நேற்று ஒரு ஐடி நிறுவனத்தில்- வாகன உற்பத்தியாளர்களுக்கான மென்பொருள் தயாரிக்கும் ஐடி நிறுவனம் அது- மேலாளர்களை அழைத்து ‘பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்; எங்கெல்லாம் செலவினங்களைக் குறைக்க முடியுமோ அங்கெல்லாம் குறையுங்கள்’ என்று அறிவுறுத்தினார்களாம். பத்தாண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் வீடுகளின் மதிப்பு குறைந்து, பொருளாதாரம் சரிவை நோக்கிச் சென்ற போது அப்பொழுது நான் பணியாற்றிய அமெரிக்க நிறுவனத்தில் இத்தகைய முன்னெடுப்புகளை மேற்கொண்டார்கள். புதிதாக யாரையும் வேலைக்கு எடுக்கவில்லை. பயணங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. கேண்டீனில் டிஷ்யூ தாள்கள் வைப்பதைக் கூட குறைத்தார்கள். அடுத்த பதினைந்து நாட்களில் சில ஆட்களை வீட்டுக்கு அனுப்பத் தொடங்கினார்கள். தலைக்கு மேல் கத்தி தொங்குவது போலவே இருக்கும். ‘எப்பொழுது வேண்டுமானாலும் ஹெச்.ஆர் அழைக்கக் கூடும்’ என்று பயந்து கொண்டிருப்போம். காலை பதினோரு மணிக்கு யாரையாவது அனுப்பிவிட்டதாகக் கேள்விப்பட்டால் மதியம் பசியே இருக்காது. வெறுமனே எதையாவது நான்கு வாய் போட்டுவிட்டு வந்து மாலை வரை காத்திருந்தால் ‘இன்னைக்கு இல்ல..நாளைக்கு ஏதாச்சும் பிரச்சினை ஆகுமோ?’ என்று பதற்றமாகவே இருக்கும்.
இவ்வளவு பயந்ததற்கு தனிப்பட்ட முறையிலும் நிறையக் காரணங்கள் இருந்தன. அப்பொழுதுதான் திருமணம் ஆகியிருந்தது. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சம்பளம் தவிர வேறு வருமானத்துக்கு வழிவகை இல்லை. ‘வெளியே அனுப்பிட்டாங்கன்னா எப்படி பிழைப்பது?’ என்ற பயம்தான்.
சமீபமாக, ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பு வரையிலும் கூட பொருளாதார மந்தநிலை குறித்தான செய்திகள் வந்த போது பெரிதாகக் குழப்பமில்லை. 2008-09 ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா அந்தச் சரிவை மிகச் சாதுரியமாகக் கையாண்டது. இந்தியாவிலும் கூட ‘அமெரிக்காதான் வீழ்கிறது; ஐரோப்பா, ஜப்பான் மாதிரியான நாடுகளிலிருந்து ப்ராஜக்ட்களை பிடித்துவிடலாம்’ என்று பேசினார்கள். இந்திய அரசாங்கமும் அதற்கான உதவிகளைச் செய்து கொண்டிருப்பதாக விவாதங்கள் நடைபெறும்.
சமீபமாக, ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பு வரையிலும் கூட பொருளாதார மந்தநிலை குறித்தான செய்திகள் வந்த போது பெரிதாகக் குழப்பமில்லை. 2008-09 ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா அந்தச் சரிவை மிகச் சாதுரியமாகக் கையாண்டது. இந்தியாவிலும் கூட ‘அமெரிக்காதான் வீழ்கிறது; ஐரோப்பா, ஜப்பான் மாதிரியான நாடுகளிலிருந்து ப்ராஜக்ட்களை பிடித்துவிடலாம்’ என்று பேசினார்கள். இந்திய அரசாங்கமும் அதற்கான உதவிகளைச் செய்து கொண்டிருப்பதாக விவாதங்கள் நடைபெறும்.
