Feb 5, 2006

ஒரு வருஷம் ஆச்சுங்க.

நான் வலைப்பதிவு தொடங்கி ஒரு வருடம் முடிந்துவிட்டது.2005 பிப்ரவரி 7 ஆம் நாள் 'பேசலாம் வலைப்பதிவு தங்களை இனிதே வரவேற்கிறது' என்று ஆரம்பித்தேன். முதல்பதிவிட்டு பெயரை பார்த்தபோது ஒரு சந்தோஷம் வருமே.கூகிளில் பெயரைத் தேடும் போது பக்கங்கள் குவியுமே.....அதெல்லாம் 'ஆராயக்கூடது...அனுபவிக்கணும்'

எனக்கு வலைப்பதிவு என்று ஒன்று இருப்பது திரு.தேசிகன் அவர்களின் மூலமாகத் தெரிய வந்ததது. கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்கள் திரு.தேசிகனை அறிமுகப்படுத்தும் போது வலைப்பதிவு குறித்து தெரிவித்தார். வலைப்பதிவு எப்படி துவங்குவது என்பது குறித்தெல்லாம் திரு.தேசிகன் அவர்கள் கவிஞரின் இல்லத்தில் எனக்கு தெரியப்படுத்தினார்.

தொடக்கத்தில் மற்ற பதிவுகளைப் படிப்பதோடு நிறுத்திக் கொண்டேன். கூடவே ஓரிரண்டு விமர்சனங்களும். ஒரு வலைப்பதிவர் என்னை தாறுமாறாக திட்டியும் விமர்சனங்களையும் நீக்கிவிட்டார்.என்னை நான் பெரிய விமர்சகன் என்று நினைத்து குப்பையை எல்லாம் கவிதை என்று சொல்லாதீர் என்று சொல்லியிருக்கக் கூடாதுதான். ஏதோ ரோசத்தில் நானும் வலைப் பதிவில் பதிக்க ஆரம்பித்துவிட்டேன்.

முதலில் கவிதைகள்.குறைவான வரவேற்பு தான்.(காலச்சுவடு, உயிர்மை இதழ்களில் வந்த கவிதைகளைப் பதிப்பித்த போதும்).அப்புறம் தோன்றுவது எல்லாம்.நயந்தாரா,குஷ்பூ என. தவிர்த்திருக்கலாம். என்ன செய்வது ஆர்வக் கோளாறு.

நான் எழுதிய பதிவுகளில் 'உடலியல் மீது கட்டமைக்கபடும் கலாச்சாரம்' எனக்குப் பிடித்த படைப்பு. ஒரு பின்னூட்டம் மட்டும் பெற்றேன். சிக்கலான வார்த்தைப் பிரயோகம் அதிலிருந்தது.

அதிகப் பின்னூட்டம் 'அனானிமஸ் தறுதலைகளுக்கு' மொத்தம் 50. (இருக்காதா பின்னே?) ஆனாலும் இதுவரை என்னை யாரும் தாறுமாறாகத் திட்டவில்லை என்பது ஒரு ஆறுதல்.

இதுவரை பேசலாம் பதிவு 11976 முறை பார்க்கப்பட்டுவிட்டது. சராசரியாக ஒரு மாதத்திற்கு 1000. அதுவரை சந்தோஷம்.

இரு ஜாம்பவான்களின் மூலமாக இந்தப் பதிவுலகிற்குள் நுழைந்தாலும் எதுவும் பெரிதாக செய்துவிடவில்லை என்பது வருத்தம்தான். டிடர்மினேஷன் என்பது இல்லை என்பதனை ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டும்.

நிறைய அறிமுகம் எனக்குக் கிடைத்திருக்கிறது. பலரும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். ஐதராபாத் வந்து பேசுவதற்கு கூட யாரையும் தெரியாமல் வலைப்பதிவில் எழுதியபோது, பல வலைப்பதிவாளர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். இது எல்லாம் எதிர்பார்க்க இயலாத விஷயங்கள்.

அதே போல சென்னைக் கடற்கரைக் கூட்டமும். வாழ்வின் முக்கியமான தருணங்களில் ஒன்று. அதுபோல இங்கும் ஒன்று நடக்க வேண்டும் என நினைக்கிறேன். இதுவரை இயலவில்லை.

