
நிகழ்வுகளால் பின்னப்பட்ட
கதைக்குள்
கதாநாயகியை தேடிக் கொண்டிருக்கும்
அவனுக்கு
கனவுகள் மின்னலென உதிர்க்கின்றன.
தனிமை நிரம்பாத
இரவொன்றில்
தன் விழிகளில்
இரத்தம் வழிவதாக கனவு
கண்டான்.
பிறிதொரு
கோடையின் பிசுபிசுப்பில்
இறுகி கிடந்தவனுக்கு
மோகத்தில் திளைத்த
நடிகையின்
போஸ்டர் கனவு
ஆசுவாசமளித்தது.
நீண்ட பாம்புகளோடு
பின்னியிருந்த
இரவுகளின் கனவுகள்
திகிலூட்டுகின்றன.
இதுவரை
கனவுகளில் வந்த
காதல்
கலவி
மோதல்
கொலை
துரத்தல்
பசியை
நினைத்து
வெயில் ஆடை அணிந்த
நிழற்குடையை
கடந்தவன்
முன்பொருநாள்
சாக்கடையில் கழிப்பதாக
நினைத்து
படுக்கையில்
சிறுநீர் கழித்தை
நினைத்து
சிரித்துக் கொண்டான்.
இப்பொழுது
தேடிய கதாநாயகி தப்பித்திருந்தாள்
கனவிலிருந்தும்
கதையிலிருந்தும்.
0 எதிர் சப்தங்கள்:
Post a Comment