அமெரிக்கா, தமது பொருளாதாரத்தை ஊக்குவிக்கப்பதற்கென பல நூறு பில்லியன் டாலர்களை எடுத்துக் கொட்டியது. பணத்தை எடுத்துக் கொட்டினால் எப்படி சரியும் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிக்க முடியும் என்ற கேள்வி இருந்து கொண்டிருந்தது. அரசாங்கம் கொட்டிக் கொடுக்கும் பணமானது நாட்டின் உட்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, வரி விலக்குகள் என்றெல்லாம் பல்வேறு திட்டங்களில் பயன்படுத்திக் கொள்ளப்படும். உதாரணமாக உட்கட்டமைப்புக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரிய திட்டங்களுக்காக பெருமளவில் கட்டுமானப் பொருட்களை வாங்குவார்கள். தேவைகள் அதிகரிக்கும். நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரிக்கத் தொடங்கும். அந்நிறுவனங்கள் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுப்பார்கள். உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு சேர்க்க பெருமளவில் வாகனங்கள் தேவைப்படும். வாகன உற்பத்தி பெருகும். இப்படி சங்கிலித் தொடராக, பல்லாயிரக்கணக்கான சிறு குறு தொழில்கள் எழுச்சியுறும். சிக்கலான ஆனால் மேம்போக்கில் புரிந்து கொள்ள எளிமையானதுதான்.
இப்படித்தான் பொருளாதாரம் என்னும் பெரும் சக்கரம் சுழலத் தொடங்கியது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது மாதிரி தப்பித்துவிட்டோம். பொருளாதாரம் என்பதே சுழற்சிதான் என்பார்கள். ஒரு பிரபலமான உதாரணம் உண்டு- ஒருவனுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. அதை எடுத்துக் கொண்டு போய் உணவகத்தில் ஆயிரம் ரூபாய்க்கு உண்கிறான். உணவகத்தின் உரிமையாளர் அந்த ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு போய் தனது மகனுக்கு ஒரு ஆடை வாங்குகிறார். துணிக்கடைக்காரர் அதே ஆயிரம் ரூபாயை எடுத்துச் சென்று தியேட்டரில் செலவு செய்கிறார் என்றால் நாட்டின் GDPயில் 1000+1000+1000- என மூன்றாயிரம் ரூபாய் பங்களிக்கிறோம். உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) என்பது அந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அல்லது சேவைகளின் மொத்த மதிப்பு.
இப்படித்தான் பொருளாதாரம் என்னும் பெரும் சக்கரம் சுழலத் தொடங்கியது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது மாதிரி தப்பித்துவிட்டோம். பொருளாதாரம் என்பதே சுழற்சிதான் என்பார்கள். ஒரு பிரபலமான உதாரணம் உண்டு- ஒருவனுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. அதை எடுத்துக் கொண்டு போய் உணவகத்தில் ஆயிரம் ரூபாய்க்கு உண்கிறான். உணவகத்தின் உரிமையாளர் அந்த ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொண்டு போய் தனது மகனுக்கு ஒரு ஆடை வாங்குகிறார். துணிக்கடைக்காரர் அதே ஆயிரம் ரூபாயை எடுத்துச் சென்று தியேட்டரில் செலவு செய்கிறார் என்றால் நாட்டின் GDPயில் 1000+1000+1000- என மூன்றாயிரம் ரூபாய் பங்களிக்கிறோம். உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) என்பது அந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அல்லது சேவைகளின் மொத்த மதிப்பு.
