“ஏன்ய்யா அவனை தூக்குல போட்டாங்க”
“அவன் செஞ்ச காரியம் அப்படி”
“என்ன செஞ்சான்?”
“பாராளுமன்றத்தை தாக்கியவர்கள் ஒளிஞ்சுக்க இடம் கொடுத்தான்”
“அவன் தான் கொடுத்தான்னு நிச்சயமா தெரியுமா?”
“அப்படித்தானே விசாரணையை முடிச்சுட்டு அறிவிச்சாங்க”
அது சரி. அப்சல் குருவுக்கும் பாராளுமன்றத்தை தாக்கிய தீவிரவாதிகளுக்கும் தொடர்பே இல்லையென்றெல்லாம் பேச வேண்டாம். தொடர்பு இருந்ததாகவே இருக்கட்டும். ஆனால் பூனை மூடுவது போல கமுக்கமாக நிறைவேற்றப்பட்ட இந்த தண்டனையால் அரசாங்கம் சாதித்தது என்ன என்பதுதான் குழப்பமாக இருக்கிறது. ஒரு குற்றவாளிக்கு அளிக்கப்படும் தண்டனையானது அவன் திருந்துவதற்கு வாய்ப்பளிப்பதாக இருக்க வேண்டும் அல்லது மற்றவர்களுக்கு பயமுண்டாக்குவதாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்.
தூக்குதண்டனை நிச்சயமாக குற்றவாளி திருந்துவதற்கு இடம் அளிக்கப்போவதில்லை. செத்த பிறகு எங்கே திருந்துவது? தொலையட்டும். தூக்கு தண்டனைகள் குறைந்தபட்சம் மற்றவர்களுக்கு பயம் உண்டாக்குகிறதா?
பயம் உண்டாகாமல் இருக்குமா என்ன?
இந்த தூக்கு தண்டனையால் எல்லைக்கு அப்பால் இருக்கும் தீவிரவாதிகள் பயந்து தங்களின் பேண்ட்டோடு சிறுநீர் கழிப்பதாக உளவுத்துறை கண்டுபிடித்திருக்கிறதாம். தெரியாத்தனமாக இந்தியாவிற்குள் நுழைந்துவிட்ட தீவிரவாதிகள் நிலை பற்றி சொல்லவே தேவையில்லை. தொடை நடுங்கிக் கிடக்கிறார்களாம். எல்லாவற்றிலும் உச்சமாக, இன்னும் பதினைந்து நாட்களில் இந்த தேசத்தில் குற்றச் செயல்கள் முற்றாக நின்றுவிடும் என்று அணு விஞ்ஞானி இன்று அறிவிக்கப் போகிறாராம்.
அட போங்க சார். ஒரே ஒரு உயிர்தான் போயிருக்கிறது. ஒற்றை உயிருக்காக அருந்ததிராயில் ஆரம்பித்து வினவு வரைக்கும் ஏன் இப்படி குதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் அடையாளம் தெரியாத வாகனங்களால் அடித்துக் கொல்லப்படும் மனிதர்களின் எண்ணிக்கை இந்த நாட்டில் பல நூறுகள் இருக்கக் கூடும். கொலை செய்யப்படுபவர்கள், நீருக்குள் மூழ்கி இறப்பவர்கள், ஷாக்கடித்து செத்தவர்கள், கீழே விழுந்து ஆயுளை விட்டவர்கள் என்றெல்லாம் கணக்கெடுத்தால் ஒரு நாளைக்கு பல ஆயிரம் இறப்புகள் பட்டியலில் வரும். ஆயிரக்கணக்கான உயிர்களில் அப்சல் குருவும் ஒரு உயிர்தானே என்று அசால்ட்டாக விட்டுவிடாமல் உளறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் பாருங்கள் அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டால் இந்தக் கொலையில் அரசாங்கம் கை நனைத்திருக்கிறது என்கிறார்கள். அதுவும் சரியாகத்தானே படுகிறது. அரசே கொலை செய்யலாமா? என்று அவர்கள் கேட்பதிலும் நியாயம் இருக்கிறது. ஆனால் அதற்கும் நம்மிடம் பதில் இருக்கிறது. அரசாங்கம் சும்மாவா கொன்றது? இந்திய தேசத்தின் மதிப்பு வாய்ந்த கட்டடமான பாராளுமன்றத்தையே தாக்கியிருக்கிறார்கள். தூக்குதண்டனை கொடுக்காமல் வாழை இலை போட்டு விருந்து வைக்கலாமா என்று நாம் கேள்வி எழுப்பலாம்.
