Apr 27, 2019

தடங்கள்

நேற்று ஒரு வீடியோ கண்ணில்பட்டது. அவசர ஊர்திக்காக மதுரையில் கள்ளழகர் ஊர்வலத்தில் இடம் ஒதுக்கித் தருகிறார்கள். ஊரே நகர்ந்து வழிவிடும் அந்த சலனப்படத்தின் கீழாக ‘ஆஹா..இதுதான் இந்து மதம் கற்பித்தது’ என்று எழுதுகிறார்கள். அற்பத்தனமாக எல்லாவற்றிலும் மதத்தைத் திணிக்கும் மனநிலை எப்பொழுதிருந்து உருவாகியிருக்கிறது என்று புரிந்து கொள்ள முடியவில்லை. கோத்ரா சம்பவத்தை நிகழ்த்தியது, பாபர் மசூதி பிரச்சினை - அஹிம்சையை மட்டுமே போதிக்கிற மதம் அல்லவா இது? 

இந்து மதத்தின் மீது எனக்கு வன்மம் எதுவுமில்லை. ஆனால் வரலாற்றில் எந்தப் பெரு மதமும் யோக்கியமில்லை. இந்து, கிறித்துவம், இசுலாமியம் என ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவர்களும் மதத்தின் பெயராலும், கடவுளின் பாதையிலும் வரலாறு முழுக்கவும் வன்முறைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். சிலுவைப்போர் தொடங்கி கழுவிலேற்றுதல் வரை எல்லா மதங்களும் வெறி கொண்டவைதான். அதிகாரத்தின் மீதும், நிலத்தின் மீதும், மக்களின் மீதும் தீராத பசி கொண்டவை அவை. ‘என் மதம்தான் அமைதியின் மதம்’ என்று யாரும் சிலிர்க்க வேண்டியதில்லை.சிலிர்த்துக் கொள்ளவும் முடியாது. மதம் தமது தளத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் அது ஏற்கனவே வலுவாக இருக்கும் மதத்தை விரட்டியடிக்க வேண்டும். அப்படித்தான் காலந்தோறும் விரட்டியடித்திருக்கின்றன. அதற்கு அந்தந்த நிலப்பரப்பை ஆளுகிறவர்களின் உதவி வேண்டும். இப்படித்தான் வல்லவர்கள் வலு குறைந்தவனை காலி செய்திருக்கிறார்கள்.

இன்றைக்கு நாம் சார்ந்திருக்கும் மதம் நமது முன்னோர்களை ஏதோவொரு வகையில் மத மாற்றம் செய்திருக்கின்றன. எந்த மதமாக இருப்பினும் இதுதான் நிதர்சனம். மதம் சார்ந்த அமைப்புகள் வெறியேற்றுவது போல ஆதியிலிருந்தே இந்துவுமில்லை; இசுலாமியனுமில்லை. கால ஓட்டத்தில் மாறியவர்கள்தான் நாம் எல்லோருமே.

மதத்தின் அரசியல் குறித்து எழுதுவதைவிடவும் மதுரை சமணப் பண்பாட்டு மன்றத்தைப் பற்றி எழுத வேண்டும் என்பதுதான் நோக்கம். சில மாதங்களுக்கு முன்பாக ஸ்ரீவைகுண்டம் வழியாகத் திருநெல்வேலி சென்று கொண்டிருந்தேன். சுமார் நூறு ஏக்கர் பரப்பில் விரிந்து கிடக்கும் ஆதிச்சநல்லூரைப் பார்ப்பதுதான் அந்தப் பயணத்தின் நோக்கமாக இருந்தது. ஆதிச்சநல்லூர் என்ற பெயரை பெரும்பாலானவர்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும். அங்கே கிடைத்த தொல்லியல் எச்சங்கள் சுமார் மூன்றாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முற்பட்டவை. மதுரைக்கு முன்பாக சங்ககாலப் பாண்டியர்களின் தலைநகராக இருந்த ஊரும் இதுதான் என்கிறார்கள். அந்த ஊரில் நூற்றைம்பது வருடங்களுக்கு முன்பாகவே ஜெர்மானியர் ஆராய்ச்சியைத் தொடங்கி வைத்திருக்கிறார். ஆனால் இன்னமும் அங்கு முழு வீச்சில் பெரிய ஆராய்ச்சிகள் எதுவும் நடக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பாகக் கூட உயர்நீதிமன்றம் பெரிய கொட்டு ஒன்றை வைத்திருக்கிறது. ஆனால் செய்யமாட்டார்கள். கீழடியில், ஆதிச்சநல்லூரில் எல்லாம் ஏன் எந்தச் சோதனைகளும் நடப்பதில்லை என்பதெல்லாம் மிகப்பெரிய கேள்விகள். அரசியல், இருட்டடிப்பு என எவ்வளவோ உள்ளுக்குள் இருக்கின்றன.

