Mar 16, 2018

பிம்பம் - புனிதம்

பொதுவாக வெற்றியாளர்கள் தாம் விரும்புகிற ஆளுமைகளுக்கு சிலைகளை எழுப்புகிறார்கள். சிலைகளை எழுப்பியவர்கள் தோல்வியடையும் போது வெற்றியாளர்கள் வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற வேண்டும் என்று பேசுவது அவசியமில்லை. ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும், தாலிபான்களுக்கும், ஜனநாயகம் பேசுகிறவர்களுக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும். ஒரு பக்கம் இப்பேர்ப்பட்ட  தீவிரவாதிகள் என்றால் இத்தகைய சச்சரவுகள் எழும்போது எதிர்தரப்பில் இருப்பவர்கள் வெகு தீவிரமாக தமக்குப் பிடித்த ஆளுமைகளை பிம்பப்படுத்தத் தொடங்கிவிடுகிறார்கள்- இப்பொழுது பெரியாரை செய்து கொண்டிருப்பதை போல.

ஒன்றை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் தேசியமும் திராவிடமும்தான் மிக முக்கியமான அரசியல் சித்தாந்தங்களாக தமக்கான இடங்களை பிடித்து வைத்திருந்தன. அவை தவிர பிற சித்தாந்தங்கள் ஓரளவுதான் பேசு பொருளாக இருந்தனவே தவிர, திராவிடம் மற்றும் தேசியம் அளவுக்கான மக்கள் செல்வாக்கை அவற்றால் அடைய முடியவில்லை.  நூற்றாண்டின் இறுதியிலிருந்துதான் பல சித்தாந்தங்கள் வீரியத்துடன் தமக்கான இடத்தைக் கோரிக் கொண்டிருக்கின்றன. தலித்தியம், பெண்ணியம், சூழல் அரசியல், இந்துத்துவா என்று நிறைய தளங்களில் செயல்பாடுகள் நிகழும் போது வெறுமனே பிம்பப்படுத்துதல் எந்தவிதமான பலனையும் அளிக்கப் போவதில்லை.

பெரியார் ஈ.வெ.ராவை மட்டுமில்லை- ஒவ்வொரு ஆளுமையையும் சித்தாந்தத்தையும் அறிவார்ந்த அதே சமயம் விமர்சனப் பூர்வமான உரையாடல்கள் வழியாகவும், திறந்த கேள்விகளுடனுமாகவே புதுப்பிக்க முடியும். 

1916 ஆண்டு நீதிக்கட்சி தொடங்கப்படுகிறது. ஆரம்பத்தில் 'பார்ப்பனர் அல்லாத இயக்கமாக'ச் செயல்பட்ட போது பெரியாருக்கு கிட்டத்தட்ட நாற்பது வயது. தொடக்க காலத்தில் நீதி கட்சியில்  அவருடைய பங்களிப்பு பெரிய அளவில் இல்லை. (கி.வீரமணி பதிப்பித்த 'நீதிக்கட்சி இயக்கம் 1917 ' - தொகுப்பாசிரியர்: டி.வரதராஜுலு நாயுடு) என்ற புத்தகத்தை ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம். சர்.பிட்டி.தியாகராயச் செட்டியார், நடேச முதலியார், டி.எம்.நாயர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு 'பார்ப்பனரல்லாத மக்களின் பிரகடனத்தை' வெளியிட்டார்கள். இப்படி வடிவம் பெற்ற நீதிக் கட்சி அடுத்த இருபதாண்டுகளுக்குப் பிறகு 1937 ஆம் ஆண்டில் தேர்தலில் படு தோல்வியைச் சந்தித்தது. அப்பொழுதுதான் கட்சி, பெரியார் வசம் வருகிறது. 

பெரியார், 1919 ஆம் ஆண்டில் காங்கிரசில் சேர்ந்து 1925 ஆம் ஆண்டில் அந்தக் கட்சியை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை நடத்தி வந்தார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறையிலிருந்த பெரியார் நீதிக் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அடுத்த சில ஆண்டுகளில் -1944 இல் 'திராவிடர் கழகம்' என்று பெயர் மாற்றம் செய்தார். 

தமது வாரிசாக சம்பத்தை முடிவு செய்தது பிறகு அவரைத் தவிர்த்துவிட்டு மணியம்மையை வாரிசாக்கியது, தி.மு.க உருவாக்கம், அண்ணாவுக்கு எதிரான பெரியாரின் தேர்தல் பிரச்சாரம், அண்ணாவைத் தோற்கடிக்க 'பச்சைத் தமிழன்' என்று காமராசருக்கு பட்டம் சூட்டி அவரது காங்கிரஸ் கட்சியை ஆதரித்தது என பெரியாரின் அரசியல் முரண்பாடுகள் பெரும்பாலும் இப்பொழுது மறைக்கப்பட்டுவிட்டன. 1957 ஆம் ஆண்டில் அண்ணா காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட போது அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் பெயர் சீனிவாசய்யர். காலம் முழுவதும் பிராமண எதிர்ப்பைக் கொண்டிருந்த பெரியார் ஏன் ஒரு பிராமணருக்காக பரப்புரை செய்தார் என்ற கேள்வி முக்கியமானது. சாதாரணமான தேர்தல் பிரச்சாரம் இல்லை அது. 

'வேசி மகன்' என்று அண்ணாவுக்கு எதிராகச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. 

'நாங்கள் அவரைத் தந்தை என்கிறோம்; அவர் எங்களை வேசி மகன் என்கிறார்' என்று அண்ணாதுரை கவுண்ட்டர் கொடுத்ததாகச் சொல்வார்கள். 

தம்மை மீறியொருவன் தலைவனாக மேலே வந்துவிடக் கூடாது என்கிற திராவிட அரசியல் அன்றைக்கே தொடங்கியிருக்கிறதா என்ற கேள்வியை இதிலிருந்து உருவாக்கலாம். திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக பெரியார் 1967 ஆம் ஆண்டு வரை பல தேர்தல்களில் காங்கிரசுக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்திருக்கிறார். 'பார்ப்பனிய- பனியா அரசு' என்று மத்திய அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்து, இதிலிருந்து நாம் வெளியேறிவிட  வேண்டும் என்றெல்லாம் பேசிய பெரியார் அதே காங்கிரஸ் கட்சிக்காக தேர்தலில் பரப்புரை செய்ததையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். 1967 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக வென்று அண்ணா பெரியாரிடம் வாழ்த்து பெறும் வரைக்கும் இந்த எதிர்ப்பு தொடர்ந்தது.

1960 ஆம் ஆண்டு இந்திய தேசப் படத்துக்கு தீ வையுங்கள் என்று 'விடுதலை' அறிக்கை எழுதியவர்(அப்பொழுது மத்தியில் காங்கிரஸ் அரசு) அடுத்த ஆண்டு 1961 இல்  'காங்கிரசில் சேர ஆலோசனை' என்று பத்திரிக்கையில் எழுதுகிறார். (ஆதாரம்: ஈ.வே.ரா சிந்தனைகள் என்ற தொகுப்பு நூல்). பெரியாரின் இந்த முரண்பாடுகளை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தை திமுக தீவிரமாக நடத்திய போது பெரியார் அந்தப் போராட்டத்தை ஏன் தீவிரமாக எதிர்த்தார் என்கிற குற்றச்சாட்டுக்கு பதில் தேட வேண்டியிருக்கிறது. 

