கோவையில் “அருவி” அமைப்பினர் அக்டோபர் 16-2011 அன்று ஒழுங்கு செய்திருந்த சந்திப்பில் ’கவிதை மொழி’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையாடலின் “பவர் பாய்ண்ட்” வடிவம்.
இந்தக்கூட்டத்தில் தமிழ்க்கவிதை குறித்தான என் புரிதல்களையும், கவிதையோடு எனது அனுபவம் பற்றியும் பேசுவது என்று முடிவு செய்திருந்தேன். இவை இதுவரை கவிதைகள் பற்றி நான் எழுதிய குறிப்புகளின் சாராம்சம்தான்.
1) தமிழ்ச் சூழலில் கவிதை பொதுவாக எந்த வழிமுறைகளில் நமக்கு அறிமுகமாகிறது என்பது பற்றியும், அவை எதனால் முக்கியத்துவம் பெறுகிறது என்பது குறித்து ஆரம்பம் அமைந்தது.
2) கவிதையின் பெரும் பிரிவுகளாக நமக்கு அறிமுகமானவை குறித்து
மரபுக் கவிதை வாசிக்க ஆரம்பித்த பள்ளிப்பருவத்தில் புறநானூற்றின் சூழலுக்குள் தன்னை பொருத்திக் கொள்ள முடியாமையும், அகப்பாடல்கள் குறிப்பிடும் தனக்கு அனுபவம் இல்லாத வயதும், அந்த பருவத்தில் அக்கவிதைகளை விட்டு விலகச் செய்கின்றன.
புதுக்கவிதையின் அதீத ஓசைகளும் அதன் துருத்திக் கொண்டிருக்கும் உணர்ச்சிகளும் புதுக்கவிதையை விட்டு விலகச் செய்கின்றன.
இந்நிலையில் நவீன கவிதை அறிமுகமாகிறது. நவீனத்துவம் என்றால் என்ன என்பதை தேடிச் செல்ல மனம் ஆயத்தமாகிறது.
3) நவீனத்துவத்திற்கான அடிப்படையும், அதன் துவக்கமும் குறித்து
5) புதுக்கவிதையிலிருந்து நவீன கவிதைக்கான நகர்தல் குறித்து
6) கவிதைக்கான வரையறை
7) எனக்கான கவிதை
8) கவிதையில் உண்மைத்தன்மை
9) கவிதையில் இருண்மை:
கவிதையின் இருண்மைத் தன்மைக்கு நகுலனின் கவிதைகளை முன் வைத்தும், ஜெயமோகன் சமீபத்தில் நகுலன் படைப்புகள் குறித்து எழுப்பிய விமர்சனத்திற்கு எதிர்வினையாற்றவும் இந்த இடம் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. எனக்கு நகுலன் கவிதைகள் உருவாக்கும் இருண்மையும், அதில் உருவாகும் வாசகனுக்கான இடமும் மிக முக்கியமானவை. அதனாலேயே எனக்கு நகுலன் மிக முக்கியமான படைப்பாளி.
10) கவிதையில் உருவாக்கப்படும் காட்சிகள்
நேரடியான காட்சிகளில் இருக்கும் பிரச்சினை -ஸ்டேட்மெண்ட்
பூடகமான காட்சிகளில் இருக்கும் சிக்கல்- புதிர்த்தன்மை
11) தமிழ்க் கவிதைகளில் நாம் எதிர்கொள்ளும் படிமங்கள், அது உருவாக்கும் புரிதல்கள்
12) கவிதை வாசிப்பும் மனநிலையும்:
தன் மனநிலையிலிருந்து கவிதையை புரிந்து கொள்ளுதலில் மனநிலை இரு விதமான நிலையில் இருக்கலாம்- அமைதியான மனநிலை அல்லது கொதிநிலை
13) கவிதை என்பதன் சுயம்
14) தனித்துவத்துடன் அமையும் கவிதைகள்
15) கவிதையை அணுகுதல்: ரசனை சார்ந்து அல்லது கோட்பாடு சார்ந்து
16) கவிஞன் x கவிதாளுமை
17) இன்றைய கவிஞர்களுக்கு முன் இருக்கும் சவால்கள்
18) கவிஞனின் தெளிவற்ற தன்மை
குறிப்புகள்:
’அருவி’ அமைப்பு குறித்து:
அருவி அமைப்பு கோவையில் சூரி,ஸ்ரீநி,சுரேஷ் ஆகிய மூன்று நண்பர்களால் நடத்தப்படுகிறது. இவர்கள் கல்லூரிக்காலத்தில் (1981-1986) இல் “உயிர்மெய்” என்ற சிற்றிதழை நடத்தியவர்கள்( 8 இதழ்கள்)
இவர்களோடு சேர்ந்து இன்னொரு நண்பரும் இயங்குகிறார். அவரோடு அதிகம் பேசவில்லை- பெயரும் நினைவில் இல்லை.
