டி.எஸ். ஐயர் டி.எஸ்.ஐயர் என்று ஒரு பார்ப்பன பயங்கரவாத ஆரிய வந்தேறி, ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி காரரை இந்தப் புகழ் புகழ்கிறீர்களே... அவர்கள் எல்லோருமே மற்றவர்களை அடிமைபடுத்தத் தானே நினைத்தார்கள்? வெறுமென கொவிலில் மணியடித்து சம்பாதித்த காசைத்தானே கொடுத்தார்கள்? போயும்போய் புகழ்வதற்கு அவர்தானா கிடைத்தார்?
ஒருவரை விமர்சனம் செய்ய வேண்டுமானால் குறைந்தபட்சமான தகவல்களையாவது தேடி எடுத்துக் கொள்வது நியாயமானதாக இருக்கும். டி.எஸ்.அய்யரையா புகழ்ந்து எழுதியிருக்கிறேன்? அவரது மகன் ஜி.எஸ்.லட்சுமண அய்யரைப் பற்றித்தான் எழுதியிருக்கிறேன். லட்சுமண அய்யரைத் தெரிந்து கொள்ள ஓயாமாரி என்கிற இந்த சலனப்படத்தையாவது பார்த்துவிடுங்கள். பிறகும் இதே கேள்வி இருந்தால் பேசலாம். அய்யர் என்றாலே ஏமாற்றுப் பேர்வழிகள் என்று முத்திரை குத்துவதுதைப் போன்ற அபத்தம் வேறெதுவும் இருக்க முடியாது.
கோபியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டிற்கு ஆதரவான போராட்டத்தில் மிக சரியாக பேசினீர்கள். கொஞ்சம் உணச்சிவசப்பட்டு பேசிவிட்டோமோ என்று பிறகு யோசித்தீர்களா?
எந்தக் கூட்டத்தில் பேசினாலும் அப்படித்தான் தோன்றுகிறது.
மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலில் இரோம் ஷர்மிளா வெறும் 90 வாக்குகள் மட்டும் பெற்று தேர்தலில் தோல்வியடைந்தபோது உங்கள் எண்ண ஓட்டம் எப்படியிருந்தது? நீங்கள் என்ன நினைத்தீர்கள்?
தோற்றுவிடுவார் என்று எதிர்பார்த்தேன். இவ்வளவு மோசமாக தோற்பார் என்று எதிர்பார்க்கவில்லை. இத்தகைய மனிதர்களை பொதுவாக ஊடகங்கள் ஏற்றிவிட்டுவிடுகின்றன. இந்தியத் தேர்தல் களத்தின் அடிப்படையே வேறு. ஊடகங்களுக்கும் சமூக வலைத்தளங்களுக்கும் தேர்தலுக்கும் சம்பந்தமே இல்லை. இன்றைய சூழலில் அவை இரண்டும் வெவ்வேறு உலகங்கள். ஆனால் ஊடகங்களில் விவாதிக்கப்படுவதை நம்பி தேர்தல் நுணுக்கத்தின் அடிநாதமே தெரியாமல் போட்டியிட்டுத் தோற்கிறார்கள்.
நீங்க எப்போதும் கோபிசெட்டிபாளையம், கரட்டிய பத்தி மட்டும் பேசுனா எப்படி தமிழ்நாடு முதலமைச்சர் ஆவது?
இனிமேலாவது நியூயார்க், வாஷிங்கடன் பற்றி பேச ஆரம்பிக்க வேண்டும்.
எப்போதும் அரசு பேருந்து, சாதாரண மெஸ்சில் உணவு, பார்த்து செலவு செய்வது. காசிலேயே கவனமாயிருப்பது என்ன உளவியல்?
அடிப்படையிலேயே நான் கஞ்சத்தனம் உடையவன். அப்பா வாங்கிக் கொடுத்திருந்த மிதிவண்டியில் ‘ப்ரேக்’ கட்டை தேய்ந்துவிடும் என்பதற்காக காலை உரசி உரசி நிறுத்திக் கொண்டிருந்தவன். செருப்பு தேயாதா என்று ஒரு கேள்வி தோன்றிய பிறகுதான் என் அறிவுக்கண் திறந்தது என்றால் முடிவு செய்து கொள்ளலாம். இப்பொழுதும் இதைத் தொடர்வதற்குக் காரணம் அதே குணமாகத்தான் இருக்க வேண்டும். பிறரின் பணம் நம்மிடமிருக்கும் போது இந்தக் கவனம் இன்னமும் அதிகமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
சமூக வலைத்தளங்களின் பரவலான பயன்பாட்டால் செய்தி (அச்சு) ஊடகத்திற்கான முக்கியத்துவம் குறைந்துள்ளதாக நினைக்கிறீர்களா?