1967 க்குப் பிறகு திமுக பெரியாரை மையப்படுத்தி அவரைத் தலைவராக, பிம்பமாக முன்னிறுத்தியதன் பின்னால் எவ்வளவோ காரணங்கள் இருக்கக் கூடும். திராவிட அரசியலில் 'ஒருமுகத் தன்மை' எப்பொழுதுமே உண்டு. பெரியார், அண்ணா, கருணாநிதிதி, ஜெயலலிதா, ஸ்டாலின்  என்று அது காலங்காலமாகத் தொடர்கிறது. பெரியாரின் திமுக எதிர்ப்பு, அண்ணாவுடனான ஒவ்வாமை என்பதெல்லாம் அவர்களின் பிரச்சினைகள் என்று எடுத்துக் கொள்ளலாம். 

பெரியாரை வாசிக்கும் போது அதற்கு மேலும் அதிர்ச்சிகள் இருக்கின்றன. பாரதியை கிறுக்கன் என்று விளித்திருக்கிறார். தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், மு.வ, இராசமாணிக்கனார் உள்ளிட்ட தமிழுக்கு முக்கியமான பங்களிப்புச் செய்தவர்களை 'ஒரு டஜன் உருப்படிகள்' என்று 1967 ஆம் ஆண்டு விடுதலை தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இவர்கள் ஆன்மிகம் பேசியவர்கள். அதனால் அவர்களை வசைபாடியிருக்கிறார் என்று கூட வைத்துக் கொள்ளலாம். 

பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்றார் என்பதுதான் பரவலான குற்றச்சாட்டு. அது மட்டுமில்லை. 'வீட்டில் தமிழில் பேசுகிறோம், கடிதப் போக்குவரத்து தமிழில் நடக்கிறது, சமயத்தை, இலக்கியத்தை தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறோம், இதற்கு மேல் சனியனான தமிழுக்கு என்ன வேண்டும்' என்று தமிழைச்  சனியன் என்கிறார். இதை எப்படிப் புரிந்து கொள்வது?

ஈ.வெ.ரா இதையெல்லாம் எந்தச் சந்தர்ப்பத்தில் எழுதினார்/ பேசினார் என்றும், அவற்றின் பின்னணி குறித்தும் உரையாட எவ்வளவோ இருக்கின்றன. தனது இறுதிக் காலம் வரைக்கும் பல தளங்களிலும் பேசியிருக்கிறார். இங்கே நிகழும் அரசியல் விளையாட்டின் காரணமாக பெரியார் மீது சுமத்தப்பட்டிருக்கும் புனித பிம்பத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியதுமில்லை. அவர் மீது வன்மத்தைக் கக்கவும் வேண்டியதில்லை. கடந்த தொண்ணூறு ஆண்டுகாலமாக தமிழகத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கும் முக்கியமான சித்தாந்தத்தை வடிவமைத்தவர் என்ற மரியாதையுண்டு. அதே சமயம் பெரியாரை மறுஉருவாக்கம் செய்ய வேண்டிய அவசியமிருக்கிறது. 'இங்கு எல்லாமே பெரியாரால்தான்' என்ற ஒருமுகத் தன்மையிலிருந்து நாம் விடுபட வேண்டியிருக்கிறது.  பல்வேறு சித்தாந்தங்கள் சீறிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் பெரியாரை மறு வாசிப்புக்கு உள்ளாக்க வேண்டியது பெரியாரிஸ்ட்களின் வேலையும்தான்.  

பெரியார் மீதான விமர்சனங்களை விவாதிக்காமல், அவரது கொள்கைகள் பற்றிய தெளிவான புரிதலை அடுத்த தலைமுறைக்கு உருவாக்காமல் பிம்பப்படுத்துவதால் எந்த நன்மையையும் விளையப் போவதில்லை. பெரியாரை ஏற்றுக் கொள்ளவும், மறுதலிக்கவும் ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் சிலைகளைச் சேதப்படுத்துவேன் என்பதில் ஒரு காரணம் கூட வலுவானதாக இருக்க முடியாது.

(உரையாடுவோம்)

29 எதிர் சப்தங்கள்:

Rathinasamy said...

சரியான பார்வை இங்கு புனிதப்படுத்துதல் மட்டுமே தலைமுறை கடந்தும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

Deiva said...

Well said

Selvaraj said...

'ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும், தாலிபான்களுக்கும், ஜனநாயகம் பேசுகிறவர்களுக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும்' கட்டுரையின் மையக்கருத்து இதுதான் என்று நினைக்கிறேன் நீங்கள் சமீபத்தில் எழுதியதில் முக்கியமான கட்டுரை இது. எல்லோருடைய சித்தாத்தங்களும் கொள்கைகளும் விவாதிக்க படவேண்டும் அது யாராக இருந்தாலும். அதற்காக சிலையை உடைப்பேன் என்று சொல்வது எவ்விதத்திலும் ஏற்புடையதில்லை. பொதுவாகவே நமக்கு முக்கிய ஆளுமைகளின் மறுபக்கம் தெரிவதில்லை அதை எழுத்தாளன் தன் எழுத்தின் மூலம் வெளிகொண்டுவருகிறான் அதனால் குறிவைக்கப்படுகிறான் (கவுரி லங்கேஷ் போல).
மக்களிடையே பிளவை உருவாக்கிக்கொண்டிருக்கும் ஒரு கட்சியை நம்பி இன்னொருமுறை நாட்டை ஒப்படைத்தோமானால் அதற்கான விளைவுகளை நாம் எதிர்கொண்டே ஆகவேண்டும்

Unknown said...

நவீன ஜெயமோகன்கள் இப்படித்தான் எழுதுவார்கள்.

Landless man said...

7 crore makkalukku periyar yarne theriyathu. Irukara 1 ladsam perum etho oru karanuththukkaha periyar nu pesuvanga avlo than. Tamilnattu arasiyal

Kalyankumar said...

அவருடைய 94 வயது வாழ்க்கையில் முரண்கள் இருந்திருக்கலாம்.ஆனால் அந்த முரண்களை மட்டும் சுட்டி அவரை மதிப்பிடுவது மிகப்பெரும் தவறு.அவரால் கிடைக்கபெற்றறு அதிகமா? இழந்தது அதிகமா என்று மட்டும் ஒப்பிடுங்கள்?கல்லெறிவது சுலபம்!அதற்கு மருத்துவம் பார்ப்பது எளிதல்ல!!

Aravind said...

