”கண்ணாடியில் நகரும் வெயில்” கவிதைத் தொகுப்பு மின் நூலாக மாற்றப்பட்டிருக்கிறது.
இணைப்பில் க்ளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தரவிறக்கம் செய்து கொள்ளும் உங்களின் அன்பிற்கு எனது நன்றிகள்.
2005 ஆம் ஆண்டு நான் எழுதிய கவிதை ’நிழற்குறிப்பு’ உயிர்மை இதழில் பிரசுரமானது. அதுதான் பிரசுர வாய்ப்பினை பெற்ற முதல் கவிதை. அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட நாற்பது கவிதைகள் பிரசுரமாகின. இவற்றோடு இன்னும் சில கவிதைகள் சேர்க்கப்பட்டு 2007 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ‘கண்ணாடியில் நகரும் வெயில்’ என்ற தொகுப்பாக உயிர்மையால் வெளியிடப்பட்டது.
நவீன கவிதை உலகில் நான் தேடிக் கொண்ட சிறு கவனத்திற்கு இந்தத் தொகுப்பும் கவிதைகளும் மிக முக்கியமானவை என நம்புகிறேன். எதிர்பாராத முகங்கள் இந்தத் தொகுப்பை பற்றி பேசிய போதெல்லாம் உண்மையிலேயே நான் நெகிழ்ந்திருக்கிறேன்.
தொகுப்பை 2007 ஆம் ஆண்டின் சென்னை புத்தகக் காட்சியில் எழுத்தாளர் சுஜாதா வெளியிட திரைக்கலைஞர் ரோகிணி பெற்றுக் கொண்டார். சுஜாதா அவர்கள் தன் வாழ்நாளில் வெளியிட்ட கடைசித் தொகுப்பு ’கண்ணாடியில் நகரும் வெயில்’என்பதில் எனக்கு மகிழ்ச்சியும் உண்டு வருத்தமும் உண்டு.
இரண்டாவது கவிதைத் தொகுப்பான “என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி” வெளிவரவிருக்கும் சமயத்தில் முதல் தொகுப்பை மின் நூலாக கொண்டு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி.
வாசித்துவிட்டுச் சொல்லுங்கள். காத்திருக்கிறேன். வழக்கம் போலவே.
அன்புடன்,
வா.மணிகண்டன்
4 எதிர் சப்தங்கள்:
இரண்டாவது தொகுப்புக்கு வாழ்த்துகள்!
மின் நூலுக்கு நன்றி.
இந்த மின் நூலை வாசித்துப் பார்க்கிறேன். இரண்டாவதாய் வரவிருக்கும் தொகுப்புக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சார் ! டவுன்லோட் செய்கிறேன் !
thanks for free download.
Post a Comment