நிறைய எழுத வேண்டும். அதுவும் நல்லதாக என விருப்பம் உண்டு. அச்சுத் துறை வந்தபோது நிறையப் பேருக்கு படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. புத்தகங்கள் வந்த போது தரமான படைப்பாளிகள் வெளியுலகிற்கு வருவதற்கு வாய்ப்பு இருந்தது. இணையம் வந்த போது யாரும் எழுத வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எனக்கு அவ்வாறுதான்.

இன்னும் என் அணுகுமுறையயும், எழுத்தையும் செதுக்க வேண்டும் எனத் தெரியும். செய்து கொள்ளலாம். இன்னும் காலம் இருக்கிறது. உங்களின் ஆதரவும், விமர்சனங்களும் அதற்கு உதவும் என முழுமையாக நம்புகிறேன்.

நன்றி.

17 எதிர் சப்தங்கள்:

ஏஜண்ட் NJ said...

தமிழ் வலைப்பூவுலகில் முதலாம் ஆண்டு நிறைவுசெய்யும் மதிப்பிற்குறிய பதிவாளர், வா.மணிகண்டன் அவர்களுக்கு பாராட்டு(க்)கள்!

மென்மேலும் பல பதிவுகள் போட வாழ்த்து(க்)கள்!!

Vaa.Manikandan said...

நன்றி ஞான்ஸ்.
மதிப்பு எல்லாம் வேண்டம்.வாழ்த்துக்கள் போதும்.

enRenRum-anbudan.BALA said...

manikanda,
Congrats !!!

My very best wishes for you to continue writing .

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள் மணிகண்டன்.

ilavanji said...

வாழ்த்துக்கள் மணி!

இன்னும் பல ஆண்டுகள் இங்கே பட்டறையை போட்டு பதிவுகளால் சிறக்க வாழ்த்துக்கள்!!! :)

மணியன் said...

வரும் ஆண்டில் உங்கள் ஓராண்டு அனுபவம் துணை நிற்க,புத்துணர்ச்சியுடன் மேலும் பல பதிவுகள்/இடுகைகள் இட வாழ்த்துக்கள்.

இளந்திரையன் said...

«§¾ ¯Ä¸õ, Ò¾¢Â ÁÉ¢¾÷¸û,Ò¾¢Â «ÛÀÅí¸û. ¯í¸¨Ç ¿¡í¸û «È¢Â ¨Åò¾¢Õ츢ýÈРŨÄôâ... ÓÂüº¢¸û ¦¾¡¼Ã Å¡úòÐì¸û Á½¢¸ñ¼ý....

-«ýÒ¼ý þÇ󾢨ÃÂý ¸É¼¡

பாலு மணிமாறன் said...

வாழ்த்துக்கள் மணிகண்டன்...

சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி பிறந்தநாள் சார்ந்த ஒரு விழாவில் 70+ வய்தான வீரமணியைப் பார்த்து 60+ கவிஞர் ஒருவர், " உங்கள் 100வது பிறந்தநாள் விழாவிலும் நான் கவிதை பாட வேண்டு"மென்று சொல்ல, "சரி... நீங்கள் 90 ஆண்டுகள் வாழ ஆசைப்படுகிறீர்கள்" என்று சொல்லி அந்தக்கவிஞரை கலாய்த்தார் வீரமணி...

எனிவே -

உங்கள் பத்தாவது ஆண்டுப் பதிவிலும் வாழ்த்த எனக்கு ஆசை.தொடருங்கள் !

தருமி said...

congrats........

Muthu said...

கோபிகாரரே, வாழ்த்துக்கள்..."அது"

குமரன் (Kumaran) said...

வாழ்த்துக்கள் மணிகண்டன்.

தகடூர் கோபி(Gopi) said...

வாழ்த்துக்கள் மணிகண்டன்.

Unknown said...

வாழ்த்துக்கள்.

Vaa.Manikandan said...

நன்றி வாழ்த்திய அனைவருக்கும். என்னையும் வாழ்த்த இவ்வளவு பேர் இருப்பர் என நினைக்கவில்லை :)நன்றி மீண்டும்

Karthik Jayanth said...

வாழ்த்துக்கள் மணிகண்டன் :-)

தாணு said...

வாழ்த்துக்கள் மணிகண்டன்.
குட்டி பாலிவுட்,கோபியைச் சுற்றியுள்ள இடங்கள் பற்றி சுவையான தோடர் எழுதலாமே.

Vaa.Manikandan said...

வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள். டாக்டரம்மா சொல்லிட்டாங்க. செஞ்சுட்டா போச்சு.