என்த மநிதருக்கும் இருபக்கங்கள் உண்டு. உங்கள் கட்டுரைப்படி இரு பக்கங்களையும் சரியாக ஆராயவேண்டும். அவரிடமிருன்து ணல்லநவற்றை பின்பற்றலாம்.
இருண்தாலும் 23 புலிகேசி வடிவேல் டைலாக் ணியாபகம் வருது.
ணூரு வருடங்களுக்கு பிரகு வருபவர்களுக்கு ணாம் எப்படி இருண்தோம் என்று தெரியவா போகுது?

சேக்காளி said...

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
ஒருவேளை அந்த கிழவன் அமைதியாய் அவன் வேலையை மட்டும் பார்த்திருந்திருந்தால் இன்று இந்த பதிவிற்கு பின்னூட்டம் எழுதும் வளர்ச்சியை பெற்றிருப்பேனா எனத் தெரியவில்லை.காரணம் கேரளாவில் படித்தோர் சதவிகிதம் தமிழகத்தை விட அதிகம்.
பெண்ணிய விடுதலை பேசிய ஒருவர் வயதான காலத்தில் இளம்பெண்ணை திருமணம் செய்ததில் இன்று வரை எனக்கு உடன்பாடு இல்லைதான்.
இது திரு.செல்வராஜ் கூறியுள்ளது போல் நீங்கள் சமீபத்தில் எழுதிய முக்கியமான கட்டுரையும் கூடத்தான்.
இங்குதான் கேள்வி எழுகிறது.
இந்த முக்கியமான கட்டுரையை இப்போது எழுத வேண்டிய அவசியம் என்ன?.
திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப் பட்டது போல் இங்கு பெரியார் சிலையும் உடைக்கப் படும் எனக் கூற வேண்டியதின் அவசியம் என்ன?.
இத்தனை தீவிரமாக ஒன்றுபட்டு கிழவனுக்காக குரல் கொடுத்திருக்கா விட்டால் என்னவெல்லாம் செய்வார்கள்?.ஒரு நூற்றாண்டுக்கு முன் இருந்த உங்களின் அதிகாரத்தை சிறிது சரித்த அல்லது குறைத்த கிழவனின் மேல் அவன் செத்து சிலையான பின்பும் இத்தனை துவேசம் என்றால் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சுகபோக நலனுக்காக அடிமையாகவே இருக்க வேண்டும் என நினைக்கும் உங்களின் மேல் எத்தனை துவேசம் காட்ட வேண்டும்?.
வேட்டியை மடித்துக் கட்டினால் அவர்களும் ரவுடியாக முடிவதைப் போல் பூணூல் அணிந்து கொண்டால் நம்மாலும் கோயில்களில் மந்திரம் சொல்ல முடியுமா?.
பருவம் மாறி பெய்த மழை போன்றே இந்த கட்டுரை எனக்கு படுகிறது.

சேக்காளி said...

இந்த கட்டுரையோட மொல்லாளியும், அட்மினும் ஒருத்தரு தானே?

raja said...

பெரியாரை பற்றிய கட்டுரை அருமை. அவர் பார்ப்பனியத்தை தான் எதிர்த்தாரே தவிர பார்ப்பனரை எதிர்க்க வில்லை. அவரின் நெருங்கிய நண்பர் ராஜாஜியே அதற்கு சாட்சி.

கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு, பெண்ணுரிமை இவை மூன்றிலும் அவர் என்றுமே சமரசம் செய்து கொண்டதில்லை. "எவர் வரினும் எப்படி வரினும் எனக்கு பயமில்லை", என்று துணிவாக எதிர்த்தார். இந்த மூன்றிலும் பார்ப்பனியம் மட்டுமே அன்று சம்பந்தப்பட்டதால் அதைக் எதிர்ப்பதை தவிர வேறு வழி அவருக்கு இல்லை.

சுதந்திரமே அவசியமற்றது என்று அவர் கொள்கையில் தீவிரம் காட்டினார். இன்று நடப்பதை எல்லாம் பார்க்கும் போது சுதந்திரமே தேவை இல்லை என்று அவர் சொன்னது எவ்வளவு சரி என்று எனக்கு தோன்றுகிறது. மனதில் இருப்பதை பேச கூட இப்போது கருத்து சுதந்திரம் இல்லையே. காந்தியையே விட்டு வைத்தான் வெள்ளையன், கௌரி லங்கெஷை கூட இன்று விடுவதில்லை சுதந்திர இந்தியா!!

கடவுளின் பெயரால் நடக்கும் அட்டுழியங்கள் பொறுக்க முடிய வில்லை. சாதியை பற்றி சொல்லவே தேவை இல்லை. பெண்கள் அலுவலகத்தை பிடித்து தொங்கி கொண்டு இருக்கிறார்கள். 9 to 5 வேலைக்கு போவது மட்டுமே பெண்ணுரிமை என்று சொல்ல முடியுமா!! இடம் மாறி இருக்கிறார்கள் அவ்வளவே.

பெரியாரை போன்ற மனிதர்கள் எப்பொழுதுமே தேவை. பெரியார் கடவுள் இல்லை. புனித பிம்பமும் இல்லை. கண்டிப்பாக இல்லை. ஆனால் தான் வாழ்ந்த சிறிய சமூகத்தில் ஒளியை காண முயற்சித்தவர்,சமரசமில்லாமல் கடைசி வரை முயற்சித்தார் என்பதில் அவர் என்றுமே பெரியார்தான்.

Murugan R.D. said...

அன்றைய காலம் நாம் அறியாதது,,, வெறும் புத்தகங்களை வைத்து அவரை போற்றி துதிபாடி அவரின் பெருமையை கட்டிகாப்பதின் பின்னனியில் பலருக்கும் சுயநலம் இருக்கவே செய்கிறது,,, மற்ற மாநிலத்தவர் போல இங்கு தமிழர்கள் மட்டுமே அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற சுயஉணர்வு தோன்றிவிடக் கூடாது என்பதற்காகவே தொடர்ந்து புனிதப்படுத்தப்பட்டு வருகிறார்,,,,

கீழவெண்மணி படுகொலையில் அவரின் சொந்த சாதி ஆதரவு நிலைப்பாடு இங்கு தோலுரித்துக்காட்டப்பட்டும் இன்னமும் அவரை சாதிக்கு அப்பாற்பட்டவராக கருதவேண்டும் என்று பெரியாரிஸ்டுகள் நினைக்கிறார்கள், இப்பெரியாரிஸ்ட் இயக்கங்களின் மிகப்பெரிய பலம் நிச்சயமாக எக்காலத்திலும் தலித்துக்கள் தான்,, அவர் காலத்திலாவது சாதிபிரச்சனையை தீர்த்தாரா என்றால் நிச்சயமாக இல்லை,,, மாறா தலித்துக்களின் ஆதராவளன் என்று கூறிக்கொண்டு தலித்அல்லாத சாதியினரை ஆதிக்க சாதி என்று பெயரிட்டு தொடர்ந்து அவர்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படாதவாறு பார்த்துக்கொண்டார்,,

