ஒரு மனிதனைக் கடுப்பேற்றுவதற்கு எத்தனை வரிகள் அல்லது எத்தனை சொற்கள் தேவைப்படும் என யோசித்திருக்கிறேன். It depends என்று ஸ்டைலாக சொல்லிவிடலாம்.
சில சமயம் ஒரு புத்தகம் அளவுக்குத் வரிகளும் சொற்களும் தேவைப் படலாம் அல்லது ஒரு கட்டுரை காரியத்தை முடித்துவிடக் கூடும். இவை எதுவுமே இல்லாமல் ஒற்றை வார்த்தையோ அல்லது சைகையோ கூட எதிராளியின் உச்சி முடியை நட்டுக் கொள்ள செய்யக்கூடும்.
என்னைக் கடுப்பேற்ற ஒரு மனிதருக்கு ஐந்தாறு வரிகள் போதுமானதாக இருந்திருக்கிறது. விவரமாகச் சொல்கிறேன் இருங்கள்.
சில மாதங்களுக்கு முன்பாக ஜிமெயில் Chat இல் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து Chat request வந்திருந்தது. தெரியாத்தனமாக ஏற்றுக் கொண்டேன்.
முதல் கேள்வியே “நீங்கள் எந்த ஊர்?” என்றார்.
“கோபிச்செட்டிபாளையம்”
“யார் அந்த கோபிச்செட்டி? அவருக்கு ஏன் ஒரு ஊர் சொந்தமாக இருக்கு?” என்றார்.
எத்தனையோ பேர் கிளம்பியிருக்கிறார்கள். அதில் இதுவும் ஒரு ஜீவன் போலிருக்கிறது. பதில் எதுவும் சொல்லவில்லை.
விடாமல் “எக்ஸ்கியூஸ் மீ...கேள்வி கேட்டேனே” என்றார்.
நாம் உற்சாகமாக இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக அடுத்தவனை சாகடிக்கும் Character என்று Block செய்துவிட்டேன்.
ஓரிரு நாட்களுக்குப் பிறகாக ஒரு கேள்விக்காக ஒருவரை Block செய்வதற்கு நாம் ஒன்றும் அப்பாடக்கர் இல்லை என்று நினைத்துக் கொண்டு unblock செய்துவிட்டேன். இப்பொழுது எனக்கு அஷ்டமச் சனி நடந்து கொண்டிருக்கிறது. அதுதான் வேலையைக் காட்டியிருக்கிறது. என்னை Unblock செய்ய வைத்திருக்கிறது.
இந்த வெள்ளிக்கிழமையும் அதே நபர் ஆன்லைனில் வந்தார். பாண்டிச்சேரி கிளம்புவதற்கு முன்பாக மெயில் பார்க்கலாம் என்று நினைத்த போது சிக்கிக் கொண்டேன்.
********
Sankar: வணக்கம் மணிகண்டன்
Me: வணக்கம். எப்படி இருக்கீங்க?
Sankar: நலம். நீங்கள் நலமா? உங்கள் ப்லொக்கை படித்தேன். ஆனால் எல்லாம் ஒரே மாதிரி இருக்கே. ஏன் வெரைட்டி காட்ட வில்லை
Me: என்ன வெரைட்டி?
Sankar: எல்லாம் ஒரே மாதிரி இருக்கு. வேறு மாதிரி வெரைட்டியா இருந்தால் லிங்க் குடுங்க படிச்சுட்டு வரேன்
Me: சொல்லி கொடுத்தீங்கன்னா பழகிக்கிறேன்
Sankar: இந்த நக்கல் தானே வேண்டாம்ங்கிறது
Me: எத்தனை போஸ்ட் படிச்சீங்க?