அருந்ததி ராய் என்னவோ சொல்லிவிட்டு போகட்டும். என்னைக் கேட்டால் விருந்து வைக்க வேண்டாம். அதே சமயம் தூக்கிலும் போட வேண்டாம் என்று சொல்வேன். யாரும் கேட்காமலேயே கருத்துச் சொன்னால் கூடவே ஒரு Justification கொடுக்க வேண்டும் என்பது நியதி. அதையும் கொடுத்துவிடலாம்.
குற்றங்களில் பெரும்பாலும் Master Mind தப்பித்திருப்பார்கள். மற்றபடி ஒளிந்து கொள்ள இடம் கொடுத்தவன், பேட்டரி வாங்கிக் கொடுத்தவன், ஒண்ணுக்கு போகும் போது டார்ச் அடித்தவன் என்ற காரணங்களைக் காட்டி இபிகோ 120 இல் ஆரம்பித்து அத்தனை வகைகளிலும் வழக்கை போட்டு கோர்ட்டில் நிறுத்திவிடுகிறார்கள். குற்றவாளியே தனது குற்றங்களை ஒத்துக் கொண்டான், ஒத்துக் கொண்டதும் இல்லாமல் அவனே கையெழுத்தும் போட்டிருக்கிறான் என்று போலீஸ்காரர்கள் தங்கள் சட்டை காலரை தூக்கிவிட்டுக் கொள்வார்கள்.
அவ்வளவுதான். ஜோலி முடிந்தது என்று நினைத்துக் கொள்ளலாம். பிறகு அந்த நான்கு சுவர்களுக்குள்ளும் குற்றவாளி என்ன கதறினாலும் செய்தித்தாள்களில் வரும் செய்திகளை கொடுப்பது உளவு அமைப்புகள்தான். அதிகார வர்க்கம் ஒருவனை குற்றவாளி ஆக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் தினத்தந்தி போன்ற செய்தித்தாள்கள் “அவன் குற்றவாளிதான்” என்பதை வெகுஜன மனதில் பதிப்பதற்கான அத்தனை ஒத்து ஊதுதலிலும் ஈடுபடுகின்றன.
பொதுமக்களிடம் “கொல்லுங்க அவனை” என்ற மனநிலையை உருவாக்குவதற்கு டம்மி பீஸ் செய்திதாள்களையும், செய்தி நிறுவனங்களையும் அரசாங்கத்தின் கைப்புள்ளைகளான உளவு அமைப்புகள் பயன்படுத்திக் கொள்கின்றன. பெருவாரியான மக்கள் இந்தச் செய்திகளை எந்தக் கேள்வியும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த பெருவாரியான மக்கள்தான் ‘தேசத்தின் மனசாட்சி’. இந்த மனசாட்சி எதை விரும்பவேண்டும் என்பதையும் கூட அரசாங்கமும், உளவு அமைப்புகளுமே நிர்ணயம் செய்வதுதான் மாபெரும் ஜனநாயக நாடான நம் தேசத்தின் பெருந்துக்கம். இப்படி உருவாக்கப்படும் “தேசத்தின் மனசாட்சி” எதை விரும்புகிறதோ அதை இம்மிபிசகாமல் முடித்து வாக்குகளாக Polarize செய்துகொள்கின்றன அரசியல் கட்சிகள்.
“சின்மயிகிட்ட ரகளை பண்ணினா ஜெயிலில்தான் போடுவாங்க” என்பதில் ஆரம்பித்து “சாவட்டும் பாகிஸ்தானி” என்பதுவரை அத்தனையும் அரசாங்கத்தின் கண்ணசைவில் உருவாக்கப்படும் மனநிலைதான்.