அப்படியென்றால் இவர் பின்னால் அன்று திரண்ட கூட்டம் தமிழரில்லையா என்றால் இல்லை தமிழர்களில் தலித்சாதிகள் அவருக்கு பின்னால் இருந்தன,,, அதே அளவுக்கு முற்போக்கு பேசிக்கொண்டு தமிழரல்லாத தெலுங்கு போன்றி பிற இனத்தவர்களின் கூட்டமும் பெரிதாகவே இருந்தது, அதையும் மீற அங்கு இருந்த தமிழர்கள் யாரென்று பார்த்தால் கடவுள் பயம் இல்லாமல் இயல்பாக வாழ்ந்த மற்றசாதி தமிழர்களும் முற்போக்கு கருத்துகளில் ஈடுபாட கொண்ட அன்றைய படிப்பறிவு கொண்ட இளம் தலைமுறையினரும்தான்,,,

எவ்வளவுதான் திராவிட இயக்கங்களில் தமிழர்கள் அர்ப்பணிப்பு போராட்டம் என்று பலமாக இருந்தாலும் திராவிட என்னும் பெயர்களில் இருக்கும் பல இயக்கங்களின் தலைவர்கள் எல்லோரும் தெலுங்கு கன்னடம் போன்ற மொழியினை தாய்மொழியாக கொண்ட மாற்றினத்தவரே என்பதை சிந்தித்துப்பார்க்கவேண்டும்,,, அவ்வளவு சாதுர்யமான அரசியல் அவர்களுடையது,, இப்போது தமிழ்தேசியம் பேசுபவர்கள் ராமசாமியின் முரண்பாடுகளையும் சுயநலத்தையும் தோலுரித்து சாட்சியங்களோடு எழுதினாலும் அதற்கு எதிராக களமாடும் திராவிடர்களின் பின்புலத்தை நோக்கினால் அவர்கள் முற்போக்கு தலித்துகளள் மற்றும் தெலுங்கு தலித்துகள். தெலுங்கு கன்னட இனத்தினரின் முகமூடி தெரியும்,,, இதில் ராமசாமியை புனிதப்படும் ஒரு பணியை பகுதிநேர வேலையாக கொண்டு செயல்படும் எழுத்தாளர்களிலும் இவர்களே அதிகம் உண்டும் எக்ஸ்ட்ரா பிட்டாக சில மலையாள வாடை எழுத்தாளர்களும் உண்டு,

ஆம் இனிமேலும் ராமசாமி தொடர்ந்து புனிதப்பிமப்படுத்தப்பட்டுக்கொண்டே தானிருப்பார்,, அவரை புனிதப்படுத்தும் செயல்களில் மறைமுகமாக பார்ப்பனீய ஊடகங்கள் கூட்டமைப்புகளும் கண்டிப்பாய் இருக்கும், இருவரின் நோக்கமும் மற்றமாநிலத்தவரை போல அந்த மொழிக்காரன்தான் அந்தந்த மாநிலத்தின் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்துவிடக்கூடாது என்பதற்காகதான், அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் இன்று அரசாங்க பணி அரசியல் அதிகாரம் தொழில் என்று வலுவான வலைப்பின்னல்களோடு வலம் வரும் தெலுங்கு இனமும் இன்னும் மற்ற அனைத்து இந்திய இனங்களும் தங்கள் அதிகாரத்தை இழக்க வேண்டி வருமே என்ற பயத்தினாலும் தமிழினம் தவிர்த்த மற்ற இனகூட்‌டமைப்புகள் மறைமுகமாக ராமசாமியை புனிதப்படுத்திக்கொண்டே இருக்கின்றன,,

Murugan R.D. said...

அவர் பேசிய பெண்ணுரிமை கருத்தை அன்றும் சரி இன்றும் சரி எவராலும் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்படுமா,,,
அவர் பேசிய பெண்ணுரிமை

பெண்கள் நாலைஞ்சு கல்யாணம் பண்ணிக்கணும்
கிராப் வெட்டிக்கணும்
கருப்பயை அகற்றி ஆம்பிள போல நடந்துக்கணும்

இதெல்லாம் புரட்சியா????
பெரியாரிஸ்ட்கள் யாராவது தங்கள் பெண்களை அவர்சொன்ன இந்த புரட்சி கருத்தின்படி வாழவைத்தார்கள்,,, மாற்றம் ஒன்றே மாறாதது,, இன்று பெண்களுக்கு ஏற்பட்டிருக்கு மாற்றம் காலத்தின் மாற்றம்,,, அதை பெரியார்தான் கொண்டுவந்தார் என்று சொல்வது எவ்வளவு கேலிக்கூத்தானது,,,,

இதுபோல தான் அவரின் பல கொள்கைகள் வாய்க்கு வந்தபோக்கில் உளறி கொட்டியது,,,,,

எந்த திராவிடிஸ்ட்களும் அவரின் உளறல்களை பற்றிய விமர்சனங்களுக்கு பொருத்தமான பதிலை தரமாட்டார்கள், அதை தவிர்த்துவிட்டு பொத்தாம் பொதுவா பெரியார் இல்லைன்னா இன்னிக்கு டாஸ்மாக் வந்திருக்குமா என்பது போன்ற உளறல்களையே பதிலாக தருவார்கள்,,,, ஒரு இசம் அல்லது இயக்கத்திற்கு அடிமையானவர்களின் புத்தி அடிமைதனமாகதான் இருக்கும்,,,, இது ஜக்கி பின்னாலும் போகும் கூட்டத்திற்கும் பொருந்தும் ராமசாமி பின்னால் ‌இன்றும் போகின்ற (தமிழர்கள்) கூட்டத்திற்கும் பொருந்தும்,

இதில் ஏன் தமிழர்கள் என்று குறிப்பிடுகிறேன் என்றால் அவ்வியக்கத்தில் உள்ள மற்ற இனத்தவருக்கு தாங்கள் தமிழரில்லை என்று அடையாளப்படுத்தபட்டு தனிமைபட்டுவிடக்கூடாது என்பதற்கான ஒரு சுயநல நோக்கம் இருக்கும், ஆனால் அங்கிருக்கும் தமிழர்களுக்கு அப்படி எந்த ஒரு உருப்படியான காரணமும் இராது,,, ஜெபக்கூட்டத்தில் பாதிரியார் சூன்னு சொன்னவுடன் பேய்பிடிததாற் போல கத்த கற்றுக்கொடுக்கப்பட்ட ஒரு முட்டாள் அடிமைகூட்டம் போலதான் நடந்துகொள்கிறார்கள்,,,

தமிழர்கள் பகுத்தறிவை பயன்படுத்தி பெரியாரையும் அவரின் பெயரையும் இயக்க‌த்தையும் இன்றும் கட்டிக்காக்கின்ற இயக்கங்கள் ஆதரவு தரும் தலைவர்கள் இவற்றை போற்றி ஊடகங்களில் எழுதிப்பரப்பப்படும் கட்டுரைகளின் நோக்கம் அக்கட்டுரையின் ஆசிரியரின் பின்புலம் போன்றவற்றை தீவிரமாக சிந்தித்து புரிந்து அவற்றிலிருந்து விடுபட்டு அடுத்த தலைமுறைக்கு (தமிழர்களின்) அவர்களின் பித்தலாட்டங்களை எளிமையாக புரியவைக்க வேண்டும்,,, இது தீவிரமாக முன்னெடுக்கப்பட வேண்டிய விசயம்,,,,

