NTTF(Nettur Technical Training Foundation) பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். 1960களில் இருந்து தொழிற்சார் கல்வியை கற்பித்துவரும் நிறுவனம். பதினோரு வருடங்களுக்கு முன்பாக ஓசூரில் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்க்கும் குறைவான சம்பளத்தில் கஷ்டப்பட்டு வந்த எனது வாழ்வைப் புரட்டி போட்ட இடம் இது.
டூல் எஞ்சினியரிங், புராடக்ட் டிசைன் என இரு பிரிவுகளில் 2 ஆண்டு முதுநிலை பாடமும், டூல் டிசைன்/குவாலிட்டி ஆகியவற்றில் 1 ஆண்டு முதுநிலை பட்டையப் படிப்பும் கற்பிக்கிறார்கள். தொழிற்சாலைகள் அருகிலேயே இருப்பதால் செயல்வழிக் கற்றலுக்கும் குறைவில்லாத இடம் அது. படித்த பாடத்தை அது பயன்படும் இடத்திலேயே பார்த்து கற்றுக் கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமிருக்கும் பட்சத்தில் உங்கள் வலைத்தளத்தில் இந்த படிப்பைப் பற்றி எழுதுங்கள். நிச்சயம் ஏதாவது ஒரு மாணவனுக்கு உதவக் கூடும்.
சொல்ல மறந்துவிட்டேனே... கடந்த கடந்த 18~20 வருடங்களாக இங்கு படிக்கும் 90% க்கும் அதிகமானவர்களுக்கு படிப்பை முடித்தவுடன் வேலை கிடைத்துவிடுகிறது.
-அசோக் குமார்.
திரு. அசோக் குமார் குறிப்பிட்டிருப்பது போல பொறியியல் அல்லது பட்டயப்படிப்பை முடித்துவிட்டு வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இந்த நிறுவனம் உதவக் கூடும். சென்னையைப் பற்றித் தெரியவில்லை- பெங்களூரில் இது போன்ற சில நிறுவனங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்- இவை வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கக் கூடிய நிறுவனங்கள். வெறும் புத்தகப் படிப்போடு நின்றுவிடாமல் தொழில் கற்றுக் கொள்ளலாம்.
எம்.டெக் படிக்கிறேன் என்று லட்சக்கணக்கில் ஏ.சி.சண்முகத்துக்கும், பச்சமுத்துவுக்கும், ஜேப்பியாருக்கும் அழுவதற்கு பதிலாக இது போன்ற உத்தரவாதமுள்ள படிப்புகளைப் பற்றி யோசிக்கலாம். இத்தகைய தொழிற்சார் பட்டயப் படிப்புகளை முடித்துவிட்டு ஏதேனும் ஒரு நிறுவனத்தில் நான்கைந்து வருடங்களுக்கு பணி புரியலாம். ஒத்து வந்தால் பார்க்கலாம் இல்லையென்றாலும் கூட படித்த படிப்பு கை கொடுத்துவிடும். மிகச் சிறிய நிறுவனம் ஒன்றை சொந்தமாக ஆரம்பித்தால் கூட மேலே வந்துவிடலாம்.
கோயமுத்தூர், அம்பத்தூர் போன்ற இடங்களில் கவனித்துப் பார்த்திருக்கலாம்- சிறு சிறு தொழிற்சாலைகளை நடத்திக் கொண்டிருப்பார்கள். அவர்கள் என்ன தயாரிக்கிறார்கள் என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். பெரிய நிறுவனம் ஒன்றோடு ஒப்பந்தம் போட்டிருப்பார்கள். அந்த நிறுவனத்திற்குத் தேவையான சிறியதாக ரப்பர் மூடி ஒன்றைச் செய்து தருவார்கள். அவ்வளவுதான். ஒவ்வொரு மாதமும் இத்தனை லட்சம் ரப்பர் மூடி என்று பேசி வைத்திருப்பார்கள். அவற்றைத் தயாரித்து அனுப்பிக் கொண்டே இருப்பார்கள். பார்ப்பதற்குத்தான் சிறிய பட்டறை. ஆனால் ஏழெட்டுப் பேருக்கு வாழ்வு கொடுத்துக் கொண்டிருக்கும்.
