Feb 9, 2006

போபர்ஸ்- சில வினோத தகவல்கள்.

இக்கட்டுரை இந்திய அரசாங்கத்தில் உயர் பதவியில் இருந்த அலுவலர் ஒருவரால் எழுதப்பட்டது. பெயர் வெளியிடப் படவில்லை. அவரது கட்டுரையின் தழுவல் இது.

1987 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு பின்னிரவில் இரவு சிற்றுண்டியினைத் தொடர்ந்து அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களால் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது.இக்கூட்டத்தில் உளவுத்துறை, சி.பி.ஐ ஆகிய அமைப்புகளின் தலைவர்கள், ரா அமைப்பின் செயல் தலைவர்(அதன் தலைவர் அந்தச் சமயத்தில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டிருந்தார்) மற்றும் ராஜிவீன் நெருங்கிய அரசியல் ஆலோசகர்கள் இருந்தனர்.

ரா தலைவரின் பதவிக்காலம் நிறைவடைந்தவுடன் செயல் தலைவரை அதன் தலைவராக நியமிக்க ராஜிவ் முடிவு செய்திருந்தார். ஆனால் போபர்ஸ் பூதம் கிளம்பப் போவதை உணராதிருந்ததன் தண்டனையாக அவர் வேறு துறைக்கு தாமாகவே மாறிச் செல்லவேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டார்.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்கோமிலிருந்து போபர்ஸ் பூதம் வெளிப்பட்டவுடன் அரசு, இந்தக் கட்டுரையாளரின் கருத்தினையும் அவரது அறிவுரையையும் வினவியது.தமக்கு ஸ்வீடன் பற்றி தெரியாது எனவும் எனினும் பல்வேறு தரப்பினரும் அரசு மற்று அரசு சாரா வட்டாரங்களில் பலன்காளிப் பெற்றுள்ளது போல் தெரிவதாகவும் எனினும் இந்தத் தகவல்களை மட்டும் வைத்துக் கொண்டு யார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் எனத் தெரிவித்ததாக குறிப்பிடுகிறார்.

இந்துஜா சகோதோரர்கள் மீது சந்தேகம் உள்ளபோதும் அவர்களால் எளிதில் சமாளிக்க முடிந்தது.அவர்கள் சி.பி.ஐ எப்படி துப்பறிய வேண்டும் என்பதற்கும் பிரதம அலுவலகம் தனக்குண்டான பாதிப்புகளைத் தடுக்கலாம் என்பதற்கும் அறிவுரையாளர்களாக செயல்பட முடிந்தது.

சி.பி.ஐயின் உயரதிகாரிகள் ஜெனீவாவிற்கும், லண்டனுக்கும், ஸ்டாக்கோமுக்கும் எத்தனை முறை பயணம் செய்திருப்பார்கள்? எத்தனை முறை இந்துஜா சகோதரர்கள் மற்றும் அவர்களுடைய தொடர்பில் உள்ளவர்களுடன் ஆலோசனை நடத்தி இருப்பார்கள்?.

இந்துஜா சகோதரர்கள் பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் வசீகரிப்பவர்களாகவே தொடர்ந்து இருந்திருக்கிறார்கள். வேறு எந்த இந்திய தொழிலதிபர்களும் இருந்திடாத அளவிற்கு.

இவர்களின் தத்துவம் - அனைத்து முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கக் கூடது.

அமெரிக்காவில் குடியரசுக்க் கட்சிக்கும் நண்பர்கள், ஜனநாயகக் கட்சிக்கும் நண்பர்கள்.
மார்கரெட் தாட்சரும் பழக்கம் ஜான் மேஜரும் தெரியும்.
இந்தியாவிலும் அப்படியே வாஜ்பாயும் தேவை ஜோதிபாசும் தேவை.

இவர்கள் இலண்டன் அல்லது ஜெனீவாவில் நடத்தும் தீபாவளிக் கொண்டாட்டங்கள் மிக பிரசித்தம்.ஐரோப்பிய இந்தியப் பெருந்தலைகள் பலரையும் உங்களால் காண இயலும்.(உங்களை அனுமதிப்பார்களா எனத் தெரியவில்லை!)

1987இல் திரு.பி.வி.நரசிம்ம ராவ் ஐரோப்ப சுற்றுப் பயணத்தில் இருந்தார். அப்போது ராஜீவ் அமைச்சரவையில் அமைச்சர்.ஜேனிவாவில் இந்துஜா சகோதரர்கள் விருந்துக்கு அழைத்த போது போபர்ஸ் விவாகாரத்தின் காரணமாக அழைப்பினை ஏற்க மறுத்துவிட்டர். பிரதம அலுவலகத்திலிருந்து அந்த விருந்தில் பங்கேற்குமாரு பி.வி.என்னுக்கு தகவல் சென்றது.(உத்தரவாகக் கூட இருக்கலாம்)

ஆர்.வெங்கட்ராமன் குடியரசுத் தலைவராக இருந்த போது ஜெனிவா பயணம் மேற்கொண்டார். அப்போது இந்துஜா சகோதரர்களில் ஒருவர் ஜெனீவாவில் உள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு குடியரசு அலுவலகம் ஒரு சிறப்பு காது சிகிச்சை நிபுணரின் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி இருப்பதாகவும் அதற்கான நேரத்தை ஒதுக்கும் படியும் கேட்டுக் கொண்டார்.