தமிழகம் முழுவம் பரவலாக உள்ள சிலைகளில் காமராஜர் தவிர்த்து மற்றவர்களின் இனம் எது என்று சொல்லி புரிய வைக்கவேண்டும்,, எம்ஜிஆர் கருணாநிதி அண்ணா போன்றவர்களின் இன அடையாளம் எது? ராமசாமி காலகட்டதிலிருந்து இன்றுவரை புரட்சியாளர்கள் என்று நமக்கு சுட்டிக்காட்டப்பட்டவர்களில் தமிழர்கள் என்று எத்தனை பேர் உங்களுக்கு தெரியும் என்று கேட்டுபாருங்கள்,, எவரையும் சொல்லத்தெரியாது,,,

ராமசாமி புரட்சி பண்ணிய காலகட்டத்தில் தமிழர்கள் எவரும் போராடவில்லையா,, அப்பேர்பட்ட ஆளுமைகளுக்கு திராவிட வரலாற்றில் ஏதாவது இடமளித்திருக்கிறார்களா? சிந்தித்துபாருங்கள்,,,, மணியம்மை என்ன ஆனார்? வீரமணி எப்படி பதவிக்கு வந்தார்? வீரமணியின் தாய்மொழி என்ன? கொளத்தூர் மணியின் தாய்மொழி என்ன?

சுந்தரம் சின்னுசாமி said...

பெரியாரின் சமூக சிந்தனைகளை எல்லாம் விட்டுவிட்டு, பெரியார் எதிர்ப்புப் பல்லவியை கொஞ்சம் நீளமாக எழுதியிருக்கிறீர்கள். அவ்வளவுதான்

மதன் said...

சேக்காளி எழுதிய ஒரு வரி சொல்கிறது, பெரியார் எவ்வளவு பெரியவர் என்று.

“ஒருவேளை அந்த கிழவன் அமைதியாய் அவன் வேலையை மட்டும் பார்த்திருந்திருந்தால் இன்று இந்த பதிவிற்கு பின்னூட்டம் எழுதும் வளர்ச்சியை பெற்றிருப்பேனா எனத் தெரியவில்லை.”..

படித்த பெற்றோர்கள் உள்ள உங்களுக்கு தெரியப்போவதில்லை பெரியாரின் புரட்சிகளின் தாக்கத்தை. இந்த பின்னூட்டத்தை மெக்சிகோ கடற்கரையில் உட்கார்ந்து எழுதுவதன் காரணம் பார்ப்பனீயத்திலிருந்து அவர் தந்த சுதந்திரம்!!!

Murugan R.D. said...

சேக்காளி எழுதிய ஒரு வரி சொல்கிறது, பெரியார் எவ்வளவு பெரியவர் என்று.

“ஒருவேளை அந்த கிழவன் அமைதியாய் அவன் வேலையை மட்டும் பார்த்திருந்திருந்தால் இன்று இந்த பதிவிற்கு பின்னூட்டம் எழுதும் வளர்ச்சியை பெற்றிருப்பேனா எனத் தெரியவில்லை.”..

படித்த பெற்றோர்கள் உள்ள உங்களுக்கு தெரியப்போவதில்லை பெரியாரின் புரட்சிகளின் தாக்கத்தை. இந்த பின்னூட்டத்தை மெக்சிகோ கடற்கரையில் உட்கார்ந்து எழுதுவதன் காரணம் பார்ப்பனீயத்திலிருந்து அவர் தந்த சுதந்திரம்!!!//////////////////////////////////// நண்பர் மதன் அவர்களின் கருத்துக்கு எனது எளிமையான பதில்,

கிழவன் அமைதியாய் இருந்திருந்தாலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் சமூக மாற்றம் அவ்வப்போது ஏற்பட்டுக்கொண்டேதானிருக்கும்,,, இங்குள்ள பார்ப்பனர்களை தவிர மற்ற மாநிலத்தில் உள்ள பார்ப்பனர்கள் எல்லாம் நீங்கள் எதிர்பார்க்கும் அளவுகோலின் படிதான் நடந்துகொண்டார்களா? மற்ற மாநிலங்களில் சமூகப்போராட்டம் ராமசாமிக்கு முன்பும் அவரின் சமகாலகட்டத்திலும் நடந்ததில்லையா? நீங்கள் வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு இதை எழுதுவதற்கு காரணம் பெரியாரா? என்ன கொடும சார் இது,, அவ்வளவுதானா உங்க பகுத்தறிவு? பார்ப்பன துவேசத்தை அந்தளவுக்கு விதைத்துவிட்டு திராவிட பெயரில் இங்கு தமிழர்களின் உரிமைகளில் கைவைத்து அதிகாரத்தில் உலா வரும் மற்ற இனங்கள் கண்ணுக்கு தெரியரலையா?

பெரியாருக்கு முன்பே தமிழர்கள் கல்விகற்றதில்லையா? கடல்கடந்து வாணிகம் செய்ததில்லையா? கேட்டால் குறிப்பிட்ட இனத்தவர் பொருளாதார வசதி படைத்தவர்தான் படித்தனர் என்பீர்கள்,,, அப்படியென்றால் மற்ற மாநிலங்களில் எல்லாம் அனைத்து மக்களும் கல்வி கற்றுவந்தனரா? ஆம் என்றால் இன்றும் கல்வி அறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையில் ஏன் கேரளாவும் தமிழகமும் முன்னனியில் இருக்கிறது,,

பகுத்தறிவ பயன்படுத்துங்க நண்பா,,,,,

பெரியார் போராடவிட்டாலும் அப்போது போராடிக்கொண்டிருந்த இன்னும் பலரின் முயற்சியால் அவர் சாதித்ததாக நீங்கள் குறிப்பிடும் அத்தனை நிகழ்வுகளும் நடந்திருக்கும்,, என்ன ஒண்ணு இப்போது நீங்க இவரை கடவுள் ரேஞ்சுக்கு போற்றி புளங்காகிதப்படுகின்ற காமடியான நிகழ்வுகளை மற்றவர்கள் நடத்திக்கொண்டிருக்கமாட்டார்கள்,,,,,

அவர் சொன்னத அப்படியே ஏத்துக்கணும்னு அவசியமில்லைன்னு அவரே சொல்லியிருக்கார்ன்னு ஒரு பில்டப் கொடுக்குறீங்க,, அவர் என்ன புரட்சியாளரா பொட்டலம் கட்டிக்கொடுக்கும் பலசரக்கு கடைக்காரரா? நமக்கு பிடித்தமான கொள்கையை மட்டும் எடுத்துக்கொள்வதற்கு,, அவரின் தனிப்பட்ட வாழ்க்கை கணக்கில் கொள்ளகூடாது என்றாலாவது சரி அதென்ன கொள்கையில் தேவையானத எடுத்துக்கோங்க தேவையில்லாதத விட்டுடுங்கன்னு எல்லா திராவிட கூட்டமும் இப்படி லேகியம் விற்பது ‌போல கூவுறீங்க,,,,,

சேக்காளி said...