பொதுவாக பொருளாதார மந்தநிலை வரும் போது மக்களின் செலவு செய்யும் மனநிலை மாறிவிடும். சேகரிப்பு முக்கியம் என்று பயந்து செலவு செய்யத் தயங்குவார்கள். வீடு கட்டுவது, கார் வாங்குவது போன்ற செலவுகளைத் தவிர்ப்பார்கள். இது மென்மேலும் பொருளாதாரச் சுழற்சியை மந்தப்படுத்தும். இத்தகைய சூழலில் அரசாங்கத்தின் செயல்பாடு மிக முக்கியம். ‘நாங்க இருக்கிறோம்’ என்ற மனநிலையை உருவாக்க வேண்டும். நேற்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ‘பொருளாதாரம் சரியில்லைதான்; ஆனால் நல்லாயிரும்ன்னு நினைங்க, நல்லாயிரும்’ என்று சொன்னது கூட இந்த அர்த்தத்தில்தான் எனப் புரிந்து கொள்ளலாம். பயப்படாமல் செலவு செய்யுங்கள் என சொல்ல வருகிறார். ஆனால் இப்படியெல்லாம் சொன்னால் மக்கள் செலவு செய்துவிடுவார்களா? அரசாங்கம் தம்முடைய தரப்பில் என்னவிதமான செயல்களைச் செய்கிறது என்று பார்ப்பார்கள் அல்லவா?
2008-09 ஆம் ஆண்டில் உருவான பொருளாதார மந்த நிலைக்கும் இன்றைய பொருளாதார மந்த நிலைக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை உணர முடிகிறது. அப்பொழுது அமெரிக்காவில் ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சிக்காலம் கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் தருணம். அவரது தலைமையிலான அரசுக்கு உலக அளவிலும், குறிப்பாக அமெரிக்காவிலும் பொருளாதார மந்த நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வதில் எந்தப் பெரிய தயக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை. மந்த நிலையைத் தடுப்பதற்காக Economic Stimulus Act of 2008 கொண்டு வரப்பட்டது. பல பில்லியன் டாலர்கள் ஒதுக்கப்பட்டன. அதன் பிறகு அங்கு ஆட்சிக்கு வந்த ஒபாமா கிட்டத்தட்ட எந்நூறு பில்லியன் டாலர்களை மந்தநிலையைத் தடுப்பதற்காக எடுத்துக் கொட்டினார். அரசும்-தனியாரும் இணைந்து முதலீடுகளைச் செய்வதற்கான செயல்களை மேற்கொண்டது அமெரிக்க அரசாங்கம். அப்பொழுதும் வாகனத்துறைதான் படுக்கத் தொடங்கியது. ஜென்ரல் மோட்டார்ஸ், கிறிஸ்லர் போன்ற பெரு நிறுவனங்களுக்கு கடன்கள் புதுப்பிக்கப்பட்டன. இப்படியான தொடர்ச்சியான செயல்பாடுகளின் காரணமாக பொருளாதாரம் தடுமாற்றத்திலிருந்து சற்று மூச்சு விடத் தொடங்கியது.
2008-09 காலகட்டத்தில் இந்தியா மற்றும் சீனாவின் பொருளாதாரங்கள் வலுவாக இருந்தன. இந்தியாவில் நேரடியான பாதிப்புகள் தெரியவில்லை. இப்பொழுது போல வாகன உற்பத்தி பாதிக்கப்படவில்லை. இந்தியத் தொழிற்துறைக்கான அமெரிக்க சந்தை மட்டும் மந்தமாகியது என்றாலும் இந்தியாவின் உள்நாட்டுச் சந்தையையும், மேலே குறிப்பிட்டபடி பிற நாடுகளின் சந்தைகளை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பாகவும் அந்தப் பொருளாதார மந்த நிலை உதவியது. இந்திய அரசாங்கம் பிற நாட்டு சந்தைகளை இந்திய நிறுவனங்கள் அடைவதற்கான உதவிகளை மேற்கொண்டன. ஆக, இந்தியாவிலும் சரி, அமெரிக்காவிலும் சரி- சரிவைச் சந்திக்கிறோம்; ஆனால் மீண்டு எழுந்துவிடுவோம் என்கிற நம்பிக்கையிருக்கிறது, எழுந்துவிடலாம் என்று சொல்லிவிட்டு அதற்கான வேலைகளைச் செய்தார்கள். அப்படிச் செய்யும் போது ‘அரசாங்கம் எதையாவது செய்து நம்மைக் காப்பாற்றிவிடும்’ என்கிற நம்பிக்கை மக்களுக்கு வரும்.
