தனி ஈழம் தேவையில்லை என்ற பதிவு குறித்து எனது கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.
எந்த தேசத்திலும், எந்த கோரிக்கைக்கும் 100% ஆதரவும் இருக்காது. உலகம் எப்பொழுதும் பெரும்பான்மையினரை ஆதரித்து சிறுபான்மையினரை கைவிட்டுவிடும். அதே போலத்தான் 90% வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்கள் தனி ஈழத்தை ஆதரித்து விடுதலைப்புலிகள் தோன்றுவதற்கு முன்பாக 1977 ஆம் ஆண்டில் வாக்களித்தார்கள். தமிழீழ ஐக்கிய முண்ணனி தனி ஈழம் பெறுவதற்கான மக்களின் ஆதரவைக் கோரி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போட்டியிட்டது. வெற்றியின் மூலமாக தனி ஈழத்திற்கான ஆணையை மக்களிடமிருந்து திரு.செல்வநாயகம் பெற்றார். தந்தை செல்வாவிற்கு பிறகு ஈழத்தமிழர்களுக்கான தனி ஈழம் அமைப்பதற்கான பொறுப்பை புலிகள் ஏற்றுக் கொண்டார்கள்.
வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் அனுபவித்த ராணுவத்தின் இனக் கொடுமைகளை கொழும்பு வாழ் தமிழர்கள் எப்பொழுதுமே அனுபவித்ததில்லை. அவர்கள் சிங்கள மக்களிடையே வாழ்ந்தவர்களாதலால் ஈழத்திற்கான ஆதரவை தெரிவித்தால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாது போகும் என்று பயப்படுபவர்கள். தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியவர் அவர்களில் ஒருவர். அவர்கள் யாவரும் வடக்கு மற்றும் கிழக்கு மக்களை பற்றிய கவலைப்படாத மிகுந்த சுயநலவாதிகள்.
தனிப்பட்ட ஒருவரின் கருத்தை எப்பொழுதும் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அதைவிடவும் அந்த தனியொருவரின் கருத்துக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்திருக்கக் கூடாது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் தமிழ் ஈழத்திற்கு எதிரானவர்கள் என்பதை சித்தரிக்க முயற்சிக்கிறீர்களா? ஆமாம், சில துரோகிகள் மற்றும் கொழும்புவின் மீது அக்கறை கொண்ட சிலர் தனி ஈழத்திற்கு எதிரானவர்கள். ஆனால் அவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஆனவர்கள்.
நீங்கள் ஏன் உங்களின் வாசகர்கள் வலைப்பதிவில் வெளிப்படையாக கருத்திடுவதை அனுமதிப்பதில்லை? உங்களுக்கு எதிரான கருத்துக்களை எதிர்கொள்வதற்கு பயப்படுகிறீர்களா? பொதுவெளிக்கு நீங்கள் வந்துவிட்டால் கருத்துக்களை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.
99% தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு ஈழத்தமிழர்களின் வரலாற்றை புரிந்து கொள்வதில்லை. ஸ்ரீலங்காவில் மூன்று வகையான தமிழர்கள் இருக்கிறார்கள். வடக்கு மற்றும் கிழக்கு ஈழத்தமிழர்கள், டீ மற்றும் ரப்பர் எஸ்டேட்களில வாழும் எஸ்டேட் தமிழர்கள் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியில் 300 ஆண்டுகளில் குடியேறிய தமிழர்கள். ஈழத்தமிழர்கள்தான் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்து வரும் பூர்வகுடிகள்தான். அவர்கள் இந்தியாவோடு எந்தவிதத்திலும் தொடர்பற்றவர்கள். ஸ்ரீலங்காவின் பிற்கால வரலாற்றில்தான் சிங்களர்கள் ஒரிசாவிலிருந்தும் மேற்கு வங்கத்த்லிருந்தும் இந்நாட்டில் குடியேறினார்கள். தமிழர்கள்தான் இந்த நிலத்தின் பூர்வகுடிகள் மக்கள்.
அன்புடன்,
Thevesh
அன்புடன்,
Thevesh
(ஆங்கிலத்தில் வந்த மின்னஞ்சல். இது தமிழாக்கம் செய்த வடிவம்)
*****
இன்னொரு கடிதம்:
இன்னொரு கடிதம்:
மணிகண்டன்,
அன்புடன்,
ஜேதா
http://vankavasinkajosinka.blogspot.com/
*****
Thevesh க்கு நான் எழுதிய பதில்:
அன்புள்ள Thevesh,
வணக்கம்.
நீண்டதொரு மின்னஞ்சலுக்கு நன்றி.
90%க்கும் மேலான ஈழத் தமிழர்கள் தனி ஈழத்தை விரும்புகிறார்கள் என்பதில் எனக்கும் மறுப்புக் கருத்து எதுவும் இல்லை. ஆனால் தனி ஈழம் தேவையில்லை என்று சொல்லும் ஈழத்தமிழர்களும் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டுமல்லவா? அதைத்தான் நேற்றைய முதல் பத்தியில் பதிவு செய்திருக்கிறேன்.
நீங்கள் குறிப்பிடும் சுயநலம், கொழும்பில் வசித்தல், வடக்கு/கிழக்கு மக்களின் துன்பங்களை அறியாமை என அனைத்தையும் அந்தப் பெண் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார். அந்த நேர்மைக்காகவும், மாற்றுக்கருத்துக்காகவும் அந்த மின்னஞ்சலை பதிவு செய்ய விரும்பினேன்.
தங்களின் கோபம் உங்கள் தரப்பிலிருந்து நியாயமானது. முழுமையாக உடன்படுகிறேன்.
ஆனால் பொத்தாம் பொதுவாக அடுத்தவர்களின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ளாமல் “வரலாறு தெரிஞ்சுக்கணும்” என்று நீங்கள் எழுத வேண்டியதில்லை. உங்களின் அளவிற்கு தெரியாவிட்டாலும் கூட ஓரளவு தெரிந்து வைத்திருகிறேன். ஈழத்திற்கு ஆதரவான எனது கருத்துக்களையும் நிலைப்பாட்டையும் நிசப்தம் தளத்திலிருந்தே தெரிந்து கொள்ளலாம். “ஈழம் தேவையில்லை” என்பதை portray செய்வது நோக்கமில்லை என்பதையும் அதிலிருந்து புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.
மற்றபடி, ஏன் கமெண்ட் பக்கத்தை மூடி வைத்திருக்கிறேன் என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். எந்த மின்னஞ்சலாக இருப்பினும் பதில் அனுப்பிவிடுகிறேன். தேவைப்படுமாயின் வலைப்பதிவில் பிரசுரம் செய்வது வழக்கமாக இருக்கிறது.
தொடர்ந்து தொடர்பில் இருங்கள்.
நன்றி.
அன்புடன்,
மணிகண்டன்.