//பார்ப்பன துவேசத்தை அந்தளவுக்கு விதைத்துவிட்டு//
இத்தனை தீவிர எதிர்ப்பிற்கு இது தானே காரணம்.

சேக்காளி said...

// அவரின் பெருமையை கட்டிகாப்பதின் பின்னனியில் பலருக்கும் சுயநலம் இருக்கவே செய்கிறது//
ஆமாமா. அங்குன இருக்குற புறம்போக்கு இடத்துல நாலு சென்ட் இடம் பட்டா போட்டு தரப்போறாங்க.
திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப் பட்டது போல் இங்கு பெரியார் சிலையும் உடைக்கப் படும் எனக் கூற வேண்டியதின் அவசியம் என்ன?.

மதன் said...

முருகன்

எளிமையான பதில்னு சொல்லிட்டு என்னை பெரியார கடவுளா கும்பிடறேனு சொல்லிட்டீங்களே? உங்கள் பதிலில் என்னை பற்றி நிறைய தவறான அனுமானங்கள் :). ஒவ்வொன்றாக விளக்கி பதில் தர முடியாது, அது வீணும் கூட.

நீங்க சொல்றத பார்த்தால் காந்தி, நேரு னு யாரையும் கொண்டாட கூடாது.. அவங்க இல்லைனாலும் வேற யாராவது பின்னாடி போராடிருப்பாங்க. :)

சேக்காளி said...

//இந்த பின்னூட்டத்தை மெக்சிகோ கடற்கரையில் உட்கார்ந்து எழுதுவதன் காரணம்//
சொல்லுங்க நைனா,சரி நாச்சியா ன்னு இங்குன இருந்து சொல்ல வேண்டியவன் மெக்சிகோ வுல அதுவும் கடற்கறையில உக்காந்து எழுதுனா கடுப்பா தான இருக்கும்.
சீக்கிரம் இந்தியாவுக்கு அதுவும் தமிழகத்துக்கு வரவும்.
சாணி அள்ளுற வேலை,செருப்பு தைக்குற வேலை காத்திருக்கிறது.

Anonymous said...

PERIYARIN MUKKIYA KOLGAIGALA 'KADAVUL MARUPPAIYAIYUM''பார்ப்பாNA ETHIRPAIYUM' NAM DRAVIDA PARTIGAL ADOPT SEITHU KONDATHADHU THAN PIRACHINAIYE.
PERIYARUKKU MUNNUM,UDANAUM PALA NALLA SEYALGALAI SEITHAVARGAL ARE MANY PALAR.
SUBBARAYAN C.M. OF MADRAS PRESIDENCY MARRIED A WIDOW. HE WAS A STUDENT OF OXFORD. BEING A CASTE HINDU HE INTRODUCED RESERVATION FOR 'DALITS', HE WAS THE FIRST TO BRING RESVERATIONS FOR MUSLIMS/CHRISTIANS MUSH BEFORE CONGRESS. HE WAS SOLELY RESPONSIBLE FOR PASSING TEMPLE ENTRY ACT WHICH ALLOWED ' DALITS' TO ENTER TEMPLES.
KAMARAJ DID SO MUCH FOR CHILDREN EDUCATION. HE OPENED SCHOOLS EVERYWHERE. INTRODUCED THE 'NOON MEAL SCHEME' TO ATTARCT CHILDREN TO SCHOOL WITHOUT KILLING HUSBANDS THROUGH'TASMAC'
KAMRAJ MADE 'KAKKAN' A 'DALIT' AS HOME MINISTER WITH POLICE UNDER HIM' HE WAS THE FIRST C.M. TO HAVE MUSLIM/CHRISTIAN/WOMEN MINISTERS IN HISCABINET. PERHAPS HIS WAS THE SMALLEST MINISTRY
'பார்ப்பானையும் பாம்பையும் கண்டால் முதலில் பார்ப்பானை அடி’ என்று PERIYAR SONNATHAGA சொல்வார்கAL.
NANN PADITHA VARAYIL AVAR APPADI SONNATHGA THERIYAVILLAI.SU. BA.VEE. AN ARDENT FOLLOWER OF PERIYAR ALSO CONFIRMS PERIYAR NEVER SAID LIKE THAT.
அரிஜனனை அர்ச்சகர் ஆக்க சட்டம் POTTARGAL. WHY NOT IMPLEMNT IT. KERALA HAS DONE IT. WHY NOT TAMILNADU.
WHY NO BODY QUESTIONS 'BRAHMIN STUDENTS' ADMISSION TO PERIYAR MANIAMMAI UNIVERSITY. VEERAMANI WANTS
BRAHMIN STUDENTS MONEY BUT NOT BRAHMINS. IS IT NOT HYPOCRISY AT ITS WORST.
WHY NOT FREE ADMISSIONFOR DALITS. WHY NO DALIT HOD/VICE CHANCELLOR.
IT IS A PITY THAT ENTRNCE EXAMS ARE IN ENGLISH WHILE VEERAMANI WANTS 'NEET' EXAM TO BE IN TAMIL.
'TAMIL' IS NOT THERE IN PERIYAR MANIAMMAI UNIVERSITY BA/MA COURSE. BUT VEERA MANI SWEARS BY TAMIL.
VEERAMANI NEVER WANTED KARUNANIDHY TO RENOVE HIS YELLOW SHALL.(MANJAL THUNDU) . HIS ONLY AIM IS TO MAKE MONEY USING PERIYARS NAME.
THIS KIND OF HYPOCRATS ONLY CAUSE ANTY PERIYAR SENTIMENTS LIKE APPEASING OF MUSLIMS IS ONE OF THE REASONS
FOR GROWTH OF BJP

அர்ச்சகர் ஆVADHU IRUKKTUM. 'DALITT' KALAI 'JALLIKATTUVIL' PANGIRKKA SOLLUNGAL. VETTY VIDUVARGAL VETTY.
தலித் வெறுப்பு INGU KODI KATTY ARUKKUDDHU. PEYAR MATTUM 'PERIYARMANN'.
IN T.N. YOU CAN DISCUSS / DEFAME KAMARAJ/GANDHI / NEHRU AND OTHER LEADERS. NO HEALTHY DEBATE ON PERIYAR. WE ARE ONLY SAYING OTHERS HAVE ALSO DONE FOR 'SOCIAL JUSTICE' WHAT PERIYAR HAS DONE. PERIYAR EVEN WILL LIKE SUCH DEBATES.
BYQUESTIONING WE ARE ONLY MAKING HIS பகுத்தறிவ POINT CORRECT.
ANBUDN,
M.NAGESWARAN.












'

Unknown said...

சேக்காளி எழுதிய ஒரு வரி சொல்கிறது, பெரியார் எவ்வளவு பெரியவர் என்று.

