அமெரிக்க நிறுவனமொன்றை பெங்களூரில் ஆரம்பித்தார்கள். எங்களோடு பணி புரிந்த இருவர் எட்டிக் குதித்தார்கள். ஏகப்பட்ட சம்பள உயர்வு, ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் அலுவலகத்தில் இருந்தால் போதும், நினைத்த மாத்திரம் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்று சகல மரியாதையோடு வேலைக்கு எடுத்துக் கொண்டார்கள். முதல் ஒரு வருடம் பிரச்சினையில்லை. அதன் பிறகு இவர்கள் வேலைக்குச் சேர்ந்த நிறுவனத்தை வேறொரு நிறுவனத்துக்கு விற்றுவிட்டார்கள். இங்கிருந்து எட்டிக் குதித்தவர்களில் ஒருவர் ஏற்கனவே ஹெச்1பி விசா வாங்கி அமெரிக்கா சென்றுவிட்டார். அவருக்குப் பிரச்சினையில்லை. ஆனால் இன்னொருவர் சிக்கிக் கொண்டார்.
’எங்ககிட்டவே தேவையான அளவுக்கு ஆட்கள் இருக்காங்க...உங்க ஆட்களைக் கிளம்பச் சொல்லுங்க’ என்று இந்த மாதம் வேலையைவிட்டுக் கிளம்பச் சொல்லிவிட்டார்கள்.
முதலாளித்துவ ஆதரவு ஆட்கள் வந்து ‘அப்படியெல்லாம் எந்த நிறுவனமும் அனுப்புவதில்லை’ என்பார்கள்.
டெல் நிறுவனம் சோனிக்வால் என்ற நிறுவனத்தை வாங்கிய பிறகு சோனிக்வாலின் பழைய பணியாளர்களைக் கிளம்பச் சொன்ன போது டெல் நிறுவனத்தில்தான் பணியில் இருந்தேன். முதலில் பெருந்தலைகளை வெட்டினார்கள். அடுத்ததாக இரண்டாம் கட்ட ஆட்களை அனுப்பினார்கள். ஆறு மாதத்தில் சுத்தமாக அனுப்பிவிட்டு கபளீகரம் செய்தார்கள். கார்போரேட் உலகில் இவையெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒரு நிறுவனத்தை இன்னொரு நிறுவனம் வாங்குவது என்பது அந்நிறுவனத்தின் பணியாளர்களை வாங்குவதற்காகவெல்லாம் இல்லை. ஆட்களை எப்படி வேண்டுமானாலும் தேடிப் பிடித்துவிடலாம். மாறாக ஒரு நிறுவனத்தின் அறிவு வளங்கள் என்பவைதான் சிக்காத வஸ்துகள். காலங்காலமாக அந்நிறுவனம் சேகரித்து வைத்திருக்கும் தொழில்நுட்பம், காப்புரிமைகள் உள்ளிட்டவற்றை வளைப்பதற்குத்தான் merger & acquisition என்ற தனிப்பிரிவையே பெரும் நிறுவனங்கள் வைத்திருக்கின்றன.
நேற்று அந்த ஒருவர் அழைத்துப் பேசினார். வீட்டில் அவர் ஒருவர் மட்டும்தான் வேலைக்குச் செல்கிறார். இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். வேலைக்குச் சென்றே தீர வேண்டும். ஏதாவது வேலை கிடைக்குமா என்பதுதான் அவரது கேள்வியாக இருந்தது. ‘மூணு மாசம் முன்னாடி கூட நினைக்கலைங்க’ என்றார். யார்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? இருக்கும் வரைக்கும் இந்த நிறுவனம்; வேலை சலித்துப் போனால் அல்லது சம்பளம் போதவில்லை என்று தோன்றினால் வேறு வேலை தேடிக் கொள்ளலாம் என்றுதான் முக்கால்வாசி ஆட்கள் இருக்கிறார்கள். நமக்கு வேலை சலித்தால் பிரச்சினையில்லை. உட்கார்ந்து உருப்போட்டு நேர்காணலுக்குச் சென்று வேறு வேலையை வாங்கிவிடலாம்தான். ஒருவேளை நிறுவனமே வெளியேறச் சொல்லிவிட்டால் என்ன செய்வது? சிக்கலே அங்குதான்.
