Apr 4, 2013

தனி ஈழம் தேவையில்லை


இலங்கைத் தமிழர்களில் தனி ஈழம் வேண்டாம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள் என நம்பியிருந்தேன். ஆனால் இந்த மின்னஞ்சல் உரையாடல் வேறு மாதிரியான எண்ணத்தை உருவாக்குகிறது- இது இந்தப் பெண்ணின் தனிப்பட்ட கருத்து என்றாலும் கூட.

                                                                 ********

Hai Manikandan,

I'm in Colombo.

I just thought to write a mail regarding what happened to that Madhu babu & suresh, but just now saw that madhu babu's end. Still you didn't tell how you won ur school friend suresh? Its almost 2 months ryte...

hope u'll write it soon...

keep on writing..

Thanks & Best regards
Nithya.

                                                                      *********

அன்புள்ள நித்யா,

தங்களின் கடிதம் மகிழ்ச்சியளிக்கிறது.

இலங்கை எப்படியிருக்கிறது? 2009 க்கு பிறகான மாறுதல்கள் என்று எதைச் சொல்வீர்கள்? இயலும் போது தெரியப்படுத்துங்கள்.

சுரேஷ் பற்றி விரைவில் எழுதுகிறேன். நிறைய இருக்கிறது.

தொடர்ந்து கவனிப்பதற்காக நன்றி.

அன்புடன்,
மணிகண்டன்.

                                                                       *********

அன்புள்ள மணிகண்டனுக்கு,

பதில் கொஞ்சம் நீளமா எழுதியிருக்கன், நேரமிருந்தால் வாசியுங்க.. 

இலங்கை தானே? மன்னர் ஆட்சியில் மக்கள் எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க...

2009 க்கு பிறகு வடக்கு கிழக்கில  புதுசு புதுசா புத்தர் சிலைகள் முளைச்சது, கிரீஸ் பூதம் வந்தது, இப்ப எங்களுக்கு கொஞ்சம் ரெஸ்ட் குடுத்திருக்காங்க, முஸ்லீம்ஸ் தான் இப்ப நல்லா வாங்கி கட்டுறாங்க...அடுத்து கிறிஸ்டியன்ஸ், பிறகு தான் மறுபடியும் எங்க பக்கம் வருவாங்க...

உண்மையா சொன்னா, மன்னர் கொஞ்சம் நல்ல விஷயமும் செய்றார், பாலம் கட்டினார், A9 வீதி திருத்தினார், இப்ப வவுனியாவிலிருந்து யாழ்பாணத்துக்கு ரயில்வே பாதை போடுறார்..

இப்ப எல்லாம் போலீஸ், ஆர்மி பார்த்த பெருசா பயம் வாறதில்லை. ஏன் எண்டா அவங்களும் எங்கள சந்தேகம் பாக்கிறதில்லை..

இன்னொரு காரணம் இருக்கு. நாங்க சின்ன வயசிலையே கொழும்பு வந்திட்டம. அதால உண்மையான பிரச்சினைய நாங்க அனுபவிக்கல, அதால பெரிய வித்தியாசம் என்று எங்களுக்கு எதுவும் தெரியேல்லை. ஆனா போராட்டம் ஏன் வந்தது என்ற காரணம் தெரியும்.  எங்களைச் சுற்றி இருந்த சகோதர மொழி பேசுறவங்க எங்களோட நல்லா தான் இருந்தாங்க, இப்பவும் அப்பிடிதான்.. அவங்களுக்கு அவங்க ஆளுங்க ஹீரோன்னா, எங்களுக்கு எங்க ஆளுங்க ஹீரோஸ். அதோட அவங்களுக்கு ஏன் இந்த போராட்டம் வந்தது என்று சொல்லி புரிய வைக்க ஏலாது   
முக்கியமான விஷயம், நாட்டில யுத்தத்தால தமிழர்கள் சனத்தொகை குறைஞ்ச மாதிரி நிறைய பேர் வெளிநாட்டுக்கும் பறந்திட்டாங்க. என்ன நடந்தாலும் எங்க நாட்ட விட்டு போறதில்ல என்ற முடிவில தான் நான் இருக்கிறன். என்னோட பல்கைக்கழகத்தில படிச்சவங்களில முக்கல் வாசி பேர்  பறந்திட்டாங்க. எங்களுக்கான உரிமைய நாங்க நாட்ல இருந்து கொண்டு தான் பெற வேணும், அத விட்டிட்டு வெளிநாட்டுக்கு போய் அங்க இருந்து கொண்டு கேட்ட எப்பிடி குடுப்பாங்க.