“ஒருவேளை அந்த கிழவன் அமைதியாய் அவன் வேலையை மட்டும் பார்த்திருந்திருந்தால் இன்று இந்த பதிவிற்கு பின்னூட்டம் எழுதும் வளர்ச்சியை பெற்றிருப்பேனா எனத் தெரியவில்லை.”..

படித்த பெற்றோர்கள் உள்ள உங்களுக்கு தெரியப்போவதில்லை பெரியாரின் புரட்சிகளின் தாக்கத்தை. இந்த பின்னூட்டத்தை மெக்சிகோ கடற்கரையில் உட்கார்ந்து எழுதுவதன் காரணம் பார்ப்பனீயத்திலிருந்து அவர் தந்த சுதந்திரம்!!!"------------உண்மை , மற்ற மாநிலங்களை விட நாம் சிறிதேனும் உயர்ந்தே உள்ளோம் அதற்க்கு அவரின் பங்கு உள்ளது. கால மாற்றம் என சில மேதாவிகள் சொல்கிறார்கள் அப்படியானால் இந்தியா முழுவதும் ஒரு சீரான மாற்றம் வந்திருக்க வேண்டும். பெரியாரின் சமூக நீதி ,
பெண்ணுரிமை, ஆங்கில மொழி போன்ற முன்னெடுப்புகள் தான் இன்று எளிய பின்புலம் கொண்ட குடுப்பத்து பிள்ளைகள் உயர்ந்த நிலையை அடைய காரணம்

Anonymous said...

Aravindan Kannaiyan
9 hrs ·

ஈ.வெ.ரா பற்றி வா. மணிகண்டன்

வா.மணிகண்டன் பெரியார் பற்றி எழுதிய கட்டுரையை ஏனோ எல்லோரும் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்கள். பெரியாரை எல்லோரும் மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்றுச் சொல்லிவிட்டு "பெரியார் மீது சுமத்தப்பட்டிருக்கும் புனித பிம்பத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டியதுமில்லை. அவர் மீது வன்மத்தைக் கக்கவும் வேண்டியதில்லை" என்று நடுநிலை நாயகர் ஆகியிருக்கிறார் மணிகண்டன்.

தன் வாழ்நாள் முழுவதும், இறப்பதற்கு முன் நிகழத்திய கடைசி உரையிலும், வன்மத்தை கக்கிய ஒருவரை நோக்கி மற்றவர்கள் வன்மம் கக்க கூடாதென்கிறார். அது சரி வன்மம் என்று மணிகண்டன் எதைச் சொல்கிறார்? அப்பட்டமாக நாஜித்தனமான பேச்சை நாஜித்தனம் என்றுச் சொல்வதா வன்மம்?

முதுகுளத்தூர் கலவரத்துக்கிடையே இளைஞர்களை ரத்தத்தில் கையெழுத்துப் போட்டு தூக்குக்கு தயாராகச் சொன்னார் ஈ.வெ.ரா. ஏன்? "காந்தியின் சிலைகளை உடைக்கிறேன், பார்ப்பானை ஒழிக்கிறேன்" என்று உறுதிமொழியெடுத்து அதன்படி நடக்க.

அதே முதுகுளத்தூர் கலவரத்தின் போது பார்ப்பனரல்லாதோரை கத்தி வைத்துக் கொள்ளச் சொன்னார் இந்த பெரியவர். அதுப் பற்றிய சர்ச்சைக்கு பதில் சொல்லியிருக்கும் லட்சணம் பாரீர்:

"“நான் கத்தி வைத்துக் கொள் என்று பேசுவதால் இது வரை எந்தப் பார்ப்பானுக்கும் ஒரு சிறு காயம் கூட ஒரு அடி கூட விழவில்லையே! ஏன்?

நான் குத்தச்சொல்லி உத்தரவு கொடுத்தால் தானே நடக்கும். சும்மாவா கொல்வோம் என்கிறோம். ஒரு நிபந்தனையின் மீது தானே சொல்கிறோம். இன்னது செய்யாவிட்டால் இன்னது நடக்கும் என்கிறோம். நீ பிராமணன் என்று சொல்லாமல் பூணூலைக் கழற்றி விடேன். அப்படிக் குத்துபம்படியாகச் சொல்வதாக இருந்தாலும் ரகசியமாகவா செய்வேன்? சர்க்காருக்கு இன்னின்னார் இன்னின்னாரை குத்துவார்கள் என்று பெயர் கொடுத்து அவர்களுக்கும் பாதுக்காப்பளிக்க ஒரு வாய்ப்பளித்துவிட்டுத் தானே செய்வோம்!”

கீழ்வெண்மணியில் கொலை செய்யப்பட்டது தலித்துகள், கொன்றவர்கள் நாயுடு வம்சம், ஆனால் ஈ.வெ.ராவின் அறிக்கையோ பார்ப்பனர்களைச் சாடியது.

அம்ப்தேகரை தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து ஏமாற்றினார்கள் என்கிறார் ஏனென்றால் தலித்துகள் எப்படியும் அந்த 25% அளவுக்கு தேறமாட்டார்களாம். அவர் இரண்டாம் மனைவியை இகழ்ந்திருக்கிறார்.

பெண்களை விபசாரி, குச்சிக்காரி என்று பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறார். ஆகஸ்டு 15 கறுப்பு நாள் என்றார்.

அப்புறம் இந்த மாதிரியும் பேசியிருக்கிறார், "குளிக்க வேணுங்கிற ஞாபகமே எனக்கு வர்றதில்லை. அதை ஒரு தொந்தரவாகவே நினைக்கிறேன். இப்ப நான் குளிச்சி ஆறு நாள் ஆச்சு! "

படிச்சவனுக்கு வேலையில்லை ஆகவே கல்லூரியை மூடலாம் என்றும் யோசனை சொல்லியிருக்கிறார். வடிவேலு சொல்கிறார் போல் 'ரூம் போட்டு யோசிச்சிருப்பார்' என்று யாரும் நினைக்க வேண்டாம்.

"எப்படி நாத்திகரானார் எனக் கேட்டதற்குப் பதில், “"நான் அதுக்காகன்னு ஒண்ணுமே படிக்கல்லே; ஆராய்ச்சி பண்ணலே. பக்குவம் அடையலே. என் பகுத்தறிவுக்கு எட்டினதைச் சொல்றேன்."

படிக்கவில்லை, ஆராய்ச்சிப் பண்ணவில்லை ஆனால் பகுத்தறிந்தாராம். இந்த ஆள் பின்னாடி தமிழகம் போனதால் தான் இன்று ஆராய்ச்சி என்றால் தமிழன் திருவள்ளூவர் நியூட்டனுக்கு முன்னோடின்னு பாடப் புத்தகத்தில் எழுதறான்.

இன்னும் எத்தனை நாளைக்குத் தான் "அவரை முழுசா படிக்கனும்", "அதுல பாத்தீங்கன்னா அவர் சொன்னதை அப்படியே எடுத்துக்க கூடாது", " அவர் ஏன் சொன்னாருன்னா". அவர் சாதாரணர். வெறுப்பை விதைப்பதை முழு முதற் குறிக்கோளோக கொண்டார். தற்குறி. இதையெல்லாம் சுத்தமாக வன்மத்தோடுச் சொல்லவில்லை. I am just calling a spade a spade. Maybe I am calling it a bloody spade. But that's still no malice just factual.

