May 22, 2014

பணம் போதும்

எதிர்பார்த்தேன்- ஆனால் இவ்வளவு விரைவாக எதிர்பார்க்கவில்லை.

நேற்றிரவிலிரவிலிருந்து இன்று மாலை வரையிலும் கிட்டத்தட்ட அறுபது மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. அத்தனையும் நந்தினியின் படிப்புக்கான உதவி பற்றிய மின்னஞ்சல்கள்தான். நிறையப் பேர் ஏற்கனவே பணத்தை அனுப்பிவிட்டார்கள். துல்லியமாகத் தெரியவில்லை என்றாலும் குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் ரூபாயைத் தாண்டியிருக்கும் என நினைக்கிறேன். அதைவிடவும் அதிகமாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. 

ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட பணப்பரிமாற்றங்கள் குறித்தான விவரங்கள் தவிர ஏகப்பட்ட மின்னஞ்சல்கள் சில விவரங்களைக் கோரி வந்திருக்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் பண உதவி செய்யத் தயாராக இருக்கிறார்கள்.  ஒரு இளைஞர் குழு மொத்தச் செலவையும் ஏற்றுக் கொள்வதாகவும் படித்து முடித்த பிறகு வட்டியில்லாமல் திருப்பிக் கொடுத்தால் போதும் என்றார்கள். இன்னொரு இளைஞர் குழுவினர் வருடம் ஐம்பதாயிரம் தந்துவிடுவதாகச் சொன்னார்கள். அதை அவர்களுக்குத் திருப்பித் தர வேண்டியதில்லை. சிங்கப்பூர் வாழ் இசுலாமிய நண்பர் ஒருவர் அந்தப் பெண்ணின் மொத்தச் செலவையும் எந்தப் பிரதியுபகாரமும் எதிர்பாராமல் செய்வதாகச் சொன்னார். இன்னொரு அமெரிக்க நண்பர் மொத்தச் செலவையும் ஏற்றுக் கொள்வதாகவும் படித்து முடித்த பிறகு திருப்பித் தரச் சொல்லுங்கள் என்றார். இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம். அத்தனை உதவிகள்.

இதில் முக்கால்வாசிக்கும் மேலானவர்கள் தங்களின் பெயர் வெளியில் தெரியக் கூடாது என்கிறார்கள். இவை போக திரு.எஸ்.கே.பி கருணா தனது கல்லூரியில் சேர்ந்தால் எந்தக் கட்டணமும் தர வேண்டியதில்லை என்றிருக்கிறார். இப்படி ஏகப்பட்ட நல்ல உள்ளங்கள் நம்மைச் சுற்றிலும் இருக்கிறார்கள். 

அத்தனை பேருக்கும் மனப்பூர்வமான நன்றிகள். 

இப்போதைக்கு இந்தப் பணம் போதும். 

இன்று காலையில் திரு.சின்னானிடம் பேசினேன். அவருக்கு இது பயத்தை உண்டாக்கியிருக்கிறது. ‘ஏதாவது பிரச்சினை வந்துவிடாதுங்களா?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு பயத்தை உண்டாக்கியதில் என் தவறும் இருக்கிறது. சிலர் அவரின் தொலைபேசி எண்ணைக் கேட்டிருந்தார்கள். கொடுத்துவிட்டேன். அவர்களில் சிலர் அழைத்துப் பேசினார்களா அல்லது வேறு காரணமா என்று தெரியவில்லை. பயந்துவிட்டார். மூன்று பெண்களை வைத்திருக்கும் வெளியுலகமே தெரியாத எளிய மனிதனின் பயம் அது. ‘ஒன்றும் பிரச்சினை வராது. நான் இருக்கிறேன். பயப்பட வேண்டாம்’ என்றாலும் அவருக்கு புரிந்து கொள்ளத் தெரியவில்லை. இன்னமும் தனது வங்கிக் கணக்கை அவர் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை. பார்க்கும் போது தனது கணக்கில் இவ்வளவு பணம் வந்திருப்பதைப் பார்த்தால் இன்னமும் நடுங்கிவிட வாய்ப்பிருக்கிறது. அதனால்தான் இப்போதைக்கு போதும் என்கிறேன். தயவு செய்து இனி பணம் அனுப்ப வேண்டாம். 

சின்னான் போன்ற எளிய மனிதர்களுக்கு உதவுவது பற்றி எனக்கு போதுமான அனுபவம் இல்லை. தேவையான பணத்தை வசூல் செய்து அவருக்கு மொத்தமாகக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இது போன்ற பணவிவகாரங்களில் கையை நனைப்பதில் எனக்கு கொஞ்சம் தயக்கம் இருக்கிறது. 

முன்பு ரோபாடிக் பாலாஜிக்கு ஒரு லட்சமும், பள்ளிகளுக்கு புத்தகங்கள் வாங்குவதற்கு எழுபதாயிரமும் நிசப்தம் வழியாகக் கிடைத்த போது ஒரு திட்டம் யோசித்து வைத்திருந்தேன். 

ஒரு அறக்கட்டளை ஆரம்பித்து தேவையான நிதி சேர்ந்ததும் அவ்வப்போது ஏதாவது ஒரு நல்ல காரியத்தைச் செய்யலாம் என்பதுதான் திட்டம். ஆனால் வாழை அமைப்பைச் சார்ந்த ரவீந்திரன் தான் தடுத்துவிட்டார். அவர் சொன்னதில் அர்த்தம் இருக்கிறது. ‘அப்பப்போ என்ன தோணுதோ அதைச் செய்யுங்கண்ணா....எதையுமே Institutionalize செஞ்சீங்கன்னா அது தேவையில்லாத சுமை ஆகிடும்’ என்றார். அவர் நல்லதுக்குத்தான் சொன்னார். 

