Mar 1, 2018

கோமலி

'எனக்கு நிறைய சாப்பாடும் குழம்பும் வேணும்' என்று கேட்கிறான். 

அவன் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவன். சாப்பாடுதான் அவனது கடைசி ஆசையும் கூட. விடிந்தால் மரண தண்டனை. 

'நீ எவ்வளவு சாப்பிடுவ?' என்று அதிகாரி கிடக்கிறார். 

இரண்டு கைகளையும் அகட்டி 'இவ்வளவு' என்கிறான். அவனால் உண்மையாகவே அவ்வளவு உண்ண முடியுமா என்று சந்தேகிக்கிறார். ஆனால் கடைசி ஆசை அல்லவா? கொண்டு வந்து தருகிறார்கள். அவனால் முழுமையாக உண்ண முடிவதில்லை. 

தண்டனை நிறைவேற்றப்படுவதற்குத் தயாராகிறான். 

தான் அணிந்திருக்கும் பாசிமாலையைக் கழற்றி வைத்துவிட்டு 'என் பிணத்தைக் ஒப்படைக்கும் போது இதையெல்லாம் என் சொந்தக் காரங்ககிட்ட கொடுபீங்களா?' என்கிறான். ஆமாம் என்கிறார்கள்.

'இந்த சாப்பாடும் குழம்பும் என்னோடதுதானே' என்கிறான். அதற்கும் ஆமாம் என்கிறார்கள். 

'என் உடலையும் உடமையையும் ஒப்படைக்கும் போது கூடவே சேர்த்து இந்த மிச்சமான சாப்பாட்டையும் குழம்பையும் அவங்க கிட்ட கொடுத்துடுறீங்களா? அவங்க சாப்பிடட்டும்' என்கிறான்.

கதையைப் படித்து முடித்தவுடன் முகத்தில் அறைவது போல இருந்தது. சாகும் போதும் தன் குடும்பத்துக்காக உணவைத்த தேடுகிறான் அவன். நானும் நீங்களும் இப்படியெல்லாம் உழைப்பது நம் குடும்பத்துக்கான உணவைத் தேடத்தானே? 

கேரளாவில் கொல்லப்பட்ட மது நினைவுக்கு வந்தான். அவனும் உணவுக்காகத்தானே கை வைத்தான்?


'சாப்பாடுதான் முக்கியமா?' என்று மூன்று வேளைக்கும் சாப்பாடு கிடைப்பவர்கள் பேசலாம். இல்லாதவர்களுக்கு அதுதான் முக்கியம். வேலையெல்லாம் முடித்துவிட்டு  மாலை ஏழு மணிக்கு பசியோடு வீட்டுக்குச் செல்லும் போது யார் வாயைக் கொடுத்தாலும் கோபம் வரும். பசிக்கு முன்பாக எதுவுமே நிற்காது. அந்தப் பசியை எதிர்த்துதானே ஒவ்வொரு மனிதனும் கடைசி கணம் வரைக்கும் போராடிக் கொண்டிருக்கிறான்?

நாணற்காடனின் மொழிபெயர்ப்பில் 'கோமலி' என்றொரு சிறுகதைத் தொகுப்பு வெளியாகியிருக்கிறது. மிகச் சிறந்த சிறுகதைத் தொகுப்பு. அதில்தான் இந்தக் கதையை வாசித்தேன். நேர்த்தியாக மொழிபெயர்த்திருக்கிறார். நாணற்காடன் அடிப்படையில் ஹிந்தி ஆசிரியர். ஹிந்தியிலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட கதைகள் இவை. ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடியும். வாசிக்கும் பழக்கம் இருப்பவர்கள் வாங்கி வாசிக்க வேண்டும். வாசிப்பே இல்லாதவர்களும் வாசிக்கலாம். புத்தகத்தை வெளியிட்டிருக்கும் இடையன் இடைச்சி பதிப்பகத்துக்கு வாழ்த்துக்கள். 

அதே தொகுப்பில் இன்னொரு கதை.  'ஐந்து நிமிடங்கள்' என்று தலைப்பு.

பிரகாஷைச் சந்திக்க அவனது மனைவியும் மகனும் வருகிறார்கள்- அவன் அடைக்கப்பட்டிருக்கும் சிறைச்சாலைக்கு

'அஞ்சு நிமிஷம்தான்..பேசறதை பேசிக்குங்க' என்கிறார் காவலர். 

மனைவிக்கு பிரகாஷ் மீது நம்பிக்கை இருக்கிறது. அவர் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் உணவுக்காக ஏதோ செய்திருக்கிறார் என்றும் நம்புகிறாள். ஆனால் அவளது நம்பிக்கை இங்கே எதையும் மாற்றிவிடப் போவதில்லை. எதுவும் செய்வதற்கில்லை. விடிந்தால் பிரகாஷுக்கு தூக்கு. பிரகாஷின் மகன் கோபால் சிறு குழந்தை. அப்பாவை கையேடு அழைத்துச் செல்லப் போவதாக அவனது அம்மாவிடம் சொல்லியபடியே வருகிறான். அவளுக்கு வார்த்தைகள் எதுவுமில்லை.

