சின்னானை வெகுகாலமாகத் தெரியும். சின்ராசு என்பதன் சுருக்கப்பட்ட வடிவம்தான்- சின்னான். சலவைத் தொழிலாளி. அக்கம்பக்கம் இருக்கும் வீடுகளில் துணி வெளுத்தால் கிடைக்கும் வருமானத்தில்தான் மொத்த ஜீவனமும் ஓடிக் கொண்டிருக்கிறது.
வெளுக்கச் செல்லும் வீடுகளில் அள்ளியெல்லாம் கொடுக்க மாட்டார்கள். சில வீடுகளில ஆண்டுக்கு பத்தாயிரம் கொடுக்கிறார்கள். வேறு சில வீடுகளில் ஆண்டுக்கு வெறும் ஐந்தாயிரம் ரூபாய்தான். மொத்தமாக ஆறு அல்லது ஏழு வீடுகளில் வெளுக்கிறார் போலிருக்கிறது. எப்படியிருந்தாலும் ஆண்டு வருமானம் ஐம்பதாயிரத்தைத் தாண்டாது.
இதுபோக தீபாவளி, பொங்கல் என்றால் அரிசி, பருப்பு, இனிப்பு என்று மனசுக்குத் தகுந்த மாதிரி கொடுப்பார்கள். அதோடு சேர்த்து ஐம்பது அல்லது நூறு ரூபாயை இனாமாகத் தருவார்கள். அவ்வளவுதான் வருமானம். இந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு எஜமானன் வீட்டுத் துணிகள் அத்தனையையும் துவைத்து, காய வைத்து, வெள்ளைத்துணியாக இருந்தால் வெள்ளாவியில் போட்டு, இஸ்திரி செய்து, மடிப்புக் கலையாமல் கொடுக்க வேண்டும்.
இதுபோக தீபாவளி, பொங்கல் என்றால் அரிசி, பருப்பு, இனிப்பு என்று மனசுக்குத் தகுந்த மாதிரி கொடுப்பார்கள். அதோடு சேர்த்து ஐம்பது அல்லது நூறு ரூபாயை இனாமாகத் தருவார்கள். அவ்வளவுதான் வருமானம். இந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு எஜமானன் வீட்டுத் துணிகள் அத்தனையையும் துவைத்து, காய வைத்து, வெள்ளைத்துணியாக இருந்தால் வெள்ளாவியில் போட்டு, இஸ்திரி செய்து, மடிப்புக் கலையாமல் கொடுக்க வேண்டும்.
நகரத்தில் இருக்கும் சலவைத் தொழிலாளிகள் போலத் துணிக்கு இத்தனை கொடுங்கள் என்றெல்லாம் சின்னான் கேட்பதில்லை. எத்தனை துணிகளைப் போட்டாலும் வெளுத்துக் கொடுத்துவிடுவார். அப்பிராணி.
ஒரு காலத்தில் எங்கள் வீட்டுக்கு வந்து வெளுத்துக் கொண்டிருந்தார். அவரது ஊருக்கும் எங்கள் ஊருக்கும் கிட்டத்தட்ட முப்பது கிலோமீட்டர் தூரம் இருக்கும். சின்னானுக்கு உடல் வலுவும் குறைந்து கொண்டேயிருந்தது; பஸ் கட்டணமும் கட்டுபடியாவதில்லை என்று நின்றுவிட்டார். அவர் வந்து கொண்டிருந்த குறுகிய காலத்தில் நிறையக் கதைகள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அத்தனையும் சொந்தக் கதைகள் + சோகக் கதைகள்தான்.
