இன்றையை தொழில்நுட்பத்துறையில் டேட்டா அனலிடிக்ஸ், டேட்டா சயின்ஸ் மாதிரியான பிரிவுகளில் நல்ல வேலை வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன. கல்வித்துறையில் இத்தகைய புதிய துறைகளுக்கு ஏற்ப படிப்புகளை உருவாக்கிக் கொள்ள பல்கலைக்கழகங்களுக்கும், தன்னாட்சி பெற்ற கல்லூரிகளுக்கும் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். உதாரணமாக எம்.எஸ்.சி (டேட்டா அனலிட்டிக்ஸ்) - புள்ளியியல், கணிதவியல், கணினி ஆகிய துறைகளைக் கலந்து கட்டி ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கி மாணவர்களைத் தேற்றி அனுப்பினால் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள். கல்வி நிறுவனங்களில் இத்தகைய புதிய துறைகள் தொடங்குவதை ஓரளவுக்குக் கண்காணித்தால் போதுமானது. காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப கல்வி நிறுவனங்களே வடிவமைத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு ஆலோசனை வழங்க நிறைய நிபுணர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் நம்முடைய உயர்கல்வித்துறை எதிர்திசையில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் உயர்கல்வித்துறையில் வெளியான ஒரு முக்கியமான அரசாணை பற்றி எந்தவிதமான விவாதமும் நடந்ததாகத் தெரியவில்லை. 33 முதுநிலை பாடத்திட்டங்களை பாரம்பரியமான பாடத்திட்டங்களுக்கு சமமானவை இல்லை என்று அறிவித்துவிட்டார்கள். உதாரணமாக எம்.காம் (கம்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்) பட்டமானது எம்.காம் பட்டத்துக்கு இணையானது இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள். எம்.காம் படித்தவர்கள் தேவை என்று வெளியாகும் அரசு விளம்பரங்களில் எம்.காம் (கம்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்) படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. எவ்வளவு பெரிய அநியாயம் இது? ஏன் இது பற்றி எந்தச் சலனமுமில்லை என்று புரியவில்லை. வெறுமனே கணக்கியல் மட்டும் படிக்காமல் இன்றைய சூழலுக்கு ஏற்ப கணினி அறிவையும் ஊட்டுகிற வகையில் ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதை மாணவர்களும் படிக்கிறார்கள். ஒரு குழு திடீரென ‘இதெல்லாம் செல்லாது’ என்று அறிவித்து தலையில் துண்டைப் போட்டு சோலியை முடித்துவிடுகிறது.
ஆனால் நம்முடைய உயர்கல்வித்துறை எதிர்திசையில் சென்று கொண்டிருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் உயர்கல்வித்துறையில் வெளியான ஒரு முக்கியமான அரசாணை பற்றி எந்தவிதமான விவாதமும் நடந்ததாகத் தெரியவில்லை. 33 முதுநிலை பாடத்திட்டங்களை பாரம்பரியமான பாடத்திட்டங்களுக்கு சமமானவை இல்லை என்று அறிவித்துவிட்டார்கள். உதாரணமாக எம்.காம் (கம்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்) பட்டமானது எம்.காம் பட்டத்துக்கு இணையானது இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள். எம்.காம் படித்தவர்கள் தேவை என்று வெளியாகும் அரசு விளம்பரங்களில் எம்.காம் (கம்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்) படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. எவ்வளவு பெரிய அநியாயம் இது? ஏன் இது பற்றி எந்தச் சலனமுமில்லை என்று புரியவில்லை. வெறுமனே கணக்கியல் மட்டும் படிக்காமல் இன்றைய சூழலுக்கு ஏற்ப கணினி அறிவையும் ஊட்டுகிற வகையில் ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதை மாணவர்களும் படிக்கிறார்கள். ஒரு குழு திடீரென ‘இதெல்லாம் செல்லாது’ என்று அறிவித்து தலையில் துண்டைப் போட்டு சோலியை முடித்துவிடுகிறது.
இதே போல பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ படித்தால் அது எம்.எஸ்.சி (கணினி அறிவியல்) பட்டத்துக்கு இணை இல்லையாம். எம்.எஸ்.சி கம்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கான வேலைகளுக்கு இவர்கள் விண்ணப்பிக்க முடியாது. அரசுப்பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணிகளுக்கு எம்.எஸ்.சி கம்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்றாகிவிடும்.
