Jul 27, 2017

அப்துல் கலாம்

காலையிலிருந்து எரிச்சலாகவே இருந்தது. அப்துல்கலாமை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் எடுத்துக் குப்புறக் கவிழ்த்துக் கொண்டிருந்தார்கள். இதெல்லாம் ஒரு ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கிறது. அக்டோபர் இரண்டாம் தேதியன்று காந்தியை விமர்சிப்பது போலத்தான். அப்படி விமர்சித்தால் இவர்கள் அரசியல் விஞ்ஞானிகள் சமூகப்புரட்சியாளர்கள் ஆகிவிடுகிறார்கள். இத்தகையவர்களிடம் ஒன்றும் பேசுவதற்கில்லை. ஏனென்றால் இவர்கள்தான் நாட்டுக்காகவும் நாட்டுமக்களுக்காகவும் அல்லும் பகலுமாக உழைத்துச் சலித்த பெருமக்கள் அல்லவா? குறுக்கே கிடக்கும் துரும்பைத் தள்ளிப் போட்டிருக்கமாட்டார்கள். ஆனால் வாய் நிறைய வக்கனை. ஒருவரையும் விட்டு வைக்கமட்டார்கள். அப்துல்கலாமை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன?

அப்துல்கலாம் மீதாக ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவர் செய்த முக்கியமான பணி என்றால் குழந்தைகளை நோக்கி நம் கவனத்தைச் செலுத்த திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். மாணவர்களின் முக்கியத்துவத்தைத் இந்த தேசத்துக்கு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டினார். சொல்வதுடனும் சுட்டிக்காட்டுவதுடனும் நிறுத்தவில்லை. செய்து காட்டினார். வடக்கும் தெற்குமாகவும் கிழக்கும் மேற்குமாகவும் தேசம் முழுக்கவும் தொடர்ந்து பயணித்தார். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சலிப்பேயில்லாமல் பேசினார். ஜனாதிபதி பதவியை விட்டு ஓய்வு பெற்ற பிறகும் பயணித்துக் கொண்டேயிருந்தார். அதற்காகவே அவரைக் கொண்டாட வேண்டும்.

எந்த ஊரிலிருந்து வேண்டுமானாலும் கிராமப்புற மாணவர்கள் நூறு பேர்களை எடுத்துக் கொள்ளலாம். மாணவர்களின் தேர்வு எந்த ஒழுங்குமில்லாத ரேண்டம் தேர்வாக இருக்கட்டும். அந்த மாணவர்களின் பிரச்சினை என்று அலசினால் நம்முடைய முடிவு என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? உறுதியாகச் சொல்ல முடியும்- தன்னம்பிக்கை குறைவு என்பதுதான் மிக முக்கியமானதாக இருக்கும். ஆசிரியர்களாலும், பெற்றோராலும், சமூகத்தாலும் நிவர்த்திக்க முடியாத அந்தக் குறையின் மீது பொடனி அடியாக அடித்த மனிதர் அப்துல்கலாம். தயக்கமேயில்லாமல் இதைச் சொல்லலாம். இளைஞர்களிடம் தன்னம்பிக்கையை ஊட்டுவதற்கான மனிதர்களே நம்மிடம் இல்லை என்பதுதான் நிதர்சனம்.

‘உன்னால் முடியும்’ என்று சொல்வதற்கே இங்கு ஆட்கள் இல்லையே! நுண்ணரசியல் பேசுகிறேன் பேர்வழி என்று எல்லாவற்றையும் எதிர்மறையாகப் பேசிப் பேசி அடுத்த தலைமுறையின் மனதின் அடியாழத்திலேயே எதிர்மறைச் சிந்தனைகளைத்தானே விதைத்து வைத்திருக்கிறோம்.‘இங்கே எதுவுமே சரியில்லை’ என்பதுதானே நம்மில் ஒவ்வொருவரின் முடிவுமாக இருக்கிறது. ‘என்னதான் பாடுபட்டாலும் என்னால் ஜெயிக்க முடியாது’ என்று பேசுகிற பல மாணவர்களை அடையாளம் காட்ட முடியும். இப்படி எல்லாவற்றிலும் எதிர்மறைச் சிந்தனைகளையே ஊட்டி ஊட்டி வளர்த்துக் கொண்டிருக்கும் நம் அரைவேக்காட்டு அறிவுஜீவிச் சமூகத்திற்கு அப்துல்கலாம் மாதிரியானவர்களைப் பார்த்தால் எரியத்தான் செய்யும்.