இணையதளம்: www.aruvikovai.com
கூட்டம் குறித்து:
1) நவீன கவிதை குறித்து பேசும் போது ந.பிச்சமூர்த்தி, நகுலன்,பசுவய்யா,ஆத்மாநாம்,தேவதேவன்,தேவதச்சன்,சுகுமாரன் போன்ற பெயர்களை குறிப்பிட்டு பேச வேண்டியிருந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்ட ’வானம்பாடிகள்’ கவிஞர் அக்னிபுத்திரன், இத்தனை கவிஞர்களை குறிப்பிட்டவன் ஏன் இன்குலாப்பின் பெயரை சேர்க்கவில்லை என்றார். இன்குலாப், மு.மேத்தா ஆகியோர் என நான் பதில் சொல்ல ஆரம்பிக்கும் போது “இன்குலாப்பையும் மு.மேத்தாவையும் ஒரே தட்டில் வைக்கும் போதே உங்களுக்கு அந்தக் கவிதைகளில் பரிச்சயம் இல்லை” என்றார். நான் பதில் சொல்லவில்லை- என்னிடமிருந்த பதில் அந்த கூட்டத்தை திசையிருப்பிருக்ககூடும்.
பதில் இதுதான்:
ந.பி, சு.ரா,தேவதச்சன் வரிசையில் கவிதை வாசித்து அவற்றைக் கொண்டாடுபவனுக்கு இன்குலாப்பும் ஒன்றுதான், மு.மேத்தாவும் ஒன்றுதான், கருணாநிதியும் ஒன்றுதான்.
2) திருவள்ளுவருக்குப் பிறகு இரண்டாயிரம் ஆண்டுகளில் பாரதியாரில்தான் கவிதை நிற்கிறது என்ற போது பொதியவெற்பன் “பக்தி இலக்கியம், சித்தர் பாடல்கள், கம்பராமாயணம்” எல்லாம் கவிதைகள் இல்லையா என்றார்.
3) கவிதையை ரசனை சார்ந்து அணுகுதல் அல்லது கோட்பாடு சார்ந்து அணுகுதல் பற்றி விவாதிக்கும் போது பொதியவெற்பன் படைப்பில் ரசனை சார்ந்து மட்டுமே அணுகினால் உனக்கு அடுத்தவன் கவிதையை விமர்சிக்கும் யோக்கிதை இல்லையென்றார். கவிஞனாக நான் ரசனை சார்ந்து மட்டுமே அணுகுவேன், கவிதை ப்ரியனாகவும் நான் அதையே செய்வேன். கோட்பாட்டிற்காக கவிதையை பிரிப்பது எனது படைப்பு மனநிலையை சிதைக்கிறது. எனது யோக்கியதை பற்றிய சான்றுக்காக நான் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது.
4) கவிஞர்கள் உதிரிகளாக இருந்தாலே போதும் அவர்கள் தங்களை எந்த நிறுவனத்துடனும் இணைத்துக்கொள்ளத் தேவையில்லை என்றபோது மனிதன் உதிரியாக இருக்க முடியாது என்றும் அவன் பிறரோடு சேர்ந்தே இருக்க வேண்டும் என அக்னிபுத்திரன் சொன்னார். “மனிதன் சேர்ந்து இருக்கலாம் ஆனால் படைப்பாளி உதிரியாக இருக்கலாம்” என்றேன்.
5) அமரநாதன் என்பவர் என் கவிதைகளைப் பற்றிய கருத்துக்களைச் சொல்லி என்னை சந்தோஷ அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.
6) இசை,இளங்கோ கிருஷ்ணன், தென்பாண்டியன்,அவை நாயகன்,சம்யுக்தா ஆகிய படைப்பாளிகள் உட்பட தோராயமாக முப்பது பேர் கலந்து கொண்டார்கள்.
7) ஆனந்த், வீரராகவன் ஆகியோர் உரையாடலில் பங்குபெற்றார்கள்.
8) சில மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.
10) நிகழ்ச்சியை தொகுத்த மாணவியின் பெயர் மறந்துவிட்டது.
--------
கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்: vaamanikandan@gmail.com
8 எதிர் சப்தங்கள்:
கவிதை மொழி அருமையாய் அலசல். பாராட்டுக்கள்.
கவிதையை எளிமையான முறையில், சிறப்பாக உணர்த்தும் உரையாடல். அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி மணிகண்டன்.
..
பொன்.வாசுதேவன்
நல்ல கட்டுரை மணி
நல்ல கட்டுரை மணிகண்டன்.
நன்றி .
முக்கியமான கட்டுரை நண்பா.
nalla alasal.. paaraattukkal.
arumaiyaana alasal... payanulla katturai..vaalththukkal
I searched like this page or book sir for kavithai, nice to start with this analysis. கடந்த ஒரு வருடமாகத்தான் உங்கள் பதிவை பார்த்துக்கொண்டு வருகிறேன், தங்களின் பழைய பதிவுகளை பார்த்திருக்கவில்லை. தற்போதுதான் கவிதை பதிவுகளை பார்த்துக்கொண்டிருக்கிறேன் அருமை.
"En ithaya veliyil niranthai
En kuruthi neeril karainthai
En thega neruppil erinthai
En moochu kattril kalanthai
En pasumai nilathil vilunthai-Irunthum
Enathudal mithakkirathe -Ennavale"
The above quoted lines can we say it as Kavithai, my first writing.
Post a Comment