ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. தமிழர் ஒருவருக்கு வாக்களிக்கச் சொல்லியிருந்தார்கள். இப்படியான மின்னஞ்சல்கள் சகஜம்தானே? நமக்கும் அந்தப் போட்டிக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனால் வாக்களியுங்கள் என்பார்கள். இதுவும் அப்படியானதொரு மின்னஞ்சல் என்று நினைத்திருந்தேன். ஆனால் பொழுது போகாமல் திறந்து பார்த்தால் இது சற்று முக்கியமானதாகத் தெரிந்தது.
சிறந்த ஐடியாவுக்கான தேர்தல் இது. சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் நடத்துகிறது. கிட்டத்தட்ட நானூறு போட்டியாளர்களிலிருந்து இறுதிச் சுற்றுக்கு ஏழு பேரைத் தேர்ந்தெடுக்கவிருக்கிறார்கள். அதிலும் ஆறு போட்டியாளர்களை ஏற்கனவே தேர்ந்தெடுத்துவிட்டார்களாம். மிச்சமிருக்கும் ஒரு இடத்துக்குத்தான் தேர்தல். ஆறு ஐடியாக்களைக் கொடுத்திருக்கிறார்கள். நமக்கு பிடித்த ஐடியாவுக்கு வாக்களிக்கலாம். அதிகமான வாக்குகளைப் பெறும் ஒரு ஐடியாவை ஏழாவது இறுதிப்போட்டியாளராக தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்.
ஆறில் ஒருவர் நம்மவர்- தமிழர். சந்திரசேகர். மின்சாரம் இல்லாமல் குடிநீர் சுத்திகரிப்புத் திட்டம் ஒன்றைப் பற்றி பேசுகிறார். நானோ டெக்னாலஜி மூலம் செயல்படுகிறது. எளிய மக்களுக்காகச் செய்திருப்பதாகச் சொல்கிறார். ஏற்கனவே இவரது கண்டுபிடிப்பை பள்ளிகள், சமூகக் கூடங்கள் என நிறைய பேருக்குக் கொடுத்திருக்கிறார். இதில் வென்றால் தனது சிறகுகளை இன்னமும் விரிக்க இயலும் எனச் சொல்கிறார்.
இவர் யார் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனாலும் வாக்களித்துவிட்டேன். இது போன்ற தேர்வுகளில் நம்மவர் ஒருவர் வென்றால் சந்தோஷம் என்பதால் அவருக்கு வாக்களித்திருக்கிறேன். நீங்களும் வீடியோக்களைப் பார்த்து விடுங்கள். பிடித்திருந்தால்- பிடித்திருந்தால் மட்டும் வாக்களித்துவிடுங்கள்.
வாக்களிப்பது மிக எளிதுதான். இணைப்பில் இருக்கும் வீடியோக்களில் Water for all(Sanitation) மீது க்ளிக் செய்யுங்கள். கீழே தெரியும் ‘Vote' என்ற எழுத்துக்கள் இருக்கும். அதன் மீது இன்னுமொரு ‘க்ளிக்’ அவ்வளவுதான்.
வாக்களிப்பது மிக எளிதுதான். இணைப்பில் இருக்கும் வீடியோக்களில் Water for all(Sanitation) மீது க்ளிக் செய்யுங்கள். கீழே தெரியும் ‘Vote' என்ற எழுத்துக்கள் இருக்கும். அதன் மீது இன்னுமொரு ‘க்ளிக்’ அவ்வளவுதான்.
அதிக அவகாசம் இல்லை. மே’19 தான் கடைசி நாள்.
பின் இணைப்புகள்:
1) பிஸினஸ் வேர்ல்டில் திரு. சந்திரசேகர் பற்றிய கட்டுரை
2) இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை
5 எதிர் சப்தங்கள்:
வாக்களித்துவிட்டேன்
வாக்களித்துவிட்டேன்
போட்டாச்சு போட்டாச்சு போட்டாச்சு
வாக்களித்துவிட்டேன்
அடடே! மிஸ் பண்ணிட்டேனே! பகிர்வுக்கு நன்றி!
Post a Comment