ஆனால் இன்றைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘இதெல்லாம் யாரோ செய்யும் சதி’ என்கிறார். இந்திய அரசாங்கத்தின் தூண்கள் பொருளாதாரம் பற்றியெல்லாம் கண்டு கொள்வதாகவே தெரியவில்லை. பூனை கண்களை மூடிக் கொண்டு உலகம் இருண்டுவிட்டது எனச் சொல்வது போல, ‘எல்லாம் சரியாக இருக்கிறது’ என நாங்கள் நம்புகிறோம், நீங்களும் நம்புங்கள் என்று திரும்பத் திரும்ப உச்சரிப்பதுதான் பயமாக இருக்கிறது. அமெரிக்காவும் அப்படி, இந்தியாவும் இப்படி என்றால் பயப்படாமல் என்ன செய்வது?
பொருளாதாரச் சரிவு என்பது பல காரணங்களினால் ஏற்படக் கூடும். அரசாங்கம் அதை உணர்ந்து, சரிவைத் தடுத்து நிறுத்தும் முயற்சிகளை முன்னெடுத்தால் சாமானியன் இயல்பாக இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் செய்வதாக எந்த நடவடிக்கையும் கண்ணில்படவில்லை என்பதுதான் பயத்திற்கான அடிநாதமாக இருக்கிறது. இந்தியாவில் வாகன உற்பத்தி கடும் சரிவைச் சந்திக்கிறது. அதனைச் சார்ந்திருக்கும் சிறு குறு தொழில்கள் மூடப்படுகின்றன. வாகன உற்பத்தித் துறையை நம்பியிருக்கும் மென்பொருள் நிறுவனங்களும் சூட்டை உணரத் தொடங்கிவிட்டன. ‘பல நாடுகள் டீசல் வாகன உற்பத்தியை தடை செய்திருக்கின்றன. நிறுவனங்கள் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்ய வேண்டும். இந்த மாற்றத்திற்காக உண்டாகியிருக்கும் சிறு கால இடைவெளிதான் இந்த வாகனத்துறை மந்தம்’ என்று சிலர் சொன்னதை நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து அந்நிய முதலீட்டார்கள் பணத்தை திரும்ப எடுக்கிறார்கள், ரூபாய் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைகிறது, உள்நாட்டு மொத்த உற்பத்தி வீழ்ச்சி போன்ற பல எதிர்மறைச் செய்திகள் வரிசையாக வரத் தொடங்கியிருக்கின்றன.
2008-09 ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் அதைச் சார்ந்த உலகப் பொருளாதாரம் சரிந்த போதும் இந்தியா மற்றும் சீனாவின் பொருளாதாரம் சற்று ஸ்திரமாக இருந்தது. பெரிய பாதிப்புகளை நாம் சந்திக்கவில்லை. ஆனால் இன்றைக்கு அமெரிக்காவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைவிடவும் இந்தியப் பொருளாதாரம் வேகமாக சரிவதாகச் சொல்கிறார்கள். அதுதான் நடுங்கச் செய்கிறது. சிறு குறு தொழில்களைச் செய்யும் உறவினர்கள், நண்பர்கள் யாரிடமாவது விசாரியுங்கள். தொழில் சிறப்பாக இருப்பதாக ஓரிருவர் சொன்னாலும் கூட ஆறுதல்பட்டுக் கொள்ளலாம்.
எங்கேயோ பெரிய சிக்கல் விழுந்திருக்கிறது என்று மட்டும் தெரிகிறது. ஒரு பெரிய சுனாமிக்குத் தயாராகிக் கொள்ள வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.
vaamanikandan@gmail.com
எங்கேயோ பெரிய சிக்கல் விழுந்திருக்கிறது என்று மட்டும் தெரிகிறது. ஒரு பெரிய சுனாமிக்குத் தயாராகிக் கொள்ள வேண்டும் என்றுதான் தோன்றுகிறது.