என்னோட தனிப்பட்ட கருத்து இதுதான்- எல்லாரும் கொஞ்சம் சுயநலவாதிகள் தானே, நானும் அப்பிடிதான், முதல்ல எனக்கு எங்க வீடு, குடும்பம், அம்மா அண்ணமார் தான் முக்கியம், அதனாலேயே இங்க யாரும் இப்போதைக்கு இத பற்றி எல்லாம் யோசிக்கிறதில்ல, நமக்கு பிரச்சினை வராத வரைக்கும் சரி என்ற நினைப்பு தான் .

நம்மள நாமே இப்பிடி சொல்லி சமாதனம் செய்றது  தான்      

எனக்கு வடக்கு கிழக்கு மட்டும் வேண்டாம், முழு இலங்கையும் எங்க நாடுதான். எனக்கு முழு இலங்கையும் வேணும். 


Thanks & Best regards
Nithya

                                                                         *******

அன்புள்ள நித்யா,

நீண்ட மின்னஞ்சலுக்கு நன்றி.

இசுலாமியர்கள் வாங்கிக் கட்டுகிறார்கள் என்றால் என்ன அர்த்தம் என்று புரியவில்லை. 

சிங்கள பேரினவாதம் என்ற சொல்லாடலை பயன்படுத்துகிறோம் அல்லவா? அப்படியென்றால் அவர்கள் தமிழர்களை கீழாக நடத்துகிறார்கள் என்றுதானே அர்த்தம்? 

நீங்கள் விரும்பும் முழு இலங்கையில் தமிழர்களுக்கான உரிமைக்கு எந்த பாதகமும் இல்லாமல் வாழ முடியும் என்று நினைக்கிறீர்களா?

(தங்களின் கடிதங்களை நிசப்தம் தளத்தில் வெளியிடுவதில் உங்களுக்கு ஆட்சேபணை இருக்கிறதா?)

                                                                         ********

Hai Manikandan,

Thanks for your reply,

//இசுலாமியர்கள் வாங்கிக் கட்டுகிறார்கள் என்றால் என்ன அர்த்தம் என்று புரியவில்லை.//

அது வந்து  இப்ப இங்க இஸ்லாமியர்களுக்கு தான் பிரச்சினை குடுக்கிறாங்க. பள்ளிவாசல்  இருக்கிற இடங்கள் எல்லாம் அவங்கட புனித பிரதேசம் என்றும்  பள்ளியை அகற்றணும் என்றும் பிரச்சினை செஞ்சாங்க,  பிறகு முஸ்லிம்களுக்காக நாம(சிங்களவர்கள்)  ஏன் அல்லாவுக்கு அர்பணிச்ச உணவ சாப்பிடணும், நாம எதுக்கு அதுக்கு எக்ஸ்ட்ரா வரி செலுத்தணும், இப்பிடி எல்லாம் சொல்லி ஹலால் இலச்சினை போட கூடாது என்று ban பண்ணாங்க, இப்ப முஸ்லிம் பொண்ணுங்க முகத்த மூடி உடை அணியுறது அவகளுக்கு பாதுகாப்பு பிரச்சினையாம், இப்ப அதுக்கும் குழப்பிட்டு இருக்காங்க, அது இல்லாம ஏதாவது பெரிய கடை முஸ்லிமுக்கு சொந்தம் என்றா அங்க ஏதாவது பொய் சொல்லி கடைய தாக்குறது (Nolimit,Fashion Bug)...இதெல்லாம் செய்யுறது பொது பல சேனா என்ற பௌத்த அமைப்பு, அவங்க பௌத்த மதத்த பாதுகாக்கிறாங்களாம்..அப்பிடியே அவங்க பிரச்சினை போய்கிட்டு இருக்கு  