அப்சல் குரு நிரபராதி என்று சொல்லவில்லை. ஆனால் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை சமூகத்திடம் பேசுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. குற்றவாளிகள் மீதான குற்றங்கள் Frame செய்யப்படும் போது Transparency இருப்பதில்லை. வழக்கு விவரங்களும், கோர்ட் நடவடிக்கைகளும் வெளிப்படையாக அலசப்படுவதில்லை என பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த குறைபாடுகள் அனைத்தையும் குற்றவாளிக்கு ஆதரவானதாக காட்டலாம். ஆனால் அப்படி காட்டினால் மட்டும் அடுத்த மாதம் இந்த நடைமுறைகளில் மாறுதல் வந்துவிடப்போகிறதா என்ன?
இந்துத்துவ வாக்குகளை ஒரு குவியத்தில் கொண்டு வரும் பிஜேபியின் முயற்சியை தகர்க்கும் காங்கிரஸின் தந்திரம்தான் வரிசையான தூக்கு தண்டனைகள் என்ற குறிப்பு ஒன்றை வாசிக்க நேர்ந்தது. அது உண்மையாக இருக்காது என நம்புகிறேன். நம்புவதுதான் எனக்கு பாதுகாப்பும் கூட. அப்படி நம்பாமல் அரசாங்கத்தை எதிர்த்து பேச எனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?
இந்த அரசாங்கம் அம்மா போன்றது. தன் பிள்ளைகளுக்கு எது தேவையோ அதை மட்டும்தான் செய்யும். அப்படித்தான் இதையும்....
வாழ்க இந்தியா!
8 எதிர் சப்தங்கள்:
முழுவதும் படித்து விட்டேன். தெரிந்தே தான் லைக் போடுகிறேன். உங்களது கருத்தை , அது வரும் தளத்தை உணர்கிறேன். :)
உண்மை
மாவட்ட நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உயர்நீதி மன்றத்திற்கு அப்பீல் செய்த நாளிலிருந்து சரியாக 180 நாட்களுக்கு முன் தீர்ப்பு வழங்கப்படவேண்டும்
அதையும் உச்ச நீதிமன்றத்திற்கு அப்பீல் செய்யம் பட்சத்தில்,உச்ச மன்றத்திற்கு அப்பீல் செய்த நாளிலிருந்து சரியாக 180 நாட்களுக்கு முன் தீர்ப்பு வழங்கப்படவேண்டும்
அந்த தீர்ப்பை குடியரசுத்தலைவர் மன்னிப்பிற்கு அனுப்பும் பட்சத்தில் அப்படி அனுப்பிய 60
நாட்களுக்குள் அவர் முடிவு தெரிவிக்கப்படவேண்டும்.
அந்த முடிவு தெரிந்த 30 நாட்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்படவேண்டும்.
இவ்வாறு குற்றவியல் சட்டம் திருத்தப்பட்டால்...
தூக்கு தண்டனை சரியே!
Though one can understand all the hullabaloo and noise around the supreme punishment - HANGING till DEATH ,we need to take certain vital points into consideration.
Firstly the very argument that death sentence wont deter others from getting involved in crimes is HOLLOW, please be clear that even a 7/14 year rigorous imprisonment wont stop anyone or for that matter hasn't stopped anyone from committing a heinous crime that could inflict a loss of life or property to a person or for that matter violating the integrity of woman/child/man [News reported everyday in our dailies are proof for this].
That's why depending on the nature of crime we have varying grades of punishment and the pinnacle of which is unfortunately death sentence.
Therefore the bigger question is "will passing law and enacting punishments based on the law will deter future crimes??"
The answer is pretty much NO. HUMAN HISTORY stands witness for this.
"manidhanai parthu thirundha vittal thiruttai olikka mudiyadhu"- It holds true for all heinous crimes not just petty thefts. Self discipline, practicing restraint is the KEY for making a crime free society.
---------------------------------------------------------------------------------------
Regarding Afzal Guru before getting into how he got convicted lets address the manner in which the order was carried out.
1. He was in death row for almost 10 years. the trial court judgement was passed more than 10 years ago for that matter.
2. He has appealed in higher courts and even resorted to submitting petition to President when the trial courts sentence was upheld by SC.
3. When is petition was turned down he was hanged. FULL STOP.
why would anybody expect the government to issue a PUBLIC Notice to media? the government after all has done its job of carrying out the courts order. why would media sensationalize this issue and even going to the extent of calling it a secret execution.