தூதரகத்தில் இருந்து உறுதிப்படுத்துவதற்கான தொடர்பில் அப்படி எதுவும் வேண்டுகோள் இல்லை எனக் குடியரசு மாளிகயிலிருந்து தெரிவிக்கப் பட்டது. எனினும் தூதரகத்துக்குத் தெரியாமல் ஜெர்னே இல் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஒரு முறை மத்திய அமைச்சராக இருந்த எச்.கே.எல் பகத் ஜெனீவா வந்திருந்த போது, இந்தியத் தூதரின் மனைவியும் பணியாளும் இல்லாத காரணத்தினால் விருந்துக்கு ஏற்பாடு செய்ய முடியுமா என தூதரால் இந்துஜா சகோதரர்களிடம் கேட்கப்பட்டது.கரும்பு தின்னக் கூலியா?ஒத்துக் கொள்ளாம்லா இருப்பர்? இந்த விஷயம் அமைச்சருக்குத் தெரியாது. இதனைத் தெரிந்த அமைச்சர் விருந்துக்கு தான் வர முடியாதெனவும் ஏன் இவ்வறு செய்தீர்கள் எனவும் தூதருக்கு அர்ச்சனை கொடுத்திருக்கிறார்.

எனினும் பல வெளிநாட்டினர் கலந்துகொண்ட விருந்தில் அமைச்சருக்கு உடல்நிலை சரியில்லை என அறிவிக்கப் பட்டது. அவர்கள் யூகித்திருக்க முடியும் அதற்கான காரணத்தை.

வி.பி.சிங் அவர்கள் ராஜீவின் அமைச்சரவையில் வர்த்தக அமைச்சராக இருந்த போது 'காட்' ஒப்பந்தம் தொடர்பாக அடிக்கடி ஜெனீவா செலவ்து உண்டு. இந்துஜா சகோதரர்கள் தொடர்பு கொள்ள (வழக்கம்போலவே) முயன்றபோது தவிர்த்ததோடு அல்லாமல் அவருக்கு எப்படி நான் இருக்கும் இடம் தெரியும் என்று தூதரக அதிகாரிகளை வினவி இருக்கிறார். தேவை இல்லை. தூதரக அதிகாரிகளை விட சகோதரர்களுக்கு அதிகம் தெரியும். டெல்லி ஜெனீவா இடையிலான போக்குவரத்து பற்றி.

போபர்ஸ் சம்பந்தமாக பாராளுமன்றக் குழு அமைக்கப் பட்டு அக்குழு சில உயர் அதிகாரிகளை ஐரோப்பாவிற்கு அனுப்பியது. கட்டுரையாளர் அக்குழுவுக்கு உதவ வேண்டும் என டெல்லியிலிருந்து தகவல் அனுப்பப் பட்டது. குழு இரண்டு உதவிகளைக் கேட்டது. ஒன்று குற்றம் சாட்டப் பட்டுள்ள நபர்களை சந்திப்பது. பெரும்பாலான நபர்கள் சந்திக்க மறுத்துவிட்டனர். மற்றொன்று பிரதம அலுவலகத்தினால் கொடுக்கப் பட்டுள்ள முகவரிகளில் உள்ள நபர்களை சரி பார்த்தல்.

அப்போது பலரும் இடம் மாறியிருந்ததால் கட்டுரையாளர் சில நடவடிக்கைகள் மூலம் சரியான முகவரிகளை கண்டறிந்தார். இது குழுவிற்கு மகிழ்ச்சி தரவில்லை. தாங்கள் சரிபார்க்க மட்டுமே விருபுவதாகத் தெரிவித்து, அலுவலகத்தால் தரப்பட்ட முகவரிகளில் அந்த நபர்கள் தங்கி இருக்கவில்லை என பிரதம அலுவலகத்துக்குத் தகவல் அனுப்பப் பட்டது.

சில பத்திரிக்கையாளார்கள் துப்பறியும் பணியைச் சிறப்பாக செய்த போதும்,அனைத்து பத்திரிக்கையாளர்களர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. பலர் தகவல்களை மறைப்பதற்கும் திரு.வி.பி.சிங்கின் பெயரினை பாழ்படுத்தவும் அரசிற்கு உதவினர்.ஒரு பிரபல நாளிதழின் பத்திரிக்கையாளார் பெயரைக் குலைக்கும் சதிக்குப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டார்.கிட்ஸ் விவகாரத்தில் சிங் இன் பெயரை இழுக்கும் பணி அவருக்கு வழங்கப் பட்டது.

