Sep 10, 2018

நீ என்னவாக விரும்புகிறாயோ...

கோயமுத்தூரில் என்ன வேலை என்று நிறையப் பேர்கள் கேட்டுவிட்டார்கள். பெங்களூரிலேயே வேலை மாறியிருந்தால் இவ்வளவு கேள்விகள் வந்திருக்காது என நினைக்கிறேன். கோவையிலும் பல நிறுவனங்கள் இருக்கின்றன. பாஷ், சி.டி.எஸ், ஹார்மன் என்று பெரிய நிறுவனங்கள் இருக்கின்றன. சரியாக வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருந்தால் கோயமுத்தூர் மிகப்பெரிய மென்பொருள் களமாக மாறியிருக்கக் கூடும். 

நம்முடைய அரசு பற்றித்தான் தெரியுமல்லவா? எல்லாவற்றிலும் காசு கேட்பார்கள். போதாக்குறைக்கு நாயக்கர், கவுண்டர் தொழிற்போட்டியும் பெரிய அளவில் ஐ.டி வளராமல் இருக்க முக்கியக் காரணம் என்கிறார்கள். இன்னொரு காரணம்  'ஐ.டி வந்துவிட்டால் நாங்கள் நடத்தும் தொழிற்சாலைகளிலும் சனிக்கிழமை விடுப்பு அளிக்க வேண்டிய அழுத்தம் உண்டாகும்' என்று கூட தடை போடுகிறார்களாம். உள்ளூர் அமைச்சர்களாக இருந்தவர்களுக்கே வெளிச்சம்.

தமிழகத்தில் இருக்கும் நிறுவனங்களை பல நகரங்களுக்கும் பரவலாக்கினால் சென்னை மாதிரியான நகரம் மூச்சுத் திணறாது. ஈரோட்டுக்காரர்கள் கோவையிலும், திண்டுக்கல்காரர்கள் மதுரையிலும், தூதுக்குடிக்காரர்கள் நெல்லையிலும் இருந்து கொள்ளலாம். அந்தந்த துறை அமைச்சர்கள் அழைத்து 'இடம் மாற வேண்டுமானால் உங்களுக்கு என்ன தேவை' என்று நிறுவனங்களிடம் கேட்டால் அவர்கள்  சொல்லிவிடுவார்கள்.  நம்முடைய பல நகரங்களில் உள் கட்டுமானம் நன்றாகவே இருக்கிறது. அத்தனை நிறுவனங்களும் தயாராக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் பத்து சதவீத நிறுவனங்களை பரவலாக்கினால் கூட போதும். அதற்கெல்லாம் குறைந்தபட்ச அறிவு கொண்ட அமைச்சர்கள் தேவை. 

அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாத சமயத்திலேயே கோயமுத்தூருக்கு மாறிவிட வேண்டும் எனத் தீவிரமாக முயற்சி செய்தோம். கணக்குப் பார்த்தால் இரண்டு வருடம் ஆகிவிட்டது. நான் பணியாற்றும் ஆரக்கிள் ஆப்ஸ்சில் கோவையில் அவ்வளவாக வேலை இல்லை. இப்பொழுது இருக்கும் ஏரோ எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் மேலாளர் எனக்கு மிக ஆதரவானவர். பெரிய கசகசப்பு இல்லை. அதனால் அப்பா மறைந்த பிறகு தேடுதலின் வேகத்தையும் குறைத்திருந்தேன். 

சில மாதங்களுக்கு முன்பாக பிக் டேட்டா பற்றியெல்லாம் எழுதியிருந்தேன் அல்லவா? அப்பொழுது அதனை இயல்பாகத்தான் எழுதினேன். ஆனால் உள்மனம் 'இது உன்னை தனக்குள் இழுத்துவிடும்' என்று சொல்லிக் கொண்டிருந்தது. அப்படிதான் நடந்தது. 

அந்தக் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் சென்னையில் ஒரு பெரிய மனிதரைச் சந்தித்து பேசுகிற வாய்ப்பு கிடைத்தது. பொதுவாகத்தான் பேசினோம். அவருக்கு என்னைப் பிடித்துவிட்டது என்றுதான் தோன்றுகிறது. அடுத்த வாரத்தில் மீண்டும் சந்தித்து பேசும் போது  தமது நிறுவனத்தின் தலைமை அதிகாரியையும் உடன்  வைத்திருந்தார். அப்பொழுது சரியான தயாரிப்புகளுடன் சென்றிருந்தேன். பேசி முடித்துவிட்டுக் கிளம்பும் போது 'முழு நேர பணியாளராக சேர்ந்துக்குறீங்களா?' என்றார்.எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு வாரம் அவகாசம் வேண்டும் எனக் கேட்டேன். 

