ஹெச். ராஜா, இந்தியாவை ஆளும் கட்சியின் தேசியச் செயலாளர். அந்தப் பொறுப்பில் இருக்கும் மனிதர் 'தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம்' என்று கனிமொழியையும் கருணாநிதியையும் நேரிடையாகத் தாக்கி டிவிட்டரில் எழுதுகிறார். காலையில் இந்தச் செய்தியைப் பார்த்தவுடன் அருவெறுப்பாக இருந்தது.
கள்ளக் குழந்தை என்னும் சொல் மிகக் கேவலமானது.
கள்ளக் குழந்தை என்னும் சொல் மிகக் கேவலமானது.
பொதுவாக அரசியல் கட்சிகளின் கீழ்மட்ட ஆட்கள் அசிங்கமாகப் பேசுவார்கள். மேடைப் பேச்சாளர்கள் எதிர்கட்சியினரைக் கேவலமாக வர்ணிப்பார்கள். மேல்மட்ட ஆட்கள் இதையெல்லாம் உள்ளூர ரசித்தாலும் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளமாட்டார்கள். அப்படி மேல்மட்ட ஆட்கள் பேசாமல் இருக்கும் வரைதான் பொதுவெளியில் ஒரு கட்டுப்பாடு இருக்கும். மேல்மட்ட ஆளே இத்தகைய உரையாடல்களை ஆரம்பித்து வைத்தால் சாக்கடைதான் உருவாகும். இத்தகைய எந்த யோசனையுமில்லாமல் ஒரு கட்சியின் தேசியச் செயலாளர் என்ற பதவியில் இருப்பவரே இப்படி சில்லறைத்தனமாகப் பேசுவது கட்சியின் மற்ற உறுப்பினர்களையும் தூண்டி விடுவது போலாகாதா? அல்லது அதைத்தான் கட்சி விரும்புகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
அரசியல் விமர்சனம் என்பது வேறு. மக்களாட்சியில் அது அவரவருக்கான உரிமை. கருணாநிதியில் ஆரம்பித்து யாரை வேண்டுமானாலும் அவர்களது கொள்கைகள், செயல்பாடுகளின் அடிப்படியில் எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அதற்கான பதிலை கட்சிக்காரர்கள் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அடுத்தவர்கள் அதைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் தனிப்பட்ட வசைகள், ஒருவரின் பிறப்பு குறித்தான கொச்சையான விமர்சனங்களை யாராவது முன்வைக்கும் போது அதை பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
இதுவரைக்குமான தமிழகத்தின் கடந்த கால அரசியல் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் இப்பொழுது சற்று பண்பட்ட அரசியல் கண்ணில் படத் தொடங்கியிருக்கிறது. இனியாவது நாகரிகமான, பண்புமிக்க அரசியல் களம் தமிழகத்தில் உருவாகும் என்று எதிர்பார்த்தால் அதை இவர்கள் விரும்பவே மாட்டார்கள் போலிருக்கிறது. 'ராஜா பிறப்பதற்கு பத்து மாதங்கள் முன்பாக அவரது ஊரான காரைக்குடியில் திமுக பேச்சாளர் வெற்றிகொண்டான் தங்கியிருந்ததாக ஒரு கேள்வி' என திமுகவின் ஆர்.எஸ் பாரதி பெயரில் ஒரு அறிக்கை சுற்றியடிக்கிறது. திட்டத்தான் செய்வார்கள். சமூக ஊடகத்தில் விடுவார்களா? இதற்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று சமூக ஊடகத் தளங்களில் ஜெயலலிதா உட்பட ஒவ்வோர் அரசியல் தலைவரின் பிறப்பு குறித்தும் ஆளாளுக்கு வாந்தியெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவரைக்குமான தமிழகத்தின் கடந்த கால அரசியல் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் இப்பொழுது சற்று பண்பட்ட அரசியல் கண்ணில் படத் தொடங்கியிருக்கிறது. இனியாவது நாகரிகமான, பண்புமிக்க அரசியல் களம் தமிழகத்தில் உருவாகும் என்று எதிர்பார்த்தால் அதை இவர்கள் விரும்பவே மாட்டார்கள் போலிருக்கிறது. 'ராஜா பிறப்பதற்கு பத்து மாதங்கள் முன்பாக அவரது ஊரான காரைக்குடியில் திமுக பேச்சாளர் வெற்றிகொண்டான் தங்கியிருந்ததாக ஒரு கேள்வி' என திமுகவின் ஆர்.எஸ் பாரதி பெயரில் ஒரு அறிக்கை சுற்றியடிக்கிறது. திட்டத்தான் செய்வார்கள். சமூக ஊடகத்தில் விடுவார்களா? இதற்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று சமூக ஊடகத் தளங்களில் ஜெயலலிதா உட்பட ஒவ்வோர் அரசியல் தலைவரின் பிறப்பு குறித்தும் ஆளாளுக்கு வாந்தியெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கதை முடிந்தது. நாகரிக அரசியலாவது ஒன்றாவது.
