வீட்டில் இருந்து வேலை செய்கிறேன் என்று சொன்னால் வர வர மரியாதையே இல்லை. பண்ணையத்து ஆளுக்குக் கூட கொஞ்சம் மரியாதை இருக்கும். ‘சாமிக்கு சாத்துற பட்டுத்துணி வாங்கிட்டு வா’, ‘பையனுக்கு தேன் வாழை வாங்கிட்டு வா’, ‘பேங்க்ல பணம் போட்டுட்டு வந்துடு’ என்று ஆளாளுக்கு ஒரு வேலை வைக்கிறார்கள். எல்லா வேலையும் ஒரே நாளில் முடிக்க வேண்டும். மூன்றாவது வேலை தம்பி சொன்னது. ‘உன்ர ஆபிஸூக்குப் பக்கத்துலதானே பேங்க் இருக்கு?’ என்று கேட்டால் ‘எனக்கு ஃபோன் பேசக் கூட நேரமில்லை’ என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டான். இதையெல்லாம் அம்மாவிடம் சொல்ல முடியாது. ‘ஊட்டுக்கு ஏதாச்சும் ஒத்தாசையா இருடா’ என்பார். பற்களைக் கடித்துக் கொண்டு இருந்துவிட வேண்டியதுதான்.
எந்த வங்கிக்கு வேண்டுமானாலும் சென்றுவிடலாம். ஸ்டேட் பேங்க் இருக்கிறது பாருங்கள். வெட்டக் கொண்டு போவது போலவே இருக்கும். ஆயிரத்தெட்டு விதிமுறைகள். எல்லாவற்றுக்கும் காசு. அம்மாவின் ஓய்வூதியக் கணக்கு அந்த வங்கியில்தான் இருக்கிறது. அதில் ஒரு நாற்பத்தைந்தாயிரம் ரூபாயை செலுத்த வேண்டிய வேலை எனக்கு.
சரவணம்பட்டிக் கிளைக்குச் சென்றால் ‘உங்க ஏடிஎம் அட்டையைக் கொடுங்க’ என்றார்.
சரவணம்பட்டிக் கிளைக்குச் சென்றால் ‘உங்க ஏடிஎம் அட்டையைக் கொடுங்க’ என்றார்.
‘என்ர கணக்கு இல்லீங்க..அம்மாவுதுங்க’ என்றால் ‘அது இங்க சாத்தியமில்லை...’என்றார். வேறொரு நபரின் கணக்கில் பணம் செலுத்த முடியாதாம். அவரே ‘அத்திபாளையம் பிரிவுக்கு போங்க’ என்றார். பெங்களூர் என்றால் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போகலாம். உடலும் குளிர்ச்சியாக இருக்கும். கண்ணும் குளிர்ச்சியாக இருக்கும். கண் குளிர்ச்சி என்றால் மரங்களைச் சொல்கிறேன். நீங்கள் எதையாவது குண்டக்க மண்டக்க எடுத்துக் கொள்ள வேண்டாம். இங்கே கோயமுத்தூரில் வெறும் புழுதிதான் இருக்கிறது. சரவணம்பட்டியில் தொடங்கி ரயில் நிலையம் வரைக்கும் வெறும் புழுதிதான்.
அத்திபாளையம் பிரிவுக் கிளைக்குச் சென்றால் அங்கு பணம் செலுத்தும் எந்திரம் வேலை செய்யவில்லை. அங்கிருந்து கணபதிக்குச் செல்லச் சொன்னார்கள். கணபதி என்பது கோவையில் ஒரு இடத்தின் பெயர். சிவன், முருகன் என்றெல்லாம் இடங்கள் இருக்கின்றனவா என்று விசாரித்துக் கொண்டிருக்கிறேன்.

அங்கேயும் எந்திரம் வேலை செய்யவில்லை. என்னய்யா இது வம்பாகப் போய்விட்டது என்று கிளைக்குள் நுழைந்தால் ‘மே ஐ ஹெல்ப் யூ’ என்ற பலகையின் கீழாக வழக்கமாக பெண்கள்தானே இருப்பார்கள். ம்க்கும். சீருடையில் ஒரு கட்டையன். மட்ட மத்தியானம் ஒன்றரை மணி. வெயில் சொட்டையைப் பிளந்திருந்தது. கண்கள் நிறையப் புழுதி. எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளலாம். கட்டையரிடம் ‘சார்...எங்கேயுமே வேலை செய்யல...பக்கத்துல வேற எங்க சார் இருக்கு?’என்றேன்.
‘ராமநாதபுரம், அத்திபாளையம் பிரிவுப் பக்கமாகப் போங்க’ என்றார். இந்த ராமநாதபுரம் ராமேஸ்வரம் ராமநாதபுரம் இல்லை. கோயமுத்தூரில் இப்படி ஒரு இடம். கோவைவாசிகள் குழப்பவாதிகள்.