அப்புறம் இந்த வீரமணி புத்தகத்தையெல்லாம் ஏன் தான் மேற்கோள் காட்டுகிறார்களோ. நல்ல தரமான அகடெமிக் புத்தகங்களை ஏனோ பலர் சுட்டிக் காட்டுவதேயில்லை. இதோ ஒரு நல்ல பட்டியல்.

1. Politics and Nationalist Awakening in South India, 1852-1891 — R. Suntheralingam
2. The Politics of South India: 1920-1937 — Christopher John Baker
3. Politics and social conflict in South India: The non-Brahmin movement and Tamil separatism, 1916-1929
4. The Politics of Cultural Nationalism in South India - Marguerite Ross Barnett (deals with Justice Party DK, DMK, 1967 elections etc). Detailed tables on caste and education of DMK/Congress etc.

யாராவது ஆர்.முத்துகுமார் புத்தகத்தை சுட்டிக் காட்டினால் அவர்களுக்கு வசைகள் காத்திருக்கிறது.

Murugan R.D. said...

//இந்த பின்னூட்டத்தை மெக்சிகோ கடற்கரையில் உட்கார்ந்து எழுதுவதன் காரணம்//
சொல்லுங்க நைனா,சரி நாச்சியா ன்னு இங்குன இருந்து சொல்ல வேண்டியவன் மெக்சிகோ வுல அதுவும் கடற்கறையில உக்காந்து எழுதுனா கடுப்பா தான இருக்கும்.
சீக்கிரம் இந்தியாவுக்கு அதுவும் தமிழகத்துக்கு வரவும்.
சாணி அள்ளுற வேலை,செருப்பு தைக்குற வேலை காத்திருக்கிறது. ./////////////////////////////

ஹாஹாஹாஹாஹஹ சோக்காளி
அப்படின்னா இங்க இருக்கிறவங்க எல்லாம் நீங்க சொல்ற வேலையைதான் செஞ்சிகிட்டிருக்காங்களா? இல்ல அந்த குறிப்பிட்ட சாதியதான் நீங்க சொல்றீங்கன்னா அதுலயே மெக்ஸிகோவை விட மேலனா நாடுகளில் உக்காந்து வேற என்னத்தையோ எழுதிகிட்டிருக்கிறவங்களுக்கும் பெரியார் தான் காரணமா? என்னங்கய்யா இப்படி காமடி பண்றீங்க,,,, அவர் போராடினார்னு சொல்றீங்க ஏத்துக்கிறோம், அவர்தான் மட்டும்தான் போராடினார் என்ற ரேஞ்சிக்கு சாமியடறீங்க பாருங்க அதான் கடுப்ப கிளப்புது,, நாளுக்குநாள் உங்க நன்றியுணர்ச்சி பெருகி பெருகி இந்த உலகமே அவரால்தான் உருவாச்சி அவரால்தான் நாங்க பிள்ள பெத்துகிட்டோம் ங்கிற ரேஞ்சிக்கு ரொம்ப அடிமைதனமான கோமாளிதனமா கருத்து சொல்லிடுவீங்களோன்னுதான் பயமா இருக்கு,

அவர்ட்ட இருக்கிற முரண்பாடுகளையும் சுயநலத்தையும் சுட்டிக்காட்டி விமர்சனம் பண்ணின எந்த ராமசாமி ஆதரவாளராவது ஆமாம் இவர் அப்படி பண்ணியிருக்ககூடாது ன்னு பகுத்தறிவோடு தைரியமா சொல்றீங்களா? கேட்டா மத்தவன பார்ப்பனிய அடிமைன்னு சொல்லிகிறீங்க, உங்களின் இந்த அடிமைதனத்துக்கு அந்த பார்ப்பனீய அடிமைதனத்துக்கு என்ன வித்தியாசம் இருக்கு,,,,,

சேக்காளி said...

//திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப் பட்டது போல் இங்கு பெரியார் சிலையும் உடைக்கப் படும் எனக் கூற வேண்டியதின் அவசியம் என்ன?.//
இந்த கேள்விக்கு பதில் சொல்லி விட்டு அடுத்து என் சாமியாட்டம் பற்றி விமர்சிக்கலாம் rdmuruganvps.
அதை தவிர்த்து விட்டு
1.நாளுக்குநாள் உங்க நன்றியுணர்ச்சி பெருகி பெருகி இந்த உலகமே அவரால்தான் உருவாச்சி
2.அவரால்தான் நாங்க பிள்ள பெத்துகிட்டோம்
ன்னெல்லாம் எழுதுனா ஒங்கள மாதிரி எனக்கும் கடுப்பு கிளம்பும் ன்னெல்லாம் நினைக்காதீங்க.அந்த காலகட்டத்தையெல்லாம் தாண்டி நாளாச்சு.

Anonymous said...

பெரியார் என்ன பெரிய அப்பா டக்கரா? | Periyar Enna Periya Appa Takkara ?
https://www.youtube.com/watch?v=4od3ut33HZg

Anonymous said...

Sekali really surprised me...seen his many comments in other articles....but this one is really a surprise....
/*
வேட்டியை மடித்துக் கட்டினால் அவர்களும் ரவுடியாக முடிவதைப் போல் பூணூல் அணிந்து கொண்டால் நம்மாலும் கோயில்களில் மந்திரம் சொல்ல முடியுமா?.
*/

:)

Congrats sekali...

கமல் said...

தொண்ணூறுகளின் இறுதியில்தான் பெண்ணியம் வளர்ந்தது எனக் பதிவிட்டுள்ளீர்கள். பெரியார் கண்ணம்மைக்கு மறுமணம் செய்து வைத்ததும், 1920ல் காந்தியிடம் கள்ளுக்கடை மறியலை நிறுத்துங்கள் எனகூறியபோது அது என் கையில் இல்லை. ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களின் கையில்தான் உள்ளது, எனக் கூறியது. பெண்ணியம் சார்ந்தது இல்லையா

கமல் said...

தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்

சேக்காளி said...

மருத்துவ மேற்படிப்பில் 27% என்றிருந்த பிற்படுத்தபட்டவருக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு ரத்து செய்திருக்கின்றது

எப்பொழுது என்றால், எச்.ராசா பெரியார் சிலையினை இடிப்போம் என சர்ச்சை கிளப்பிய நேரத்தில்

அட்டகாசமான திட்டமிது

தமிழ்நாட்டு கவனத்தை வேறுபக்கம் திருப்பிவிட்டு மிக நுணுக்கமாக இந்த அறிவிப்பினை செய்திருக்கின்றார்கள்

பெரியார் சிலையினை காக்க கிளம்பிய தமிழகம் பெரியாரின் கொள்கையினை தகர்ப்பதை கவனிக்காமல் விட்டுவிட்டது
நன்றி : Stanley Rajan