Feb 7, 2006

மூன்றாவது(பிலாக்கர்ஸ்) அணி

அரசியல் அணி இல்லைங்க.....பிலாக்கர்ஸ் அணி.அது என்னமோ தெரியலை எதாவது தமிழ்ல எழுத ஆரம்பிச்சா போதும் பட்டாசக் கிளப்பறோம்னு நினைச்சுட்டு மத்தவங்க மண்டய உடைச்சுடுறாங்கப்பு. வலைப்பதிவு மட்டும் விதிவிலக்கா? இங்கேயும் ஆரம்பிசாச்சு. என்னடா குரூப் சேர்ந்து மத்தவங்களை தூக்கி மட்டும் தானே விடுறாங்க, நல்லா இருக்குதுனு பார்த்துட்டு இருந்தா .....

திடீர்னு அக்னி எல்லாம் தோத்துடற அளவுக்கு ஏவுகணைகள் சீறுது போங்க. அட என்னங்க ஆச்சு. நல்லாத் தானே இருந்தீங்க? என்ன வேணும்னே புரியலயே! அட என்னதான் பிரச்சினைனு தெரிஞ்சுக்கலாம்னா நேரடியா பதிலும் இல்லை.லின்க் களை திறந்தா 'டெஸ்க்டாப்' நிரம்பிப் போகுது.அத்தனை லின்க்-ஆ குடுப்பாங்க?சரியாப் போச்சு!
போய்ப் படிச்சுட்டு வரதுக்குள்ள எங்க ஆரம்பிச்சோம்னு மறந்து வேற போகுது.

சண்டைப் போடாதீங்க. வேண்டாம் வேண்டாம் சண்டைப் போடுங்க.ஜாலியாத்தான் இருக்கு.ஆனால் மத்தவங்களுக்கு புரியற மாதிரி ஓ.கே? டீல்?

மேட்டரை மறந்துட்டேன் பார்த்துடீங்களா? இதுதான் நமக்கு நல்ல சான்ஸ். எந்த அணியும் வேண்டாம். இது தனி அணி. யாரு அதிக பின்னூட்டம் இட ஒத்துக் கொள்கிறார்களோ அவர்களிடம் கூட்டணி வைப்போம். யாரும் மதிக்கவில்லையா? டெபாஸிட் இழந்தாலும் பரவாயில்லை தனியாக போட்டியிடுவோம்.கூட்டணிக்கான எங்கள் கதவு திறந்தே இருக்கிறது. ஸீட் தரமுடியவில்லை எனில் இதயத்தில் இடமளிப்போம். :)

உட்டாலக்கடி கிரி கிரி தமிழ்மணத்தோட வடகறி.

வலைப்பதிவாளர் முற்போக்குக் கூட்டணியை ஆதரிப்பிர். நல்லாட்சி அமைந்திட வாய்ப்பளிப்பீர்.

11 எதிர் சப்தங்கள்:

நாமக்கல் சிபி said...

தேர்தல்னாலே கூட்டணியோ போஃபியா வந்துடுமோ!

குமரன் (Kumaran) said...

என்னுடைய முழு ஆதரவும் மூன்றாவது அணிக்கு உண்டு. :-)

பினாத்தல் சுரேஷ் said...

என்னைக் கூட்டணிக்குத் தலைமை தாங்க அன்புடன் அழைத்த அன்புத் தம்பி, பாசமிகு இளவல் வா மணிகண்டனுக்கு நன்றி என்று கூறி அன்னியப்படுத்த விரும்பவில்லை.

நந்தன் | Nandhan said...

கொ.ப.சே பதவி கிடைக்குமா? சொல்லியனுப்புங்க

இலவசக்கொத்தனார் said...

எங்க கட்சி பெருஸுங்க எல்லாம் வர ஆரம்பிச்சாச்சு. நானும்தான் ஆஜர். நமக்கு ஒரு பாதுகாப்பான (சரியா படிங்க பாப்பான இல்லை) தொகுதி ஒண்ணு கொடுத்திடுங்க.

dvetrivel said...

தங்களுக்கும் சேலம் மாநகருக்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதோ? தங்களை பார்த்தது போல் உள்ளது. அதனால் தான் கேட்டேன்.

Muthu said...