சமூக வலைத்தளத்தில் பிக் பாஸ் பற்றி கொண்டாடித் தீர்ப்பார்கள். பங்களாப்புதூர் டீக்கடையில் அதைப் பற்றி பேசுகிறார்கள் என்று நினைக்கிறீர்களா? அடுத்த நாள் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் ஜிமிக்கி கம்மல் பாடல் பிரபலமாக இருக்கும் போது சங்ககிரி சலூனில் அதைப் பாடுகிறார்கள் என்று கருதுகிறீர்களா? நாம் சமூக வலைத்தளத்திற்குள் இருப்பதால் மொத்த உலகமும் இதற்குள்ளேயே இருக்கிறது என்று நினைத்துக் கொள்கிறோம். அப்படி இல்லை. ஏழு கோடி பேர் தமிழக மக்கள் தொகை என்றால் இணையதளத்தைப் பயன்படுத்துகிறவர்களின் எண்ணிக்கை சதவீதத்தின் அடிப்படையில் பார்த்தால் 10 என்ற அளவில் கூட இருக்குமா என்பது சந்தேகம். அச்சு ஊடகத்திற்கான தேவையும் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் தரம்தான் சறுக்கிக் கொண்டேயிருக்கிறது.
உங்களுக்கு தெரிந்தவரையில் "இலக்கியத்திற்கான சாகித்ய அகாடமி விருது" உண்மையிலேயே திறமையின் அடிப்படையில்தான் வழங்கப்படுகிறதா ? இல்லை இதிலும் வழக்கமான அரசியல்தானா?
அரசியலையும் இலக்கிய விருதுகளையும் பிரித்துப்பார்க்கிற அளவுக்கு நாம் ஒன்றும் பக்குவப்பட்ட சமூகமாக இல்லை. இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.
சமீபத்தில் ஒருசில பேச்சாளர்களின் பேச்சை காணொளியில் பார்த்தேன் பொதுவாக அவர்களின் கோர்வையான பேச்சின் சாரம்சம் என்னவென்றால் சொந்த ஊரைவிட்டு வெளியூர் வெளிநாடு சென்று வேலை பார்ப்பவர்கள் தன் வாழ்க்கையையே இழக்கிறார்கள் என்று எதிர்மறையாக பேசுகிறார்கள் (இவர்கள் பேசுவதும் வெளியூர் மேடைதான்) ஆனால் இவர்கள் அனைவரும் கல்லூரியில் பேராசிரியராகவோ அல்லது அரசுப்பள்ளியில் ஆசிரியராகவும் இருக்கின்ற காரணத்தால் பேசுகிறார்கள் என்று தோன்றுகிறது. எல்லோருக்கும் வாழ்கை ஒன்றுபோல் அமைவதில்லையே இந்த மாதிரி பேச்சுக்களை பார்க்கநேரிடும்போது என்ன நினைப்பீர்கள்?
மனிதர்களில் இரண்டு வகைகள்தான் பிரதானம். தாம் நன்றாக இருப்பதாகக் கருதிக் கொண்டு அடுத்தவர்களைப் பார்த்து ‘அய்யோ பாவம்’ என்பது முதல் வகை. அடுத்தவர்கள் நன்றாக இருப்பதாகக் கருதிக் கொண்டு தமக்குத் தாமே ‘அய்யோ பாவம்’ சொல்லிக் கொள்வது இரண்டாம் வகை. கொடுமை என்னவென்றால் இந்த இரண்டு வகையுமே முழுமையான உண்மை கிடையாது. இத்தகைய பேச்சுக்களைக் கேட்பதற்குப் பதிலாக ‘Mumbai talks about sex' என்று யூடியூப்பில் தேடினால் சுவாரசியமான வீடியோக்கள் கிடைக்கும்.
Sarahah கேள்வி பதில்கள்.
Sarahah கேள்வி பதில்கள்.
14 எதிர் சப்தங்கள்:
//அய்யர் என்றாலே ஏமாற்றுப் பேர்வழிகள் என்று முத்திரை குத்துவதுதைப் போன்ற அபத்தம் வேறெதுவும் இருக்க முடியாது.//
பார்ப்பனர்கள் இப்போது எப்படி என்று தெரியாது. ஆனால் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் பார்ப்பனர்கள் ஏமாற்றுப் பேர்வழிகளாகத்தான் இருந்திருக்கிறார்கள் என்று அறிய முடிகிறது. பார்ப்பனர்கள் நல்லவர்கள் என்று ஏதாவது வரலாற்றுப் புத்தகம் இருந்தால் தெரிவியுங்கள் படித்து தெரிந்து கொள்வோம்.