ட்ரஸ்ட் என்று ஆரம்பித்தால் அதில் ஒரு ஒழுங்கு வர வேண்டும். ஒழுங்காக இருக்க வேண்டுமானால் அதற்கு அதிக கவனத்தைச் செலுத்த வேண்டும். அதிக கவனத்தை அதற்குக் கொடுத்தால் க்ரியேட்டிவ் வேலைகளைச் செய்ய முடியாது என்பதுதான் அவர் சொன்னதன் சாராம்சம். அவர் அனுபவசாலி. வாழை அமைப்பின் தூண்களில் ஒருவர். அவருக்கு இது பற்றியெல்லாம் நன்றாகத் தெரியும். அவர் சொன்னது சரியானதாகப் பட்டது என்பதால் அப்போது இந்தத் திட்டத்தைக் கைவிட்டுவிட்டேன்.

ஆனால், சின்னான் மாதிரியான மனிதர்களுக்கு உதவுவதற்கேனும் வேறு வழிமுறைகளை யோசிக்க வேண்டியிருக்கிறது. அத்தகைய எளிய மனிதர்களால் இந்த உலகை நேரடியாக எதிர்கொள்ள முடிவதில்லை. ‘இத்தனை பேர் எதற்காக எனக்கு உதவ வேண்டும்’ என்பதே அவரைப் பொறுத்தவரைக்கும் தீர்க்க முடியாத புதிர். யாராலும் பதில் சொல்லிப் புரிய வைக்க முடியாத புதிர் அது. அத்தகையவர்களுக்கு உதவவும் வேண்டும் அதே சமயத்தில் அவர்களை இந்த உலகத்தின் மிரட்சிக்கு ஆட்படுத்தாமல் தடுக்கவும் வேண்டும் என்பதால் வேறு ஏதேனும் உபாயங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். இப்போதைக்கு எந்தத் திட்டமும் மனதில் இல்லை. 

மனதில் இருப்பது வெறும் நன்றியுணர்ச்சிதான். உங்கள் அத்தனை பேரின் நம்பிக்கைக்கும், உதவிக்கும் நன்றியைத் தவிர என்னிடம் வேறு எதுவும் இல்லை. 

21 எதிர் சப்தங்கள்:

Bharani said...

Mani - Awesome and Great Work.

பா.பாலகுமார் said...

Good job Mani.

raghu said...

Continue ur help. When u are getting chance to help someone dont miss that.

வரதராஜலு .பூ said...

Excellent achievement by Nisaptham. I think Nisaptham itself a good portal to carry out this type helps.

Keep it up.

Prakash said...

very good na..

krishnakumar said...

so many good people? god in humanform. welldone mani. keep it up

சிவக்குமரன் said...

வாழை அமைப்பைச் சேர்ந்த யாரையாவது, நேரில சந்திக்க சொல்லுங்ணா. ஒரு முறை நேரில சந்திச்சி பேசினா, அவரோட குழப்பங்கள் ஓரளவிற்கு தெளிய வாய்ப்பிருக்கு.

Unknown said...

Romba santhoshama irukku anna.. intha mathiri mathavanga panna help ala than na padichu mudichen.. ungala pathi nenaikkum pathu romba perumaiya irukku.

Shankari said...

அதிக கவனத்தை அதற்குக் கொடுத்தால் க்ரியேட்டிவ் வேலைகளைச் செய்ய முடியாது என்பதுதான் அவர் சொன்னதன் சாராம்சம் -- yeah true... Keep the good work going and keep writing that is your true strength!

GANESAN said...

நன்றி மணிகண்டன் . காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

Anonymous said...

dear mani sir
great job
there is one orphanage named "Vallalar Kappagam" located at chennai adambakkam requires some help for their children
if time permits kindly help through your circle
rgds
Gk

Vaa.Manikandan said...

ஒரு லட்சத்து பதினோராயிரம் ரூபாய் திரு.சின்னானின் வங்கிக்கணக்குக்கு வந்திருக்கிறது. அத்தனை பேருக்கும் நன்றி.

kailash said...

If you are confident about yourself , better open a new account and maintain it. Whenever there is need ask interested people to donate , once you feel that enough money is received , you can transfer the amount to needy person . You can publish a post in which you can update the contributions received and amount transferred to needy as and when it happens .

Unknown said...

திரு.சின்னான் அவர்களுடைய சந்தோசத்தையும் மன நிலையையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Kamala said...

வாழ்த்துகள் மணிகண்டன். உங்கள் நற்பணி தொடரட்டும்.

Unknown said...

Great Job Mani sir... IPlease consider Kailash opinion... Keep yr good work....

sivakumarcoimbatore said...

mani sir...Excellent achievement by Nisaptham.

iK Way said...

Please check "Andril" trust. This is being run by some of my friends. Basically being run with the money collected among themselves.

http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com/

Unknown said...

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். .அதற்க்கு வழி காட்டியவரும் இறைவனுக்கு சமம்......... Well Done Mr. மணிகண்டன் ....You have done a great job.

சேலம் தேவா said...

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. சிறப்பான பணி..!

”தளிர் சுரேஷ்” said...

அடடா! அவசர பணியினால் முகநூலில் பகிருகிறேன் என்று சொன்னதை மறந்துவிட்டேன்! எதையும் உடனே செய்ய வேண்டும் என்று பாடம் கற்றுக்கொடுத்து இருக்கிறது இந்த பதிவு! நன்றி!