ஐரோப்பிய தேசங்களில் தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளைப் பற்றி ‘குறள்பாட்’ சிவா எழுதி அனுப்பியது.
1) ஏன் அமெரிக்காவை விட்டுவிட்டு ஐரோப்பாவில் வேலை வாய்ப்புகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்?
அ) பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் ஐரோப்பாவில் புதிது புதிகாக தொடங்கப்பட்டு வருகின்றன. உண்மையிலேயே அந்நிறுவனங்கள் தமக்குத் தேவையான திறன்மிகு தொழிலாளர்கள்(Skilled workforce) கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள். நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆ) தகவல் தொழில்நுட்ப பணிகளுக்கான நுழைவு இசவு (விசா) அமெரிக்காவைக் காட்டிலும் ஐரோப்பாவில் பெறுவது எளிது. டொனால்ட் ட்ரம்ப் வந்த பிறகு செய்யப்பட்டிருக்கும் விசா கெடுபிடிகள் ஐரோப்பிய நாடுகளில் இல்லை.
இ) உள்ளே நுழைந்துவிட்டால் மருத்துவம், கல்வி ஐரோப்பா முழுதும் இலவசம். ஜெர்மனி போன்ற நாடுகளில் கல்லூரியில் கூட கட்டணம் இல்லை. (அமெரிக்காவில் பள்ளி கல்வி இலவசம் ஆயினும் மருத்துவத்திற்கு நாம் செலவழிக்க வேண்டும்)
ஈ) பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் 4-5 வருடங்களுக்குள்ளாக நிரந்தரக் குடியுரிமை வாங்க வாய்ப்புள்ளது
உ) பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர் நலச்சட்டங்கள் தகவல் தொழில்நுட்பப் பணிகளுக்கும் பொருந்தும். பெரும்பாலும் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை தவிர நீங்கள் வேலை பார்க்க வேண்டி இருக்காது. மாலை முழுவதும் உங்களுக்கு தான். சரியான work-life balance என்பதை ஐரோப்பிய நாடுகளில் வாழலாம்.
ஊ) முக்கியமாக ஐரோப்பாவில் துப்பாக்கிகள் எளிதில் வாங்க முடியாது. (இதைச் சொல்வதற்காக அமெரிக்க வாழ் மக்களெல்லாம் சண்டைக்கு வராதீர்கள். எல்லா இடங்களிலும் சாதகங்களும் உண்டு, பாதகங்களும் உண்டு. மேலே குறிப்பிட்ட விஷயங்கள் ஐரோப்பாவிலும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காக கூறப்பட்டது)
கொசுறு: இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கான பயண நேரம் அமெரிக்காவைக் காட்டிலும் குறைவு.
2) ஐரோப்பாவில் எந்தெந்த நாடுகளில் வேலை கிடைக்கும்?
எப்படி நம் நாட்டில் பெங்களூரு, சென்னை, புனே, குர்கான் என சில நகரங்கள் தகவல் தொழில்நுட்ப வேலைகளுக்கு பெயர் பெற்றிருக்கின்றனவோ அதே போல ஐரோப்பாவில் பின்வரும் நகரங்கள் பெயர் பெற்றவை (அதற்காக மற்ற நகரங்களில் வேலை வாய்ப்புகள் இல்லை என்று கூறி விட முடியாது, ஆனால் பின்வரும் நகரங்களில் நீங்கள் முயற்சி செய்தால் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம்)
லண்டன் - இங்கிலாந்து
பெர்லின் - ஜெர்மனி
ஆம்ஸ்டர்டேம் - நெதர்லாந்து
லிஸ்பன் - போர்த்துகல்
வியன்னா - ஆஸ்திரியா
டப்ளின் - அயர்லாந்து
3) என்ன தகுதிகள் இருந்தால் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது?
ஏற்கனவே குறிப்பிட்டது போல, இது தகவல் தொழில்நுட்ப பணிகளை மட்டுமே பற்றியது, மற்ற பணிகளில் வேலை தேடுவோருக்கான தகவல் என்னிடம் இல்லை.
தகவல் தொழில்நுட்பத் துறையில் குறைந்தது 3-10 ஆண்டுகள் இருந்தால் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அதிக வருடங்கள் அனுபவம் இருந்தால் மிக நல்லது. டெவெலப்பராக (அல்லது டெஸ்டிங்கில் ஆட்டோமேஷன் டெவெலப்பராக) இருக்கும்பட்த்தில் வாய்ப்புகள் மிகப் பிரகாசம். டெஸ்டிங் அல்லது மேனேஜர் போன்ற பணிகளுக்கு விசா பெறுவது மிக கடினம். (இது என் அனுபவத்தில் சொல்வது, டெஸ்டிங் அல்லது மேனேஜர் போன்ற பணிகளுக்கு யாரேனும் விசா பெற்றிருந்தால் அதைப் பற்றி பகிரவும்)
4) சம்பளம், செலவுகள் பற்றி கூற முடியமா?