vaamanikandan@gmail.com
(மாற்றுக் கருத்து இருப்பின் தெரியப்படுத்தவும்)
7 எதிர் சப்தங்கள்:
வாகன உற்பத்தி சுணக்கத்தை அரசாங்கம் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது என்பதே யதார்த்த நிலை. அடிக்கடி வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்கும் மேற்கத்திய கலாச்சாரம் இன்னும் இங்கு வரவில்லை. பெரும்பாலானவர்கள் இங்கே வீட்டுக்கு ஒரு கார் என்னும் நிலையில் தான் இருக்கிறார்கள். குறைந்தது 5-8 ஆண்டுகளுக்கு குறையாமல் பயன்படுத்தும் வகையில் தான் அதிகம் mileage கொடுக்கும் கார்களை மட்டுமே குறி வைத்து வாங்கி தள்ளினார்கள். இன்று அத்தகைய பட்ஜெட் கார்களை யாரெல்லாம் விரும்பினார்களோ அவர்களெல்லாம் பெரும்பாலும் ஏற்கனவே வாங்கி விட்டார்கள். இனி பட்ஜெட்-கார் மார்க்கெட் மேலே செல்ல வேண்டுமென்றால் அது அடுத்த பொருளாத சுழற்சியில் மட்டுமே சாத்தியப்படும் - அது ஒரு வீட்டினர் ஒன்றிற்கும் மேற்பட்ட கார்கள் வாங்கும் காலகட்டத்தில் தான் நடக்கும். மற்றபடி இப்போதும் பணம் படித்தவர்கள் வாங்கும் Luxury/SUV ரக கார்களின் விற்பனை நன்றாகவே உள்ளது.
கார் மட்டுமல்ல டூ-வீலெர்க்கும் இது பொருந்தும். அரசாங்கம் மற்ற உற்பத்தி துறைகளின் மீது கவனம் செலுத்தவேண்டும். உள்நாட்டு பொருளாதாரத்தை மீறி ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்தால் மட்டுமே வேகமான வளர்ச்சி சாத்தியப்படும். இங்கே உற்பத்தி செய்யும் பொருளை இங்கே மட்டுமே விற்றால் அது வெறும் லோக்கல் பண சுழற்சியாகவே இருக்கும், வளர்ச்சியல்ல.
50% மேலான மக்கள் சார்ந்திருக்கும் விவசாயத்தை காப்பாற்றினால் சரிவோ மந்தமோ பெருமளவில் பாதிக்காது.
ஆனால் விவசாயிகளிடம் கமிசன் பெற முடியாதே?
ஆனால் BSNL ன் டவர்களை ஜியோ விற்கு கொடுக்கும் போது அம்பானியிடம் நேரடியாக இத்தனை கோடிகள் வேண்டும் என்று பேசி வாங்க முடியும்.
ஜெய் ஸ்ரீராம்.
பக்தாளின் பரவச ஆர்கச மனநிலை புரியாமல்....அட நீங்க வேற சார்
வாகன உற்பத்தி, விற்பனை சரிவு - ஏனெனில் இனிமேல் அரேபிய பெட்ரோல் டீசல் வாகனங்களுக்குப் பதிலாக அமெரிக்க மின்சார அல்லது பேட்டரி வாகனங்கள் வரப் போகின்றன. அதற்காகத் தான் நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்.
பொருளாதாரம் சரிவு - ஏனெனில் நீங்கள் தலைகீழாக நின்று கொண்டு பார்க்கிறீர்கள் அதனால் தான் சரிவாகத் தெரிகிறது.
வேலை வாய்ப்பு குறைவு, ஆட்குறைப்பு - வேலை இழப்பு: ஏனெனில் அனேகர் தொழில் முனைவோராக மாறிக் கொண்டு வருகின்றனர். நாம் தற்சார்பு பொருளாதாரம் நோக்கிச் செல்வதைக் கண்டு பயந்து பலரும் உளருகின்றனர்.
நாடு முழுவதும் பல பகுதிகளில் வெள்ளம் - ஏனெனில் வருண பகவான் எங்கள் பிரார்த்தனையைக் கேட்டு மழையைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். இதை இந்து விரோதிகள் ஊதிப் பெருதாக்குகிறார்கள்.