‘அத்திபாளையம் பிரிவிலிருந்துதாங்க வர்றேன்...ராமநாதபுரம் இங்க இருந்து பக்கமா?’ என்றேன். இந்தக் கேள்வியில் ஏதாவது தவறு இருக்கிறதா? ‘உங்களுக்கே தெரியலைன்னா எனக்கு எப்படித் தெரியும்’ என்கிறார்.
‘என்னங்க இப்படி எகிறுறீங்க?’ என்றால் ‘நீ என்ன மினிஸ்டரா?’ என அவர் கேட்டவுடன் கோபம் வந்துவிட்டது. வேறு ஏதாவது ஒருவரைச் சுட்டிக் காட்டியிருந்தால் கூட கண்டுகொள்ளாமல் விட்டிருக்கலாம். நம்மூர் மந்திரிகள் அவ்வளவு பெரிய அப்பாடக்கர்களா? மந்திரிகள் கேட்டால்தான் பதில் சொல்வாராம். உச்சியில் இருக்கும் நான்கேகால் முடிகளும் சிலிர்த்து நின்றன. என்னைப் பார்த்தால் பொல்லி மாதிரிதானே தெரியும்? இவன் என்ன செய்துவிடுவான் என்று எழுந்து வந்துவிட்டான். அந்த ஆள் வருவதைப் பார்த்தால் அடித்துவிடுவான் போலிருந்தது. அவன் அடித்தால் அவ்வளவுதான். தூக்கிச் செல்ல ஸ்ட்ரெச்சர்தான் வர வேண்டும். நமக்கு எதுக்கு ஸ்டெரெச்சர் எல்லாம்? சட்டையைப் பிடித்து தர தரவென இழுத்து ஓரத்தில் போட்டுவிடுவார்கள். நமக்கு பலமே நாக்குதான். அதை மட்டும் ஒழுங்காகப் பயன்படுத்திவிட வேண்டும் என்ற கணக்கில் ‘நீ யூனிபார்ம்ல இருக்க...அடிச்சா நீ காலி’ என்றேன். அது அவனை யோசிக்கச் செய்திருக்க வேண்டும். ‘சிசிடிவி கேமரா இருக்குல்ல’ என்றும் ஒரு பிட்டைச் சேர்த்துப் போட்டேன்.

ஆனால் ஒன்று. இவ்வளவு பிரச்சினை நடக்கிறது. யாருமே எதுவுமே கண்டுகொள்ளவில்லை. அவரவர் இடத்திலிருந்து பார்க்கிறார்களே தவிர ஒருவரும் குரல் எழுப்பவில்லை. ‘கோயமுத்தூர்க்காரங்க பக்குவமானவங்க கண்ணு’- இப்படித்தான் சொன்னார்கள். என்ன இருந்தாலும் பக்கத்து ஊர் என்ற நினைப்பில் நம்பிக் கொண்டிருந்தேன். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இரண்டு பேர் சண்டைப் போட்டுக் கொண்டால் நமக்கு என்ன வந்தது? சண்டையை எண்டர்டெய்ன்மெண்டாக எடுத்துக் கொள்கிறவர்கள்தான் எல்லாப் பக்கமும்.
கோபமாகப் பேசியபடியே வெளியில் வந்துவிட்டேன். பொடனி மீது கூட அடி விழவில்லை என்ற தைரியம் வந்தவுடன்தான் ஓரிடத்தில் கால்கள் நின்றன. படபடப்பே அடங்கவில்லை. மெல்ல எட்டி உள்ளே பார்த்த போது கட்டையன் வேறொரு ஆளிடம் பேசிக் கொண்டிருந்தான். விறுவிறுவென்று தலைமை மேலாளர் அறை வரைக்கும் சென்றுவிட்டேன். அவரிடம் பேசத் தொடங்கிய போது படபடப்புடன் நாக்குக் குழறியது. இப்படியெல்லாம் சண்டையில் நாக்குக் குழறி பல வருடங்கள் ஆகிவிட்டன.
‘ஒரு புகார் கடிதம் எழுதிக் கொடுங்க’ என்றார்.
‘எச்சரிச்சு அனுப்புங்க சார்’ என்றேன். எதற்கு தேவையில்லாத வம்பு என்ற தயக்கம்தான். ‘அந்த எடத்துல உக்காந்துட்டு இருக்கிறவங்கதான் சார் பேங்க்கோட இமேஜ்’ என்றார். அவர் சொன்னதும் சரிதான். படபடவென்று எழுதிக் கொடுத்துவிட்டு கீழே வந்தேன். கோயமுத்தூர் முகவரியை எழுதாமல் கரட்டடிபாளையத்து முகவரியை எழுதிக் கொடுத்தேன். ஆட்டோவில் ஆள் அனுப்பினால் கூட வீடு பூட்டிக் கிடக்கும்.
