இந்த வாரம் சொந்த ஊரில் ஒரு வேலை இருந்தது. சொந்த ஊரில் எப்பொழுதும்தான் வேலை இருக்கிறது. யாருக்காவது திருமணம் நடக்கிறது. யாராவது இறந்து போகிறார்கள். எந்தப் பெண்ணுக்காவது பூப்பு நன்னீராட்டு விழா நடத்துகிறார்கள். ஏதாவதொரு குழந்தைக்கு காது குத்துகிறார்கள். யாருடைய வீட்டிலாவது விருந்து வைக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சோலி இருந்து கொண்டேதான் இருக்கிறது. பிழைப்பதற்காக பரதேசம் சென்றவர்களுக்குத்தான் எல்லாவற்றிலும் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை.
முதல் தலைமுறையில் சொந்த ஊரை விட்டு வெளியே வருபவர்களுத்தான் இந்தப் பிரச்சினை. ஊரை விட்டு விலகிச் செல்கிறோமே என்கிற உறுத்தல் ஒரு பக்கம் இருந்து கொண்டே இருக்கும். நம்மை ஊர்க்காரர்கள் மறந்துவிடக் கூடாது என்பதற்காகவே எல்லாவற்றிலும் கலந்து கொள்ள வேண்டிய உந்துதல் இருக்கும். அதே சமயம் செலவுக்கு பயந்து, நேரமின்மைக்கு நடுங்கி ‘மூன்றாம் பங்காளி வீட்டு காது குத்துக்கெல்லாம் இங்க இருந்து போகணுமா?’என்று சாக்குச் சொல்லி ஒதுங்கிக்கொண்டும் இருப்போம்.
சில வருடங்கள் கழித்து உள்ளூரின் பெரும்பாலான நிகழ்வுகளுக்கான அழைப்புகளும் தகவல்களுமே நமக்கு வந்து சேராது. நாம் ஊரைக் கைவிடுகிறோமோ இல்லையோ ஊர் நம்மைக் கைவிட்டுவிடும். ஊர் நம்மைக் கைவிடுகிறது என்பதை ஏற்றுக் கொள்ளவும் மனம் வராது. ஆனால் அதைத் தடுத்து நிறுத்தவும் முடியாது. ஊசலாட்டம்தான்.
இதைத் தனியாக பேசலாம்.
இந்த முறை ஊருக்கு செல்லும் போது திரு. சின்னானுக்கு எவ்வளவு பணம் வந்திருக்கிறது என்று பார்த்துவிட வேண்டும் என்பதையும் ஒரு முக்கியமான வேலையாக வைத்திருந்தேன்.
பணம் வந்துவிட்டதா என்று உறுதிப்படுத்தச் சொல்லி சிலர் கோரியிருந்தார்கள். இந்த மின்னஞ்சல்களை எல்லாம் கணக்கில் வைத்து தோராயமாக ஒரு லட்சத்தைத் தொட்டிருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டுமானால் எதிர்பார்த்தது வெறும் ஐம்பதாயிரம்தான் ரூபாய்களைத்தான்.
ஹைதராபாத்தில் இருந்த சமயத்தில் எங்கள் ஊரில் ஒரு எலெக்ட்ரீஷியனுக்கு உதவ முயற்சி செய்தேன். அவருக்கு ஒரே பையன். டீன் ஏஜ் தொடாத பையன். இவர் தினக்கூலியாக இருந்தார். தினமும் நூறு அல்லது இருநூறு சம்பாதிக்கும் தினக்கூலி. எலெக்ட்ரீஷியன் என்று சொல்லிக் கொண்டாலும் பெரிய கட்டடங்களுக்கு வேலை செய்யத் தெரியாதவர். ஃபேன் வேலை செய்யவில்லை, பியூஸ் போய்விட்டது போன்ற சோட்டா மோட்டா வேலைகளுக்கு அழைப்பார்கள். ஓடிச் சென்று வேலையை முடித்துவிட்டு கொடுப்பதை வாங்கிக் கொண்டு வருவார்.
அவரது மகனுக்கு கிட்னி பழுதடைந்துவிட்டது. பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை டயாலிஸிஸ் என்று ஆரம்பித்து பிறகு தினமும் ஒரு முறை என்கிற ரீதியில் வந்து நின்றது. எவ்வளவுதான் செலவில்லாத மருத்துவமனை என்றாலும் ஒரு நாளைக்கு ஆயிரத்தைத் தாண்டும். திணறிக் கொண்டிருந்தார். அவருக்கு நிதி திரட்டலாம் என்ற போது பைசா தேற்ற முடியவில்லை.