முப்பத்தைந்து வயதைத் தாண்டியவர்களுக்கு பத்து வருடங்களுக்கும் அதிகமான அனுபவம் இருக்கும். வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து சராசரியாக வருடம் ஐந்து சதவீதம் சம்பள உயர்வு என்று கணக்குப் போட்டாலும் கூட இன்றைய தேதிக்கு பெருந்தொகையாக இருக்கும். இத்தகைய ஆட்களை எடுத்துக் கொள்ள நிறுவனங்கள் தயாராக இருப்பதில்லை. அதிகபட்சமாக எட்டு வருட அனுபவமுள்ள ஆட்கள் எங்களுக்கு போதும் என்கிறார்கள். பத்து அல்லது பனிரெண்டு வருட அனுபவங்கள் நிறைந்த ஆட்களை எடுக்க வேண்டிய சூழல் வந்தால் அந்த ஆள் மிகத் திறமை வாய்ந்தவனாக இருக்கிறானா என்றுதான் பார்க்கிறார்கள். அதனால்தான் தொடர்ச்சியாக அறிவைத் தீட்டிக் கொண்டேயிருக்க வேண்டியதாக இருக்கிறது. வெறுமனே கோடிங் தெரியும், டெஸ்டிங் தெரியும் என்று எல்லோருக்கும் தெரிந்தவற்றையே நமக்கும் தெரியும் என்று சொன்னால் நம்மை ஏன் அவர்கள் வேலைக்கு எடுக்க வேண்டும்? குறைவான சம்பளத்திற்கே சந்தையில் ஆட்கள் கிடைக்கிறார்களே?
எப்பொழுதாவது பொழுது போகாமல் இருக்கும் போது என்னை நானே எடைப் போட்டு பார்த்துக் கொள்வதுண்டு. பயமாகிவிடுகிறது. இன்றைக்கு ஐடி துறையில் செய்து கொண்டிருக்கும் எந்த வேலையாக இருந்தாலும் இனி வரும் காலத்தில் மேகக் கணி (Cloud Computing), பெருந்தகவல் (Big Data), Internet of Thing (IoT) என்ற மூன்றில் ஏதாவதுடன் அல்லது மூன்றுடனுமோ இணைந்துதான் செயல்படும் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
சில வருடங்களுக்கு முன்பாக இத்தகைய புதிய நுட்பங்களில் அடிப்படை அறிவையாவது பெற்று வைத்திருக்க வேண்டும் என்றுதான் சொன்னார்கள். ஆனால் இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. ஆழமான அறிவு தேவையாக இருக்கிறது.
ஃபேஸ்புக், யூடியூப் மாதிரியான சமூக வலைத்தளங்கள் பிக்டேட்டா என்பதை வெகு திறமையாகப் பயன்படுத்துகிறார்கள். இன்றைக்கு ஒரு நாளைக்கு எத்தனை ஸ்டேட்டஸ்கள் எழுதப்படுகின்றன? ஏற்றப்படும் படங்களின் எண்ணிக்கை எவ்வளவு கோடி இருக்கும்? எத்தனை லட்சம் சலனப்படங்கள் இணையத்தை நிரப்புகின்றன? யோசித்துப் பார்த்தால் மண்டை காயும். இவை அத்தனையும் தகவல்கள்(டேட்டா). தகவல்கள் எல்லாவற்றையும் சேகரித்து வைக்கிறார்கள். பகுக்கிறார்கள். ஆய்வு செய்கிறார்கள். இன்றைக்கு ஃபேஸ்புக் நினைத்தால் நமக்குப் பிடித்த நிறம், நமக்குப் பிடிக்காத மனிதர்கள், நம்முடைய இந்தக் கணத்தின் மனநிலை என எல்லாவற்றையும் தொகுத்து ஒரு புத்தகமாக அச்சடித்துக் கொடுத்துவிட முடியும். சம்பந்தமேயில்லாத ஒரு ஆளின் படத்தை ஃபேஸ்புக்கில் பதிவு செய்தால் ‘do you want to tag?' என்று யாராவது ஒரு ஆளைக் கோர்த்துவிட முயற்சி செய்கிறது. தன்னிடமிருக்கும் பல நூறு கோடி படங்களிலிருந்து சில மைக்ரோ வினாடிகளில் அந்த ஆளைக் கண்டுபிடித்து ‘அவர்தானே இது?’ என்று நம்மிடம் கேட்கிறது. லேசுப்பட்ட காரியமில்லை.
