பெங்களூரில் ஒரு பேராசிரியர் இருக்கிறார். அரசுக் கல்லூரியில் பணியாற்றிவிட்டு இப்பொழுது தனியார் கல்லூரியில் டீனாக இருக்கிறார். மாணவர்களுக்கு வகுப்பும் எடுக்கிறாராம். ஒரு நண்பர் தமது ஆராய்ச்சி பணிகளுக்காக பேராசிரியருடன் தொடர்பில் இருக்கிறார். சுவாரசியமான பேராசிரியர் என்றும் ஒரு நாள் அவரைச் சந்திப்போம் என்று நண்பர் சொல்லியிருந்தார்.
எழுபதை நெருங்குகிற வயது பேராசிரியருக்கு. தாம் பணியாற்றுகிற கல்லூரிக்கு வரச் சொல்லியிருந்தார். நாங்கள் சென்றிருந்த போது நிறைய மாணவர்கள் இருந்தார்கள்.
'முடிச்சு கொடுத்துட்டு வரேன்' என்றார். அதுவரையிலும் அவரது அறைக்கு வெளியில் அமர்ந்து நண்பரும் நானும் பேசிக் கொண்டிருந்தோம்.
முக்கால் மணி நேரம் ஆனது. வழக்கமான அறிமுகத்துக்குப் பிறகு 'இன்னமும் ஏன் சார் க்ளாஸ் எடுக்குறீங்க?' என்று கேட்க வேண்டும் எனத் தோன்றியது.கேட்ட போது 'நிர்வாக வேலை எனக்கு எப்பவுமே .பிடிக்காது. ஆசிரியராகவே இருந்து கொள்கிறேன்' என்றார். பிறகு வேறு சில விஷயங்களைப் பேசினோம்.
வெளியில் வந்த பிறகு நண்பர், 'அவர்கிட்ட ஏன் அதைக் கேட்ட?' என்றார். என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. 'அதெல்லாம் உடான்ஸ்...பாடத்துல தொடர்பு விட்டுப் போய்விடக் கூடாது' என்ற காரணத்திற்காகவே அவர் வகுப்பு எடுக்கிறார் என்று நண்பர் சொன்னார்.
புள்ளியியல் பேராசியர் அவர். ஆராய்ச்சி மாணவர்கள் விதவிதமான தகவல்களைச் சேகரிப்பார்கள். என்ன ஆராய்ச்சியாக இருந்தாலும் தகவல்தானே அடிப்படை? அப்படி மாணவர்கள் சேகரிக்கும் தகவல்களை எப்படி பகுத்து, தொகுத்து, அந்தத் தகவல்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது மாதிரியான ஆலோசகர் வேலையைச் செய்கிறார் அந்தப் பேராசிரியர். அவர் இதற்காக அவர் பெறும் தொகையுடன் ஒப்பிட்டால் சம்பளம் என்பது சொற்பம். நண்பர் சொன்ன கணக்கைப் பார்த்தால் வருடம் இருபது முதல் முப்பது லட்சமாவது தேறும். பேராசிரியர் பெயரைச் சொன்னால் வம்பு வந்து சேரும்.
'என்ன செய்யறீங்க?' என்று என்னைக் கேட்டார். சொன்னேன்.
'போர் அடிக்குமா?' - இது அவர். எடுத்த உடனேயே இப்படியா கேட்பார்கள்? ஆனால் அவர் வயதுக்கு என்னை மாதிரி எவ்வளவு சில்லுண்டிகளைப் பார்த்திருப்பார்?
'ஆமாங்க சார்'.
சலிப்பூட்டக் கூடிய வேலைதான். அவரிடம் ஒத்துக்கொள்வதில் தயக்கம் எதுவுமில்லை.
சலிப்பூட்டக் கூடிய வேலைதான். அவரிடம் ஒத்துக்கொள்வதில் தயக்கம் எதுவுமில்லை.
'எங்க லைனுக்கு வந்துடுங்க' என்றார். கற்பனைக்கு சுலபமாகத்தான் இருக்கும். ஆனால் படிக்க வேண்டுமே. ஐ.டி வேலையில் இருக்கும் முக்கால்வாசிப் பேர் 'சம்பளம் வருது..ஏன் ரிஸ்க் எடுக்க வேணடும்' என பயப்படுகிறவர்கள்தான்.
மென்பொருள் துறையில் டேட்டா சயின்ஸ், டேட்டா அனலிடிக்ஸ், டேட்டா வேர்ஹவுஸிங் - இப்படி நிறைய இருக்கின்றன. செம சூடான ஏரியா.