அவருக்கு மூன்றும் பெண் பிள்ளைகள். அதுதான் அவரது பெரும் பிரச்சினை. அவரது பேச்சுக்கள் பெரும்பாலும் அதைச் சுற்றித்தான் இருக்கும். குடியிருக்க சொந்த வீடு இல்லை- இந்த நிலையில் மூன்று பிள்ளைகளை வளர்த்து, ஆளாக்கி, இன்னொருத்தனுக்கு எப்படி கட்டிக் கொடுக்கப் போகிறேன் என்று ஒரு தடவை பேசுவார். இன்னொரு முறை ‘இவர்கள் மூன்று பேரும் போன பிறகு எங்களைப் பார்த்துக் கொள்ளக் கூட யாரும் இருக்க மாட்டார்கள்’ என்று கலங்குவார். பேசிக் கொண்டே துணியை கல் மீது தப்பும் போது தனது அத்தனை துக்கங்களையும் அந்தக் கல்லின் மீது இறக்கி வைக்கிறார் என்று நினைக்கத் தோன்றும். அத்தனை ஆக்ரோஷமாக இருக்கும்.
சின்னான் என்னதான் கதைகள் பேசினாலும் அந்தப் பெண்களின் படிப்பு பற்றியோ அவர்கள் வேலைக்குப் போவது பற்றியோ அவர் பேசியதாக ஞாபகமே இல்லை. அதற்கான கற்பனைகளைக் கூட அவர் செய்திருக்க மாட்டார். எதற்கு கற்பனை செய்யப் போகிறார்? அதெல்லாம் தனது சாதிக்கும், தொழிலுக்கும் சம்பந்தமேயில்லாதது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவர்தான் பேசியதில்லையே தவிர பெண்கள் படு சுட்டிகள். பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள்
பத்தாவது வரை அரசுப்பள்ளியில்தான் படித்தார்கள். மதிப்பெண்களை குவித்துவிட்டார்கள். தனியார் பள்ளியொன்று ஃபீஸ் இல்லாமல் படிக்க வைப்பதாகச் சேர்த்துக் கொண்டார்கள். ப்ளஸ் டூவிலும் பட்டாசு வெடித்திருக்கிறார்கள். முதல் மகள் 1140, அடுத்த ஓரிரண்டு வருடத்தில் இரண்டாவது மகள் 1122, மூன்றாவது மகள்- நந்தினி- இந்தவருடம் 1140 மதிப்பெண்கள். ‘சின்னான் புள்ளைக படிப்புல செம கடுசு’ என்று ஊருக்குள் பேச வைத்துவிட்டார்கள். முதல் இரண்டு பெண்களும் பொறியியல்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருத்தி கம்யூட்டர் சயின்ஸ், இன்னொருத்தி ஐடி. சின்னானிடம் பேசிப் பார்க்க வேண்டுமே. தனது இரண்டு மகள்களுமே பொறியியல் படிக்கிறார்கள் என்பதில் அத்தனை சந்தோஷம். அத்தனை பெருமை.
முதல் இரண்டு மகள்களைவிடவும் மூன்றாவது பெண்ணுக்கு நல்ல கல்லூரி கிடைத்துவிடும். கட் ஆஃப் 199.25. கணிதத்தில் 200; இயற்பியலில் 198; வேதியியலில் 199. இன்று மாலையில்தான் பேசினேன். மதிப்பெண்களைக் கேட்டு வாயடைத்துவிட்டது. அப்பன் சலவைத் தொழிலாளி, சொற்ப வருமானம், குடியிருக்க வீடு இல்லை ஆனாலும் கலக்கியிருக்கிறாள். அவளது சூழலில் இத்தனை மதிப்பெண்களைக் குவிப்பதெல்லாம் மிகப் பெரிய சாதனை இல்லையா?
இதுவரை எல்லாமே சுகம்தான். இனிமேல்தான் சிக்கலே. முதல் பெண்ணுக்கு வங்கிக்கடன் கிடைத்துவிட்டது. தப்பித்துவிட்டார்கள். இரண்டாவது பெண்ணுக்கு வங்கியில் கடன் வாங்க முடியவில்லை. கை ஊன்றி கர்ணம் அடித்து முதல் வருட ஃபீஸைக் கட்டிவிட்டார். இந்த ஆண்டு இரண்டாவது வருடச் செலவும் வந்து சேர்ந்துவிட்டது. அதோடு சேர்த்து இப்பொழுது மூன்றாவது பெண்ணுக்கும் தயாராக வேண்டும். அத்தனை செலவையும் தனது ஆண்டு வருமானம் ஐம்பதாயிரத்தில் செய்தாக வேண்டும். கண்ணாமுழி திருகிக் கிடக்கிறார்.