கோபிகாரரே,

நம்மெல்லாம் புது ஆளுங்க..இதுவெல்லாம் இங்க பல காலமாக இருக்கற பிரச்சினை தான்...ஆட்கள் புது பேர்ல வருவாங்க...ஆனா எல்லாம் பழைய ஆட்கள்தான் ..
என்ஜாய் பண்ணுங்க...பழைய சுட்டி கிடைச்சா படிங்க..அறிவை வளர்த்துக்கோங்க...
நடுநிலைமைல "லெப்ட் டு சென்டர்" ஆ இல்ல "ரைட் டு சென்டர்" ஆ இல்ல "பொலிடிக்கலி கரெக்ட்" அப்படின்னு முதல்ல முடிவு பண்ணுங்க...

எல்லார்க்கும் நல்ல பிள்ளையா இருக்க நெனைச்சா இப்படி ஒரு விஷயம் நடந்ததாகவே காட்டிக்கொள்ளக்கூடாது...ஹி ஹி....

உள்குத்துன்னா என்னன்னு கேட்கணும்..ஆனா உள்குத்து பதிவுகள் நிறைய போடனும்..நாமெல்லாம் நிறைய கத்துக்கணும்...

நாமெல்லாம் அறிவு சூனியம்கிறதுக்கு ஒரு உதாரணம்

உங்களை பத்தி திட்டி எழுதியிருக்கிற பதிவுக்கு நீங்களே போய் நல்லா இருக்குன்னு பின்னூட்டம் போடுவீங்க...உங்களை திட்டி எழுதி உள்ளது உங்களுக்கே யாராவது சொன்னால் தான் தெரியும்..அது போலத்தான்....

தாணு said...

//உங்களை பத்தி திட்டி எழுதியிருக்கிற பதிவுக்கு நீங்களே போய் நல்லா இருக்குன்னு பின்னூட்டம் போடுவீங்க...உங்களை திட்டி எழுதி உள்ளது உங்களுக்கே யாராவது சொன்னால் தான் தெரியும்..அது போலத்தான்.... //
மூணாவது அணியிலும் திட்டலணி சேர்ந்தால் என்ன செய்யிறது?

manasu said...

ஆஹா.......ஆரம்பிச்சிட்டாங்கையா..... ஆரம்பிச்சிட்டாங்க!!!!!

இப்பவே கண்ண கட்டுதே........

உக்காந்து யோசிப்பாங்களோ????


///////உள்குத்துன்னா என்னன்னு கேட்கணும்..ஆனா உள்குத்து பதிவுகள் நிறைய போடனும்..நாமெல்லாம் நிறைய கத்துக்கணும்...//////

(மாப்பு....மாப்பு..... வச்சிட்டான்யா ஆப்பு.........)

Vaa.Manikandan said...

என்ன சிபி ஓ.கே வா?

வாங்க குமரன், ரஜினி மாதிரி பேசுறீங்க :)

சுரேஷ் அடிய நீங்க வாங்கிட்டு பினாத்த போறீங்கா...ம்ம்ம்ம் ஜமாய்!

உங்களுக்கு இல்லத பதவியா நந்தன்? இலவசக் கொத்தனாருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி 'பான்ட்' சாரி 'டோன்ட்' :)

பூபதி நான் சேலத்தில் படித்திருக்கிறேன். சேலம் அரட்டை அரங்கத்தில் பேசியிருக்கிறேன். நீங்க?

//நாமெல்லாம் அறிவு சூனியம்கிறதுக்கு ஒரு உதாரணம்// தேங்க்ஸ் முத்து.

// திட்டலணி சேர்ந்தால் என்ன செய்யிறது?// ஊசி போட்டுடலாம் மேடம்.

//உக்காந்து யோசிப்பாங்களோ????// நின்னு, படுத்து எப்படி வேணும்னாலும்!

Unknown said...

//உள்குத்துன்னா என்னன்னு கேட்கணும்..ஆனா உள்குத்து பதிவுகள் நிறைய போடனும்..//

ஹா.. ஹா...!! இன்னொன்னும் இருக்கு., நம்ம உள்குத்தோட பதிவிட்டுவிட்டு., தனி மெயிலில் அவர்கள் தவறு செய்கிறார்கள்., இவர்கள் தவறு செய்கிறார்கள் சோர்ந்து விடாமல் எழுதுங்கள் என வலிய வேண்டும். இது இப்போதைய அரசியலப்பா! :-))).

பின்னூட்டங்களுக்கு உங்கள் பதில்கள் அருமை மணி. என்ன அணி, ஆணியா இருந்தாலும் அரசியல்னாலே கூட்டம்தான் போங்க!.