‘மே ஐ ஹெல்ப் யூ’ இடத்தில் அவன் அமர்ந்திருக்கவில்லையென்றால் அவனிடம் ஏன் செல்லப் போகிறேன்? கேட்டதும் எக்குத்தப்பாக எதுவுமில்லை. பக்கத்தில் இருக்கும் கிளை எது என்று கேட்டதற்கே கோபம் வந்துவிடும் என்றால் அவன் ஏன் அந்த இடத்தில் அமர வேண்டும்?
கீழே வரும் போது ‘சீஃப் மேனேஜர்கிட்ட ஒரு புகார் கொடுத்துட்டேன்..பார்த்து பேசிக்குங்க’ என்றேன். விக்கித்தது போலப் பார்த்தார். மந்திரிகள் புகார் அளிக்கவெல்லாம் மாட்டார்கள். நம்மால் அதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? நிற்காமல் வந்துவிட்டேன்.
ஐசிஐசிஐக்கும், ஹெச்.டி.எஃப்.சிக்கும் சென்று வந்தால் ஸ்டேட் பேங்க் மாதிரியான தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் தெனாவெட்டைப் புரிந்து கொள்ள முடியும். தனியார் வங்கிகளில் வெண்ணெய் கட்டியை வெட்டுவது போலத்தான் பேசுகிறார்கள். வார்த்தைகள் வழுக்கும்.
அரசு நிறுவனங்கள் வலுவாக இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் அடி விழுந்துவிடுமோ என்று பயப்பட வைக்கிற அலுவலங்களில் அடுத்த முறை எப்படி நுழைய முடியும்?
அரசு நிறுவனங்கள் வலுவாக இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் அடி விழுந்துவிடுமோ என்று பயப்பட வைக்கிற அலுவலங்களில் அடுத்த முறை எப்படி நுழைய முடியும்?
வேணியிடம் சொல்லலாம்தான். ‘நாற்பது வயசுல நாய்க்குணம்’ என்று ஏற்கனவே அம்மா அவளிடம் பாடம் போட்டு வைத்திருக்கிறார். கோபத்தைக் குறைக்கிறேன் பேர்வழி என்று சோற்றில் உப்பைக் குறைத்துவிடுவார்கள்.
8 எதிர் சப்தங்கள்:
Yes anna,
Till now i haven't experienced this in any bank, i am in an institute here SBI service is good. But my relatives have bitter experiences in SBI bank and are hesitating to go their for any work. Also we have to wait for long time for any services, so nowadays people choose to go to nearest bank or to the banks were they are getting well treatment.
have payment bank ac like paytm or airtel and u can deposit even in shops. connect it with upi and can easily transfer to any Ac within minutes
உண்மை தான் அண்ணா
till we reach the level where you can maintain the account forever and need to go to bank physically once or twice a year, like in US, this is what will happen. We have been complicating the processes so much for all these years and now no one knows what is needed and what is not. everyone is afraid of removing any requirement and so we are now in this mess! I fully agree with you on the observation with SBI. I had the misfortune of going to SBI Krishnagiri and it is the same there too, barring a few good employees. But looking at such a huge rush all the time, i really wonder whether it is the fault of them!
நானும் உங்கள மாதிரியே கோவமா I Say you get out.ன்னு சொல்லிட்டு வேகமா வெளிய வர்ற ஆசாமிதன்.
அரசு ஊழியர்கள் போராட்டம் பண்ணுனா சாதாரண பொதுமக்களிடமிருந்து எந்தவித ஆதரவும் கிடைக்காததற்கு இவர்கள் நம்மிடம் நடந்துகொள்ளும் முறையும் ஒரு காரணம். (வீட்டுலதான் மரியாதை கிடைக்கல அடலீஸ்ட் போற எடத்திலயாவயது கிடைக்கவேண்டாமா?).
Not only SBI sir. other bank employees are also doing like this only. i think, they are not known that how to handle customers? Employees may get excess workload and overtime duty causes stress on their work..
//வீட்டில் இருந்து வேலை செய்கிறேன் என்று சொன்னால் வர வர மரியாதையே இல்லை. பண்ணையத்து ஆளுக்குக் கூட கொஞ்சம் மரியாதை இருக்கும்//
ஆபிசுக்கு போய் வேலை பாக்கும் போது கூட தெனமும் ஒரு பதிவு வந்துரும். செல நாளைல ரெண்டு பதிவு கூட வந்துருக்கு.ஆனா வீட்டுல உக்காந்து வேலை செய்ய ஆரம்பிச்ச பெறகு ஒரு நாளைக்கு ஒரு பதிவு கூட வர மாட்டேங்கு.வர வர இந்த வாசகர்கள் மேல மரியாதையே இல்லாம போச்சு.
கொபசெ
வாம பாறைகள்.
Post a Comment