‘நல்லா படிச்சுட்டா சாமி...படிப்பை நிறுத்துறதுக்கும் மனசு வரலை’ என்ற போது ஒரு கணம் கலங்கித்தான் போனார்.
‘அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இருக்காது சின்னா...எப்படியும் சமாளிச்சுடலாம்’ என்று சொல்லிய போது ‘இந்த வார்த்தையே போதுஞ்சாமி...அவ படிச்சுடுவா’ என்றார். அவருக்கு வேறு என்ன பதிலாகச் சொல்ல முடியும் என்று தெரியவில்லை. கையில் லட்சக்கணக்கில் பணத்தை வைத்துக் கொண்டு எந்தக் கல்லூரியில் சேர்ப்பது என்று ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது. கையில் துளி காசு இல்லாமல் ஏகப்பட்ட மதிப்பெண்களை வைத்துக் கொண்டு சின்னானின் மகள்களும் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
அதற்கு மேல் அவரிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அடுத்த வாரம் அழைப்பதாகச் சொல்லிவிட்டு கட் செய்துவிட்டேன். இடைப்பட்ட காலத்தில் ஏதாவது செய்துவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. உங்களால் உதவ முடியும் என்றால் சின்னானின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக மாற்றிவிடுங்கள். எனக்கு ஒரு தகவலை மட்டும் சொல்லிவிடுங்கள்.
(இப்போதைக்கு தேவையான பணம் கிடைத்துவிட்டதால் வங்கிக்கணக்கின் பிற விவரங்கள் நீக்கப்பட்டிருக்கிறது. நன்றி)
vaamanikandan@gmail.com
வங்கிக் கணக்கு எண்: 05520100021446 (Bank of Baroda)
Account Holder: Anitha.C
Joint Holder: Chinrasu
Joint Holder: Chinrasu
(இப்போதைக்கு தேவையான பணம் கிடைத்துவிட்டதால் வங்கிக்கணக்கின் பிற விவரங்கள் நீக்கப்பட்டிருக்கிறது. நன்றி)
vaamanikandan@gmail.com
31 எதிர் சப்தங்கள்:
Good gesture......i am curious to know.....How do you call Mr.Chinnan ....Chinnan or Anna
அருமையான செயல்..
indiegogo.com you can use this site to raise money for any good cause.
I will send money through my friend in Erode. I don't know whether he contacted Arumugasamy, Coimbatore (Manal contractor). He pay Rs.25,000.00 for all students who got more than 1000 marks irrespective their income. If he explained the situation abt his 3 daughters he will pay more. Every year he spend more than 300 Crores for educational charity.
How do you call Mr.Chinnan ....Chinnan or Anna
//‘அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இருக்காது சின்னா...எப்படியும் சமாளிச்சுடலாம்’ என்று சொல்லிய போது
Mani.. I will do my best.... Please update chinnans full name in blog. Otherwise there would be many rejections in online credit...
நல்லது நடக்கும் என்று நம்புவோம். வங்கி விவரத்துக்கு நன்றி.
Hi,
what is the Beneficiary Account Name ?
Thanks
நன்றி சிவா. அக்கவுண்ட் யார் பெயரில் இருக்கிறது என்ற விவரத்தை வாங்காமல் விட்டுவிட்டேன். இன்று காலையில் பேசி வாங்கினேன். அப்டேட் செய்தாகிவிட்டது.