ஒரு மனிதன் செய்யவே கூடாத இழிவான செயல்கள் என்று ஒரு பட்டியலைத் தயாரித்தால் அதில் சக மனிதனின் பிறப்பை இழிவு செய்வது என்பது நிச்சயம் இடம் பெறும். மனிதனாகப் பிறப்பெடுத்துவிட்ட எந்தவொரு மனிதனும் சமம்தான். அவனது பிறப்பின் அடிப்படையில்- அது சாதி, மதம் என்றாலும் சரி, பெற்றோர் சார்ந்ததாக இருந்தாலும் சரி-ஒருவனை சிறுமைப் படுத்துவதற்கு யாருக்கும் உரிமையில்லை. யாருக்கும் அருகதையுமில்லை. எந்த ரத்தம் எந்தத் தலைமுறையில் கலந்தது என்று யாருக்குத் தெரியும்? இன்னொருவன் மீது சாணத்தை எடுத்து வீசுவதால் தம்மை புனிதனாக்கிக் கொள்ள முடியாது என்பது கூட மேதாவிகளுக்குத் தெரிவதில்லை.
ஜெ- கருணாநிதி சகாப்தத்திற்குப் பிறகான அரசியல் களத்தில் இழிவான அரசியலுக்கான முதல் படியை ராஜா எடுத்து வைத்திருக்கிறார். இந்தத் தருணத்தில் இதனை வெறுமனே கீழ்த்தரமான விமர்சனமாக மட்டும் எடுத்துக் கொள்ள முடியவில்லை. நிர்மலா தேவியிடமிருந்து கவனத்தை திசை திரும்புவதற்கான செயலாகவும்தான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. நீங்கள் திசை திருப்ப ஆயிரம் வழிகள் இருக்கின்றன ஐயா. அடுத்த தலைமுறைக்கான அரசியல் களம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அதை அசிங்கப்படுத்தி தவறான பாதையில் மடை மாற்றிவிட வேண்டாம்.
'இவனுக்கு என்ன வந்தது? திமுகவுக்கு வக்காலத்து வாங்குகிறான்' என்று கேட்பதற்கு முன்பாக- இத்தகைய, மோசமான வசையை யாரை நோக்கி வீசினாலும் மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டியது அவசியம். நம்முடைய அரசியல் சார்புகள், கொள்கைகள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். தேசிய செயலாளர் என்கிற அந்தஸ்தில் இருக்கும் ஒரு நபர் தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும் போது அதை வெறுமனே ட்ரெண்ட் ஆக்குவதோடு நில்லாமல் சகல தரப்பிலும் எதிர்ப்பைக் காட்ட வேண்டும்.
ஊடகங்கள் இத்தகைய மனிதர்களின் முன்பாக மைக் நீட்டுவதை தவிர்த்தாலே இங்கே தேவையில்லாத சலம்பல்கள் குறையும். இங்கே பெரும்பாலான 'பலூன்களை' தலைவர்களாக்கி ஊடங்கள்தான் மேலே பறக்க விட்டுக் கொண்டிருக்கின்றன. இனியும் ஊடகங்கள் மாற வாய்ப்பில்லை. அவர்கள் இப்படியேதான் இருப்பார்கள்.
இன்றைக்கு இருப்பதைவிடவும் நாகரிகமான அரசியலை நோக்கி கட்சியையும் தமிழகத்தையும் நகர்த்த வேண்டிய பொறுப்பு நம் காலத்து அரசியல் நாயகர்களுக்கு இருக்கிறது. அவர்கள் தவறுகிற இடங்களில் குத்திக் கட்ட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இருண்ட காலத்தை நோக்கி இழுத்து அநாகரிகமான அரசியலுக்கு வித்திடும் அரசியல் பிரமுகர்களை அடுத்த தலைமுறையினர் கட்சி பேதமில்லாமல் நிராகரிக்க வேண்டும்.