அப்பாவைச் சந்தித்தவுடன் தனது சிலேட் உடைந்து விட்டதாகச் சொல்கிறான். பொம்மை வேண்டும் எனக் கேட்கிறான். தனது மனைவியிடம் 'அவனுக்கு சிலேட் வாங்கி கொடு;  பொம்மை வாங்கித் தந்துடு' என்கிறான் பிரகாஷ். கோபாலுக்கு எதுவும் புரியவில்லை.

'நீ நல்லா இரு...குழந்தையை நல்லா பார்த்துக்க..நான் போறேன்' என்கிறான் பிரகாஷ். காவலர் வந்து ஒதுக்கப்பட்ட ஐந்து நிமிட நேரம் முடிந்துவிட்டதாகச் சொல்லி  பிரகாஷின் மனைவியையும் கோபாலையும் துரத்தி விடுகிறான்.

இந்தக் கதையிலும் அடிநாதம் பசிதான். பசியை எதிர்க்க கொலைக் குற்றவாளி ஆகிறான் பிரகாஷ். 

இரண்டு கதைகளையும் படித்துவிட்டு மது பற்றிய செய்திகளைத் தேடிக் கொண்டிருந்தேன். ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்பாக எங்கள் உறவினர் வீட்டுக்குள் திருடன் வந்துவிட்டான். பிடித்து விட்டார்கள். அவனை விசாரித்துவிட்டு சக்கையாக அடித்து அனுப்பியிருக்கிறார்கள்.

'அநேகமா செத்து போயிடுவான்' என்றார்கள். ஊரே சேர்ந்து அடித்ததாகச் சொன்னார்கள்.

அவன் செத்திருக்கக் கூடும். 

மது விஷயம் வெளியே தெரிந்துவிட்டது. பசிக்காக செத்துக் கொண்டிருக்கும் எத்தனையோ மதுக்கள் பற்றி வெளியில் தெரிவதில்லை. பசி ஒருவனை அடுத்தவர்களிடம் அடி வாங்கச் செய்து மட்டுமே கொல்வதில்லை. ஏதேனும் ஒரு வகையில் கொன்று கொண்டுதான் இருக்கிறது.

கோமலி ஆன்லைனில் வாங்க : இணைப்பு 

8 எதிர் சப்தங்கள்:

அன்பே சிவம் said...

செவிக்குனவு இல்லாத போழ்தூ சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும். என்பது மருவி வயிற்றுப்பசிக்காக தேடி யவனைக் கொல். வசதியோடிருப் Power க்காக வளைந்து கொடு யென மாறிவிட்டது.

அன்பே சிவம் said...

ஏய்யா கொ.ப.செ. நீராவது சொல்லிட்டீரு. யென்னால மிடியல. ஒரே நாள்ள இம்புட்டுப் பபதிவு போட்டா எப்படி சமாளிக்குறது.

(மணி) தம்பி சிங்க குட்டி பேர் இன்னும் சொல்லல.

ரிஷபன் said...

வலி.

சோலச்சி said...

வலி நிறைந்த வாழ்க்கை .

Anonymous said...

கேரள கம்யூனிட்டுகள் நிலங்களையெல்லாம்
நாகரிக சமூகத்துக்கு பிரித்து கொடுத்து
விட்டார்கள். பொது இடம் என்பதே
இல்லை.
பொது இடங்கள் தான் மலைவாழ்
மக்களின் இடம்.
அதை அவர்கள் உடமை கொள்ள
வில்லையெனினும் அது அவர்களின்
வாழ்வாதார பூமி.
இதெல்லாம் கம்யூனிட்டுகளுக்கு புரியாது
கம்யூனிட்டு என்பது வறட்டு சித்தாந்தம்

சேக்காளி said...

// பசிக்கு முன்பாக எதுவுமே நிற்காது//
அதே வேளை அடுத்த நேர பசிக்காக சேர்த்து சாப்பிடவும் முடியாது.

சேக்காளி said...

//தம்பி சிங்க குட்டி பேர் இன்னும் சொல்லல.//
அவரு சொல்லல ன்னா நான் (பெயரை) சூட்டாம இருப்பேனா??? அவைத்தலைவா.
யோவ் தல நீரு என்ன பேரு ன்னாலும் வச்சிக்காரும் வே(ய்). என்னைப் பொறுத்தவரை February 8, 2018 at 1:23 PM ல நான் சொன்ன "குட்டியான்" ங்கற பேரு தான் அவனுக்கு.

நாணற்காடன் said...

அன்பும்
மகிழ்ச்சியும்