பிறகு என்னுடன் வேலை செய்யும் மனிதர்களிடம் பேசி பத்தாயிரம் ரூபாய் திரட்டுவதற்குள் தொண்டை காய்ந்து போனது. லட்சக்கணக்கில் கடன் வாங்கி செலவு செய்து கொண்டிருந்த எலெக்ட்ரீஷியனுக்கு அது பெரிய உதவி இல்லை. ஆனாலும் அதைக் கூட அவ்வளவு எளிதில் திரட்ட முடியவில்லை. கடைசியில் அவரது மகனையும் காப்பாற்ற முடியவில்லை.
அதன்பிறகு ஒரு சலிப்பு வந்திருந்தது. இணையத்தில் பணம் கேட்பது என்பது பலனளிக்காத செயல் என்கிற ரீதியிலான சலிப்பு. அதன்பிறகு வெகுநாட்களுக்கு கேட்கவில்லை.
இப்பொழுது தகுதியானவர்கள் யார் இருந்தாலும் தைரியமாகக் கேட்டுவிடுகிறேன். ரோபாடிக் மாணவன் ஜப்பான் செல்வதற்கு ஒரு லட்சம் கிடைத்தது. பிறகு அரசு பள்ளிகளுக்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பதற்கு எழுபதாயிரம் ரூபாய்களைக் கொடுத்தார்கள்- இந்த மாத இறுதிக்குள் புத்தகங்களை பள்ளிகளுக்குச் சேர்த்துவிடலாம். வாழை அமைப்புக்கு கிட்டத்தட்ட லட்ச ரூபாய்க்காவது நன்கொடை கொடுத்தார்கள். இப்பொழுது திரு. சின்னானுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்தைத் தாண்டியிருக்கிறது.
இதையெல்லாம் பட்டியலிடுவதற்காகச் சொல்லவில்லை.
சிறு நம்பிக்கையை விதைத்துவிட்டால் போதும். நமக்காக உதவி செய்ய ஏகப்பட்ட நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். எலெக்ட்ரீஷியன் மகனுக்கு உதவி கேட்ட போது எந்தவிதமான நம்பிக்கையையும் நான் உருவாக்கியிருக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். இந்த லட்சணத்தில் பிறர் நமக்கு உதவவில்லை என்று சலித்து என்ன பிரயோஜனம்? இந்த உலகம் கெட்டவர்களையும் விடவும் அதிகமான நல்லவர்களால் சூழப்பட்டிருக்கிறது. ஒரே பிரச்சினை- நல்லவர்கள் அமைதியாக இருந்துவிடுகிறார்கள். சரியான வாய்ப்பு கிடைக்குமிடத்தில் எந்தத் தயக்கமும் இல்லாமல் உதவுகிறார்கள்.
முந்தின நாள் இரவு பதிவு எழுதிவிட்டு அடுத்த நாளே ‘இனி பணம் தேவையில்லை’ என்று எழுத வேண்டியிருந்தது. அவ்வளவு வேகத்தில் இந்தப் பணம் சேர்ந்திருக்கிறது. நம்மைச் சுற்றிலும் அத்தனை நல்லவர்கள் இருக்கிறார்கள்.
திரு. சின்னானுக்கு பணம் அனுப்பியிருந்தவர்களில் நிறையப் பேர் தங்களது விவரங்களை வெளியிட வேண்டாம் என்று சொல்லியிருந்தார்கள். அதனால் தனித்தனியாக பெயரை வெளியிடவில்லை.
சிறு நம்பிக்கையை விதைத்துவிட்டால் போதும். நமக்காக உதவி செய்ய ஏகப்பட்ட நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். எலெக்ட்ரீஷியன் மகனுக்கு உதவி கேட்ட போது எந்தவிதமான நம்பிக்கையையும் நான் உருவாக்கியிருக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். இந்த லட்சணத்தில் பிறர் நமக்கு உதவவில்லை என்று சலித்து என்ன பிரயோஜனம்? இந்த உலகம் கெட்டவர்களையும் விடவும் அதிகமான நல்லவர்களால் சூழப்பட்டிருக்கிறது. ஒரே பிரச்சினை- நல்லவர்கள் அமைதியாக இருந்துவிடுகிறார்கள். சரியான வாய்ப்பு கிடைக்குமிடத்தில் எந்தத் தயக்கமும் இல்லாமல் உதவுகிறார்கள்.
முந்தின நாள் இரவு பதிவு எழுதிவிட்டு அடுத்த நாளே ‘இனி பணம் தேவையில்லை’ என்று எழுத வேண்டியிருந்தது. அவ்வளவு வேகத்தில் இந்தப் பணம் சேர்ந்திருக்கிறது. நம்மைச் சுற்றிலும் அத்தனை நல்லவர்கள் இருக்கிறார்கள்.
திரு. சின்னானுக்கு பணம் அனுப்பியிருந்தவர்களில் நிறையப் பேர் தங்களது விவரங்களை வெளியிட வேண்டாம் என்று சொல்லியிருந்தார்கள். அதனால் தனித்தனியாக பெயரை வெளியிடவில்லை.
