Aug 16, 2017

கேள்விக்கென்ன பதில்?

நீங்க எழுதறதெல்லாம் இலக்கியமே கிடையாதுன்னு சொல்லிருக்காங்களா? சொன்னால் ‘புடிச்சா படி இல்லன்னா விடு’ன்னு சொல்லுவீங்களா இல்ல சண்டைக்கு நிப்பீங்களா?

நான் எழுதுவது இலக்கியமே இல்லை என்றுதானே நானும் சொல்கிறேன்?!  ‘எதையும் நிரூபிக்காமல் சற்று சும்மா இருங்கள்’ என்பது ஆத்மாநாமின் பிரபலமான கவிதை வரி. 

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா? உங்களைப் பொறுத்த வரை எது கடவுள்?

நிரூபிக்க முடியாத எதுவுமே கடவுள்தான். ‘ஏன் லேட்’ உட்பட நிரூபிக்க முடியாதவனவற்றை எதிர்கொள்ளும் போதும் கடவுளே துணை.

What is your ambition in life? or what do you want to be in 10 years down the line?

இலட்சியம் என்று ஒன்றை வைத்துக் கொண்டு அதை அடைய முடியவில்லையென்றால் சமரசம் செய்து, மானங்கெட்டு....கச்சடா இல்லையா?. நமக்குப் பிடித்த காரியங்களைத் தொடர்ந்து செய்தால் காலம் நமக்கான இடத்தை உருவாக்கும்.

Writer, helping poor people, cinema- Next?

நிறைய எழுதுவது, நிறையப் பேருக்கு உதவுவது, நிறைய திரைப்படங்களில் பணியாற்றுவது.

ஒத்திசைவு ராமசாமி உங்கள கலாய்க்கிறாரே. அவருக்கு என்ன பதில் சொல்றீங்க?

அதில் தவறு என்ன இருக்கிறது? கலாய்க்கட்டும். வாசிக்கும் போது மெலிதாக புன்னகைத்துக் கொள்ள வேண்டியதுதான். 

உங்களுக்கு தம் இல்லையா இலக்கிய வாதிகளுடன் மல்லுக்கட்ட? பிக்பாஸ் கணேஷ் மாதிரி எப்ப பார்த்தாலும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் தானா?

சிக்ஸ் பேக் வைப்பதற்கான முயற்சிகளில் இருக்கிறேன். அதுவரைக்கும் அவரவர் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்போம்.

Question regarding Nisaptham. How do you choose beneficiary? Do you have any criteria? Verification?

தயவு செய்து நிசப்தம் தளத்தில் சில கட்டுரைகளையாவது வாசித்துவிடவும்.

தூர் வார்றது, பசங்களுக்கு படிப்பு சொல்றது, உதவி செய்றது, கட்டுரையா எழுதி தள்றது. இதெல்லாம் எதுக்கு. வேற வழியே இல்லையா. மாட்டிகிட்டாச்சா? நல்லா குடிச்சிட்டு இல்ல குடிக்காம சந்தோஷமா புடிச்ச பொண்னோட பொண்ணுங்களோட டான்சு, பாட்டுன்னு கூத்தடிக்க வேண்டாமா? உங்க வாழ்க்கையா பாத்தா சப்புன்னு இருக்கு. இவன் ரொம்ப ரொம்ப நல்லவன்டா. அய்யோ பாவம். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இல்லையா?

ஆமாங்க, பெங்களூரில் இருக்கிறேன் என்று சொல்லவே வெட்கமாக இருக்கிறது.

நீங்கள் என்னதான் நடுநிலை என்று சொல்லிக்கொண்டாலும் அவ்வப்போது உங்களது தி.மு.க பாசம் வெளிப்படுகிறதே...

எட்டாம் வகுப்பு படித்த போது திமுகவுக்காகத் தேர்தல் பரப்புரை செய்திருக்கிறேன். ஒருவேளை அந்தப் பாசமாகத்தான் இருக்க வேண்டும். அடுத்த முறை எட்டிப்பார்க்கும் போது ஒரேயடியாக அடிக்கிறேன்.

Sarahahவில் கேட்கப்பட்டவை.

5 எதிர் சப்தங்கள்:

vv9994013539@gmail.com said...

ஆக அருமையான நச்சு ன்னு பதில் வாழ்த்துகள் ஐயா.

சேக்காளி said...

//ஆமாங்க, பெங்களூரில் இருக்கிறேன் என்று சொல்லவே வெட்கமாக இருக்கிறது.//
வெட்கம் நல்லது

சேக்காளி said...

பதில் வேண்டுமென்றால் அங்கே தான் வரணுமாக்கும்??

Anonymous said...

//அடுத்த முறை எட்டிப்பார்க்கும் போது ஒரேயடியாக அடிக்கிறேன்// Epic & Hillarious

Rajan said...

யாருப்பா அந்த ஒத்திசைவு ராமசாமின்னு கூகிளாண்டவர் உதவியோட கண்டுபிடுச்சு போய்ப்பாத்தா தல சுத்திடுச்சு..
ஒரு சில கட்டுரைகள் படிச்சதுக்கே இப்படின்னா, ரெகுலரா படிக்கிறவங்க எவ்ளோ தெகிரியமானவங்களா இருக்கணும்?
ஐயோ அம்மானு ஓடி வந்துட்ட்டேன்..