இப்பொழுதெல்லாம் பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கிட்டத்தட்ட அத்தனை வேலைகளையும் outsourcing செய்துவிடுகின்றன. ஒரு மோட்டார் தயாரிக்கும் நிறுவனம் தனக்குத் தேவையான அத்தனை உதிரிபாகங்களையும் தானே தயாரிப்பதில்லை. மேற்சொன்னபடி சிறு நிறுவனங்களிடமிருந்துதான் உதிரி பாகங்களைப் பெற்றுக் கொள்கின்றன. ஒரு சிறு நிறுவனம் மோட்டார் நிறுவனத்திற்குத் தேவயான ஆணிகளை உற்பத்தி செய்து தரும், இன்னொரு நிறுவனம் மோட்டாருக்குத் தேவையான ரப்பர் வால்வுகளை உற்பத்தி செய்து தரும், இன்னொரு நிறுவனம் Name plate அச்சடித்துத் தரும். பெரிய நிறுவனத்தின் வேலை என்பதே இதையெல்லாம் வாங்கி பொருத்தி(Assemble) தனது நிறுவனத்தின் Brand ஐ ஒட்டி விற்பனை செய்வதுதான்.
இது மோட்டார் தயாரிக்கும் நிறுவனத்திற்கு மட்டும் இல்லை- கார் தயாரிப்பிலிருந்து கம்யூட்டர் தயாரிப்பு வரைக்கும் ஒவ்வொரு நிறுவனத்திலும் இதுதான் நடக்கிறது. பெரிய நிறுவனங்கள் தங்களின் Brand பெயரை வைத்து பணம் கொழித்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் ஒவ்வொரு பாகமும் வேறு யாராவது தயாரித்ததாகத்தான் இருக்கும்.
இந்தியாவில் உதிரி பாகங்கள் தயாரிப்புக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கும் என்கிறார்கள். கனரகத் தொழிற்சாலைகளுக்கு நம்மவர்கள் ரத்தினக் கம்பளம் விரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஏற்கனவே இங்கு இருக்கும் பல நிறுவனங்களே சரியான உதிரி பாகங்கள் கிடைக்காமல் திணறுகின்றன. இங்கு கிடைக்காத பாகங்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இவையெல்லாம்தான் வாய்ப்புகள். சரியான வாய்ப்பைக் கண்டுபிடித்துவிட்டால் துணிந்து தொழிற்சாலை ஆரம்பித்துவிடலாம். மிகப்பெரிய முதலீடு தேவைப்படும் என்றும் சொல்ல முடியாது. சுமாரான முதலீடு போதும். அதற்கும் சிறு தொழில் தொடங்க உதவுவதற்கான ஏகப்பட்ட கடன் வசதிகள் இருக்கின்றன. அரசாங்கமே கொடுக்கிறது. பயன்படுத்திக் கொள்ளலாம்.
பெரிய நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாகத்திற்கான ஆர்டர் பிடிக்குமளவுக்கு தொடர்புகள் இருந்தால் போதும். அப்படியான தொடர்புகள் ஏதுமில்லாதவர்கள் சில வருடங்களுக்கு வேறொரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தால் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
NTTF நுழைவுத் தேர்வு நடத்துகிறது. இது ஒன்றுதான் நிறுவனம் என்றில்லை. ஒரு உதாரணம்தான். வேறு நல்ல நிறுவனங்கள் இருந்தாலும் யோசித்துச் சேரலாம். NTTF உட்பட எந்த நிறுவனமாக இருந்தாலும் அதன் தற்போதைய தரம், படிப்புக்கு பிறகான வேலை வாய்ப்பு குறித்து விசாரித்துவிட்டுச் சேருங்கள்.
இவனுக்கு என்ன எழுதிவிட்டு போய்விடுவான் ‘தொழிற்சாலை ஆரம்பித்து, ஆர்டர் பிடித்து...என்னத்த ஆரம்பித்து..என்னத்த பிடித்து’ என்று நினைக்க வேண்டியதில்லை. எழுதுவதற்கு எளிதுதான். உள்ளே கால் வைத்தால்தான் அதில் இருக்கும் சிரமங்கள் தெரியும் என்று ஒத்துக் கொள்கிறேன். ஆனால் துணிந்து இறங்கினால் இது நிச்சயமாக சாத்தியப்படும். நிறைய உதாரணங்களைக் காட்டமுடியும்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்- எப்பொழுதுமே துணிந்தவன்தான் ஜெயிக்கிறான்.
(கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்து அடிக்கடி எழுதுகிறான் என்று சலித்துக் கொள்ள வேண்டாம். இது சீஸன். யாராவது ஒருவருக்காவது உதவலாம் இல்லையா? அதுதான்)
13 எதிர் சப்தங்கள்:
Good to know! if atleast few students get inspired and join it will be nice!