இளைஞர் சமூகத்தைப் பார்த்து எல்லாவற்றையும் நேர்மறையாக அணுகச் சொன்னவர் அவர். சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து மிகப்பெரும் உயரத்தை அடைந்தார். படித்து, வேலைக்குச் சென்று, படிப்படியாக உயர்நிலையை அடைந்து, தனிமனித ஒழுக்கத்திற்கு உதாரணமாகத்தானே வாழ்ந்து காட்டினார்? அத்தகைய நேர்மறையான சிந்தனையாளர்கள்தானே காலத்தின் தேவை? ‘இது வேண்டாம்’ ‘அது வேண்டாம்’ ‘அதில் நொட்டை’ ‘இதில் குட்டை’ என்று எல்லாவற்றையும் எதிர்த்துக் கொண்டேயிருக்கும் போலி முகங்கள்தான் தலைவர்கள். இல்லையா? அப்படியானவர்களைத் தலைவர்களாகக் காட்டுவதைத்தான் வெர்ச்சுவல் உலகமான சமூக ஊடகம் கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.

அப்துல்கலாம் மீதான அரசியல் பொருளாதார விமர்சனங்கள் எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தாலும் அவர் நம் காலத்தின் மகத்தான மனிதர். இளம் இதயங்களில் நெருப்பை மூட்டியவர் அவர். ‘அக்னிக்குஞ்சொன்று கண்டேன் அதை ஆங்கோர் காட்டினில் பொந்திடை வைத்தேன்’ என்ற வரிகளுடன் பொருந்திய நெருப்பு அது. அவர் இன்னமும் சில காலம் ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருக்க வேண்டும். வாழ்ந்த காலத்திலேயே ஆயிரக்கணக்கான கூட்டங்களில் பேசியிருக்கிறார். லட்சக்கணக்கான மாணவர்களுடன் ஆத்மார்த்தமாக உரையாடியிருக்கிறார். எந்த ஒரு கல்லூரியிலும் பள்ளியிலும் மாணவர்களிடம் பேசிப் பார்த்தவர்களுக்குத் தெரியும்- மாணவர்கள் கேள்வி கேட்கவே தயங்குவார்கள். அவர்களைத் ‘துணிந்து கேளுங்கள்’ என்று தூண்டிவிட்டவர் அவர். கேள்வி கேட்கவும், விவாதிக்கவும், இலக்குகளை நிர்ணயிக்கவும் அவர் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கொண்டேயிருந்தவர். நம் காலத்தின் இளம் சமுதாயத்துக்கு தெளிவான உந்துசக்தியாக இருந்தார்.

மிகப்பெரும் பதவியில் இருந்த போதும் ஊழலற்ற, எளிமையான மனிதராக முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். பிரணாப் முகர்ஜியும், பிரதீபா பாட்டிலும் இந்த நாட்டுக்குச் செய்தவை என்ன என்ற கேள்வியைக் கேட்டுப் பார்த்தால் அப்துல்கலாம் குறித்தான பல கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிடும். ஆனால் அதைச் செய்யமாட்டார்கள்.


பேசுகிறவர்கள் பேசிக் கொண்டேதான் இருப்பார்கள். 

அப்துல்கலாமிடமும் ஆயிரம் குறைகள் இருந்திருக்கலாம். குறைகளே இல்லாத மனிதர் வேண்டும் என்று கேட்டால் எங்கே போய்த் தேடுவது? நம்முடைய மக்களில் பெரும்பாலானவர்கள் இப்படியானவர்கள்தான்- ஒற்றை வரி பாராட்டைக் காட்டிலும் மணிக்கணக்கில் குறைகளை அடுக்குவார்கள். சமூக ஊடகம் அதே மனநிலைக்கு மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் தாண்டி- He was one of the greatest positive personality in our time.அவ்வளவுதான்.

8 எதிர் சப்தங்கள்:

கரந்தை ஜெயக்குமார் said...

கலாம்
போற்றுதலுக்குரியவர்

அன்பே சிவம் said...

தொலைச்சிட்டு தேடுறது நம்ம தே'சீ'ய
குணமாச்சே.
மணி
இதுக்கு மாற்று என்ன என இனியாவது காண்போம்
இனி.

இரா.கதிர்வேல் said...

