அருணாச்சலம் பள்ளித் தோழர். எங்களுடைய பள்ளி மிகப்பெரிய மைதானத்தைக் கொண்டது. விளையாட்டு மைதானம் மட்டுமில்லை. நாங்கள் படித்த காலத்தில் வேளாண்மையும் நடக்கும். மேனிலைக் கல்வியில் 'அக்ரி' என்று தனியாக ஒரு பாடப்பிரிவு உண்டு. அவர்கள்தான் உழவுத் தொழிலை பார்த்துக் கொள்வார்கள். அருணாச்சலம் அந்தப் பிரிவில்தான் படித்தார். பல சமயங்களில் மாட்டு வண்டியில்தான் பள்ளிக்கு வருவார். மாடுகளை அவிழ்த்துவிட்டு பாடப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வகுப்புக்கு வருவார். இடைவேளைகளில் மாடுகளை நிழலில் இடம் மாற்றிக் கட்டுவார். அதெல்லாம் ஆச்சரியமாகத்தான் இருக்கும். வேடிக்கையாகவும் இருக்கும்.
எதிர்காலத்தில் அவர் உழவன் ஆவார் என்று எதிர்பார்க்கவில்லை. ஒன்றரை ஏக்கர் நிலம் கொண்ட சிறு விவசாயக் குடும்பம் அவருடையது. ஆனால் அவருக்கு நம்மாழ்வாரோடு தொடர்பு கிடைத்தது. அது அவரை முழுமையாக வேளாண்மைத் தொழிலின் பக்கம் திரும்பிவிட்டது. இன்றைக்கு முழு நேர விவசாயி. விவசாயம் என்றால் நட்டத்தில் செய்கிற விவசாயி இல்லை. கிட்டத்தட்ட பத்து ஏக்கர் விவசாயம் செய்கிற அளவுக்கு வளர்த்திருக்கிறார். எங்கள் ஊர்ப்பக்கத்தில் ஒரு ஏக்கர் என்ன விலை என்று கேட்டால் பத்து ஏக்கர் என்பதன் மதிப்பை புரிந்து கொள்ளலாம். வீட்டில் இருப்பவர்கள் அத்தனை பேரும் தோட்டத்தில்தான் இருப்பார்கள். பார்க்கும் போது இதை அவர்கள் அனுபவித்து செய்கிறார்கள் என்று தோன்றும்.
அருணாசலத்தின் பள்ளித் தோழன் தேவசேனாதிபதி, சட்டீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியர். அவரும் எங்கள் பள்ளி மானவர்தான். அவர் அருணாச்சலத்தை விடுவதில்லை. சட்டீஸ்கர், ஒடிசா போன்ற மாநிலங்களில் அருணாச்சலத்தை வேளாண்மை சார்ந்த ஆலோசகராக வைத்திருக்கிறார்கள். அங்கிருக்கும் எளிய விவசாயிகள் உழவு மூலம் மேம்படுவதற்கான வழிமுறைகளைச் சொல்லித் தருகிறார்.
எங்கள் ஊர்ப்பக்கத்தில் அருணாச்சலமும் அவரது மண் சார்ந்த ஆர்வமும் வெகு பிரசித்தம். தைரியமான ஆளும் கூட. நிலம் நீருக்கு எதிராக யாராவது சேட்டை செய்யும் போது துணிந்து எதிர்க்கும் மனநிலை கொண்டவர். அருணாச்சலம் பற்றி புதிய தலைமுறையில் ஒளிச்சித்திரம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். அருணாசலத்தின் வெற்றி பற்றி மிகை இல்லாத ஒளிச்சித்திரம் இது.
நம்முடன் இருப்பவர்கள் ஒவ்வொரு அடி முன்னெடுத்து வைக்கும் போதும் நமக்கு உள்ளூர சந்தோசம் வருமல்லவா? அப்படியான சந்தோசம் எனக்கு. இவரைப் பற்றி தனியாக ஒரு பதிவு எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். புதிய தலைமுறை அந்த வேலையை மிகச் சிறப்பாக செய்துவிட்டது.
ஈரோடு, கோயமுத்தூர், சேலம் பக்கம் வருகிறவர்கள் அருணாசலத்தின் பண்ணையை ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்று மனதில் குறித்து வைத்துக் கொள்ளலாம். worth seeing it .
'விவசாயமெல்லாம் நஷ்டத்தில்தான் முடியும்' என்று சொல்கிறவர்கள் ஒரு முறையேனும் அருணாச்சலத்தை சந்திக்க வேண்டும். அருணாச்சலத்தை அவ்வளவு சீக்கிரம் பிடிக்க முடியாது. ஆனால் விவசாயத்தில் ஆர்வம் இருப்பவர்கள், 'இந்தத் தொழிலை விட்டுட்டு உழவு செய்யப் போகிறேன்' என்று சொல்கிறவர்கள், எங்கள் மண்ணில் தண்ணீர் வசதியே இல்லை என்று வருந்துகிறவர்கள் தாராளமாக அவரைத் தொடர்பு கொள்ளலாம். 'நீங்க வந்துட்டு போங்க' என்று கேட்டால் தயக்கமில்லாமல் வந்து செல்கிறவர் அவர். அவரது வழிகாட்டல்கள் நிச்சயமாக மிகப்பெரிய உதவியாக இருக்கும். (94433 46323)
9 எதிர் சப்தங்கள்:
கொரவலியைக் கடி பதிவின் அடுத்த பதிவாக இது நல்ல பொருத்தம்
True, here is someone shares everything he has, knowledge, resources, time.... He loses nothing, but gains to supreme form of human, economically also, he learns by sharing... ThAnks a lot mr.mani....
சூப்பர் அனானி..இந்த ஆளு எவ்வளவு சொல்லித் தர்றான்..யோவ் மணி, உன்னை பின் தொடர்ந்தால் போதுமய்யா....
Anonymous ஐயா இல்ல அம்மா இல்லேன்னா ஐயாம்மா ன்னு யாரா இருந்தாலும் சரி
Soundhar உங்களுக்கும் தான்.
vic சொன்ன "கொரவலியைக் கடி" ங்கற பதிவை படிச்சீங்களா?
“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.
I like the helpful info you provide in your articles.
I will bookmark your blog and check again here
regularly. I am quite sure I'll learn many new stuff right here!
Best of luck for the next!
Thank you for being the tutor on this area.
My partner and i enjoyed the article a lot and most of all enjoyed reading how you handled the
areas I regarded as being controversial. You happen to be always very kind to readers much like me and assist me in my existence.
Thank you.
Thanks Mani for the information. Soon planning to meet him.
அருணாச்சலம் அண்ணாவின் பேட்டி: https://youtu.be/WD-ZpZW-q1k
Post a Comment