Feb 3, 2006

டப்பா வாலாக்களின் ஸிக்ஸ் ஸிக்மா

டப்பா வாலாக்களைப் பற்றி சொல்வதற்கு முன்பாக ஸிக்ஸ் ஸிக்மா.உற்பத்தி நிறுவனங்களில் பணி புரிபவர்கள் பலருக்கும் இது தெரிந்திருக்கும். ஒரு மில்லியன் பொருட்களில் 3.4 தவறுகள் ஏற்றுக்கொள்ளப்படலாம். இது அகில உலக தரக் கட்டுப்பாடுக் குழுமம் மூலமாக 1986 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது.

Image hosting by Photobucket
டப்பா வாலாக்கள். இந்தப் பெயர் ஸிக்ஸ் ஸிக்மா உலகில் மிகப் பிரபலம். காந்தி தொப்பியும், டோத்தியும் அணிந்து சோற்று டப்பாக்களை மும்பை நகரத்துக்குள் மதிய நேரத்தில் விநியோகிப்பவரகளின் பெயர் இது.இவர்களது பணியில் ஸிக்ஸ் ஸிக்மா பின்பற்றப்படுகிறது. இதில் படித்தவர்கள் யாரும் இல்லை.ஈ.ஆர்.பி சாஃட்வேர் கிடையாது. இருப்பினும் அவர்களால் இயல்கிறது.

இவர்களின் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் அலுவலகங்களுக்குப் போகிறவர்கள்.உணவுப் பாத்திரங்கள்(டப்பா) சரியாக 12.30 மணிக்கு வாடிக்கையாளர்களை அடைந்துவிடும். அதேபோல் எங்கு இருந்து கிளம்பியதோ- அது இல்லம், உணவு விடுதி எதுவெனினும் சரியாக மாலை 5.00 மணிக்குத் திரும்பிவிடும்.

இவர்களில் 5000 பேர் பணிபுரிகிறார்கள்.இவர்களின் பயணம் மிதிவண்டி,மின்சார ரயில் அல்லது நடந்து என மும்பையின் மூலை முடுக்குகளிலெல்லாம் இவர்களின் பயணம் தொடர்கிறது.சுமாராக நாளைக்கு 2,00,000 டப்பாக்கள் விநியோகிக்கப்படுகிறது. சராசரியாக ஒரு டப்பா நான்கு,ஐந்து கைகள் மாறும்.60இலிருந்து 70 கி.மீ பயணம் மேற்கொள்ளும்.தவறின்றி.அதுதான் முக்கியம்.ஒவ்வொரு டப்பாவிலும் அடையாளமிடப்படுகிறது. இந்த அடையாளம் துவங்கும் இடத்தையும் சேரவேண்டிய இடத்தையும் குறிப்பிடுவதற்காக.

மைக்கேல் போர்ட்டரின் தொழில் குறித்தான ஐந்து விசைக் கோட்பாடு ஒன்று உள்ளது. இந்தக் கோட்பாடு மேலாண்மைத் தத்துவங்களை தெளிவாக விளக்குவதுடன் ஒரு துறையில் நிறுவனம் ஒன்று தலைமை இடத்துக்கு வரவேண்டுமாயின் பின்பற்ற வேண்டிய விதிகளைத் தெளிவுபடுத்துகிறது. தெரிந்தோ தெரியாமலோ- தெரியாமல்தான், டப்பா வாலாக்கள் பின்பற்றுகிறார்கள்.

1.புதிய போட்டியாளர்கள் உள் நுழைவதற்கான சாத்தியமும் பயமும்:
இது எந்த நிறுவந்திற்கும் அபாயமாந்து என போர்ட்டர் குறிப்பிடுகிறார். 1880 இல் தொடங்கிய டப்பா வாலாக்களின் 125 வருட அனுபவம் புதிய போட்டியாளர்கள் உள்ளே வருவதற்க்கு மிகப் பெரிய தடை. மும்பையின் ஜன நெருக்கடி மிகுந்த நேரத்தில் மீண்டும் இப்படியொரு வலையமைவை புதிதாக உருவாக்குவது குறித்து யோசித்துப் பாருங்கள்.

2.தற்ப்போதைய போட்டி:
துரித உணவுக்குடங்களும், அலுவலக உணவு விடுதிகளும் போட்டிதான். ஆனால் இல்ல உணவு மாதிரி வரும?

3.வாடிக்கையாளர்களின் பேரம் பேசும் திறன்:
மாதம் ரூ.300 க்கு டப்பாக்களை கொண்டு வந்து தருகிறார்கள். இதனை விட நீங்கள் எப்படி குறைவாக கேட்க முடியும். வின் - வின் தத்துவம்.

