2007 ஆம் ஆண்டு வெளிவந்த “கண்ணாடியில் நகரும் வெயில்” என்ற எனது முதல் கவிதைத் தொகுப்பிற்கு பிறகான கவிதைகள் தொகுக்கப்பட்டு “என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி” என்ற பெயரில் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு (ஜனவரி, 2013) வெளிவருகிறது.
தமிழின் மிக முக்கியமான பதிப்பகமான காலச்சுவடின் மூலம் தொகுப்பு வருவது என்னை மகிழ்ச்சிக்குரியவனாக்கியிருக்கிறது.
அட்டைக்கான ஓவியத்தை வரைந்தவர் ஞானப்பிரகாசம் ஸ்தபதி. மொத்த கவிதைகளையும் அவருக்கு அனுப்பி வைத்திருந்தேன். பத்து நாட்களுக்குப் பிறகாக ஓவியத்தை அனுப்பி வைத்திருந்தார். மிக அற்புதமான ஓவியம் அது. மொத்தக் கவிதைகளையும் அது பிரதிநித்துவப்படுத்துவதாகத் தோன்றியது. ஞானப்பிரகாசத்திற்கு எனது அன்பு.
அட்டை வடிவமைப்பை கீழ்வேளூர்.பா.ராமநாதன் எனக்கு பிடித்த வகையில் செய்து கொடுத்திருக்கிறார். அவருக்கு நன்றிகள்.
கவிதைகளைக் தேர்ந்தெடுத்ததிலிருந்து, கவிதைத் தொகுப்பிற்கான பெயரை முடிவு செய்தது வரை நண்பர்கள் பலரும் உதவியிருக்கிறார்கள். அதைப்பற்றி விரிவாக பிறகு எழுத வேண்டும்.
இப்போதைக்கு அட்டையைப் பார்த்த சந்தோஷம் எனக்கு. புதிதாக மலர்ந்த மலர் ஒன்றை பார்த்ததற்கு இணையான சந்தோஷம் அது. முதல் மழைத்துளி முகத்தை நனைத்த இதம் என்றும் சொல்லலாம். அதே சந்தோஷத்தை ‘நிசப்தம்’ தளத்தை வாசிக்கும் அன்பிற்குரிய வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனத் தோன்றியது. அதைச் செய்திருக்கிறேன் இப்பொழுது.
உங்களின் வாழ்த்துக்கள் எனக்கான உற்சாகம்.
நன்றி.
11 எதிர் சப்தங்கள்:
vaazhthukkal sako...
வாழ்த்துக்கள்!
மென்மேலும் சிறக்கவும் வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.
"முதல் மழைத்துளி முகத்தை நனைத்த இதம்" - மிக மிக இதம்! படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்! மேலும் செயலாற்றிச் சிறக்க வாழ்த்துக்களுடன், - K.Balaji
வாழ்த்துக்கள்
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் கவிஞரே... :)
வாழ்த்துகள்
வாழ்த்துகள்!
மென்மேலும் நிறைய தொகுப்புகள் வெளிவர வாழ்த்துக்கள்
Post a Comment