ஐடி துறையில் புதிய நுட்பங்களைப் படிப்பது குறித்தும், புதிய துறைகளின் வேலை வாய்ப்புகள் குறித்தும் அவ்வப்பொழுது கேள்விகள் வருவதுண்டு. கீதா சுரேஷ் ஒரு கட்டுரை அனுப்பி வைத்திருக்கிறார். பிக்டேட்டா, ஹடூப் படிப்பது பற்றிய கட்டுரை. சுருக்கமான கட்டுரை என்றாலும் திறப்பு ஒன்றை உருவாக்கிவிடக் கூடும்.
கீதா சுரேஷின் கட்டுரை இது-
கீதா சுரேஷின் கட்டுரை இது-
****
தற்போது அமெரிக்காவில் மட்டும் 16800 ஹடூப் (Hadoop) வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் இரண்டு லட்சம் டேட்டா சயின்டிஸ்ட் பணிகளுக்கான தேவை இருக்கும் என கணித்திருக்கிறார்கள். டேட்டா சயின்டிஸ்ட் ஆக விரும்பினால் இன்றைய சூழலில் ஹடூப் பற்றிய அறிவு அவசியம்.
பெருந்தகவல் காலம்:
பிக்டேட்டா என்றால் என்ன, அவற்றை எவ்வாறு வகைப்படுத்துகிறார்கள், பெருந்தகவலை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதெல்லாம் குறித்தும், ஹடூப் டுட்டோரியல்களும் இணையத்தில் நிறைய இருக்கின்றன. முதலில் உள்ளே நுழைவது முக்கியம். நுனியைப் பிடித்துவிட்டால் போதும். கற்றுக் கொள்வது சுலபம். நிறையப் பேர் ‘ஐடிதுறையில் எப்படி ஒரு தொழில்நுட்பத்திலிருந்து இன்னொன்றுக்கு மாறுவது’ என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய பரிந்துரை பிக்டேட்டா என்பதாக இருக்கும். ஹடூப் படிப்பது பெரிய சிரமமில்லை. ஏற்கனவே ஐடி துறையில் அனுபவமிருப்பவர்களும் கூட பின்வரும் வகையில் தம்மைத் தயார் செய்து கொள்ளலாம்.
ஜாவா தெரிந்தவர்கள் - ஹடூப் டெவலப்பர் அல்லது ஹடூப் ஆர்க்கிடெக்ட்
SQL தெரிந்தவர்கள் - ஹடூப் டேட்டா அனலிஸ்ட் அல்லது ஹடூப் ஆர்க்கிடெக்ட்
டேட்டா ஆர்க்கிடெக்ட் - ஹடூப் ஆர்க்கிடெக்ட்
டேட்டாபேஸ் அட்மினிஸ்டரேஷன் - ஹடூப் அட்மினிஸ்டரேஷன்
ஏற்கனவே ஆயிரம் பிரச்சினைகள். அலுவலக அழுத்தம். நேரமில்லை. இதில் புதியதாக ஒன்றைப் படிக்க எப்படிங்க நேரம் கண்டுபிடிக்கிறது என்று கேட்கக் கூடும். அப்படித்தான் நானும் இருந்தேன். வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில் இப்படியானதொரு பத்தி இருந்தது. “ஒரு காலத்தில் நான் மிக பிஸியாக இருந்தேன்; அப்படித்தான் தான் நினைத்து கொண்டிருந்தேன். ஒரு வாரத்திற்கு 60 மணி நேரம் வேலை செய்தேன். ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தான் தூங்கினேன். மூச்சு விடக் கூட நேரமில்லை. இதன் ரகசியத்தைக் கண்டறிய வேண்டியிருந்தது. நான் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் - அது அலுவலக வேலை, உறக்கம், பிற வேலைகள் - என எதுவாக இருப்பினும் ஒவ்வொன்றிற்கும் உண்மையிலேயே எவ்வளவு நேரம் பிடிக்கிறது என்று கணக்கு எடுக்க ஆரம்பித்தேன். நான் எனக்கு பொய் சொல்லி கொண்டிருந்தேன் என்பதை உணர்ந்தேன். 60 மணி நேர வேலை என்பது கண்டிப்பாக இல்லை. அதிக நேரம் இன்டர்நெட் பார்க்க தான் செலவு செய்தேன்” என்று முடியும்.