இரோம் ஷர்மிளா HAD FASTED OPPOSING Armed Forces Special Powers Act.
THIS ACT IS THERE EVEN IN KASHMIR. EVEN NEUTRAL KASHMIRI LEADERS ,THE PRESENT CM Mufti Sayeed DOES NOT WANT ITS WITHDRAWAL. MANY MANIPURI CITIZENS SECRETLY WELCOME THIS ACT. SAME STATUS IN KASHMIR.
ALL POLITICIANS ARE AWARE OF THIS.
OUR LADY இரோம் ஷர்மிளா BELIEVED THE MEDIA AND AS 'NISAPTHAM' TOLD SHE LOST BADLY.
SHE HAS TAKEN IT CORRECTLY .GOT MARRIED AND LEFT POLITICS/MANIPUR .
ADHU கஞ்சத்தனம் ILLAI. 'SIKKANAM' KNOWING THE VALUE OF MONEY. IT IS A TRAIT/VALUE/ATTITUDE TODAYS YOUNGSTERS
SHOULD HAVE WITH THEIR OWN MONEY ALSO.
ANBUDAN,
M.NAGESWARAN.
அன்புள்ள கதிர்வேல்,
இப்படி இருக்கும் பார்ப்பனர்களே எப்படியென்று தெரியாத போது வரலாற்றில் அத்தனை பார்ப்பனர்களும் அப்படித்தான் என்று எப்படி முடிவுக்கு வந்தீர்கள்? பார்ப்பனர்கள் ஆதிக்கசக்திகளாக இருந்தார்கள் என்பதற்கு உத்திரமேரூர் கல்வெட்டில் தொடங்கி நிறையச் சான்றுகளைத் தர முடியும். ஆனால் ‘அத்தனை பேருமே அப்படித்தான்’ என்று பொதுப்படையாகச் சொல்வதற்கு எந்த ஆதாரமும் இருப்பதாகத் தெரியவில்லை. திராவிட மாயையும் தவறு; ஆரிய மாயையும் தவறுதான்.
மணிகண்டன்
மணி சார்..எனக்குள்ளிருந்த பார்ப்பனர்கள் பற்றிய கண்ணோட்டம் இப்போது மாறுபட்டிருக்கிறது. நான் பார்த்த சிலரின் நடவடிக்கைகளும் செயல்களும் என்னை வேறொரு கண்ணோட்டத்துக்கு இட்டுச் சென்றுவிட்டன. கிட்டத்தட்ட ஒருமணிநேரம் இந்தக் காணொளி வரலாற்றுப் பதிவை வைத்தகண் மாறாமல், இப்படியொரு மனிதரா என்று செம்மாந்து பார்த்துக்கொண்டிருந்தேன். இனிமேல் 'கோபி' என்ற நகரைக் கேள்வியுறும்போதெல்லாம் "இலட்சுமண அய்யரின்" நினைவு வந்துவிடும். சலனப் படத்துக்கு நன்றிகள் !!
மிகவும் தன்னடக்கமும் வெளிப்படைத்தன்மையும் இருப்பதாக நம்பி சிக்கனத்திற்கும் கஞ்சத்தனத்திற்கும் வேறுபாடு இல்லாமல் எழுதுகிறீர்களோ? சிக்கனம் தேவையை தெரிந்து தெளிந்து வாழ்வது. கஞ்சம் தேவையையும் சுருக்கி சேமிப்பில் பேராசை கொண்டு வாழ்வது.
who will ring the bell?
http://tamil.eenaduindia.com/State/krishnagiri/2017/09/29194121/Chemical-pollution-in-kelavarapalli-dam.vpf
நன்றி மணிகண்டன் சார்.
//திராவிட மாயையும் தவறு; ஆரிய மாயையும் தவறுதான்.//
ஏன் மணி சார் இப்படி பயப்படுறீங்க. ஒன்று திராவிட மாயை தவறாக இருக்கனும் இல்லைனா ஆரிய மாயை தவறாக இருக்கனும் அதவிட்டுட்டு இரண்டுமே தவறுனு சொல்றீங்க.
சீரியஸான பிரச்சனைகளைப் பற்றி நீங்கள் எழுதும் போது, நீங்கள் நழுவிக்கொள்ளும் விதமாக எழுதுவது அப்பட்டமாக தெரிகிறது. உங்களுடைய எழுத்துக்களில் அதை நான் அடிக்கடி காண்கிறேன்.