சார் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து கொண்டு என்னத்தை ஊழல் செய்வது. ஊழல் செய்வதற்கெல்லாம் வொர்த்தான பதவி கிடையாது சார் அது. அப்துல்கலாம் சார் விஞ்ஞானியாக இருந்து செய்ததை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அவரும் பிரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டில் வரிசையில் வர வாய்ப்புள்ளது.

Anonymous said...

மிகப்பெரும் பதவியில் இருந்த போதும் ஊழலற்ற, எளிமையான மனிதராக முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். UNMAI. UNMAI. 1000% TRUE.
HE WAS ONE OF THE RAREST AMONG RARE SOULS WHO NEVER MISUSED THE FACILITIES OF "RASHTRAPATHY BHAVAN" EVEN FOR HIS RESEARCH.
FIRST MAN TO POPULARISE " YADHUM OORE YAVARUM KELIR" IN EUROPE.
UNLIKE MANY ONE MAN WHO REALLY WORKED FOR INDIA TO BECOME A 'VALLARASU'.
அப்துல்கலாமிடமும் ஆயிரம் குறைகள் இருந்திருக்கலாம. ORU ARGUEMENT KKU VENA IPPADY SOLLALAM.
NOT AT ALL TRUE. HE WAS A MAN WITH MINIMUMகுறைகள் /FAULTS.
HE WAS LIKE 'HIMALAYAS' BEYOND OUR LIMITED/WORLDLY MEASUREMENTS.
குறை SOLLIYE 'KULLMAHI' PONAVARGAL NAMM.
'VALTHIYE' VALARA VENDUM ENBADHU AVARATHU "KANAVU".
'VALTHUVOM' "VALARUVOM".
ANBUDAN,
M.NAGESWARAN.

பொன்.முத்துக்குமார் said...

கிட்டத்தட்ட காந்தி மாதிரி தனது வாழ்வையே தனது செய்தியாக விட்டுச்சென்றவர். தனது பணியினை அவ்வளவு சிரத்தையோடும் ஈடுபாட்டோடும் செய்தவர். அவர் விரும்பியபடியே மாணவர்களிடம் உரையாடி/உரையாற்றிக்கொண்டிருக்கும்போதே விடைபெற்றவர்.

கட்டவுட் மனிதர்கள் பின்னால் போக தயாராக இருக்கும் மக்களில் கொஞ்சபேராவது இவரை முன்மாதிரியாக கொள்வதில் என்ன சிரமம் என்று புரியவில்லை.

சேக்காளி said...

Saravanan Sekar said...

As a student got inspired by this person. At the age of 16, I read his biography in tamil (agni siragukal). It reinforced my desire to become engineer. By that time, he was not president yet, however, I am a great fan and admirer of him, ever since I came to know about him.
There are plenty of good things/traits, as a person we can learn from this refined man. Surely, we need to keep reminding the positives of Kalaam to present day younger generations, though there are chances of constructive criticism when he reined as president. Of course, I also have some comments on his silence during turbulent times in part of India.

Another aspect of Praising Kalaam (esp.in Tamil nadu) :

There are "n" number of whatsapp forwards and FB posts, claiming that he did this and that, which are grossly false and baseless.
For ex: one such Story of kalaam working as PWD engineer and devicing a plan for water distribution to vellore district when Kamarajar was CM.
In fact, Kalaam was studying Science (physics) and Engg (Aeronautical) during this Kamarajar period. Neihther choronology nor field expertise of Kalaam supports the above story.
To the height of it, there is one FB group claiming to be Dr.Abdul Kalam educational and greenery trust" is also posting a video endorsing the above story. I wish that such groups should be limited to FB and not to enter real world at any time.

In my humble opinion, such false messages over the period of time should vanish so as that real greatness of this man should come out and understood by people.
You would have already seen this. Would like to know your view on this, boss..


Aravind said...

காச்ச மரம்தாந் கல்லடி படும்.
i experienced this above saying by my real life with various job experiences every day.
The more good works we do, the more good names and people we earn and we also earn 1000 times more bad comments and enemies which should be converted possitively by us by developing us from bad comments and experiences.
People who criticise him now do just for earning popularity and there will be a lot off people to admire such people who are the main viewers of the big boss success who enjoy passing time finding faults in others.
as you said, no human is perfect and everybody should strive hard to develop themselves rather than complaining the system which gives themselves inner happiness.