Account Holder: Anitha.C
Joint Holder: Chinrasu
தங்கள் பணிக்குப் பாராட்டுகள்
கோவை ஸ்ரீவிஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை சார்பில் இந்தாண்டு தமிழகம் முழுவதும் உள்ள மாணவ-மாணவிகளுக்கு ரூ.125 கோடி உதவித் தொகை வழங்கப்பட உள்ளதாக அறக்கட்டளை முதன்மை ஆலோசகரும், தமிழக ஒக்கலிகர் மகாஜன சங்க மாநிலத் தலைவருமான ஆர்.வெள்ளிங்கிரி தெரிவித்தார். விஜயலட்சுமி அறக்கட்டளை அலுவலக தொ.பே. எண் -0422-2434393
கட்டாயம் அவர்கள் மூவரும் நன்றாக படிப்பை முடித்து வெளியில் வருவார்கள் எனக்கு நம்பிக்கை இருக்கிறது அதை விட உதவும் நல் உள்ளங்கள் உலகத்தில் இருக்கிறார்கள். துளசி கோபால் போன்றவர்களின் ஆசியும் இருக்கிறது.
hi
Nadigar surya nadathum "Agaram Foundation" nai thodarpu kollalaame :-)
Placed e-mail about this year vijaya-lakshmi trust fund for +2 passed-outs this year.
It is in coimbatore & i am one of the beneficiary during my B.E in 2003-2007 (5k each year)
I have attached the paper advt to ur g-mail id
கோவை ஸ்ரீவிஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை சார்பில் இந்தாண்டு தமிழகம் முழுவதும் உள்ள மாணவ-மாணவிகளுக்கு ரூ.125 கோடி உதவித் தொகை வழங்கப்பட உள்ளதாக அறக்கட்டளை முதன்மை ஆலோசகரும், தமிழக ஒக்கலிகர் மகாஜன சங்க மாநிலத் தலைவருமான ஆர்.வெள்ளிங்கிரி தெரிவித்தார். விஜயலட்சுமி அறக்கட்டளை அலுவலக தொ.பே. எண் -0422-2434393
//முதல் இரண்டு மகள்களைவிடவும் மூன்றாவது பெண்ணுக்கு நல்ல கல்லூரி கிடைத்துவிடும். கட் ஆஃப் 199.25. கணிதத்தில் 200; இயற்பியலில் 198; வேதியியலில் 199. //
நன்றாகப்படிக்கும் மாணவியின் கல்விக்கு உதவ வேண்டும் என்ற செயல்ப்பாராட்டுக்கு உரியது.
ஆனால் எதையும் கொஞ்சம் சீரியஸ் ஆக்கி எழுத வேண்டும் என்ற உங்கள் ஆவல் தான் புரியவில்லை.
கடந்த ஆண்டு அண்ணா பல்கலையில் ஓபன் கோட்டாவின் கட் ஆப் -199.67, முடிவு 198.50.
எனவே கண்டிப்பாக அண்ணா பல்கலை சென்னை மையத்திலேயே 199.25 மதிப்பெண்ணுக்கு இடம் கிடைக்கும், எனவே தாரளமாக வங்கிக்கடனும் கிடைத்துவிடும், ஆகவே படிப்பினை தொடர எப்பிரச்சினையும் இருக்காது.
OC BCM BC MBC SC SCA ST
199.00 197.00 198.50 197.25 194.00 189.50 192.75
http://annauniversitybe.info/TNEA-2013/che-ComputerScienceEngineeringCutoff2013-1.php
குறைந்த பட்ச கட் ஆஃப் மேற்சொன்னது ,199.25 என்றமதிப்பெண்ணுக்கு சென்னை அண்ணாப்பல்கலையில் இடம் உண்டு. எனவே ஆரம்பக்கட்ட செலவுக்கு சிறிதளவு பண உதவியே போதுமானது என நினைக்கிறேன்.
மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்! இந்த தகவலை என் முக நூல் பக்கத்தில் பகிர்கிறேன்! என்னால் இயன்றதை செய்கிறேன்! நன்றி!
This trust belongs to Arumugasamy, actually they spent more than the amount (3 times more) announced in public.
Is this a Savings or Current account (needed for transfer)
//எனவே தாரளமாக வங்கிக்கடனும் கிடைத்துவிடும், ஆகவே படிப்பினை தொடர எப்பிரச்சினையும் இருக்காது.//
கல்விக்கடன் கிடைத்துவிடும் சரிதான்.