4.விற்பனையாளர்களின் பேரம் பேசும் திறன்:
டப்பாவாலாக்கள் பயன்படுத்தும் உள்கட்டமைப்பு மிகக் குறைவு. தொழில்நுட்பம் எதுவும் இல்லை. எனவே எந்த விற்பனையாளரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் சுத்தமாகக் கிடையாது.மனித வளம்தான் ஒரே சொத்து.

5.புதிய பதில் பொருள் அல்லது சேவை வருவதற்கான சாத்தியம்:
முன் சொன்னது போலவேதான். இந்திய மனநிலையில் வீட்டு உணவுக்கு மாற்றாக வேறு எதுவும் வர முடியாது.

எனவே இப்போதைக்கு டப்பாவாலாக்களை வீழ்த்துவதற்கான வாய்ப்பு எதுவும் இல்லை.

டப்பாவாலாக்களின் நுட்பம் தெரியுமா?
தவறு ஏற்றுக்கொள்ளபட முடியாதது: 300 டப்பாவாலாக்கள் பணிபுரியும் ஒரு பகுதியில் 5 டப்பா வாலாக்கள் 'பேக் அப்' ஆக இருப்பார்கள். ஏதேனும் விபத்து போன்ற சூழலில் அவர்கள் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒழுக்கம்: மது அருந்திப் பணிபுரிந்தால் ரூ.1000 வரை அபராதம் உண்டு.
நெரிசலில் காந்தி தொப்பி அடையாளத்திற்கு பயன்படுகிறது.அணியாதவர்களுக்கு ரூ.25 அபராதம்.

வாரந்தோறும் ஞாயிறு விடுமுறை.

பணிபுரிய வயது, பாலினம், மதம் எல்லாம் தடை இல்லை. உடலில் பலம் இருக்கும் வரை பணிபுரியலாம்.முதல் ஆறு மாதம் தற்காலிகப் பணியில் நன்கு தரமிடப்படும். பின்னர் மாத ஊதிய ரூ.5000 வழங்கப் படுகிறது.

இவர்களுக்கென 'நூதன் மும்பை டிபன் பாக்ஸ் சப்ளையர்ஸ் சாரிட்டி டிரஸ்ட்' உள்ளது.

இவர்களிடமிருந்து நிறையக் கற்றுக்கொள்ளாம்.தொழிநுட்பங்கள்.

அதைவிட மேலனது வாடிக்கையாளர் சேவை. 2003இல் இளவரசர் சார்லஸ் டப்பாவாலாக்களை சந்திக்க விரும்பிய போது இவர்கள் முன் வைத்த கோரிக்கை."மதிய பணியை பாத்திக்காதது போல் சந்திப்பு நேரத்தை ஒதுக்குங்கள்".

(Harsha venkatesh என்பவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரையை தழுவி எழுதப்பட்டது.)

8 எதிர் சப்தங்கள்:

PKS said...

I remember reading an essay about them in an American Magazine too sometime back. Time? I am not sure. Baba, any ideas?

Thanks and regards, PK Sivakumar

Santhosh said...

கூர்ந்து கவனித்தீர்கள் ஆனால் நம் நாட்டின் பல பழமையான தொழில்களில் six sigma போன்ற பல விஷயங்கள் ஏற்கனவே நடைமுறை படுத்தப்பட்டு இருக்கும். என்ன நாம் அது பெயர் சூட்டி இருக்க மாட்டோம் அவ்வளவு தான்.

குமரன் (Kumaran) said...

மிக நல்ல கட்டுரை மணிகண்டன். மொழிபெயர்த்தமைக்கு மிக்க நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

கலக்கல் பதிவு...
ரெம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

Vaa.Manikandan said...

பி.கே.எஸ் நான் அமெரிக்கப் பத்திரிக்கை ஒன்றில் வந்திருப்பதாக கேள்விப் பட்டதுண்டு. ஆனால் அமெரிக்கப் பத்திரிக்கை படிக்கிற அளவுக்கு வசதி வாய்ப்பு இல்லீங்க :) .இது நம்ம லோக்கல் மேட்டரு.

சந்தோஷ்,குமரன்,சிறில் அலெக்ஸ் க்கு நன்றிகள். தொடர்ந்து ஆதரவு நல்குங்கள். எலெக்ஷென்ல நிக்கலாம்னு இருக்கேன். :)

ENNAR said...

நன்றகா உள்ளது மணிகண்டன்

Anonymous said...

mani katturai arumaiaga ullathu.
Ethu mathiri nalla article -i eluthavum.

யாத்ரீகன் said...

இவர்களின் செய்ல்பாட்டைப்பற்றி ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் மேலாண்மையில் உயர்கல்விக்குழுவினர் வந்து ஓர் ஆராய்ச்சி நடத்திச்சென்றனரே..