//சிங்கள பேரினவாதம் என்ற சொல்லாடலை பயன்படுத்துகிறோம் அல்லவா? அப்படியென்றால் அவர்கள் தமிழர்களை கீழாக நடத்துகிறார்கள் என்றுதானே அர்த்தம்? //

அரசியல்ல இருக்கிறவங்களும் படிப்பறிவு குறைஞ்ச சிங்கள மக்களும் தான் அப்பிடி தமிழர்களை/ முஸ்லிம்களை கீழாக நடத்துகிறார்கள் / நடத்த பார்க்கிறார்கள், கொஞ்சம் படிச்சவங்க அதெல்லாம் கணக்கெடுக்கிறதே இல்லை என்று தான் நான் நினைக்கிறன். எங்க office ல நல்ல தான் நடத்துறாங்க, கொஞ்சம் எக்ஸ்ட்ரா மரியாதை கூட கிடைக்குது

//நீங்கள் விரும்பும் முழு இலங்கையில் தமிழர்களுக்கான உரிமைக்கு எந்த பாதகமும் இல்லாமல் வாழ முடியும் என்று நினைக்கிறீர்களா?//

அப்ப எங்க உரிமை மீறப்பட்ட போது போராட்டம் வந்தது, ஆனா இப்ப கல்வியில் சம உரிமை தானே இருக்குது, யார் நல்ல rank/score எடுக்கிறாங்களோ அவங்களுக்கு கம்பஸ் அனுமதி..எல்லா அரச அலுவலகர்களும் தமிழ், சிங்களம் என்று இரண்டு மொழியும் தெரிஞ்சு கொள்ளனும்,

சிலவேளை எனக்கு வட கிழக்கில இருக்கிற மக்களிண்ட பிரச்சின சரியாய் தெரியலையோ தெரியல, இது எல்லாமே என்ற தனிப்பட்ட கருத்து மட்டும் தான். இத நீங்க இலங்கை தமிழர் எல்லாரது கருத்து என்று எடுத்து கொள்ள தேவை இல்லை. எங்க வீட்லயே எதிர் கருத்து உள்ளவங்க இருக்காங்க.

அரச, தனியார், சுய  பிரிவுகள்ளையும் தமிழர்கள் இடம் பிடிக்கணும், ஆனா எங்கட ஆக்கள் ஐரோப்பாவில supermarket ,பெற்றோல் பேங்க், hotel அங்க தானே வேலை பார்கிறாங்க, இதுக்கு எதுக்கு campus  படிக்கணும்? இலங்கையில வேலை இல்லை என்று சொல்ல சான்சே இல்லை. 
  
./////(தங்களின் கடிதங்களை நிசப்தம் தளத்தில் வெளியிடுவதில் உங்களுக்கு ஆட்சேபணை இருக்கிறதா?)/////

நீங்க என்னோட பதிலா நிசப்தத்தில போடுறதில பிரச்சினை இல்லை, ஆனா அதால எனக்கு பிரச்சினை வராத வரைக்கும், நீங்க எப்பிடி இப்பிடியெல்லாம் சொல்லாம் என்று யாரும் என்னட்ட வந்து கேட்டா நான் பதில் சொல்ல மாட்டன், இது என்னோட கருத்து அவ்வளவும் தான், ஏற்றுகொள்ளுறதும்  ஏற்காததும் அவங்க அவங்க விருப்பம், அதால தயவுசெய்து என்னோட பேரை மட்டும் போட்டிடாதீங்க....

Thanks & Best regards
Nithya

                                                                       *********
(இந்தப் பெண்ணின் பெயரை மாற்றியிருக்கிறேன்)