தமிழகத்தில் சட்டமேலவை கொண்டு வருவதற்கான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு உடனடியாகவே மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. 234 சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட தமிழகத்துக்கு அதில் மூன்றில் ஒரு பங்கான 78 பேர்கள் எம்.எல்.சிக்களாக(Member of Legaslative Council) இருக்கப் போகிறார்கள்.
மாநில அளவில் குறைந்தபட்ச விவாதம் நடத்துவதற்கான கால அவகாசம் கூட இன்றி, தமிழகத்தில் மீண்டும் மேலவை அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வரால் அறிவிக்கப்பட்டு உடனடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. எந்த காரணத்திற்காக மேலவை அமைக்கப்படுகிறது என்பதனை திமுக அரசு தெளிவாக அறிவிக்க வேண்டும். சமூகத்தின் மேன்மக்களுக்கு உரிய பிரதிநித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களின் கருத்துக்களால் அரசு இயந்திரம் செம்மையாக செயல்படும் என்பதாலேயே மேலவை அமைக்கப்படுகிறது என்னும் கீறல் விழுந்த அறிக்கையே அரசாங்கத்தால் திரும்பத் திரும்ப வாசிக்கப்படுமெனில், மேலவை அமைப்பதற்கான பின்புலம் நிச்சயமாக வெளியில் சொல்ல முடியாத காரணமாகவே இருக்க முடியும்.
எம்.எல்.சிக்களால்தான் அரசாங்கத்திற்கு நல்ல அறிவுரைகளையும், முக்கியமான விவாதங்களையும் முன்னெடுக்க முடியுமெனில் அதை இந்த அரசு நான்காண்டுகளுக்கு முன்பாகவே செய்திருக்க வேண்டும். இந்த அரசின் பதவிக்காலம் முடியும் கட்டத்தில் ஏன் அமைக்க வேண்டும் என்பது மக்களிடையே வினாவாக வலம் வரலாம். மேலவை தமிழகத்தில் எம்.ஜி.ஆரால் கலைக்கப்பட்ட போது மேலவைத் தலைவராக இருந்த ம.பொ.சி அவர்கள் கண்ணீர் விட்டார் என்பது இத்தனை ஆண்டுகளாக மறந்து போயிருந்ததும் இப்பொழுது திடீரென அரசின் நினைவுக்கு வந்துவிட்டதும் ஆச்சரியம் அளிக்கிறது.
இந்த மேலவையால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை. கூடுதலாக இன்னும் 78 அதிகார மையங்களை இந்த அரசாங்கம் உருவாக்குகிறது. அவர்கள் எம்.எல்.ஏக்களைப் போலவே வலம் வரப்போகிறார்கள். எம்.எல்.ஏக்களுக்காவது தொகுதியில் யாரேனும் கேள்வி கேட்கக் கூடும் என்ற சிறு பயமாவது இருக்கும்(இருக்கக் கூடும்). எம்.எல்.சிக்களுக்கு அந்த துளி பயமும் கூடத் தேவையில்லை. ஊதியம், படிகள் என்று ராஜ வாழ்க்கையை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருக்கக் கூடிய 'அறிவுஜீவிகள்' பெறப்போகிறார்கள். எம்.எல்.சிக்களுக்கு வழங்கவேண்டிய ஊதியம், இதரசலுகைகள் என்று அரசு தன் தலை மீது சுமையை ஏற்றிக் கொள்கிறது.
எந்தக் கவிஞர்கள், எந்தத் தொழிலதிபர்கள், எந்தக் கல்வியாளர்கள் இந்த அவையை அலங்கரிக்கப் போகிறார்கள் என்னும் உத்தேசப் பட்டியலை குறைந்தபட்ச தமிழக அரசியல் அறிவு உள்ளவர்கள் கூட தயாரித்துவிட முடியும். ராஜ்யசபாவில் எத்தனை 'நல்ல'விவாதங்கள் நடக்கிறதோ அதே விதமான 'நல்ல' விவாதங்கள்தான் சட்ட மேலவையிலும் இருக்கும். ராஜ்யசபாவைவிடவும் மோசமாகச் செல்வதற்கும் அத்தனை சாத்தியங்களும் இருக்கின்றன.
ஏற்கனவே வளமோடும் செல்வாக்கோடும் இருப்பவர்கள்தான் மேலவைக்குச் செல்வார்கள் என்பதால் அவர்களுக்கு அது இன்னுமொரு கெளரவப்பதவி. ஓரிரு பிரதிநிதிகள் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் அது சொற்ப எண்ணிக்கையிலேயே அமைய முடியும்.
வசதிபடைத்தவர்கள், இந்தச் சமூகத்தால் அறிவுஜீவிகள் என்று அங்கீகரிக்கப்பட்டவர்கள் போன்றவர்களால் இந்த அரசும், முதலமைச்சரும், அமைச்சர் பெருமக்களும் பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகவே யார் எல்லாம் பாராட்டுவார்களோ அவர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் சேர்க்கப்படவிருக்கிறார்கள்.
மேலவை எதற்காக தமிழகத்தில் கலைக்கப்பட்டது என்பதற்கான திட்டவட்டமான காரணம் இல்லை. கலைஞரும்,அன்பழகனும் மேலவையில் உறுப்பினர்களாக இருந்தார்கள் என்றும், வெண்ணிற ஆடை நிர்மலா நியமனத்திற்கு உண்டான எதிர்ப்பு போன்ற யூகங்களே முன்பு மேலவை கலைக்கப்பட்டதற்கான காரணமாகச் சொல்லப்படுகிறது. அதே போலவே மீண்டும் மேலவை அமைக்கப்படுவதற்கான திட்டமிட்ட காரணங்கள் சொல்லப்படவில்லை. சில யூகங்களே புதிய மேலவைக்கான காரணமாக வெளிவரத் துவங்கலாம்.
மேலவை அமைப்பதற்காக பழைய திமுக அரசுகளால் இரண்டு முறை தீர்மானங்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அவை பின்னர் அமைந்த அ.தி.மு.க அரசுகளால் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. இப்பொழுது மூன்றாவது முறை.

செண்டிமெண்ட் எப்படி இருக்கிறது என்று பார்க்கவேண்டும்.
6 எதிர் சப்தங்கள்:
சிலர் மீதான யூகம் இருக்கிறது.
பார்க்கலாம்.
:-)
//எந்த காரணத்திற்காக மேலவை அமைக்கப்படுகிறது என்பதனை திமுக அரசு தெளிவாக அறிவிக்க வேண்டும். //
தமிழ் கவிகளுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ( எனக்கும் தான் )
:-)
வீண் செலவு !
SV sekar
Veeramani
T.Rajendar
Vairamuthu
Vaali
Ramanarayanan
etcc....,
நன்றி ராஜு, விஜயஷங்கர்.
நன்றி ராபின்.
உத்தேசப்பட்டியலுக்கு நன்றி யாசவி :)
நானெல்லாம் ஆள் புடிச்சி பேப்பர் மூவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன்...நீரு பதிவெழுதிட்டு இருக்கிரு... கவிஞர் கோட்டா ரெண்டு பேருக்காம். நான் கன்பார்ம் :)))
Post a Comment