தேசம் விரும்புவது போலவும் நம்புவது போலவும் வி.பி.சிங் ஒன்றும் அவ்வளவு சுத்தமான கரங்களுக்குச் சொந்தமானவரில்லை. அவரும் அவர்து காபினெட் செயலாளர் வினோத் பாண்டேவும் ராஜிவ் மற்றும் அவரது குடும்பத்தின் பெயரினைக் குலைக்க பல வகைகளிலும் முயன்றனர்.

ராஜிவின் போபர்ஸ் தொடர்பினை வெளிக் கொணர்வதற்கு என ஒரு ஜெர்மானிய துப்பறியும் நிறுவனத்தை பாண்டே நியமித்தார். ஒரு அரசாங்கம் வெளிநாட்டினை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றினை துப்பறியும் பணிக்காக நியமிப்பது. அதுவும் நாட்டின் நலன் சம்பந்தப்பட்ட நிகழ்வொன்றில். இது மிகவும் மோசமான செயல்

சிங் பிரதமராக இருந்த போது ஊடகங்களில் வெளிவந்த போபர்ஸ் கட்டுரைகள் பலவற்றிற்கும் ஜெர்மானிய நிறுவனத்தின் புலனாய்வு ஆதாரமானதாக அமைந்தது.

பிரதமருக்குத் தெரியாமலோ அல்லது அவரது அனுமதி இல்லமலோ பாண்டே இத்தனை காரியங்கஆளைச் செய்திருக்க முடியாது.

போபர்ஸ் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

தேசிய ஊழல்கள் நாட்டின் நல்லன வற்றயும் மோசமானவற்றயும் ஒரு சேர வெளிக் கொணர்கின்றன.
அமெரிக்காவின் 'வாட்டர் கேட்' போல. நாமும் எதிர்பார்ப்போம்

3 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

மூலம்: http://in.rediff.com/news/2006/jan/18guesta.htm

யாத்ரீகன் said...

ஆனால் இவற்றின் பயன்கள் என்ன ? அடுத்து வரும் தேர்தலில் ஊழல் குற்றச்சாட்டப்பட்ட கட்சி தோற்க்கப்போவது மட்டுமே.. பின் என்றாவது அந்த கட்சியின் கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு அதற்கு சாக்காக கூறுவதற்கு என மட்டுமே பயன்படுகின்றது...

நாட்டின் இறையாண்மை சம்பந்தப்பட்ட கார்கில் போரில் ஆயுதம், மற்ற போர்பொருட்கள், சவப்பெட்டி வரை வாங்கியதில் முறைகேடுகள் வந்தும், மீடியாக்கள் கூட அவற்றை சிலநாட்கள் விற்பனைக்கு தலைப்புச்செய்தியாக்கியனவே தவிர பொறுப்போடு நடந்துகொள்ளவில்லையே..

யாரும் தண்டிக்கப்பட்டதாகவோ, இதைப்போன்ற தவறுகள் பிற்பாடு நிகழ்த்தப்படாமலும் இருந்ததில்லை..

manasu said...

முன்று முகம் வந்து... பஷா வந்து....சந்திரமுகி வந்து.... இப்ப சிவாஜி யும் வரப் போகுது. நீங்க இன்னும் முன்று முகத்தை பத்தியே பேசிட்டு இருங்க!!!! இன்னும் bofors ஆ......

இவுங்க எல்லாம் எதுக்கு ஊழல் பண்றாங்க......நமக்காக தான். எல்லாம் நாம பேசி பொழுது போக்க தான்.

இதுக்கெல்லாம் அரசியல் வாதி மட்டுமே காரணம் இல்லை. முக்கியமாய் நமது நீதித்துறை. எதற்கு இவர்கள் முடிவு சொன்னார்கள்????????

சமீப காலங்களில் பத்திரிக்கைகளில் படித்தது....

1. சுதந்திர போரட்ட தியாகி என பொய் சொல்லி (அதிலுமா...) பென்ஷன் வாங்கியதாய் வழக்கு 12 பேர் மீது. 10,15 வருடங்களுக்கு பிறகு தீர்ப்பு வந்த போது அதில் 10 பேர் அவர்களாகவே இறந்து போயிருந்த்தார்கள்.(மற்றவர்கள் அடுத்த கோர்ட் ல் அப்பீல் செய்த்திருப்பார்கள் என்று நம்புகிறேன்... என்ன அங்கு ஒரு 10 வருடம் அவர்களின் கதையும் முடிந்த்து விடும்)

2.ஒரு கற்பழிப்பு வழக்கு. நேரில் பார்த்த சாட்ச்சியாய் ஒரு சிறுமி. இப்போது அச்சிறுமியின் கையில் ஒரு சிறுமி (அவளின் குழந்தை). வழக்கு இன்னும் நடை பெறுகிறது..........................................................