யூடியூப்பில் ஒரு பரிசோதனையைச் செய்து பார்க்கலாம். காலையில் ஆன்மிகப் படங்களாகப் பார்த்துவிட்டு மதியம் சினிமா பாடல்கள் இரவில் ஹாட் வீடியோஸ் என்று இரண்டு நாட்களுக்கு வழக்கப்படுத்தினால் மூன்றாவது நாள் காலை நேரத்தில் ஆன்மிகப் பாடல்கள் நமக்கு பரிந்துரை செய்யப்படும், மதியம் சினிமா பாடல்களை யூடியூப் பரிந்துரை செய்யும் இரவில் காத்ரீனா கைஃப்பின் மார்பகப் பிளவைக் காட்டி ‘இதைப் பார்’ என்று சொல்லும். நாம் இந்த அளவில்தான் யோசிப்போம். அவர்கள் நாம் கற்பனையே செய்ய முடியாத பல்வேறு பரிமாணங்களில் வெகு ஆழமாக ஆய்வுகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். சினிமா பாடல்கள் என்றால் யாருடைய இசையை விரும்புகிறோம், எந்த நடிகர் நடித்த பாடல்களை பார்க்கிறோம் என்பது வரை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்கிறார்கள்.
எல்லாமே பிக் டேட்டாதான். ஃபேஸ்புக், யூடியூப் மட்டுமில்லாமல் இன்றைக்கு ஆரக்கிள் கூட பிக்டேட்டாவை எடுத்துக் கொண்டு களமிறங்கியிருக்கிறது. ஐபிஎம் ஆரம்பித்திருக்கிறது. தகவல்களை எப்படிச் சேகரிப்பது, அவற்றை எப்படித் தொகுப்பது, எப்படி ஆய்வு செய்வது, தேவைப்படும் போது தகவல் சுரங்கத்திலிருந்து எப்படி மீண்டும் உருவி எடுப்பது என கலந்துகட்டி களமிறங்கியிருக்கிறார்கள்.
க்ளவுடும் அப்படித்தான். ஐ.ஒ.டியும் அப்படித்தான். படிக்கப் படிக்க கடலாக விரிகின்றன. எல்லாவற்றையும் பற்றியும் விரிவாக எழுதலாம் என்றும் கூட எண்ணமிருக்கிறது. எழுதுவதற்காகவாவது படிக்கலாம். பிறகு யாராவது நுட்பங்கள் பற்றி உரையாடும் போது இன்னமும் அறிவு விசாலமாகும். விசாலமாக்கினால்தான் தப்பிக்க முடியும். Survival of the fittest.
12 எதிர் சப்தங்கள்:
சார் நீங்கள் படித்ததை மறக்காமல் பதிவுகளாக எழுதுங்கள். எழுதினால் எங்களைப் போன்ற வளரும் தலைமுறைகள் படித்து தெரிந்து கொள்வோம்.
Please do write more...Me too in same category as your friend
ஆம். Survival of the fittest. காலம் காலமாக இது தான். இப்போது, இது மட்டும் தான்.
இப்படி வேலையை பறித்து வீட்டுக்கு அனுப்புவது உண்மையிலேயே கொடுமையான அனுபவம்தான். ஆனால் இது தவிர்க்கமுடியாதது. இதை ஒரு ஊக்கமாக!?# motivationஆக எடுத்துக்கொள்வது ஒரு வழி நீங்கள் சொல்வது போல. Stick as in Carrot and Stick approach of motivation.