ஆதிச்சநல்லூருக்குச் சென்று கொண்டிருந்த போது ஸ்ரீவைகுண்டத்துக்கு முன்பாக முடிவைத்தானேந்தல் என்ற ஊரைத் தாண்ட வேண்டியிருந்தது. அந்த ஊரை நெருங்க நெருங்க பல இடங்களில் ‘சமணச் சின்னம்’ என்று மஞ்சள் பலகை வைத்திருக்கிறார்கள். தமிழகத்தின் பல இடங்களிலும் இப்படியான பலகைகள் தென்படுகின்றன. மேட்டூரிலிருந்து மேச்சேரி செல்லும் வழியில் பார்த்திருக்கிறேன். இப்படி இன்னமும் சில இடங்களில் தென்பட்ட இந்த மஞ்சள் நிற அடையாளக் கற்களை நட்டு வைத்திருப்பவர்கள் மதுரை சமணப் பண்பாட்டு மன்றத்தினர். ஏதோவொரு கிராமத்துக்குள் புதைந்து கிடக்கும் இவற்றையெல்லாம் எப்படிக் கண்டறிந்தார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. மேச்சேரியிலும் ஒரு வனாந்திர காட்டுக்குள்தான் ஒரு சிலை இருக்கிறது.




முடிவைத்தானேந்தலில் பிரதான சாலையில் இறங்கி ஒரு இட்டேரிக்குள் நடக்க வேண்டும். இந்த ஊருக்கு ஒரு சிறப்பு உண்டு. ஊரில் உள்ள பெரும்பாலான வீடுகளில் ஒருவரேனும் இராணுவத்திலோ காவல்துறையிலோ இருப்பார்களாம். அந்த இட்டேரியில் இருந்த பெரும்பாலான வீடுகளிலும் கேப்டன், மேஜர் என்றெல்லாம் எழுதியிருந்தது. சமணச் சின்னம் இருந்த இடம் தெரியாமல் நெடுநெடுவென்று நுழைந்து ஒரு வீட்டில் தடுப்பு வைத்துக் குளித்துக் கொண்டிருந்த ஒரு ஆளிடம்- நிஜமாகவே ஆண்தான் ‘ஏங்கண்ணா இங்க சாமி சிலை எங்க இருக்கு?’ என்று கேட்க அந்த ஆள் ஏதோ கற்பைச் சூறையாட வந்தவனை முறைப்பது போல துண்டை எடுத்துக் கட்டிக் கொண்டு ‘அந்தப் பக்கம் பாரு’ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்.


ஆளரவம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்து வெளியில் வந்த ஒரு பெண்மணிதான் அழைத்துச் சென்றார். வேலிக்காத்தான் முட்களுக்குள் இரண்டு கற்சிலைகள். அவ்வளவுதான். இதைத்தான் தேடிக் கண்டறிந்து வழி நெடுகவும் அடையாளக்குறியிட்டு வைத்திருக்கிறார்கள். இப்படியான அமைப்புகளின் உழைப்பு அபரிமிதமானது. வரலாற்றுப் பெருவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுவிட்ட இவற்றையெல்லாம் தேடியெடுக்காவிட்டால் ‘ஐந்தாயிரம் ஆண்டுகளாக நாங்கள்தான் இருக்கிறோம்’ ஒரு சாரார் சொல்வதை அடுத்தடுத்த தலைமுறைகள் அப்படியே நம்பிவிடக் கூடும். 