Sankar: 4 அல்லது 5
me: ப்லாக்கில் 550க்கும் அதிகமான போஸ்ட்ஸ் இருக்குங்க
Sankar: ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
Me: நீங்க படிக்காமல் இருக்கிறதே சந்தோஷம். நன்றி
******
கவிதை, அரசியல், சமூகம், அனுபவம் என்று முடிந்தவரைக்கும் கலந்து கட்டிதான் எழுதிக் கொண்டிருக்கிறேன். இருந்தாலும் எழுதுவது ஒரே ஆள்தானே. அதனால் ஒரே மாதிரியாக தெரிவதற்கு வாய்ப்பு இருக்கக் கூடும் என்பதால் “வெரைட்டி காட்டவில்லை” என்று சொன்னதைக் ஏற்றுக் கொண்டேன்.
அந்த மனிதர் அதோடு நில்லாமல் “வேறு மாதிரி எழுதி இருந்தால் லின்க் கொடுங்கள்” என்ற அவரது அடுத்த வரி ப்ரஷரை கொஞ்சம் ஏற்றிவிட்டது. ஒருவேளை அத்தனையும் வாசித்துவிட்டுத்தான் கேட்கிறாரோ என்ற சந்தேகம் இருந்தது.
அதற்குத்தான் அடுத்த கேள்வியைக் கேட்டேன். மொத்தமாக 4 அல்லது 5 தான் வாசித்திருக்கிறார். இதுதான் லோலாயம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாம். சமீபகாலங்களில் நிசப்தம் நன்றாக இருப்பதாக யாராவது சொல்வதும் அதனால் நான் உசுப்பேறிக் கிடப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த உசுப்பேறிய உடம்பை ரணகளமாக்குவதற்கென சனிபகவானால் அனுப்பி வைக்கப்பட்ட காக்காதான் இந்த சங்கராக இருக்கும் என நினைக்கிறேன்.
இந்த மனிதரிடம் பேசி வெட்டியாக டென்ஷன் ஆக வேண்டியதில்லை என டார்ச்சரை முடித்துக் கொள்ள விரும்பினேன். மீண்டும் Block செய்துவிட்டு பாண்டிச்சேரிக்கு பஸ் ஏறினேன்.
அடுத்த நாள் காலையில் பாண்டியில் இ-மெயிலைத் திறந்தபோது “உன்னை ப்லாக் செய்கிறேன்” என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். சிரிப்பதா அல்லது அழுவதா என்று தெரியவில்லை. “போச்சு...பொங்கும் துக்கத்தில் நான் இனி தூக்கில்தான் தொங்க வேண்டும்” என்று பதில் அனுப்பினேன்.
இதையெல்லாம் எழுதுவது சாரு நிவேதிதாவின் அலம்பலை எனக்கு ஞாபகப்படுத்துகிறது. அது அபாயகரமானதும் கூட. இருந்தாலும் உங்களுக்கும் எனக்கும் டைம் பாஸ்தானே. என்றாலும் இந்த ரேஞ்சில் இதுதான் கடைசி போஸ்ட்டாக இருக்க வேண்டும் என பாடிகார்ட் முனீஸ்வரனை வேண்டிக் கொள்கிறேன்.
4 எதிர் சப்தங்கள்:
வணக்கம் வா.ம. :-)
உங்க சொந்த ஊர்?
வன்முறை இல்லாம பதில் சொல்லனும் ஆமா.. :-0
மணிகண்டன் சார்
பொருத்தமான தலைப்பு
இப்படியும் சில மனிதர்கள்
/எனக்கு அஷ்டமச் சனி நடந்து கொண்டிருக்கிறது//
என்னவே ஒமக்கு புத்தி கொறஞ்சு போச்சா?.புடிச்சுருக்கறது சனீஸ்வரன்.அதுக்கு //முனீஸ்வரனை வேண்டிக் கொள்கிறேன்//னா சரியாவுமா?.பாண்டிசேரில இருந்தா பக்கத்துலதான திருநள்ளாரு போயிட்டு வந்திரும்.
நல்ல அனுபவம் மணிகண்டன்!
Post a Comment