Apr 5, 2010

நிசப்தம்.காம்

நிசப்தம்.காம் என்ற பெயரில் இந்த வலைப்பதிவை கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறேன். பழைய கள்ளுதான். புதிய மொந்தையில். மொந்தைக்கு வர்ணம் பூசுதல் போன்ற சில தில்லாலங்கடி வேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன்.

இந்த வாரத்திற்குள் ஒரு வடிவம் வந்துவிடும் என்று நம்புகிறேன். கொண்டு வர முடியவில்லை என்றால் பதிவு செய்த காசு போய்விடுமே. அதற்காகவாவது செய்துவிட வேண்டும்.

பதிவை மூடினால் நூற்றுக்கணக்கான பக்கங்கள் திறப்பது போன்ற தொல்லைகளின் காரணமாக உடனடியாக இந்தத் தளத்தை செயல்படுத்த முடியவில்லை. கை ஊன்றி கர்ணம் அடித்துதான் இதை பார்வைக்கு கொண்டு வர முடியும் போல் இருக்கிறது.

வலைப்பதிவை இணையதளமாக மாற்றினால் என்ன என்று பற்ற வைத்த அபிலாஷூக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

வாமணிகண்டன்.காம் என்று பதிய கூச்சமாக இருந்தது. பேசலாம்.காம் என்றே இருந்திருக்கலாம் ஆனால் நான் செய்த தொழில்நுட்ப தவறு காரணமாக அந்தப் பெயரை பதிவு செய்ய முடியவில்லை. அதனால் பேசலாமிலிருந்து எதிர் திசையில்.. நிசப்தம்.

நான் வலைப்பதிவில் எழுதுவதாலோ அல்லது இணையதளமாக மாற்றுவதிலோ யாருக்கும் எந்த உபயோகமும் இல்லை. நான் சொந்தமாக இணையதளம் வைத்திருக்கிறேன் என்ற சுயபந்தாவிற்கு இது உதவலாம் என்பதைத் தவிர வேறொன்றும் எனக்குத் தெரியவில்லை.

ஆனாலும்...எதுவுமே எழுதாத தினத்திலும் ஒரு எட்டு வந்து செல்லும் அத்தனை நண்பர்களுக்கும் நன்றி!

13 எதிர் சப்தங்கள்:

Unknown said...

முதல் வாழ்த்தும் அனேக கோடி ஆசீர்வாதங்களும் மணிகண்டன்.

Anonymous said...

வாழ்த்துகள். புதிய மாற்றத்துக்கான நேர்மையான அறிமுகத்துக்கு வணக்கங்கள்.

-சிரவணன்

Athisha said...

வாழ்த்துக்கள்

நேசமித்ரன் said...

வாழ்த்துக்கள்

மதன் said...

வாழ்த்துக்கள் நண்பரே..!

கிரி said...

//நான் வலைப்பதிவில் எழுதுவதாலோ அல்லது இணையதளமாக மாற்றுவதிலோ யாருக்கும் எந்த உபயோகமும் இல்லை//

மணிகண்டன் அப்படி ஏன் நினைக்கறீங்க! எல்லோரும் ஒருவிதத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ எதோ ஒரு வழியில் பயன்பட்டு இருப்போம்.

.com க்கு மாறியதிற்கு என் வாழ்த்துக்கள் :-)

Raju said...

வாழ்த்துகள் ஜி..!

அகநாழிகை said...

வாழ்த்துகள்

Marimuthu Murugan said...

.பேசலாம்.காம் என்றே இருந்திருக்கலாம்.


வாழ்த்துக்கள்

kalapria said...

'மேட்டரை'ச்சுற்றிலும் சாம்பல் வெள்ளைச் சுவர், நிசப்தமாக.. ஏதாவது கரித்துண்டால் கிறுக்கலாம் போல் இருக்கிறது..வாழ்த்துக்கள்-
-கலாப்ரியா

Unknown said...

வாழ்த்துக்கள்

Baski.. said...

வாழ்த்துக்கள் மணிகண்டன்.... சைபர் சாத்தான்கள் வெளிவந்துவிட்டதா??

Vaa.Manikandan said...

வாழ்த்திய நண்பர்களுக்கு மிக்க நன்றி :)

சைபர் சாத்தான்கள் வந்துவிட்டது பாஸ்கர்.

நன்றி.