இடையில் தலைமை செயல் அதிகாரியை ஒரு முறை சந்தித்துப் பேசினேன். அப்பொழுது சம்பளம், என்ன மாதிரியான வேலை என்றெல்லாம் சொன்னார். எனக்குப் பிடித்தமானதாக இருந்தது. கிட்டத்தட்ட டேட்டா சயின்ஸ்.  'எனக்கு அவ்வளவாக தெரியாது...ஆனால் பார்த்து விடுகிறேன்' என்று சொல்லிவிட்டேன். 

ரிஸ்க் தான். இப்பொழுது பயணிக்கும் கோட்டிலிருந்து முழுமையாக மாற வேண்டும். புதிதாகப் படிக்க வேண்டும். இப்பொழுது இருக்கும் ஸ்திரத்தன்மை கிடையாது. அப்படிப் பார்த்தால் எந்த ஐ.டி. நிறுவனத்தில்தான் வேலை நிரந்தரம்? மண்டை குழம்பியது. சில நெருக்கமான நண்பர்களிடம் ஆலோசனை கேட்டேன். இப்போதைய மேலாளரிடமும் பேசினேன். யாருமே வேண்டாம் என்று சொல்லவில்லை.

வருமான வரித்துறையின் ஆணையர் முரளி நல்ல ஆலோசகர். குழப்பத்தில் இருந்த போது ஒரு நாள் வீட்டுக்கு வந்திருந்தார். மும்பையிலிருந்து விமானத்தில் வந்து பெங்களூரிலிருந்து தருமபுரி செல்கிற வழியில்அம்மாவிடம் பேசுவதற்காக வந்தார். 'துணிஞ்சு செய்யுங்க மணி..பார்த்துக்கலாம்' என்று அவர் சொன்ன பிறகு அம்மாவும், தம்பியும் சமாதானம் ஆகிவிட்டார்கள். வேணிக்கு தைரியம் அதிகம். 'மனசுக்கு எது பிடிக்குதோ அதை செய்யுங்க' என்று முதலில் சொன்னது வேணிதான்.

ஒரு வார குழப்பத்திற்கு பிறகு 'சரி, சேர்ந்து கொள்கிறேன்' என்று சம்மதம் சொன்னேன். நியமன கடிதத்தை அனுப்பி வைத்தார்கள். மாதாந்திர சம்பளத்துக்கு வேலை செய்கிற பணிதான். ஆனால் புதிய களம், புதிய வேலை. நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும்.

குடும்பம் கோவைக்கு மாறுகிறது. குழந்தைகள் தமிழ் படிப்பார்கள். பதினைந்து வருடங்களாக செய்து வந்த வேலையை விட்டு பாம்பு சட்டையைக் கழற்றுவது போல புதிய தோலை தரிக்கிறேன். கற்றுக் கொள்ள வாய்ப்பு உண்டாகியிருக்கிறது. நினைத்தால் சொந்த ஊருக்குச் செல்ல முடியும். இப்படி நிறைய ப்ளஸ். பெரும்பாலும் கோவையில்தான் இருப்பேன். சென்னையில் மொட்டைமாடியில் ஓர் அறை  எடுத்து வைத்துக் கொண்டு அவ்வப்பொழுது வந்து போகலாம் என்றிருக்கிறேன். நண்பர்களைச் சந்திக்கவும், வாசிக்கவும், எழுதவும் தோதான அறை. இனிமேல்தான் தேட வேண்டும்.

இதையெல்லாம்தான் விரும்புகிறேன். மற்றபடி ரிஸ்க் எடுப்பதில் தயக்கம் இருந்ததில்லை. 

எல்லாம் சரியாக அமையும் பட்சத்தில் ஒன்றும் பிரச்சினையில்லை. ஏதாவது சொதப்பினால் என்ன செய்வது என்ற கேள்வி எழாமல் இல்லை. ஆனால் அப்படியொரு சந்தர்ப்பம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்றுதான் நினைக்கிறேன். வெளியில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. பயந்து கொண்டிருக்க வேண்டியதில்லை. கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

அடுத்த ஐந்து வருடத்தில் என்ன நடக்கும், பத்து வருடத்தில் என்ன நடக்கும் என்று யோசனை செய்து கொண்டேயிருந்தால் நாம் comfort zone ஐ உடைக்கவே மாட்டோம் என்று உறுதியாகத் தெரிகிறது. நாளைக்கு என்ன நடக்கும்? இன்று மாலை என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? எல்லாம் ஒரு நம்பிக்கைதானே.

'நீ என்னவாக விரும்புகிறாயோ அதுவாகவே ஆகிறாய்'. 

24 எதிர் சப்தங்கள்:

Unknown said...

Super. All the Best.

mukund said...

well done Manikandan

radhakrishnan said...

குடும்பத்தில் மற்றவர்கள் வேலை மாறிவிட்டார்களா? மிகத்துணிவான
முடிவு. மற்றவர்களுக்கும் வழிகாட்டியாக இருக்கும். வாழ்துக்கள் மணி

Devi Yogha said...

Wow Mani...Hearty Congrats and Best wishes. By the way naanum Oracle Apps thaan, ungala polave data science aasayum alai odugirathu...started studying. Hope I could also jump out of Oracle Apps soon ☺

Unknown said...