உதாரணமாக, சூழலியல் குறித்தான ஆராய்ச்சி செய்கிற மாணவர் தமது ஆராய்ச்சி ஆவணத்தில் குறைந்தபட்சம் முப்பது முதல் நாற்பது அட்டவணைகளை இணைப்பார். அவரிடம் இருக்கும் தகவல்களை regression analysis செய்ய வேண்டுமா? ஆமாம் என்றால் எப்படிச் செய்வது? அதனை எப்படி அட்டவனைப் படுத்துவது என்றெல்லாம் தெரியாமல் குழம்பிக் கிடப்பார். அங்குதான் பேராசியர் மாதிரியானவர்கள் ஆபத்பாந்தவர்கள். ஆனால் அவர் பெரிய அளவில் மண்டை காய்வதெல்லாம் இல்லை. அவரும் ஒரு மென்பொருளைத்தான் பயன்படுத்துகிறார். ஆனால் என்ன மென்பொருள் என்றெல்லாம் வெளியில் சொல்வதில்லை
.'நீ டேட்டாவை கொடு; நான் அட்டவணை கொடுக்கிறேன்' என்பதுதான் டீல்.
'இந்த அட்டவணையைத் தயார் செய்ய ஆயிரம் சாப்ட்வேர் இருக்கு. அதை எப்படி பயன்படுத்தணும்ன்னு தெரியணும். எந்த முறை சரியானதாக இருக்கும்ன்னு தெரியனும்ல...அதான் சூட்சுமம்' என்றார்.
'உட்கார்ந்து படிங்க..வேலை நல்லா இருக்கும்' என்று மீண்டும் சொன்னார்.
உண்மையில் டேட்டா என்பது அட்டகாசமான எதிர்காலம் கொண்டது. ட்ரில்லியன் பைட் டேட்டாவெல்லாம் சர்வசாதாரணமாகிவிட்டது. இந்தக் குப்பையிலிருந்து எந்த மணியை எப்படி பொறுக்கி எடுப்பது என்பது கடலில் முத்தெடுப்பது போல. இருக்கும் தகவல்களை சரியாகப் பயன்படுத்த தெரிந்தால் கெத்து காட்டலாம். எங்கள் நிறுவனத்தில் கூட ஏகப்பட்ட ரிப்போர்ட் தயாரிக்கிறார்கள் . அனால் எதை எப்படி பயன்படுத்தினால் என்கிற அனலிடிக்ஸ் எல்லாம் இல்லை.
பேராசிரியரிடம் இதைச் சொன்ன போது 'அதைச் செய்யணும் சார்..அப்போதான் அந்த டேட்டாவுக்கு மரியாதை' என்றார். சிரித்தேன். செய்கிற வேலை சலிப்பு தட்டிய யாருமே இத்தகைய புதுப் புதுக் குட்டைகளில் மீன் பிடிக்க இறங்கிப் பார்க்கலாம். தப்பில்லை.
'பெரிய சக்கர வியுகமெல்லாம் இல்லை. ஈஸிதான். சும்மா தேடிப் பாருங்க' என்று சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார். தேடிக் கொண்டிருக்கிறேன். நீங்களும் தேடிப் பார்க்கலாம்- ஆர்வமிருந்தால்.
8 எதிர் சப்தங்கள்:
Bro, I also heard something similar to this, but under different name called "Deep learning". If you have some free time try to read about it. There are lot of free courses available including sample codes and example scenarios. It's getting interesting after reading it for a while, if you have time, go through this. https://www.freetutorials.us/tag/deep-learning/
Hello Mani.. I am very much interested with statistics, I want to use statistics in our IT big data area, can I have contact of statistics professor? Is it possible to talk to him over phone? my email asokkumarc@gmail.com .. Thanks!
Good article Mani on data analytics!
Predictive analytics is an interesting sub-topics within the data analytics.
Big Data related articles - http://www.nisaptham.com/search/label/பிக்டேட்டா
Nice article. Best wishes on your endeavor.
I think this is one of the most significant info for me.
And i'm glad reading your article. But want to remark
on few general things, The website style is great, the articles is really great :
D. Good job, cheers
Thankfulness to my father who stated to me concerning this website, this website is
in fact remarkable.
I just like the helpful info you supply in your articles.
I'll bookmark your weblog and take a look at again here regularly.
I am quite certain I'll learn plenty of new stuff right here!
Good luck for the following!
You have a good skill to narrate. Add it with data and analysis, it's a good story.
Post a Comment