சில நாட்களுக்கு முன்பாக யாரோ தேடி வந்து பாட்டில் நீரை சிலைகளுக்கு ஊற்றி தீபம் ஏற்றி வைத்ததாக அந்தப் பெண்மணி சொன்னார். சமணர்கள் போரில் ஈடுப்பட்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை. வாய்ப்புமில்லை என்றுதான் நினைக்கிறேன். அப்படி அவர்கள் போர்முறையைத் தேர்ந்தெடுத்திருந்தால் தமிழகத்திலிருந்து முழுமையாக துடைத்தெறியப்பட்டிருக்க வாய்ப்பில்லை. திருஞானசம்பந்தர் தன்னிடம் வாதத்தில் தோற்றுப் போன எட்டாயிரம் சமணர்களைக் கழுவினேற்றினார் என்கிற கதையுண்டு அல்லவா? ஒரு பெரிய கூரான குச்சி இருக்கும். அதன் மீது எண்ணெயைத் தடவி, கழுவிலேற்றப்படுகிறவனின் கை கால்களைக் கட்டி அந்தக் குச்சியின் மீது குத்திவிடுவார்கள். அவன் உடல் எடைக்கு ஏற்ப மெல்லமாகவோ வேகமாகவோ உடல் கீழே இறங்கும் போது கூரான குச்சி உள்ளே ஏறும். அதிர்ஷ்டசாலியாக இருந்தால் விரைவில் இறந்துவிடுவான். இல்லையென்றால் விடிய விடிவ ஓலமிட்டுக் கொண்டிருக்க வேண்டும். பிறகு அந்த உடலை அப்படியே விட்டுவிடுவார்கள். பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் இரையாக வேண்டியதுதான்.


தமிழகம் முழுக்கவுமே ஒரு காலத்தில் பரவியிருந்த மதம் சமணம். அதற்கான உறுதியான அடையாளங்கள் எச்சங்களாக மிஞ்சியிருக்கின்றன. அதை மதுரை சமணப் பண்பாட்டு மன்றம் கண்டறிந்து அடையாளப்படுத்தி வருகிறது. ‘என் மதம்தான் உசத்தி’ என்கிற முரட்டுவாதமில்லாமல் சமணம் பற்றியும் தேடிப் பார்க்கலாம். அந்த மதத்தின் மீது நம்மையுமறியாமல் ஒரு கவனம் உண்டாகும். 

மதுரை சமணப்பண்பாட்டு மன்றத்தினருக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.

10 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

பாதுகாப்பே இல்லாத அந்த சிலையை அப்படியே இன்னும் வைத்திருக்கிறவர்களுக்கு பாராட்டுக்கள்.

Anonymous said...

https://tamilnadu-favtourism.blogspot.com/2017/02/tirumalai-jain-complex-arani.html?m=1

Venthan said...

//இப்படி இன்னமும் சில இடங்களில் தென்பட்ட இந்த மஞ்சள் நிற அடையாளக் கற்களை நட்டு வைத்திருப்பவர்கள் மதுரை சமணப் பண்பாட்டு மன்றத்தினர்.//
அந்த அடையாள பலகைகளை வைத்தது அரசு என இவ்வளவு நாள் பெருமிதமாக நினைத்திருந்தேன்.

Anonymous said...



மற்றுமொரு சமண சான்று : மறுகால்தலை கிராமம். திருநெல்வேலி.

https://youtu.be/-gSioyRr-gA

Jaypon , Canada said...

People who want to immigrate to Canada can use the service. https://www.facebook.com/SAI-Immigration-Consultancy-Services-348178802487864/
Some people who read the site had a long time back asked me.

thiru said...