உங்களுடைய பின்னூட்டத்தைப் பார்த்த போது கவிஞர் ஈரோடு தமிழன்பன் கூறியதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. அவர் கூறியது(காணொளியில் 19:00 - 20:00 நிமிடங்களில் பேசியதை பார்க்கவும்),
"நடுநிலைமைனா கோழைனு அர்த்தம். தவறுக்கு துணைபோகிறவன்னு அர்த்தம். திருடன்னு தெளிவாக தெரிந்த பிறகு தண்டிக்கலாமானா? நான் நடுநிலைமையோடு இருக்கேன்னா, அவன்கிட்ட ஏதோ வாங்கியிருக்கேனு அர்த்தம்."
உங்கள் எழுத்துக்களை நறுக்குத்தெரித்தாற் போல எழுதுங்கள். சரி, தவறுனு எதுவென்று தைரியமாக சொல்லுங்கள். திராவிட மாயையும் தவறு; ஆரிய மாயையும் தவறுதான்னு பொத்தாம் பொதுவாகவா சொல்லுவது உங்களைப் போன்று வளரும் எழுத்தாளர்களுக்கு அழகல்ல.
ஏற்கனவே நான் போட்ட பின்னூட்டத்தை நீங்கள் வெளியிடவில்லை. இந்த பின்னுட்டத்தை வெளியிடுவீர்களா என்று தெரியவில்லை.
திரு. Jaypon, Canada, ஒருவருக்கு கஞ்சத்தனமாக தோன்றுவது இன்னொருவருக்கு சிக்கனமாக இருக்கும், ஒருவருக்கு சிக்கனமாக தோன்றுவது மற்றவருக்கு கஞ்சத்தனமாக தோன்றும். மனிதருக்கு மனிதர் இது வேறுபாடும்.
கதிர்வேல்,
எந்தப் பின்னூட்டத்தையும் நான் வெளியிடாமல் நிறுத்தியது இல்லை. ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
ஆரியம் X திராவிடம் என்ற Binary யில் இருந்தால் இன்னொன்று தவறாகத்தான் இருக்கும். அய்யர்கள் எல்லோருமே தவறு என்று பொத்தாம் பொதுவாகச் சொல்கிறீர்கள் அல்லவா? நீங்கள் திராவிட மாயையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். பெரியாரியம் குப்பை என்று பெரியாரின் மொத்தக் கருத்துக்களையும் நிராகரிக்கிறார்கள் அல்லவா? அவர்கள் உங்களுக்கு எதிர் நிலையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். ஒன்று என் பக்கம் நில்; இல்லையென்றால் அவன் பக்கம் நில்- இரண்டு பக்கமும் நல்லதைப் பார்த்தால் நீ கோழை என்றால் நான் கோழையாகவே இருந்துவிட்டுப் போகிறேன். கழுத்தை வெட்டித்தான் நான் வீரன் என்றெல்லாம் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நன்றி.
அன்புள்ள மணி சார்,
பின்னூட்டத்தை வெளியிட்டதற்கு மிக்க நன்றி...
வணக்கம் அய்யரே.
இதென்னடா பின்னூட்ட பொட்டிக்கு வந்த சோதனை.
Mani Sir,
I have seen this documentary. Yes, really Iyer was a great person. His family members are very proud while talking about him. Some people are brainwashed in TN in the name of Dravidam/Aryam. Being human is more important than all these non-sense. Nothing wrong in being coward.
Continue your service. Vazga valamudan.
பார்ப்பன வெறுப்பு அளவுக்கதிகமாக தூண்டப் படுவதாகவே தோன்றுகிறது.அத்தனை பேரும் ஏமாற்றுப் பேர்வழிகள் என்பதற்கு நீங்கள் சொன்ன பதில் நியாயமானது திராவிடப் பிரச்சாரங்கள் அவர்கள் மீதான எதிர்மறை என்னத்தை அறிவுபோர்ரவமாக ஏற்படுத்தினாலும் ஆழ்மனம் அவர்களை நம்புகிறது.நண்பர் ஒருவர் (பார்ப்பனர் அல்ல) தன் வீட்டு வாடகைக்கு பிராமின்ஸ் யாரவது இருந்தா சொல்லுங்க என்றார்.அதற்கு அவர் சொன்ன காரணம் வாடகை சரியா கொடுத்துடுவாங்க. ஈசியா காலி பண்ண வச்சுடலாம் என்றார்.பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதோர் இரண்டு சாய்ஸ் இருந்தால் அதில் தேர்வு பார்ப்பனராகத் தான் இருக்கிறது.
Post a Comment