உங்களின் உதவி அந்த பெண்ணின் மற்ற செலவுகளுக்கு பயன்படட்டுமே.. அனைத்தையும் அவளின் பெற்றோரால் சமாளிக்க முடியாத பட்சத்தில்
At least he is trying to help the family. What is your problem Vavval? Why do you always criticize his writings? If you do not feel this as a serious issue, then just get the f out. She will get in Anna University - Do you think the bank gives loan for every expenses that she will have for the next four years? - right.. and she has to study with the loan burden.
If someone really willing to help out - kind of scholarship - then the writing needs to be little serious.
Hope you understand.
//இரண்டாவது பெண்ணுக்கு வங்கியில் கடன் வாங்க முடியவில்லை. கை ஊன்றி கர்ணம் அடித்து முதல் வருட ஃபீஸைக் கட்டிவிட்டார். இந்த ஆண்டு இரண்டாவது வருடச் செலவும் வந்து சேர்ந்துவிட்டது. அதோடு சேர்த்து இப்பொழுது மூன்றாவது பெண்ணுக்கும் தயாராக வேண்டும்//
Bank loan is that easy for the third daughter because parents are the co-signer for the student load. He already signed for the first girl so he can't get the loan for the 2nd daughter.
வீட்டுக்கு ஒருத்தங்களுக்கு தான் லோன் குடுப்பாங்க.
யாருப்பா இவங்கலாம்? ஒரு பின்னூட்டம் போடனும்னா கூட இவங்க விருப்பப்பட்ட படியே தான் போடனும் போல இருக்கு அவ்வ்!
ஆலமரம், நாட்டாமை ,சொம்பு ,அல்லக்கைனு கே.எஸ்.ரவிகுமார் படம் பார்க்கிறாப்போலவ்வே ஒரு ஃபீலிங்க் அவ்வ்!
# ஒரு செயற்கை தன்மையுடன் எல்லாவற்றையும் எழுதுவதால் குறிப்பிட வேண்டியிருந்தது.
# 199.25 கட் ஆஃப் வச்சிருந்தாலும் தமிழ்நாட்டில் படிக்க அரசு மூலம் /அல்லது எவ்வித உதவியும் கிடைக்காது ,இணையத்தில் உள்ள சேகுவேராக்கள் மூலமே சாத்தியம் என இதனைப்படிப்பவர்கள் தமிழகத்தினை தப்பா நினைச்சிடக்கூடாதுனு தான் ,அந்த விவரத்தினை சொன்னேன்.
# உதவி கோரும் போது என்ன ரேஞ்சில் தேவை என தெளிவாக சொல்வதே நல்லது, அப்போ தான் உதவலாம் என நினைப்பவர்களுக்கும் ஒரு ஐடியா கிடைக்கும்.
எல்லாம் எதற்கும் கவலைப்படாத மல்டி மில்லியனர்ஸ் ஆக இருப்பாங்க போல ,நான் வேற என்னமோ பேசிட்டு இருக்கேன் போல அவ்வ்!
------------
அண்ணா பல்கலையில் இடம் கிடைத்துவிட்டால் " கண்டிப்பாக வேலைக்கு உத்திரவாதம்" என்பதால் வங்கிகள் தயங்காமல் கடன் கொடுக்கின்றன, எனவே வீட்டுக்கு ஒருத்தர் என எல்லாம் தட்டிக்கழிக்காது. பல்கலையிலே வங்கிக்கடன் பெற என ஒரு செல் இயங்குகிறது,அவர்களே உதவுகிறார்கள்.
மெஸ்பில் கூட "ஸ்காலர்ஷிப்" உண்டென்றால் அதில் வரும் போது பிடித்துக்கொள்ளுவார்கள் ,மாதம் கட்டத்தேவையில்லை.
அட்மிஷனுக்கு மட்டும் காசு தேத்திட்டா போதும், அப்புறம் அங்க வண்டிய ஓட்டிறலாம்,மற்ற பணம் புடுங்கி கல்லூரிகள் போல் அல்ல நிலவரம்.
Hi Can i get her Mob No ?