தற்போது ஐரோப்பாவில் தகவல் தொழில்நுட்ப பணிகளுக்கான சம்பளம் நன்றாக உள்ளது. லண்டன், ஆம்ஸ்டர்டேம் தவிர பிற நகரங்களில் வாழ்க்கை செலவு மிகக் குறைவு தான். ஒரு சிறிய உதாரணம் பார்க்கலாம்
பெர்லினில் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ள ஒருவருக்கு குறைந்தபட்சம் 5000 யூரோக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. (கவனிக்க, இது குறைந்தபட்சம் தான்). வரி போக கையில் மாசம் 2800 யூரோக்கள் கிடைக்கும். இதில் வீட்டு வாடகை, மற்ற செலவுகளெல்லாம் போக 1400 யூரோக்கள் சேமிக்க வாய்ப்புள்ளது. 1400 யூரோக்கள் என்பது இந்திய மதிப்பில் கிட்டதட்ட 1 லட்சம் ரூபாய் சேமிப்பு. மீண்டும் ஒரு முறை அழுத்திக் கூறுகிறேன், இது ஒரு உதாரணம் மட்டுமே, நகரத்திற்கு நகரம் சம்பளம் மாறுபடும், செலவுகளும் மாறுபடும். ஆனால் என்னுடைய கணிப்பபின்படி குறைந்தது 5 ஆண்டுகள் டெவெலப்பராக இருக்கும் ஒருவர் மாதம் 1 லட்சம் ரூபாய் சேமிக்க அதிக வாய்ப்புள்ளது (லண்டன், ஆம்ஸட்ர்டாம் தவிர்த்து)
5) இவ்வளவு நல்ல வாய்ப்புகள் இருந்தாலும் ஏன் எல்லாரும் இதற்கு முயற்சி செய்வதில்லை?
நிறையப் பேருக்கு ஐரோப்பிய வாய்ப்புகள் பற்றித் தெரிவதில்லை. மேலும் ஏற்கனவே குறிப்பிட்டது போல டெவெலப்பர்களுக்கும், ஆர்க்கிடெக்ட்டுகளுக்குமே வாய்ப்புகள் அதிகம், அதுவும் குறைந்தது 3 ஆண்டுகளாவது பணி அனுபவம் வேண்டும். அதிலும் தற்போதைய தொழில்நுட்பங்களில் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். இப்படி பல வடிகட்டிகள் இருப்பதால் எல்லாருக்கும் வேலை கிடைப்பது எளிதல்ல. ஆனால் தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தருமல்லவா, அதைப் போல முயன்றால் வேலை கிடைக்கும். அதற்கு எவ்வாறு தயார் ஆவது என்பதைப் பற்றி அடுத்த பதிவில் கூறுகிறேன்.
6) உள்ளூர் மொழிகளைப் பேசிப் பழக வேண்டிய அவசியம் உண்டா?
கட்டாயத் தேவை என்று சொல்ல வேண்டியதில்லை. பிரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மன் போன்ற மொழிகளில் ஏதேனும் ஒன்றைத் தெரிந்து வைத்திருந்தால் வேலையைத் தேடுவதற்கும் விசா சுலபமாக வாங்குவதற்கும் மிகுந்த உதவியாக இருக்கும்.
7) இந்தியாவில் வேலை தேடுவதற்கு Naukri, monster, Timesjobs மாதிரியான தளங்கள் இருக்கின்றன. ஐரோப்பாவில் எப்படி வேலை தேடுவது?
ஐரோப்பாவில் வேலை தேடுவதற்கும் நிறைய இணையத்தளங்கள் இருக்கின்றன. Y-axis மாதிரியான தரமான வேலை பெற்றுத் தரும் நிறுவனங்களும் இருக்கின்றன. போலிகளிடம் ஏமாறாமல் தப்பிப்பதும் அவசியம்.
இது ஒரு தொடக்கப்புள்ளிதான். இங்கேயும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதற்காக எழுதியிருக்கிறேன். ஆர்வமிருந்து சற்று கூடுதலாக நேரம் ஒதுக்கி இணையத்தில் தேடினால் போதுமானது. ஒரு நாளைக்கு அரை மணி நேரம் ஒதுக்கினாலே அட்டகாசப்படுத்திவிடலாம். நாம் தேடுவதில்தான் இருக்கிறது.
வேறு கேள்விகள் இருப்பின் என்னுடைய சிற்றறிவுக்கும், சிற்றனுபவத்திற்கும் எட்டிய வரையில் பதிலளிக்கிறேன்.
வேறு கேள்விகள் இருப்பின் என்னுடைய சிற்றறிவுக்கும், சிற்றனுபவத்திற்கும் எட்டிய வரையில் பதிலளிக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
-- சிவ சுப்பிரமணியம்
-- சிவ சுப்பிரமணியம்
8 எதிர் சப்தங்கள்:
US salaries are in general 50-100% more than Europe and also the living expenses are less than Europe (mostly). But the only problem is visa and also getting green card takes decades for Indians... But looks like Trump may bring a point based immigration system like in U.K. If that happens then immigrathon to US will be easy.
நன்றிகள் பல ஜி !! ! E C E முடித்திருக்கும் என் மகளுக்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன் ! ! !
Anna,
Can you please share siva subramaniam Email id, so that i can touch base with him?
-Hari
• ஒரு புள்ளியில் தான் எத்தனை எத்தனை கோடுகள் துவங்குகின்றன.
நன்றி சிவசுப்ரமணியம்.
Medicine is not free in Germany. You pay every month as insurance and when you go to a doctor he detects it from insurance.
I think it's the same in other European countries.
I am living in US for the past 20 years. If you make RS100000 + per month in India better stay there itself. Consider your travel cost to visit India. Also think about what you would be missing. I missed a lot of weddings, funerals etc..
Until you have the kids you can live in abroad. Once your kid grows up abroad then your savings is not going to help as you are forced to live in migrated country where your savings will allow you to live same middle class life but no relatives close by.
Consider everything not just money before you migrate.
(I guess other side is always greener).
People can also look into Canada, there are also lot of jobs available, compared to US, getting a visa is lot easier and getting PR (Permanent Resident) visa is also easy thing. When we compare with salary and savings Canada is much better option for Indians. This is based on my skill set, it may vary depending on person to person.
Hi,whether mainframe opportunity are there in Europe?
Post a Comment