இப்படி எல்லாமே விசம் விசம் என விசத்தை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு அவர்கள் திரிகிறார்கள்.
தேசபக்தர்கள் ஆப்பிள் தோட்டம் வாங்கும் கனவிலிருந்து வெளி வரும்போது தெரியும் ஆப்பிள் வாங்க கூட காசில்லையென்று .
Now, we depend on world economy (Globalization), we have to face these consequences. But we dont want to see the negative side. Now we know the problem. So we cannot say that I know only Computer programming or IT knowledge, we have to learn or work in other areas ( like plumbing, electrician, photography, modelling, gym trainer, agriculture etc) in the weekends or evenings. If we lose the job, we can work in other areas, make money and run our basic life until the economy will come up. If all industry is going down, we cannot survive in India - thats the impression I am getting from your article. We can survive and happy when we run our life with the basic necessities. We have to cut the extra spending, sophisticated life. Anyway, we are going to lose all sophisticated life soon because of global warming, time to teach our children to handle those situations.
இப்போ தெளிவா தெரிஞ்சிருச்சு. பொருளாதார சரிவை மூடி மறைக்க, முன்னாய் அமைச்சர் ஒருவரை விரட்டி, விரட்டி கைது செய்கிறார்கள். எனக்கு ஒன்று புரியவில்லை; இன்னும் எத்தனை நாள் இப்படி மூடி மறைத்து மழுப்பிக் கொண்டிடிருக்க முடியும்ம.
பில் கிளிண்டன் காலத்தில் கூட dot com bubble என்ற பிரச்சினை வந்தது. ஆனால் ஒரு வருடத்தில் சீரடைத்துவிட்டது. அரசியல் தலைவர்களை மட்டும் குறை சொல்லி ஒன்றும் இல்லை, எல்லம் நன்றாகத்தான் இருக்கின்றது என்று அடித்துச் சொல்வார்கள்.ஜார்ஜ் புஸ், ஒபாமா, டிரம்ப் யாருமே கடன்வாங்கி வட்டி கட்டுங்கள் என்று சொல்லவில்லை. நீங்கள் சொல்லுவது macroeconomics, நாடுகள் தழுவிய பொருளாதார கொள்கை. தனிநபர் சார்ந்த personal finance பற்றியதை நாமே சுய பரிசோதனை செய்துகொள்வது அவசியம். இன்றைய இந்திய நிலையை யோசித்துப்பாருங்கள். சேமிப்பு, எளிமை என்று குறைவாக செலவு செய்தால் "கிராமத்தான்". கடனிலா அனைத்து செலவும் செய்வது? கிரடிட் கார்ட் இல்லை என்றால் மனிதனாகவே மதிப்பது இல்லை.அவசரம்-மருத்துவ காரணங்களுக்காக கடன் வாங்குவது சரிதான்.ஆனால் நாம் மால்- லக்சுரி பொருட்களில் கிரடிட் கார்ட் கடன் மூலம் செலவு செய்கின்றோம். பெரிய முதலீட்டாளர் வாரன் பஃப்ட் "எல்லாரும் 12-18 மாதங்கள் வருமாணத்தை சேமிப்பாக வைத்திருக்க வேண்டும்" என்று சொன்னார். ஏன்? பொருளாதார மந்தநிலை- தேக்கநிலை (stagnation-recession) வந்தால் மீண்டும் சரியாக 6-18 மாதங்கள் வரை ஆகலாம். சேமிப்பு தங்கம்- நகைகளில் இருந்தால், அதை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச்செல்லலாம் (நிலத்தை எடுத்து செல்ல முடியாது, வங்கி லாக்கரில் பாதுகாக்க முடியாது).
இதில் இந்தியாவையும் அமெரிக்க (ஐரோப்பா, அஸ்திரேலிய) மாதிரி western நாடுகளையும் ஒப்பிடக்கூடாது.dollar என்பது hard currency. இந்திய ரூபாயின் மதிப்பு என்றுமே குறைந்து கொண்டு போகும்.நாம்தான் சுதாரிப்பாக இருக்க வேண்டும்.
Post a Comment