ஆசைதான் அழிவுக்கு காரணமாம். காலம் காலமாக இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ப்ராக்டிகலாக ஆசையில்லாமல் இருப்பது அத்தனை எளிதான காரியமா? ம்ஹூம். வாய்ப்பே இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
சாலையோரமாக விற்கும் பஜ்ஜி போண்டாவிலிருந்து சில்லி சிக்கன் வரைக்கும் எதைப் பார்த்தாலும் ருசி பார்க்க ஆசையாகத்தான் இருக்கிறது. எத்தனை சதவீதம் சம்பள உயர்வு வந்தாலும் இன்னும் இரண்டு சதவீதம் சேர்த்து வந்திருக்கலாம் என்று ஆசையாகத்தான் இருக்கிறது. அடுத்தவன் நல்ல பெயர் வாங்கும் போதெல்லாம் நாமும் வாங்க வேண்டும் வெறி கிளம்புகிறது. இன்னும் கொஞ்சம் பணம், இன்னும் கொஞ்சம் சொத்து, இன்னும் கொஞ்சம் புகழ் என ‘இன்னும் கொஞ்சம்’ எல்லா இடத்திலும் இருக்கிறது.
தத்துவத்தை நிறுத்திவிட்டு மேட்டரை பார்க்கலாம்.
சீவக சிந்தாமணியை எழுதிய திருத்தக்க தேவர் ஒரு சமணர். ஆசையே அழிவுக்கு காரணம் என்று படம் ஓட்டும் க்ரூப்பைச் சார்ந்தவர். அவரை யாரோ மூக்கைச் சொறிந்துவிட நரிவிருத்தத்தையும், சீவக சிந்தாமணியையும் எழுதிவிட்டார். மூக்கு சொறிந்தவர்கள் விவரமானவர்கள் போலிருக்கிறது. ‘சமணர்களால் எழுத முடியாது’என்று சொறிந்துவிடவில்லை. ‘சமணர்களால் குஜால் மேட்டரை எழுத முடியாது’என்றுதான் சொறிந்திருக்கிறார்கள். தேவர் இதுதான் வாய்ப்பு என்று நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை. ஒரு முழுமுதல் டீசெண்டான சரோஜாதேவி புத்தகத்தை எழுத அனுமதி தர வேண்டும் என்று தனது ஆசிரியரிடம் கேட்டிருக்கிறார்.
இவனால் எழுத முடியுமா என்று சந்தேகப்பட்ட ஆசிரியர் ‘குஜிலி பத்தி அப்புறம் எழுதலாம் முதலில் நரியை பத்தி எழுது’ என்று சொல்லிவிட்டார். திருத்தக்க தேவரிலிருந்து தேவர் பிலிம்ஸ் தேவர் வரைக்கும் நரி, யானையை விட மாட்டார்கள் போலிருக்கிறது. அவரும் இவற்றை வைத்தே ‘நரிவிருத்தம்’ எழுதியிருக்கிறார்.
கதை இதுதான் -
யானையை வேட்டையாடுவதற்காக வில்லை எடுத்துக் கொண்டு ஒரு வேட்டைக்காரன் செல்கிறான். அவன் வில்லில் அம்பை பூட்டி ரெடியாகும் போது பாம்பு ஒன்று அவனது காலில் போட்டுவிடுகிறது. கடுப்பான வேடன் அம்பை எய்துவிட்டு வில்லை திருப்பி பாம்பை நசுக்கியே கொன்றுவிடுகிறான். எய்த அம்பு யானையை முடித்துவிடுகிறது. பாம்பு விஷம் மண்டையில் ஏறி வேடனும் இறந்துவிடுகிறான். ஆக மூன்று பேரும் அவுட். பாம்பும் யானையும் வேடனும் பிணமாகக் கிடக்கும் அந்த வழியாக வந்த நரியொன்று வில்லின் நாணை கடிக்கிறது. நாண் அறுபட வில் நரி மீது அடிக்க நரியின் கதையும் முடிகிறது.
‘பார்த்தீர்களா? ஆசைதான் இவர்களின் அழிவுக்கு காரணம்’ என்று விருத்தப்பாவை முடிக்கிறார். ஸ்ஸ்ப்பா!
நரிவிருத்தத்தை வாசித்து திருப்தியடைந்த தேவரின் ஆசிரியர் “ம்ம்ம்ம்...தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்” என்று தேவருக்கு அனுமதியளிக்க, சீவக சிந்தாமணியின் மூவாயிரத்து சொச்சம் செய்யுளையும் எட்டே நாளில் எழுதி முடித்தாராம்.
கதைப்படி நாயகனான சீவகன் எட்டு பெண்களை கல்யாணம் கட்டிக் கொள்கிறான். பிறகு என்ன? சீவகனின் காம வேட்கையும், நினைத்தவரோடெல்லாம் சேர்ந்து ‘அப்படி இப்படி’ இருப்பதுதான் இந்த பெருங்காப்பியம் முழுவதும் இருக்கிறது. முழுவதையும் வாசித்து Enjoy செய்தாலும் கடைசியில் ஒரு தத்துவம் வேண்டுமல்லவா? காப்பியத்தின் இறுதியில் இது அத்தனையும் நிலையாமை என்று உணர்ந்த சீவகன் துறவு பூண்டுவிடுகிறானாம். ஆடும் வரைக்கும் ஆடிவிட்டு கடைசியில் துறவு. இதுதான் சீவகனின் ‘டக்கு’.