இன்னொன்று financial planning. வேலையிழப்பு மற்றும் இன்ன பிற அவசர காலத் தேவைகளுக்கும் emergency fund என்று முதலீடு செய்துகொள்ள வேண்டும்.
தன்முனைப்போ செயலூக்கமோ திட்டமிடுதலோ இந்த மூன்றும் இல்லாத தமிழர்களுக்கு(இந்தியர்களுக்கு என்று சொல்லலாமா) நவீன முதலாளித்துவ உலகில் வாழ்வது சிரமம்தான்.
மற்றபடி IoT பற்றிய ஒரு கட்டுரைத் தொடர் நீங்கள் அறிந்திருக்கலாம் ஏனைய வாசகர்களுக்கு என் பகிர்தல் http://solvanam.com/?p=41247
PeopleSoft Campus Solution Functional
Bangalore
5 to 10 yrs
Position Informatica Developer
Location Bangalore
Experience 7-9 years
அண்ணன், மேல உள்ள இந்த பணியிடங்களுக்கு யாராவது இருந்தால் என்னுடைய mgkdasan@yahoo.co.in என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்ப சொல்லுங்கள்.
ஜெர்மனியில் ஒரு நிறுவன தொழிலாளி கண்டுபிடிக்கும் தொழில்நுட்பங்களுக்கான பேடண்ட்கள் அவருக்கு முழுமையாகவோ அல்லது பெரும்பான்மையான சதவிகிதத்திலோ சொந்தமாகிறது எனப் படித்த ஞாபகம். அமெரிக்காவில் நீங்கள் கண்டுபிடித்ததாக பாராட்டுப் பத்திரம் மற்றும் ஒரு $1500 மட்டுமே உங்களுக்குச் சொந்தமாகும். மற்றதெல்லாம் உங்கள் கம்பெனிக்கே! எனவேதான் உங்களை வெகு எளிதில் வேலையை விட்டுத் தூக்க முடிகிறது! அமெரிக்காவைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட இந்தியாவிலும் அதே நிலைமை தான். இதை மாற்றாமல் நம்மால் இந்த சட்டவிதிகளுக்குட்பட்டே நடப்பதாகக் காட்டப் படும் ஆட்குறைப்புகளை தடுக்க முடியாது!
ஸாப்ட்வேர் இல் ஆரம்பித்து அனைவரும் உணரவேன்டிய ஒரு சொற்றொடர் இருக்கு.
love your job and not your company at all, because you will never know when your company will stop loving you.
சந்தை நிலவரத்தை கன்கானித்துக்கொண்டே இருந்து அரிவை விசாலமாக்கிக்கொந்டே இருக்கவேண்டும்.
I always ask everyone to read this...
http://jef.mentalis.org/hersenspinsels/downloads/WhoMovedMyCheese_DrSpencerJohnson.pdf
https://www.youtube.com/watch?v=16hxCB1Dvd4
Very true. One needs to be constantly updated and alert. It is like running on the backward running conveyor belt.
To make some progress, you need to run even faster. This is more like the tiger by its tail, syndrome.
இந்தியாவிலாவது வேலை போனால் 3 அல்லது நாங்கு மாதாங்களாவது தாக்கு பிடித்திடலாம் ஆனால் அமெரிக்காவில் இப்படி நேரும் போது சேமிப்பு இல்லாமல் ஆடம்பராமாக வாழ்ந்த ஆட்கள் தெருவிற்கு வந்துவிடுவார்கள்
devops க்கும் இப்போது நல்ல வாய்ப்புக்கள் இருக்கிறது
Still, we are thinking how to use Facebook, google, AWS etc. Now time to change our direction. We have to develop India owned OS, cloud, search engine and we have to use only our products. So much data is stolen by big companies, those are being used against of us. We are using locally developed software in our agency, which is developed in Linux OS. The developer is created small APP in Android OS, which are being used for online order using Android phone. It is reduced so much billing entry in our business. I requested him my needs and what are SW/HW are available, he used and developed it. It is very cheap and competitive. We have to find our local talents and encourage them. It will be little hard in the beginning, but we would get soon what we need.
Post a Comment