ஊர் பேர் தெரியாத நெடுஞ்சாலைப் பயணங்களில் எத்தனையோ முறை இந்த சமண மஞ்சல் பலகைகளைக் கண்டு வியந்திருக்கிறேன். பொதுவாக ஜெயின் சமூகத்தினர் தங்கள் வரலாற்றின் மீது மிகுந்த ஆர்வமும் பற்றும் வைத்திருப்பதைக் கண்டிருக்கிறேன்.

senthilkumar said...

தமிழில் இயற்றப்பட்ட பெரியபுராணத்தின் படி நின்றசீர்நெடுமாறன் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்யும் பொழுது சமண மதத்தினை ஆதரித்தார். அதனால் மக்களும், அரசவை அறிஞர்களும் சமண மதத்திற்கு மாறினார்கள். அப்பொழுது, பாண்டிய மகாராணியான மங்கையற்கரசியாரும், பாண்டிய மந்திரி குலச்சிறையாரும் மட்டுமே சைவ சமயத்தினை கடைபிடித்தார்கள்.

மங்கையற்கரசியாரின் அழைப்பினை ஏற்று திருஞான சம்பந்தர் பாண்டிய நாட்டிற்கு வருகை தந்தார். அவர் தங்கியிருந்த மடத்திற்கு சமணர்கள் மந்திரத்தினால் நெருப்பு வைத்தார்கள். அதிலிருந்து தப்பித்த திருஞான சம்மந்தர், இந்த கொடுஞ்செயலுக்கு துணைநின்றமைக்காக பாண்டியன் மீது கோபமுற்றார். அக்கோபம் வெப்பு நோயாக பாண்டியன் மன்னனைத் தாக்கியது. மருத்துவர்களும், சமணர்களும் முயன்றும் வெப்பு நோய் தீரவில்லை.

பாண்டிய மகாராணி மங்கையற்கரசியார் திருஞான சம்மந்தரிடம் மன்னனின் வெப்புநோய் தீர்க்க வேண்டினார். அதனையடுத்து திருஞான சம்மந்தர் திருநீற்றை தந்து மன்னனின் நோயை குணமாக்கியதால் மன்னன் சைவமதத்தை தழுவினான். இதனால் கோபம் கொண்ட சமணர்கள், திருஞான சம்மந்தரை வாதத்திற்கு அழைத்தனர்.
அனல் வாதம் எனப்படும் நெருப்பில் ஏடுகளை இடுதலில் சமணர்களின் ஏடுகள் எரிந்துபோயின. திருஞான சம்பந்தரின் ஏடு எரியாமல் இருந்தது
புனல் வாதம் எனப்படும் ஓடும் நதியில் ஏடுகளை இடும் போட்டிக்கு சமணர்கள் அழைத்தார்கள். இந்த வாதத்திலும் தோற்றால் தங்களை பாண்டிய மன்னன் கழுவேற்றலாம் என்றார்கள்.* அ[30/04 23:39] Yuva Senthil: தமிழில் இயற்றப்பட்ட பெரியபுராணத்தின் படி நின்றசீர்நெடுமாறன் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்யும் பொழுது சமண மதத்தினை ஆதரித்தார். அதனால் மக்களும், அரசவை அறிஞர்களும் சமண மதத்திற்கு மாறினார்கள். அப்பொழுது, பாண்டிய மகாராணியான மங்கையற்கரசியாரும், பாண்டிய மந்திரி குலச்சிறையாரும் மட்டுமே சைவ சமயத்தினை கடைபிடித்தார்கள்.

மங்கையற்கரசியாரின் அழைப்பினை ஏற்று திருஞான சம்பந்தர் பாண்டிய நாட்டிற்கு வருகை தந்தார். அவர் தங்கியிருந்த மடத்திற்கு சமணர்கள் மந்திரத்தினால் நெருப்பு வைத்தார்கள். அதிலிருந்து தப்பித்த திருஞான சம்மந்தர், இந்த கொடுஞ்செயலுக்கு துணைநின்றமைக்காக பாண்டியன் மீது கோபமுற்றார். அக்கோபம் வெப்பு நோயாக பாண்டியன் மன்னனைத் தாக்கியது. மருத்துவர்களும், சமணர்களும் முயன்றும் வெப்பு நோய் தீரவில்லை.