மொத்த விவரம் இதுதான் -
- இரண்டு பேர்கள் தலா பதினைந்தாயிரம் அனுப்பியிருக்கிறார்கள்.
- ஐந்து பேர்கள் தலா பத்தாயிரம் ரூபாய். (அதில் ஒன்று மட்டும் பத்தாயிரத்து ஒரு ரூபாய்)
- ஒருவர் ஆறாயிரம் அனுப்பி வைத்திருந்தார்
- பத்து பேர்கள் தலா ஐந்தாயிரம் அனுப்பியிருக்கிறார்கள்.
- மூன்று பேர்கள் தலா மூன்றாயிரம் ரூபாய்.
- ஒருவர் இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் வழங்கியிருக்கிறார்.
- நான்கு பேர்கள் ஆயிரம்
- ஒருவர் ரூபாய் ஐந்நூறு அனுப்பி வைத்திருக்கிறார்.
ஆக, மொத்தமாக ஒரு லட்சத்து ஐம்பத்தியிரண்டாயிரத்து ஒரு ரூபாய். சின்னான் நெகிழ்ந்து கிடக்கிறார். ‘அத்தனை பேருக்கும் நன்றி சொல்லுங்கள்’ என்று வெளிப்படையாகச் சொல்லுமளவுக்கு அவருக்கு விவரம் இருக்குமா என்று தெரியவில்லை. அவர் எதுவுமே சொல்லவில்லை. ஆனால் அவரது நெகிழ்ச்சிக்கு அதுதான் அர்த்தம்.
இனி அந்தப் பெண் படித்துவிடுவாள். தமிழகத்தின் மிகச் சிறந்த கல்லூரியில் சேர்ந்துவிடுவாள் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. உங்களால் இது மிக எளிதான காரியமாக மாறியிருக்கிறது. அத்தனை பேருக்கும் மனப்பூர்வமான நன்றிகள்.
பணப்பரிமாற்ற விவரங்கள் கைவசம் இருக்கிறது. மேலதிக விவரங்கள் தேவைப்படுமானால் தயக்கம் இல்லாமல் தொடர்பு கொள்ளுங்கள். மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிறேன்.
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை.
மீண்டும் ஒரு முறை நன்றிகளும் என் மீதான நம்பிக்கைக்கு அன்பும் பிரியங்களும். கடைசி வரையிலும் காப்பாற்றிக் கொள்வேன்.
13 எதிர் சப்தங்கள்:
Great.... no more words.
"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை." என்ற
குறளுக்குப் பதிவிற்கும் சிறப்பு
உதவிய கரங்களுக்குப் பாராட்டுகள்!
மனதுக்கு இதமளிக்கும் சேதி. பகிர்வுக்கு நன்றி
proud to be your friend/fan
//நல்லார் ஒருவர் உளரேல்//
எத்தன மில்லி மீட்டரு?
///"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை." என்ற
குறளுக்குப்//
Oru chinna thirutham sir
Ithu Kural Illa ovvaiyar ezhuthuna Moothurai la vara 10th song..(.. Help panna ellarukkum romba thanks.:D.Nalla pathivu anna.
செயற்க்கறிய காரியத்தை செய்த உங்களை போன்ற நல்லார் ஒருவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யட்டும் மழை...
வாழ்த்துக்கள்...
சொல்ல வார்த்தை இல்லை. இனையத்தில் தனித்து நிற்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
உண்மையில் பொருளாதார ரீதியான உதவிகளைசெய்ய நிறையப்பேர் தயாராக உள்ளனர். சிக்கல் என்னவெனில், யாருக்கு தேவை என்பதை தெரிவு செய்வது மிகவும் கடினம், நிறைய ஏமாற்று பேர்வழிகளை பார்க்கிறோம். மேலும் தாமாக வலிய சென்று உதவி வேண்டுமா என்று கேட்பதும் சரியாக இராது.ஆகவே நம்பகமான ஒருவர் பரிந்துரை செய்பவர்களுக்கு உதவுவது ஒரு நல்ல channel. தாம் ஏமாற்றப்பட மாட்டோம் என்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கையை உருவாகியது உங்கள் வெற்றியே...
இங்க பாருடா நக்கீரன் பேத்தி.(கோவிச்சுக்காதீங்க தர்ஷினி இது தமாசு)
Na Nakkiranukku pethi illa than... Ana tamil related ah wrong ana information kudutha atha nama than sari pannanum. Because we are "TAMIZHANS". itha mothalla seiya parunga... enna kindal panni ungalukku enna vara pothu.
மன்னிச்சிக்கிடுங்க.
Dear Mani,
Happy to know this information.. But if somebody pay attention to groom her in right way, will help other kids. I believe she will shake her hands, when others are in need in future. For that, she has to complete the degree and apart from that, she has to groom herself in right way, where many of village/ suburb students fail. Please convey my best wishes to her.
Post a Comment