Well done Mani anna. Very good decision and bravo!

Thank you for inspiring people like me.

I talked to you in phone when you came here for Denvar. am writing this because,I am also working in DW & BI for almost 11 Years (Jalliyadithu kondirunthen), when you were writing about "Big Data and Hadoop" I was also learning about that and preparing for change because we dint have much opportunity here.
whether its a coincidence or not, I have also got an offer/opportunity to work for one of the major open source company as "Data Scientist". So I have been asked for hands-on but I told upfront that I am entry level and am learning also "Can learn and do it". They liked my approach and willing to learn, am also not much keen on pay or other things because with current market in US I see this as an good opportunity to change my track!

"பார்த்துக்கலாம்" - its all new but am confident that I can do it!

Am kind of person who try to swim when I have been thrown to water but this time I have Jumped into oacean. hopw it goes well.

Thank you!

Anonymous said...

Peria relief., ennavo. I felt as if I am changing my job and moving to Cbe. Wish you successful career ahead. Atleast for the sake of readers like me.

Amanullah said...

வாழ்த்துக்கள் ‌‌‌‌மணி,

Unknown said...

வாழ்த்துக்கள் மணி ,சொந்த ஊரில் வாழ்வது ஒரு வரம்

Gobinathan Manivel said...

All the best

நாடோடிப் பையன் said...

Dear Mani

'நீ என்னவாக விரும்புகிறாயோ அதுவாகவே ஆகிறாய்'. So true!

Best wishes for your next adventure.

Gopi said...

Congrats Mani !!! you are a brave, honest and noble man. You will definitely do amazingly well. There is not an inch of doubt about it. All the very very best :)

அன்புடன் அருண் said...

அப்பாடா...வேலை பற்றிய சந்தேகம் தீர்ந்தது...

மகிழ்ச்சி!! வாழுங்கள்!!

வாழ்த்துக்கள்!

Anonymous said...

Welcome to Coimbatore!!! I agree and disagree with your comment on Coimbatore being a IT hub isn't that the single most thing that destroyed the mere social and cultural fabric of cities like Banglore and Chennai. Isn't that one of the life styles or reasons you were unable to cope up in Banglore??? If all cities were to become IT hub where do you want the other industries to go?Being a coimbatorean and have traveled in the last 20 years. I would prefer the city retain its individuality rather being one of the IT hubs.

Regarding the caste nexus to prevent the IT industry, yes there is a possibility and one of the reasons other development projects were stalled on the past.

prp said...

WELL DONE!

அருண் பிரசாத் ஜெ said...

All the very best Mani !!

Anonymous said...

சும்மா கெடந்த நிலத்தைக் கொத்திச்
சோம்பலில்லாமே ஏர் நடத்தி
கம்மாக் கரையை ஒசத்திக்கட்டி
கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டி
சம்பாப் பயிரைப் புடுங்கி நட்டுத்
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு

நெல்லு வெளைஞ்சிருக்கு - வரப்பும்
உள்ளே மறைஞ்சிருக்கு

மண்ணைக் கிளறிக் குழியமைச்சு
வாழைக் கன்னுகளை ஊடாலே வச்சு
தண்ணி பெற அக்களை பறிச்சுச்
சந்திர சூரியர் காண ஒழைச்சு
ஒண்ணுக்கு பத்தாக் கிளைவெடிச்சு
கண்ணுக் கழகா நிண்ணு தழைச்சு

இலை விரிஞ்சிருக்கு - காய்க்
குலை சரிஞ்சிருக்கு

Maheshwaran Jothi said...

உண்மை. சென்னை போன்ற பெருநகரங்களிலேயே குண்டு சட்டி போன்று உருண்டு கொண்டு இருக்கும் அரசியல்வாதிகளுக்கு திருச்சி, மதுரை, கோவை போன்ற நகரங்களையும் வளர வைக்கும் எண்ணம் வர வேண்டும்.

தங்களின் புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Paramasivam said...

Though I have no idea of Data Scientist, Wish you all the best in your new job.
Hope other family members also get suitablejobs there.

kailash said...

Today State Govt has announced IT Policy and is giving incentive to companies based on their investment and free power supply depending on the amount of investment . Hopefully it will tempt new companies to start in Tier II Cities

Anonymous said...

All the best Mani
Will miss you Mani at Arrow office

Maria Raj

Anonymous said...

best wishes......

ramass said...

Welcome to Coimbatore!! All the best!!

Anonymous said...

Superji. Good decision at good time. Next chance to move to TN may be years away. All the best!

Sundar Kannan said...

Hi Mani,
Happy to hear that you got the luck to work on your (nearby) hometown.

May I ask about your previous portfolio?
Were you working as Apps DBA or functional consultant?

I'm working as apps dba and sharpening my skills on mongo and R. Seems they are not much relevant to my current skillset, yet trying.

Kind Regards
K Sundar