//நன்றாகப்படிக்கும் மாணவியின் கல்விக்கு உதவ வேண்டும் என்ற செயல்ப்பாராட்டுக்கு உரியது//
என்பதோடு நிறுத்தியிருக்கலாம். இன்று உதவி செய்பவர்கள் குறைந்து கொண்டிருக்கிறார்கள்.மணியை ரவுண்டு கட்டி அடிப்பதெற்கென்றே நிறைய பதிவுகள் இருக்கின்றன. இன்னும் எழுதுவார்.யாருடைய விருப்பப்படியும் பின்னூட்டமிட வேண்டியதில்லை.ஆனால் யாருக்கோ உதவி தேவை யார் யாரோ உதவுகிறார்கள். இதில் பின்னூட்டம் தாக்கத்தினை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறதல்லவா.மீண்டும் சொல்கிறேன்.உதவி செய்பவர்கள் குறைந்து கொண்டிருக்கிறார்கள்.
ஏம்ம்பா அவர் சீரியஸா எழுதறாரு இல்ல, சிரிச்சிக்கிட்டே எழுதறாரு அது அவர் இஷ்டம். ஏன் பத்திக்கு பத்தி ஒரு மணி நேரம் இடைவேளை விட்டு உக்காந்து அழுதுட்டு கூட எழுதுவார். அவர் எழுத்து, அவர் வலைப்பூ. படிக்க புடிச்சிருந்தா படிங்க. உதவி செய்ய மனசிருந்தா செய்ங்க. இல்லனா உங்க வேலைய பார்த்திட்டு போயிட்டே இருங்க. அவர் எழுதறதால மூணு குழந்தைகள் வசதியில்லாத குடும்பத்தில் இருந்து படிக்கிறாங்க. படிக்க போறாங்க. எவ்வளவோ செலவுகள் தேவைகள் இருக்கும். நல்ல மனசு இருக்கிற பலர் உதவ தயாரா இருக்காங்க. எதுக்கும் சம்பந்தம் இல்லாம நீங்க ஏன் நடுவுல ஜம்பிங் அப் அண்ட் டவுன்...???? அவர் எழுதறதால ஒரு குழந்தை படிக்க போகுதுன்னா வசதி வாய்ப்பு இருக்கறவங்க உதவி பண்ணுங்க. இல்லாதவங்க குறைந்த பட்சம் உற்சாகபடுத்துங்க. இல்லன்னா உங்க வேலைய பார்த்துட்டு போயிட்டே இருங்க.
/////ஒரு செயற்கை தன்மையுடன் எல்லாவற்றையும் எழுதுவதால் குறிப்பிட வேண்டியிருந்தது////
உங்க மேதாவித்தன்மையை காட்டுவதற்கான பதிவு இது அல்ல. இங்க பாராட்டி பின்னூட்டம் இட்ட, பணம் அனுப்பி உதவி செய்தவர்களில் பலருக்கும் தனிப்பட்ட முறையில் அவர் எழுத்தில் தனிப்பட்ட கருத்து இருந்திருக்கும். ஆனால் இந்த குறிப்பிட்ட பதிவில், பதிவின் சாரம்சத்தை மட்டுமே பார்த்திருப்பார்கலேயன்றி, மணி எப்படி எழுதியிருக்கிறார் என்று பார்த்திருக்க மாட்டார்கள். அது நாகரிகம்.
////ஆலமரம், நாட்டாமை ,சொம்பு ,அல்லக்கைனு கே.எஸ்.ரவிகுமார் படம் பார்க்கிறாப்போலவ்வே ஒரு ஃபீலிங்க் அவ்வ்! /////
வசதியில்லாத மூன்று பெண் குழந்தைகளின் படிப்பிற்கு உதவி கோரும் ஒரு பதிவில் இந்த மாதிரியான கீழ்த்தரமான பின்னூட்டம் இட்டதில் இருந்தே உங்களின் தரம் வெளிச்சமாகிறது. உங்களிடம் நாகரிகம் எதிர்ப்பார்ப்பது கூட முட்டாள்தனமானது.
//உங்க வேலைய பார்த்துட்டு போயிட்டே இருங்க.//
உமக்கும் அஃதே!
Post a Comment