And the readers / ur followers if they suggest institution / trust like this others will get benefitted.
(கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்து அடிக்கடி எழுதுகிறான் என்று சலித்துக் கொள்ள வேண்டாம்.///
no, no. appadi ellam yaarum ungalin ezuthai paarthu ninaikka maatarkal sir.
இது சீஸன். யாராவது ஒருவருக்காவது உதவலாம் இல்லையா? அதுதான்)///
kandippaa sir. innum niraiya ezuthungal sir kalvi thodarpana vishayangal.
இதெல்லாம் எழுத ஒருவர் இருக்கிறார் என்றால் சந்தோசம்தான்....சலிப்பு எங்கிருந்து வந்தது
இது கண்டிப்பாக பயனுள்ள தகவல் தான்
இந்த படிப்பைப் பற்றி எழுதியதற்கு மிக்க நன்றி மணி.
நீங்கள் குறிப்பிட்டது போல பெரும் எண்ணிக்கையிலான முன்னாள் மாணவர்கள் தொழிற்கூடங்கள் ஆரம்பித்து சாதித்தும் உள்ளார்கள். என்னுடன் படித்தவர்கள் இப்பொழுது பல முன்னணி நிறுவனங்களில் மேலாளராகவும், தொழில் முனைவோராகவும் உள்ளனர். http://www.empoise.com, http://www.rheomold.com ஆகியவை சில உதாரணங்கள்.
மேலதிக தகவல் வேண்டுவோர் http://www.nttftrg.com/courses/post-graduate-degree-programmes.php வலைத்தளத்தை பார்க்கவும்.
- அசோக் குமார்.
//எப்பொழுதுமே துணிந்தவன்தான் ஜெயிக்கிறான்//. Very encouraging words. All your education related blogs attract lots of attention / comments as it is live issue for all generations. Please keep-up the good work.
We have a branch in vellore near katpadi.. this has a good reputation
i studied in nttf dharwad in seventies
i got many opportunities in germany singapore and malaysia
unwilling to go out of india i joined railways and left it also to join a bank
but nttf is a100% organisation of repute no doubt
நானும் NTTF-ல் தொழில் பயிற்றுனராக (ஆசிரியராக) வேலை பார்க்கிறேன். இங்கு படிப்பவர்களுக்கு வேலை நிச்சயம் கிடைத்துவிடும் என்பது மட்டும் உறுதி. தமிழ்நாட்டில் வேலூர், கோவை, தூத்துக்குடியில் NTTF கல்வி நிலையம் உள்ளது.
NTTF-ல் படித்தவர்கள் பெரும்பான்மையினர் வெளிநாட்டில் உள்ளார்கள். தமிழ்நாட்டில் வேலூரில் உள்ளது. கேரளாவில் தலைசேரியில் உள்ளது. கர்நாடகாவில் பெங்களூர் தவிர இன்னும் ஒரு இடத்தில் இருப்பதாக அறிகின்றேன். இது ஒரு தொழிற்சார் படிப்பே. இங்கே படித்து வருபவர்கள் எவரும் சோர்ந்து போய்விடவில்லை. கனடா...ஆஸ்த்திரேலியா...சிங்கப்பூர்..மெக்சிகோ என்று பரவலாக சென்று விடுவார்கள். பெங்களூரில் எனக்குத் தெரிந்த ஒருவர் ஜி.எம் ஆக ஒரு நிறுவனத்தில் பணிபுரிகின்றார்.
Mani Ji, Hope you know about CDAC.... I had training in CDAC in Embedded systems.. Now i'm working in one of the top MNC. For detail please search in google Centre for Development of Advanced Computing (CDAC). It is research and development organization under the Department of Electronics and Information Technology , India. C-DAC provides several courses in the field of advanced computing and software development.
உண்மை. என் மைத்துனரும் இதுபோன்ற ஒரு சிறிய தொழிற்சாலையை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்திக்கொண்டு இருக்கிறார். ரப்பர் டெக்னாலஜி படித்தவர். வேலை செய்ய நம்மாட்கள் வருவதில்லை என்ற குறை உண்டு. வடக்கர்கள் ஏழெட்டுபேர் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு தங்குமிடம் இலவசம். சமையல் அவர்களே செய்து கொள்கின்றனர்.
தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
Post a Comment