ஒருத்தியைக் கட்டிக் கொண்டவனே துறவுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறான். இதில் இவனுக்கு எட்டு பேர். ம்ம்ம்.
நமது ஆட்கள் இப்பொழுது எப்படி இருக்கிறார்களோ அப்பொழுதும் அப்படித்தானே இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. ‘இந்தளவுக்கு சூடேற்றும் காமத்தை எழுதிய இந்த ஆளுக்கும் காமத்தில் அனுபவம் இருக்கும்மய்யா’என எவனோ ஒருவன் தன் பக்கத்தில் இருப்பவனின் காதைக் கடிக்க, அடுத்தது என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்திருப்பீர்களே. yes! you are right..
அத்தனை பேர் முன்னிலையிலும் இரும்புக் கம்பி நெருப்பில் காய்ந்து கொண்டிருக்கிறது. “நான் பேச்சிலர்தான், அப்படியில்லையெனில் இதைத் தொடும் எனது கைகள் வெந்து தணியட்டும்” என்று பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை கையில் ஏந்தி தனது துறவு நிலையை நிரூபித்தாராம் தேவர். என்னதான் சுத்தமானவனாக இருந்தாலும் இரும்புக்கம்பி சுடாதா? எப்படித்தான் வலிக்காத மாதிரியே நடித்தாரோ?
அது வேறு ட்ராக். உங்களுக்கு ஆசை இருக்கிறதா? எனக்கு எக்கச்சக்கமாக இருக்கிறது. காஜல் அகர்வாலோடு ஒரு படத்தில் டூயட் பாட வேண்டும் போன்ற பெர்சனல் ஆசைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் நம்மைச் சுற்றி இதெல்லாம் நடந்தால் நன்றாக இருக்குமே என ஒரு லிஸ்ட் இருக்கிறது.
ராஜபக்ஷே சாகும் வரைக்கும் பைல்ஸ் தொந்தரவால் நொந்து போக வேண்டும் என்பதிலிருந்து அவனது தம்பிக்கு கிட்னியில் பாறாங்கல் உருள வேண்டும், அவனது மகன் ஆண்மை இழப்பால் துவண்டு போக வேண்டும் என்பது வரைக்கும் அவர்களைச் சுற்றியே எனது ஆசைகள் இருப்பதுதான் அபத்தமாக இருக்கிறது. அவர்களுக்கு ஆதரவாக இருந்த அத்தனை பேர் மீதும் கொஞ்சமாவது சாணியடிக்கவும் ஆசையிருக்கிறது.
நேற்று ஏர்டெல்லிலிருந்து வேறு நெட்வொர்க்கிற்கு மாற்றிக் கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கியிருந்தேன். ராமனுக்கு அணில் மணல் எடுத்த அளவிற்கான சிறு உதவிதான்.
இன்று காலையில் ஏர்டெல் வாடிக்கையாளர் சேவைப் பிரிவிலிருந்து அழைத்திருந்தார்கள்.
“எதற்காக ஏர்டெல்லிலிருந்து மாறுகிறீர்கள்?” என்றார்கள்
“தமிழர்கள் எதற்காக மாறுகிறார்கள் என்று தெரியும்தானே” என்றேன்.
“ஸ்ரீலங்கா பிரச்சினை” என்றார்கள்.
"அதேதான்” என்று சொல்லிவிட்டு கட் செய்தேன்.
வழக்கமாக சமாதானம் செய்ய முயலும் கஸ்டமர் கேர் ஆட்கள் எதுவுமே சொல்லாமல் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. தமிழர் பிரச்சினை பற்றி பெங்களூர் போன்ற வெளி மாநில ஊர்களிலிருக்கும் கஸ்டமர் கேர் செண்டர்களில் பணிபுரிபவர்களுக்கு தெரிய வந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. நாம் இவர்களுக்கு செருப்படி கொடுத்திருக்கிறோம் என்பதை உறுதியாக நம்பலாம். முடிந்த இடங்களிலெல்லாம் இலங்கை விவகாரத்தை பேசச் செய்திருக்கிறார்கள் நம்மவர்கள். எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் நமது எதிர்ப்பை பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போதைக்கு அதுதான் தேவையானதாக இருக்கிறது.
வழக்கமாக சமாதானம் செய்ய முயலும் கஸ்டமர் கேர் ஆட்கள் எதுவுமே சொல்லாமல் இருந்தது ஆச்சரியமாக இருந்தது. தமிழர் பிரச்சினை பற்றி பெங்களூர் போன்ற வெளி மாநில ஊர்களிலிருக்கும் கஸ்டமர் கேர் செண்டர்களில் பணிபுரிபவர்களுக்கு தெரிய வந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. நாம் இவர்களுக்கு செருப்படி கொடுத்திருக்கிறோம் என்பதை உறுதியாக நம்பலாம். முடிந்த இடங்களிலெல்லாம் இலங்கை விவகாரத்தை பேசச் செய்திருக்கிறார்கள் நம்மவர்கள். எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் நமது எதிர்ப்பை பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போதைக்கு அதுதான் தேவையானதாக இருக்கிறது.