Considering the sensitive nature of this issue government can only go about it in the most quietest possible way as it did. [Please don't forget the entire nation came to a stand still for the couple of days leading to Ayodhya temple verdict a couple of years ago, such is the risk the publicity could create].
YES there are questions about the way the justice was done (or the lack of) to Afzal Guru. But the media, Kashmiri organizations and their government had 10 longs years when they did precious nothing to advance the cause of Afzal. Only his hanging has awakened one and all from a deep slumber. Simply put its a shame and a travesty of human life. They would have remained silent even for another 10 years if Afzal was kept in solitary confinement in prison [Thats even cruel a punishment than hanging].
We should look at the whole issue (law and order, fair trials, punishments, executions) OBJECTIVELY rather than SUBJECTIVELY (in this case Afzal guru, thanks to media). We need to engage in broader discussions in order to cure the disease at the root level. Only then we can avoid the same mistakes from happening in future.
BR
Karthik.
பாகிஸ்தா னியர் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 17 இந்தியர்கள் விடுதலை.
தொழில் அதிபர் எஸ்பி சிங் ஓபராய்
ஐந்து கோடி இரத்த பணம கொடுத்தார்.
உயிரின் அங்கிகரிக்கப்பட்ட விலை ஐந்து கோடி.
// நம்பாமல் அரசாங்கத்தை எதிர்த்து பேச எனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது? //
"எதையாவது பின்னூட்டமா எழுது" ன்னு உள் மனசு சொன்னாலும் எனக்கும் பைத்தியம் பிடிக்கவில்லை என நிரூபிக்க வேண்டியிருக்கிறதே.
கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர அப்சலுக்கு உள்ள உரிமை;
குடும்பத்தினரைக் கடைசியாக ஒருமுறை சந்திக்கும் உரிமை;
குடும்பத்தினருக்கு உடலைப் பெறுவதற்குள்ள உரிமை
ஆகிய மூன்று உரிமைகள் கண் எதிரே பறிக்கப்பட்டுள்ளன- பாரபட்டமற்ற விசாரணைக்கான உரிமை பறிக்கப்பட்டதைச் சேர்க்காமல்.
ஒரு மரண தண்டனைக் கைதியிடம் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொண்டுதான் காஷ்மீரை இந்தியாவோடு ஒட்டி வைத்திருக்க முடியும் என்றால் நமக்கு காஷ்மீர் மேல் எந்தத் தார்மீக உரிமையும் இல்லை.
சரவணன்
மரணம் அவனுக்கான தண்டனை இல்லை. இன்னொரு தீவிரவாதி இல்லை அவனுக்கு உதவுபவனுக்கு பயத்தை உருவாக்குவதே. தெரிந்தே தவறு செய்கிறவர்கள் நிச்சயமாக மாட்டமாட்டோம் என்ற நம்பிக்கையில் தான் தவறு செய்கிறார்கள். பயமுள்ள நான்கு பேரையாவது இந்த தண்டனை தவறு செய்யவிடாமல் தடுக்கும். அவன் தாய் அந்த இடத்தில் இருந்தால், அவன் அதற்கு உடன்பட்டிருக்க மாட்டான். நாம் தாய் அதில் இறந்திருந்தால், நாம் அவனை மன்னித்திருக்க மாட்டோம். உலகத்தில் உள்ள அத்தனை கொடுமைகாரர்களுக்கும் ரசிகன் இந்தியாவில் இருக்கிறான். அவனையும், தன்னையும் ஏதோ இன, மொழி, ஜாதி, மத போன்ற கொடுமைகளை கொண்டு இணைத்துக் கொள்கிறான். மனித நேயம் நம்மிடையே தீவிரவாதிகளால் வளர்க்கப்படுகிறது!?
நம்மைவிட சட்டத்துறைக்கு நீதி தெரியும் என்று நினைக்கிறேன். மிகுந்த கால தாமதத்திற்கு பிறகே தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தூக்குதண்டனை ரகசியமான வைக்கபடாமல் அறிவிக்கபட்டிருந்தால், கலவரம் கூட மூண்டிருக்கும்.
Post a Comment