பாரதிதாசன் பல்கலைக்கழகமும் பெரியார் பல்கலைக்கழகமும் அரசாங்கம் நடத்தக் கூடிய பல்கலைக்கழகங்கள்தானே? யு.ஜி.சியின் அனுமதியோடுதானே இயங்குகிறது? திடீரென ஒரு குழு வந்து இவை தகுதியில்லாத படிப்புகள் என்று அறிவிக்கும் அளவுக்கு முட்டாள்தனமாகவா பாடத்திட்டங்களை வடிவமைத்து வைத்திருக்கும்? ஒருவேளை இந்த அரசாங்கம் அப்படி நம்புமானால் அத்தகையை பேராசிரியர்களுக்கும், பாடத்திட்ட வடிவமைக்கும் குழுவுக்கும் எதற்காக சம்பளம் கொடுக்க வேண்டும்? வீட்டுக்கு அனுப்பி வைத்துவிடலாமே!
ஏன் இவ்வளவு குழப்பங்களைச் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. முப்பத்து மூன்று பட்டங்களில் இதுவரையிலும் இருபத்தைந்தாயிரத்திலிருந்து முப்பதாயிரம் பேர் வரைக்கும் படித்திருப்பார்கள் அல்லது படித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் தலையில் மண்ணை வாரிக் கொட்டியிருக்கிறார்கள். இனிமேல் யாராவது நீதிமன்றத்தை நாடி வழக்கை நடத்தக் கூடும். அது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்படியொரு குழப்பத்தை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன?
நண்பரொருவர் இந்த இணைப்பை அனுப்பியிருந்தார். அதிர்ச்சியாக இருந்தது. யாருமே இது குறித்துப் பேசியதாகத் தெரியவில்லை. அரசாணையின் பிரதியைத் தேடிக் கொண்டிருக்கிறேன். யாருக்கேனும் முழு விவரம் தெரிந்தால் தெரியப்படுத்துங்கள்.
திடீரென்று பல மாணவர்கள் ‘எங்க படிப்புக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுத தகுதியில்லையா?’ என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இளங்கலை படிக்கும் மாணவர்கள் ‘எவையெல்லாம் தகுதியற்ற படிப்புகள்’ என்று விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். யாரிடமும் தெளிவான பதில் இல்லை. தமிழகத்தின் கல்விச்சூழலில் அபத்தமான முடிவுகளை யாரெல்லாமோ எடுத்துக் கொண்டிருக்கிறார்களோ என்று குழப்பமாக இருக்கிறது. சர்வசாதாரணமாக பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையிலும் கனவிலும் கபடி விளையாடி விடுகிறார்கள்.
முன்பே குறிப்பிட்டது போல உயர்கல்வித்துறை முன்னோக்கி நகர வேண்டும். புதிய பாடத்திட்டங்கள், புதிய பட்டங்கள் என்று அதன் சிறகுகள் விரிய வேண்டும். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் காலத்தின் தேவைக்கு ஏற்ப பாடத்திட்டங்களை வடிவமைக்கின்றன. இங்கே நிலைமை தலைகீழாக இருக்கிறது. ஒன்றிரண்டு பல்கலைக்கழகங்கள் சற்றே நகர்ந்தாலும் கூட கத்தரித்து அமர வைத்துவிடுகிறார்கள். தொண்ணூறுகளில் வடிவமைக்கப்பட்ட எம்.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸூம், எழுபதுகளில் வடிவமைக்கப்பட்ட எம்.காம்மும் போதும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். சி++, ஜாவா தாண்டி வெளியில் வரவே வேண்டியதில்லை என்று நம்புகிறார்கள் போலிருக்கிறது.
பிறகு எப்படி அத்தனை பேருக்கும் வேலை கிடைக்கும்?
நிறுவனங்களிடம் பேசினால் ‘தமிழகப் பாடத்திட்டம் அப்டேட் ஆகவேயில்லை’ என்று புலம்புகிறார்கள். அரசாங்கமோ இப்படியெல்லாம் சொதப்பிக் கொண்டிருக்கிறது.
5 எதிர் சப்தங்கள்:
http://www.tnpsc.gov.in/eq_gos/GOMS_195_14082018.pdf
Here is the list of all GOs related: http://www.tnpsc.gov.in/list-of-equivalence_2011-2019.html
கம்பராமாயணம் எழுதினவரு சேக்கிழார்னு சொல்லுற காலத்துல இருக்கோம் மணி. இவிய்ங்க நீங்க சொல்றதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டாய்ங்க.
How these degrees with fancy names are introduced and by whom? Do the teaching staff have any background on these subjects?
In most of the private colleges the M.E student passed out a few months back is appointed as Associate /Assistant Professor at a salary of Rs 15,000/- My niece had completed M.E (Computer Engineering) from a college in Coimbatore and she was appointed as Asst. Professor at Rs 15,000/- salary.
How can M.Com (Computer Applications) be considered equivalent to M.Com? So this student can apply for a Computer job as well as normal M.Com job whereas M.Com graduate can not apply for a Computer job? How is this justified?
I think until these students come out and protest the Government will continue to do such stupidity. But opening new and upto date courses are only Government can initiate. God save this country!
For your information,Chennai Mathematical Institute is offering M.Sc in Data Science.
Post a Comment