கட்சிகள், தலைவர்களை எல்லாம் தாண்டிய பொதுவான அரசியல் புரிதல் நமக்கு அவசியம். சக மனிதனை இழிவுபடுத்தாத, சமூகத்துக்கு எள்ளளவும் பயனளிக்காத இத்தகைய சில்லறைத்தனமான சலசலப்புகள் இல்லாத அரசியல் களத்தை நாம் உருவாக்க வேண்டிய தருணம் இது. அறிவு சார்ந்து, சித்தாந்தங்கள் அடிப்படியில் வலுவான உரையாடலை நாம்தான் முன்னெடுக்க வேண்டும். அதற்கான பெரும்பலமாக சமூக ஊடகம் நம் கைவசமிருக்கிறது. இத்தகைய மனிதர்கள் சீந்தப்படாமல் விட்டாலே போதுமானது.
12 எதிர் சப்தங்கள்:
//அதைத்தான் கட்சி விரும்புகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்//
தெளிவா ல்லாம் சொல்ல மாட்டார்கள். ஆனால் அதைத்தான் விரும்புகிறார்கள்.
இதில் சந்தேகமே இல்லை. எந்த வழியிலாவது வன்முறையை உருவாக்கி விட வேண்டும்.இதுதான் நோக்கம்.
சுவாதி கொலையிலிருந்து பாருங்கள்.
வியாபம் போல் தொடரும்.
//இத்தகைய மனிதர்கள் சீந்தப்படாமல் விட்டாலே போதுமானது//
இல்லை அவர்களுக்கான மொழி இதுவல்ல.
அவர்களைப் போல சிந்திக்க வேண்டும்.ஆனால் அவர்களையும் தாண்டி செயல் பட வேண்டும்.
These kinds of people should never be entertained by any social media. The birth of someone is a matter of privacy. Nobody has the right to question or discuss on that. First of all, people like h Raja should be severely punished without any mercy. Forget about politics. Even a common man/woman has no right to insult any person based on his/her physic and birth. The respondent should treat those people as animals and nothing more.
திருமுருகன் அருளால்
அலகு குத்தி அழகு பார்க்க வேண்டும் என்றிருந்தால் நம்மால் தடுக்க முடியுமா?
வேல் முருகனுக்கு அரோகரா . வெற்றி
வேல் முருகனுக்கு அரோகரா.
ராஜாவின் கருத்தில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. போர் என்று வந்துவிட்டால் அனைத்தையும் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள், பதில் சொல்ல வேண்டும். பிஜேபி மட்டும் அணைத்து வகையான கேள்வியையும் சகித்துக்கொண்டு புன்னகையுடன் பதில் சொல்லவேண்டும், ஆனால் வேறு எந்த கட்சியும் அவ்வாறு இருக்க தேவையில்லை என்பது என்ன நியாயம்.
//ஒரு மனிதன் செய்யவே கூடாத இழிவான செயல்கள் என்று ஒரு பட்டியலைத் தயாரித்தால் அதில் சக மனிதனின் பிறப்பை இழிவு செய்வது என்பது நிச்சயம் இடம் பெறும்.// "மணி"மொழி
You mentioned some good example persons, but here he proves that "I am here how can you say like that?". Second belittle a person by their birth is the main weaopen of theirs.
கத்துக்கொடுத்ததே நீதானய்யா. நீ செஞ்சா நாகரிகம், நான்னா அநாகரீகமா?
ஜெ வை, தலைவரும் துணை முருகனும் வெறி கொண்டாணும் பொது வெளியில் பேசியதை விடவா.
இதையெல்லாம்
முதலில் ஆரம்பித்துத் தந்தது
முத்தமிழ் அறிஞரல்லவா.
h.Raja is not a first person and also not a last person.We expect
your opinion when it done by dravidans
எதுக்குன்னு தெரியல்ல எச். ராஜவோட முகத்தை நியாபகத்துல கொண்டுவந்தாலே கோபம் கோபமா வருது.
Raja`s answer should be wrong..But it is only reaction.Shall we questioned action? If no we have not right to critise him.
Post a Comment