Jun 13, 2022

நிசப்தம் உதவி

நிசப்தம் அறக்கட்டளையில் ரூ. 59,74,191 இருக்கிறது.  இதில் 34 லட்சத்து 67 ஆயிரத்து 226 ரூபாய் நிரந்தர வைப்பு நிதியாக இருக்கிறது. 


இன்னமும் ப்ளஸ் டூ முடிவுகள் வரவில்லை. முடிவுகள் வந்தவுடன் கல்லூரிகளில் சேர விரும்பும் - கல்வித்தொகை பெற விரும்பும் மாணவ மாணவிகள் தொடர்பு கொண்டால் பரிசீலித்து தேவையான கல்வி உதவித் தொகையைச் செய்துவிடலாம். 

எனவே, இப்பதிவைக் காணும் நண்பர்கள் தங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் கல்வி உதவி பெற விரும்பினால் தொடர்பு கொள்ளச் சொல்லவும்.

வழக்கமாக தனியார் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உதவுவதில்லை. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு நிச்சயம் உதவுகிறோம். அதேவேளையில் ஊரகப்பகுதிகளில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள்- தனியார் கல்லூரியாக இருப்பினும் ஒரு பகுதித் தொகையை வழங்கி உதவி செய்கிறோம்.

பெற்றோரை இழந்த மாணவ மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதுதான் நோக்கம். கோவிட் காரணமாக ஆதரவை இழந்து நிற்கும் மாணவ மாணவிகளை தயக்கமில்லாமல் தொடர்பு கொள்ளச் சொல்லவும். அவர்களுக்கு கட்டாயம் உதவலாம்.

கோவிட் தொற்றால் பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்கள் சிலருக்கு விடுதியுடன் கூடிய பள்ளிகளில் சேர்க்கை குறித்துக் கேட்டிருந்தார்கள். அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்த்து, விடுதிக் கட்டணத்தை நிசப்தம் வழியாக ஏற்றுக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறேன். அத்தகைய உதவிகள் ஏதேனும் தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளவும்.

நன்றி.

vaamanikandan@gmail.com

7 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

தொடர் சேவைக்கு வாழ்த்துகள்

Sudeshi said...

மிக்க மகிழ்ச்சி, உங்கள் பணி தொடரட்டம்

Paramasivam said...

சீரிய செயல். வாழ்த்துக்கள்.
ந.பரமசிவம்/பங்களூர்

Kalyankumar said...

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02onMU21MwAnVUfHS1SVvp4WqoTXBhTRkr94LBryBjX9kqKTAymmWDTZWJNBbMEpmkl&id=1195733480

Kalyankumar said...

மாதம் 6,000 மட்டுமே வருமானம் கொண்ட தந்தை இல்லாத 4 பேர் உள்ள குடும்பத்தில் ஒருவனான நன்கு படிக்கும் வறுமை நிலையில் உள்ள ஒரு மாணவனுக்கு மெஸ் பீஸ் மட்டும் கட்ட 50,000 ரூபாய் தேவைப்படுகிறது. அவர்களின் வறுமை நிலையை கண்டு அந்த கல்லூரி நிர்வாகம் 60,000 ரூபாய் மெஸ் பீஸை குறைத்து 50,000 - ஆக குறைத்து உள்ளனர். ஆனால் தவணை முறையில் செலுத்த அனுமதி மறுத்துள்ளனர்.

நன்கு படிக்கும் மாணவனாக இருந்ததால் அவனது +1,+2 படிப்பை அவன் படித்த பள்ளியில் இலவசமாக கொடுத்து விட்டனர்.

கல்லூரி படிப்பு மற்றும் தாங்கும் விடுதி செலவை ஒரு நல்ல உள்ளம் கொண்ட அறக்கட்டளை ஏற்றுக்கொண்டு அவர்கள் அந்த தொகையை செலுத்தியும் விட்டனர்.

நல்ல உடையோ, bag-o ஏதும் இல்லாத நிலையில் நான் என்னால் முடிந்த அளவில் 3 சட்டை, 3 டீ-சர்ட், 2 ஜீன்ஸ் மற்றும் கல்லூரி கொண்டு செல்ல 3 bags வாங்கி கொடுத்துள்ளேன்.

நல்ல மனம் கொண்ட நண்பர்கள் உதவ முன்வந்தால் அந்த மாணவனின் தகவல் தெரிவிக்கிறேன். நன்றி.

Kalyankumar said...

வந்தாச்சு!

Nanjil Siva said...

தங்களுடைய அறக்கட்டளைக்கும்... தன்னிகரில்லாத சேவைகளுக்கும் வாழ்த்துக்கள். சுயமாக ஆராய்ச்சிகளில் ஈடுபடும் மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் தேவையான உதவிகளை செய்துவந்தால் பல இளம் ஆராய்ச்சியாளர்களை உருவாக்கும் பலனை பெறலாம்.
https://www.scientificjudgment.com/