நாமும் கூட நம் நேர மேலாண்மையைக் கணக்கிட்டுப் பார்க்கலாம். பல ரகசிய உண்மைகள் நமக்குத் தெரிய வரக் கூடும்.
நேர மேலாண்மை:
1. உங்களுக்கு தகுந்த சூழ்நிலையை உருவாக்கி கொள்ளுங்கள். ஹடூப் (Hadoop) படிப்பதற்கு ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கினால் போதும். உங்களால் எந்த ஒரு மணி நேரம் ஒதுக்க
முடியும்? காலையில் 7 மணி முதல் 8 மணியாக இருக்கலாம் அல்லது மாலையில் 9 மணி முதல் 10 மணியாக இருக்கலாம். இதை முன்கூட்டியே முடிவு செய்து விடுங்கள். இதை வழக்கமாகச் செய்யும் ஒரு பழக்கத்தோடு இணைத்துவிட்டால் செயல்படுத்துவது எளிமையாக இருக்கும். உதாரணத்திற்கு இரவு உணவிற்கு அப்புறம் 1 மணி நேரம்- 9 மணி முதல் 10 அல்லது தூங்குவதற்கு முன்பு ஒரு மணி நேரம் 10 மணி முதல் 11 மணி.
2. முன்னுரிமையளிக்க வேண்டிய பணிகளை முடிவு எடுங்கள் - எது உங்களுக்கு முக்கியம், முக்கியமில்லை என்று எழுதி வைத்து கொள்ளுங்கள். தினமும் ஒரு மணி நேரம் மட்டும் முக்கியமில்லாத வேலையை ஒத்தி வையுங்கள். நீங்கள் ஒரு வேளை வேறொரு முக்கியமான வேலையில் ஏற்கனவே ஈடுபட்டிருந்தால் (உதாரணத்திற்கு திருமணம், பெண்கள் எனில் பிரசவம்), ஹடூப் படிப்பதை மூன்று அல்லது ஆறு மாதங்கள் தள்ளி வைத்துத் திட்டமிடலாம்.
3. ஹடூப் (Hadoop) படிப்பதை சிறு சிறு வேலைகளாக பிரித்து கொள்ளுங்கள் - 3 சிறு பகுதிகளாக பிரித்து கொள்ளலாம். ஹடூப் பற்றிய அடிப்படையான விஷயங்களை படித்தல், ஹடூப் பற்றிய அடிப்படையான விஷயங்களை பிராக்டிக்கலாக செய்து பழகுதல், ஒரு mock ப்ராஜெக்ட் செய்வது. இதை இன்னும் சிறு பகுதிகளாக பிரித்து கொள்வதை பற்றி பிறகு பார்க்கலாம்.
4. உங்களை நீங்களே ஊக்க படுத்தி கொள்ளுங்கள் - தினமும் ஒரு மணி நேரம் படித்து முடித்ததும் உங்களை நீங்களே ஊக்கப் படுத்தி கொள்ளுங்கள். நீங்கள் விரும்பும் ஓர் உணவை (ஐஸ்கிரீம்?) உண்ணலாம் அல்லது ஒரு டிவி நிகழ்ச்சி அல்லது வழக்கம் போல ஃபேஸ்புக் அல்லது ட்விட்டர்.
இதுவொன்றும் பெரிய காரியமில்லை. மூன்றிலிருந்து ஆறு மாதங்களுக்குள் தயார் செய்து கொள்ளலாம். வேலை மாறுகிறோமா இல்லையா என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். சந்தையில் ‘ஹாட் கேக்’ ஒன்று நமக்குத் தெரியும் என்பதே தன்னம்பிக்கைத் தரக் கூடியதுதானே? பிக்டேட்டா, ஹடூப் என்றில்லை- வேறு எந்தவொரு நவீன தொழில்நுட்பத்தையும் இப்படிக் கற்றுக் கொள்ள முடியும்.
