பேசுவதற்கே அசிங்கமாக இருக்கிறது. எப்போதுதான் இந்தப் பாகுபாடுகள் தீருமோ?
உண்மை எனும் நாணயத்தின் இரண்டு பக்கங்களையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். சைவர் கட்டடக்கலை ஒரு உலக அதிசயம். அதில் மாற்றுக் கருத்தில்லை. தொல்காப்பியத்திலேயே ஒரு கணினி மொழியின் perfection னோடு தோன்றிய அற்புதம் தமிழ்மொழி. அதேசமயம் எங்கள் வரலாறு ரத்த வரலாறு. இனத்துக்குள்ளேயே வெட்டிக்கொண்டு இதுபோல மற்ற மதங்களை துரத்திவிட்டு ஆண்ட இனம் எங்கள் இனம். விதவைப் பெண்களை நெருப்புக்குள் தள்ளிவிட்ட கலாச்சாரம் எங்களது. இதில் வரலாறு ஆதாரம் கூறும் எல்லாப் பக்கங்களையும் ஏற்றுக்கொள்வோம்.
Mr.Manikandan being a saivaite I truly agree your perspective is very unique, sheds light into the thought process. Keep writing. Thy force be with you. A Society that can not accept critics and self test can not survive anymore. Vijay
//கர்நாடகாவில் இன்னமும் சமணம் உயிர் பிடித்திருக்கிறது. தமிழகத்தில்தான் காலியாகிவிட்டது. //
தவறு தமிழகத்திலும் இன்னும் சமணரால் இருகிறார்கள். ஆங்காங்கே அவர்களுக்கென் கோயில்களும் இருக்கின்றன. நன் இதுவரை வேலை பார்த்த இடங்களில் சமணராவது இருந்திருக்கிறார். ஆனால் இவர்கள் கிட்டத்தட்ட பெரும்பாலான இந்து சம்ப்ரதயங்களையே கதை பிடிக்கிறார்கள். சிலர் இந்துக் கோவிலுக்கும் செல்கிறார்கள்.
தோழரே.. நல்ல வாதம் . ஆனால் சிரிப்பைத்தான் அடக்க முடியவில்லை ..
அப்ப .. உங்கள யாராவது அடிச்சு துவம்சம் பண்ணா ..
நீங்க அப்ப கூட அவங்க பக்கமும் யோசிப்பீங்க... பாவம் அவருக்கு என்ன கோவமோ .. அதுல நம்மள அடிச்சுட்டாங்களோனு ரொம்ப பரிதாப்படுவீங்க... சத்தியமா நீங்க ரொம்ப நல்லவரு
-------------------------- ------------------------- ---------------------------------------
முதலில் இந்த மதவாத முகமூடியை கழட்டி வைத்து விட்டு பேசலாமே ..
நமது அனுபவத்தில் இல்லாத விஷயங்களை சரியென்றோ தவறென்றோ முடிவெடுப்பது உத்தமமானதில்லை.இந்து புராணங்களில் கூறப்பட்ட கதைகளில் இலைமறைக்காயாக ஆன்மிக கருத்துக்களைக் கூறியுள்ளார்கள்.எந்த கண்ணாடியும் போடாமல் படித்துப் பார்த்து நமது அனுபவத்தில் சரிபார்க்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.
கண்டனம்:சமணர்களை திராவிடர்கழகத்தினர் தாக்குவதில்லை.ஆனால் தாக்குவதாக இக்கட்டுரையில் அவதூறு கூறப்பட்டுள்ளது.இதனைக்கண்டிக்கிறோம்.
அ.இருளப்பன்/பொதுச் செயலாளர்/
அகில இந்திய சமூக நீதி பாதுகாப்புக் கூட்டமைப்பு.9942470199
Post a Comment