பாண்டிய மகாராணி மங்கையற்கரசியார் திருஞான சம்மந்தரிடம் மன்னனின் வெப்புநோய் தீர்க்க வேண்டினார். அதனையடுத்து திருஞான சம்மந்தர் திருநீற்றை தந்து மன்னனின் நோயை குணமாக்கியதால் மன்னன் சைவமதத்தை தழுவினான். இதனால் கோபம் கொண்ட சமணர்கள், திருஞான சம்மந்தரை வாதத்திற்கு அழைத்தனர்.
[30/04 23:39] Yuva Senthil: *அனல் வாதம்* எனப்படும் நெருப்பில் ஏடுகளை இடுதலில் சமணர்களின் ஏடுகள் எரிந்துபோயின. திருஞான சம்பந்தரின் ஏடு எரியாமல் இருந்தது
[30/04 23:41] Yuva Senthil: *புனல் வாதம்* எனப்படும் ஓடும் நதியில் ஏடுகளை இடும் போட்டிக்கு சமணர்கள் அழைத்தார்கள். *இந்த வாதத்திலும் தோற்றால் தங்களை பாண்டிய மன்னன் கழுவேற்றலாம் என்றார்கள்.* அதனையடுத்து நிகழ்ந்த புனல் வாதத்தில் சமணர்களின் ஏடுகள் நீரில் அடித்து செல்லப்பட்டன. திருஞான சம்மந்தரின் ஏடு நீரின் எதிர்திசையில் மிதந்தது வந்தது. *திருஞான சம்மந்தர் வென்றார்.*
[30/04 23:43] Yuva Senthil: *புனல் வாதம்*த்தில் தோற்றால் *இந்த வாதத்திலும் தோற்றால் தங்களை பாண்டிய மன்னன் கழுவேற்றலாம் என்றார்கள்.அதனையடுத்து நிகழ்ந்த புனல் வாதத்தில் சமணர்களின் ஏடுகள் நீரில் அடித்து செல்லப்பட்டன. திருஞான சம்மந்தரின் ஏடு நீரின் எதிர்திசையில் மிதந்தது வந்தது.திருஞான சம்மந்தர் வென்றார்.

சமணர்கள் சூது செய்து வாதம் செய்தனர். அனல் வாதம் புனல் வாதம் செய்து தோற்ற சமணர்கள் தங்கள் வாதத்திற்கு வாக்குறைத்ததற்கு ஏற்ப கழுவேறினர்.
திருஞானசம்பந்தர் தோற்றிருந்தால் அவரும் கழுவேறிஇருப்பார்.
அஹிம்சையா? - கொலையிற் கொடியாரை வேந்தன் தண்டிப்பது களை எடுப்பதற்கு சமம்ன்னு வள்ளுவர் கூறி இருக்கார்.

காக்கை கூட மறைவில் புணரும்... மனிதன் பகலில் புணர்வதை காட்டுவது இந்த சமணம் மற்றும் modern காமசூத்ர நூல்கள்... அயோக்கியப்பயல்கள்... லோபத்தை அஹிம்சை என்பதன் மறைவில் விதைத்தவர்கள் ஜீனர் எனும் அருகர் எனும் சமணர் எனும் சக்கியர்கள்...

senthilkumar said...

லோபம் என்பது சுயஇச்சையுடன் அகிம்சையை போதித்தவர்கள். தன்னலமில்லா அஹிம்சை மட்டுமே
போற்றுவதற்கு உரியது.

Karthik R said...

Had a chance to listen Anirudh Kanisetti's "Echoes of India" https://www.anirudhkanisetti.com).

Religion and politics are intervened since eternity.

Ravi said...

அனைத்து சமணர்கள் சார்பாக நன்றிகள் அயிரம்