உங்களின் கருத்துக்களை தடைகளை அல்லது கேள்விகளை பின்னூட்டமிடுங்கள். விரிவாக உரையாடவும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும்த தயாராக இருக்கிறேன்.
geethashdp@gmail.com
9 எதிர் சப்தங்கள்:
i want to learn about java can you prefer any classification about java? am doing business in medical shop in own.but not able to enough money from business. so i need transfer to another choice like job or any kind of yearning.i am wasting my time from this industry.you said IT the next level for Big Data and Hadoop. so want to valuble response from your advice!. i had only for confident i will do. pleas recommend any other institution for doing java.
one thing i forget. i complete under graduation Bsc .
அருமையான பயனுள்ள தகவல். நன்றி
Very good useful information.
This is for சக்தி பாரதி, you have own business, Pharma business is going to grow more going forward. You could make more money than IT jobs. You should be proud of running own business in India. We need the people like you. I think you need some guidance and tips to make your business success.
சர்வ நிச்சயமாக பயனுள்ள கட்டுரை. ஆயினும் IT industry ல் வேறு ஒரு தொழில் நுட்பத்தில் பத்து ஆண்டு காலம் பணிபுரிந்து கொண்டு, என்ன தான் நேரம் ஒதுக்கி ஹாட் கேக் ஐ கற்று கொண்டாலும், எப்படி நூலின் முதல் நுனியை பற்றுவது? பணிபுரியும் நிறுவனத்தில் வாய்ப்பளித்தால் உண்டு...இல்லேயில் Senior ஆக பத்து வருட தொழில் நுட்ப அனுபவத்தையும் அதன் Salary Benefit யும் பொருட்படுத்தாது Junior Developer ஆக பணிபுரிய சித்தமாயிருக்க வேண்டும். அதற்கும் நிறுவனம் வாய்ப்பு கொடுக்குமா என்பது கேள்வி குறியே?
//Blogger Asok said...//
அதே
சர்வ நிச்சயமாக பயனுள்ள கட்டுரை. ஆயினும் IT industry ல் வேறு ஒரு தொழில் நுட்பத்தில் பத்து ஆண்டு காலம் பணிபுரிந்து கொண்டு, என்ன தான் நேரம் ஒதுக்கி ஹாட் கேக் ஐ கற்று கொண்டாலும், எப்படி நூலின் முதல் நுனியை பற்றுவது? பணிபுரியும் நிறுவனத்தில் வாய்ப்பளித்தால் உண்டு...இல்லேயில் Senior ஆக பத்து வருட தொழில் நுட்ப அனுபவத்தையும் அதன் Salary Benefit யும் பொருட்படுத்தாது Junior Developer ஆக பணிபுரிய சித்தமாயிருக்க வேண்டும். அதற்கும் நிறுவனம் வாய்ப்பு கொடுக்குமா என்பது கேள்வி குறியே?
There is definitely no reason why learning a new technology will not help, that too in IT industry. If you are already working as an Architect or a Senior Manager or PreSales lead, there are some skills you would have acquired such as Management, handling customer escalations, handling people issues, handling delivery issues, handling presales or proposals - these are valuable skills for which lot of folks are paying a huge amount to MBA colleges to acquire these skills. The new technology will be an additional skill and combined with your existing skills, you can easily become a Hadoop Architect or Hadoop Senior Manager or Hadoop PreSales lead etc - for which there is rarely any competition in the market as the technology itself is new and hardly anybody is there with 10 years of experience in Hadoop itself except few guys in Google, Amazon or Facebook. It is in our hands to identify our own strengths and convert them to an advantage for us. This will be a win win for you and your company too, as the companies are looking for folks who are proactive and develop their own additional skills. Every IT Company CEO has told that the technology disruption is the single biggest challenge in front of their companies. I am shortly writing a detailed post in my blog on this and will request Mr. Manikandan also to publish it if possible.
Thanks a lot. Very informative. Could you pls share your blog link? - Thanks again.
Post a Comment