Jun 6, 2009

ராஜ மார்த்தாண்டன்: அஞ்சலி


ராஜ‌ மார்த்தாண்டன் விபத்தில் மரணித்ததாக மின்னஞ்சலும், குறுஞ்செய்திகளும் வந்தன.

ராஜ‌ மார்த்தாண்ட‌ன் அவ‌ர்க‌ளை ஒரு முறை சென்னையில் ச‌ந்தித்திருக்கிறேன். நண்ப‌ர் மெய்ய‌ருள் அறிமுக‌ப்ப‌டுத்தினார்.தான் அதிக‌ம் ம‌து அருந்துவ‌தால் த‌ன் உட‌ல்நிலை சீர‌ழிந்து இருப்ப‌தாகவும், அதிக‌ம் பேச‌ முடியாமைக்கு வ‌ருந்துவ‌தாக‌வும் தெரிவித்தார். பிறகு அவ‌ர‌து உட‌ல் நிலை சீராகி இருப்ப‌தாக‌ ஜெய‌மோக‌ன் த‌ன‌து க‌ட்டுரை ஒன்றில் எழுதியிருந்தார்.

பிறகு ராஜ‌ மார்த்தாண்ட‌ன் அவ‌ர்க‌ளை பார்த்ததில்லை. கவிதை வாசிக்கும் போதே விமர்சனங்களையும் வாசிப்பது பார்வையை விசாலமாக்கும் என்ற முடிவில், கவிதை விமர்சனக் கட்டுரைகளையும், புத்தகங்களையும் வாசிக்கத் துவங்குகையில் ராஜ மார்த்தாண்டன் எழுத்தின் மீதான பரிச்சயம் உண்டானது.

‘தமிழ் புதுக்கவிதை வரலாறு' ‘கொங்குதேர் வாழ்க்கை தொகுதி இரண்டு' இரண்டும் பேசப்பட்ட தொகுதிகள். ராஜ மார்த்தாண்டன் கவிதைகள் எழுதியிருந்தாலும், கவிதை விமர்சகராகவே தனது பெயரை நிலைப்படுத்தியிருக்கிறார்.

இருபது ஆண்டுகளாக அவர் தினமணி ஆசிரியர் குழுவில் பணியாற்றியிருக்கிறார். தற்சமயம் காலச்சுவடில் பணியாற்றினார்.

க‌ட‌ந்த‌ ஆண்டு ஜூலை மாத‌ம் ராஜ‌ மார்த்தாண்ட‌னுக்கு நெய்த‌ல் இல‌க்கிய‌ அமைப்பு அறுபதாவது ஆண்டு விழா ந‌ட‌த்திய‌து.

இன்று காலை(ஜூன் 06, 2009) நாக‌ர்கோவிலில் ந‌ட‌ந்த‌ விபத்தில் ம‌ர‌ணித்திருக்கிறார்.

9 எதிர் சப்தங்கள்:

M.Rishan Shareef said...

இன்று காலையிலிருந்து மிகவும் துயர் தந்துகொண்டிருக்கும் செய்தி இது.
அன்னாருக்கு எனது அஞ்சலிகள் !

தமிழ் said...

அவருக்கு
என்னுடைய அஞ்சலிகள்

முத்துகுமரன் said...

கவிஞர், விமர்சகர் திரு.ராஜ மார்த்தாண்டன் அவர்களுக்கு இதயப்பூர்வமான அஞ்சலிகள்

மாதங்கி said...

அவருக்கு
என்னுடைய அஞ்சலிகள்

தமயந்தி said...

ராஜமார்த்தாண்டனை நான் தினமணி அலுவலகத்தில் சந்திதிருக்கிறேன்.அப்புறமாக ஒரு இலக்கிய கூட்டத்தில்..அந்த நினைவுகள் இந்த செய்தியைக் கேக்கும் போது மனதில் அலைப்பாய்கின்றன..தமிழ் அவரை நினைவில் கொள்ளும்

கானா பிரபா said...

ஆழ்ந்த அனுதாபங்களும் அஞ்சலிகளும் :(

Kumky said...

அண்ணாருக்கு இதயபூர்வமான அஞ்சலிகள்.
ஆழ்ந்த மன வருத்தங்களுடன்.

Kumky said...

அண்ணாருக்கு இதயபூர்வமான அஞ்சலிகள்.
ஆழ்ந்த மன வருத்தங்களுடன்.

anujanya said...

ஜெமோ தளத்தில் ராஜமார்த்தாண்டன் பற்றி படித்திருக்கிறேன்.

துயர சம்பவம். என் அஞ்சலிகளும்.

அனுஜன்யா