Sep 5, 2011

துளிகள்


(1)
ஹெல்மெட்
கண்ணாடி வழியே
பார்த்துக் கொண்டிருக்கிறான்-
நசுங்கிய கால்.


(2)
எந்த நடிகையும்
அழுவதில்லை-
என் அறைச் சுவர்களில்

(3)
வியர்வையில்
நெளிகிறாள்-
நிறமேற்றப்பட்டவள்.

(4)
மூடாத விழிகளில்
வானம் நோக்குகிறது-
அநாதைப் பிணம்

3 எதிர் சப்தங்கள்:

ராஜா MVS said...

ஹைகூ அனைத்தும் மிக அருமை நண்பரே.. வாழ்த்துகள்..
தம:1

த. முத்துகிருஷ்ணன் said...

அருமையாக இருக்கின்றன சார்

arasan said...

அனைத்தும் அருமை