Sep 9, 2012

நெய்தல் விருது



தமிழில் வழங்கப்படும் கவனம் பெறத் தக்க விருதுகளில் ஒன்று நெய்தல் இலக்கிய அமைப்பின் விருது. இந்த விருது ஒவ்வொரு வருடமும் இரு பிரிவுகளில் வழங்கப்படுகிறது. 

1) இளம் படைப்பாளிக்கான சுந்தர ராமசாமி விருது
2) முதல் கவிதைத் தொகுப்புக்கான ராஜமார்த்தாண்டன் விருது.

விருதுக்குரிய படைப்பாளியை/படைப்பை யார் வேண்டுமானாலும் பரிந்துரை செய்யலாம் என்பது இந்த விருது தேர்வு முறையில் இருக்கும் முக்கியமான அம்சம். பரிந்துரை செய்யப்பட்ட பெயர்களில் இருந்து நடுவர் குழு தகுதியான படைப்பாளியை/படைப்பைத் தேர்ந்தெடுக்கும்.

1) இளம்படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது

இந்த விருது நாற்பது வயதுக்குட்பட்ட,  தமிழ் படைப்பிலக்கியத் துறையில் தீவிரமாக இயங்கிவரும் ஒருவருக்கு வழங்கப்படுகிறது.

          2007 ஆம் ஆண்டு கண்மணி குணசேகரன்
          2008 ஆம் ஆண்டு பிரான்சிஸ் கிருபா
          2009 ஆம் ஆண்டு எஸ்.செந்தில்குமார்
         2010 ஆம் ஆண்டு ஜே.பி. சாணக்கியா
         2011 ஆம் ஆண்டு சுகிர்தராணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இந்த வருடத் தேர்வுக்கான நடுவர் குழு: பெருமாள் முருகன், சுரேஷ்குமார இந்திரஜித், அரவிந்தன்

இந்த விருதுக்கான பரிந்துரையை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

எனக்கு சில பெயர்கள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன.
  • மணல்வீடு ஹரிகிருஷ்ணன் -  நாற்பதைத் தாண்டியிருக்கக் கூடும். இல்லாதபட்சத்தில் தெருக்கூத்துக்கலைக்காகவும், மணல்வீடுக்காகவும் இவரை பரிந்துரை செய்ய விரும்புகிறேன்       
  • கே.என். செந்தில் -  சிறுகதைகளுக்காகவும்
  • இளங்கோ கிருஷ்ணன் - கவிதைகள் மற்றும் கவிதை சார்ந்த உரையாடலுக்காகவும்
           
2) முதல் கவிதைத் தொகுப்புக்கான ராஜமார்த்தாண்டன் விருது

கடந்த ஆண்டு வெளிவந்த கவிதைத் தொகுப்புக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. கவிஞனுக்கு அது முதல் தொகுப்பாக இருக்க வேண்டும் என்பது விதி.

2009 ஆம் ஆண்டு தாணு பிச்சையாவின் "உறைமெழுகின் மஞ்சாடிப் பொன்"
2010 ஆம் ஆண்டு ஹவியின் "இசைக்குமிழி" தொகுப்பும் தேர்வாகின.

  இவ்வாண்டின் நடுவர் குழு: சுகுமாரன், க.மோகனரங்கன், கவிதா முரளிதரன்

பரிந்துரைப்பதற்கு இரண்டு தொகுப்புகள் நினைவுக்கு வருகின்றன

  •         சபரிநாதன் - களம் காலம் ஆட்டம் (புது எழுத்து வெளியீடு)
  •         றியாஸ் குரானா - நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு(புது எழுத்து )

பரிந்துரைகளை 15 செப்டம்பர் 2012க்குள் யார் வேண்டுமானாலும் அனுப்பலாம். நீங்களும் ஒண்ணு தட்டி விடுங்க.

மின்னஞ்சல்: neythalkrishnan@yahoo.com

முகவரி:
நெய்தல் கிருஷ்ணன்,
சரவணா இல்லம்,
51, ஈத்தாமொழி சாலை,
கோட்டார்,
நாகர்கோவில்-629002

அலைபேசி: 9443153314

0 எதிர் சப்தங்கள்: