May 27, 2005

சுந்தர ராமசாமி சாதி வெறியரா?

சுந்தர ராமசாமி யின் "பிள்ளை கெடுத்தாள் விளை" சிறு கதையினை மிக சமீபத்தில் படித்தேன்.காலச்சுவட்டில்(பிப்ரவரி௨005)இல் வந்த போதிலும்,இன்று அதற்கான எதிர் வினைகளே படிக்கத்தூண்டின.

அதற்க்குமுன்,கதையின் சுருக்கம்.மிகவும் பின் தங்கிய கிராமத்தில் வசிக்கும் ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை அங்குள்ள பாதிரியார் ஒருவர் படிக்க வைக்கிறார்.பின்னர் அந்த ஊரில் துவக்கப்பட்ட பள்ளிக்குதலைமை ஆசிரியராக நியமிக்க படுகிறாள்.அங்கு நிகழும் சம்பவத்தினை பார்த்து(அல்லது அவனுக்கு நிகழும் பாலியல் கொடுமை) யின் காரணமாக,மணிகண்டன் என்னும் மாணவன்(சத்தியமாக நானில்லை)ஊருக்குள் சொல்கிறான்.ஊரில் உள்ள மற்றவர்கள் எல்லோரும் அவளை அடித்து துரத்துகின்றனர்.வாழ்வின் இறுதி காலத்தில் அந்த ஊரில் மரணம் அடைகிறாள்.(http://tamil.sify.com/kalachuvadu/feb05/fullstory.php?id=13661961)

இதில் காட்டப்படும் பெண் தாழ்த்தபட்டவளாக வருவதே,பிரச்சினையின் மூல காரணம்.தாழ்த்த பட்டவர்களை எல்லாம் உயரத்திற்க்கு கொண்டுவரும் போது,அவர்கள் இப்படியான இழி குணங்களை காட்டி விடுவார்கள் என சு.ரா சித்தரிக்கிறார் என்பது இவர்களின் வாதம்.

இங்கு கதாபாத்திரத்தின் சாதியினைக்காட்டிலும்,எழுத்தாளரின் சாதி பார்க்கப்படுகிறது.இதனை வேறு ஒரு எழுத்தாளர் எழுதி இருப்பின் இத்தணை விவாதòதினை கிளப்பியிருக்குமா என்பது விவாதிக்க வேண்டியது.

அல்லது தாழ்த்தப்பட்ட ஒரு பெண் இவ்வாறான தவறுகளில் ஈடுபடவே மாட்டாளா?தலித் பற்றிய கதைகள்(நல்லது/கெட்டது) அது குறித்து தலித் எழுத்தாளன் மட்டுமே எழுதவேண்டும் என்பதும்,தலித்துக்களின் பெருமை குறித்து வேண்டுமானால்,எழுதலாம் என்பதும் நல்ல படைப்புகள் கிடைக்க இயலாமல் செய்து விடும்.

இந்தக்கதையில் வரும் பெண்ணை தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக ஏன் பார்க்க வேண்டும்?எல்லா சமூகத்திலும் இத்தகைய கதபாத்திரங்கள் இருக்கின்றன.இந்த தாயம்மாவை பிரதிநிதியாக்கி அரசியல் பண்ணுவதை நிறுத்தலாம்.

இழிவான அரசியலுக்காக,நல்ல படைப்புகளை தாக்கி,நல்ல படைப்பாளிகளை புண்படுத்துவதை நிறுத்தலாம் என்ப்து என் தனிப்பட்ட,தாழ்மையான கருத்து.

10 எதிர் சப்தங்கள்:

Ganesh Gopalasubramanian said...

மணிகண்டன்.. நீங்கள் சொல்வது சரிதான்.... எழுத்தாளன் சாதியைப் பார்க்காவிட்டாலும் எழுத்தாளனின் சாதி பார்க்கத்தான் படுகிறது. இந்நிலை மாற வேண்டும். அதே சமயம் எழுத்தாளனும் தங்கள் பாத்திரத்தை கொஞ்சம் கவனமாக கையாளலாம்.

சில நாட்கள் முன் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் கட்டுரை ஒன்றை படித்தேன். அதில் அவர் பின்வருமாறு கூறியிருந்தார் "வாழ்க்கையில் தவறான பாதைக்கு செல்பவர்களின் அவலங்களைச் சொல்வதற்க்காக நான் எடுத்த படம் தான் பூட்டாத பூட்டுக்கள், அது பெரும் தோல்வியடைந்தது. அதில் எனக்கு ஒரு பாடமும் இருந்தது. படைப்பாளி ஒவ்வொருவருக்கும் சமுதாயக் கண்ணோட்டம் இருக்க வேண்டும். அவன் வாழ்வின் அசிங்கங்களை யோசிக்கக்கூட கூடாது. படைப்பாளி என்பவன் அழகை ரசிக்க வேண்டுமே அன்றி அவலங்களை அலங்கரிக்கக்கூடாது"

சுந்தர ராமசாமியும் ஒரு நல்ல படைப்பாளி அவரும் இந்த கோட்பாட்டை கடைபிடித்திருப்பாரேயானால் இப்பிரச்சனையைத் தவிர்த்திருக்கலாம்.

SHIVAS said...

//படைப்பாளி என்பவன் அழகை ரசிக்க வேண்டுமே அன்றி அவலங்களை அலங்கரிக்கக்கூடாது//

இந்த கோட்பாட்டிற்கு "சலாம் பாப்பே" விதிவிலக்கு.

முகமூடி said...

மகேந்திரனின் வாதம் தவறு. படைப்பாளியை இப்படி எல்லாம் கட்டுப்படுத்துவதன் மூலம் சமூகத்தின் ஒரு முகத்தை மறைக்கிறோம் என்பதனை உண்ர்கிறார்களா? 'இன்று' என்பது வரலாறாகும் பொழுது பலதரப்பட்ட படைப்பாளிகளின் பதிவுகளின் மூலம்தான் 'இன்றைய' சமூகத்தை அடையாளம் காண முடியும். எப்பொழுது கருத்துக்களை விடுத்து கருத்தாள்பவனின் சாதியை பார்க்க ஆரம்பித்து விட்டதோ அப்போதே சமூகத்துக்கு நோய் பீடித்துவிட்டது என்று பொருள்.

Vaa.Manikandan said...

//சுந்தர ராமசாமியும் ஒரு நல்ல படைப்பாளி அவரும் இந்த கோட்பாட்டை கடைபிடித்திருப்பாரேயானால் இப்பிரச்சனையைத் தவிர்த்திருக்கலாம்//

கணேஷ் சு.ரா கோட்பாட்டை மீறியதாக நான் உணரவில்லை.

//எப்பொழுது கருத்துக்களை விடுத்து கருத்தாள்பவனின் சாதியை பார்க்க ஆரம்பித்து விட்டதோ அப்போதே சமூகத்துக்கு நோய் பீடித்துவிட்டது என்று பொருள்.//

முழு சம்மதம்.

Anonymous said...

சாருநிவேதிதா என்ன சொல்கிறார் என்று பாருங்கள் மணிகன்டன்.
http://kanchifilms.blogspot.com/2005/05/blog-post_111744215571559779.html

தகடூர் கோபி(Gopi) said...

மணிகண்டன்,

உங்களின் இந்தப் பதிவு மட்டும் நெருப்புநரியில் (அதாங்க ஃபயர்பாக்ஸ்) சரியாத் தெரியலை. என்னன்னு கொஞ்சம் கவனிங்க.. (எங்கையாவது align=justifyன்னு இருக்கும்)

Vaa.Manikandan said...

கோபி இப்பொழுது தெரிகிறதா?

Anonymous said...

பார்ப்பனர்களின் கருத்தையும் படியுங்களேன்.

http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/11170

இவர்களுக்கெல்லாம் திரும்பவும் சாரு வந்துதான் பதில் சொல்ல வேண்டும்!

குழலி / Kuzhali said...

தாங்கள் அந்த கதையை படித்தீர்களா இல்லைய?, அந்த கதையிலே வரும் மற்ற பாத்திரங்களின் சாதி...

மன்னிக்கவும் இனி இதைப்பற்றி பேசி புண்ணியமில்லை... விடுங்க நீங்க எதையாவது பேசிக்கிட்டு நினைத்துக்கொண்டு போங்க...

ஜீவ கரிகாலன் said...

இரண்டாயிரத்து ஐந்தில் சு.ராவுக்கு வந்த நிலை சில வாரங்களுக்கு உங்களுக்கும் வந்தது தானே?? இதை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்