அப்பா மீது எனக்கு பிரியம் அதிகம். பிரியம் என்றால் மரியாதை கலந்த அன்பு. அவர் அமர்ந்திருக்கும் அறையில் அவர் எதிரில் அமர மாட்டேன். அமரக் கூடாது என்றில்லை- ஏதோவொரு தயக்கம். அவரும் அப்படித்தான். யார் சிக்கினாலும் கலாய்க்கும் அவர் என்னைக் கிண்டல் செய்ததில்லை. இன்றைய மனநிலையில் அதைத் தெளிவாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை- அவருக்கும் எனக்குமிடையில் பிரிந்து விடாத அதே சமயம் நெருங்கிடாத ஓர் இடைவெளி இருண்டு கொண்டேயிருந்தது.
அப்பாவின் தாத்தா வசதி. எப்பேர்ப்பட்ட வசதி என்று தெரியவில்லை. ஆனால் நிறைய இடங்களைச் சுட்டிக்காட்டி ‘இதெல்லாம் ஒரு காலத்துல உங்களோடது’ என்று பலரும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர் காலத்திலேயே செல்வம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரையத் தொடங்கியிருக்கிறது. அப்பாவின் தந்தையின் காலத்தில் மொத்தமாகக் கரைந்து ஒன்றரை ஏக்கர் வயல் மட்டும் உணவுக்காக மிஞ்சியிருக்கிறது. அதுவும் கைவிட்டுப் போவதற்கு முன்பாகவே அப்பா எஸ்.எஸ்.எல்.சி முடித்து மின்வாரியத்தில் பணியில் சேர்ந்துவிட சோற்றுக்காகச் சிரமப்பட்டதில்லை. ஆயினும் அப்பாவின் வாழ்க்கை கிட்டத்தட்ட ஜீரோவிலிருந்துதான் தொடங்கியிருக்கிறது. ‘வெறும் இருபது ரூபாய் கடன் கேட்டு போயிருக்கிறேன்’ என்று அடிக்கடி சொல்வார். பணத்துக்கான தேவை அவருக்கு இருந்து கொண்டேயிருந்தது. அம்மாவைத் திருமணம் செய்த எண்பதுகளில் அப்பாவுக்கு ஆஸ்துமா தொந்தரவு உண்டு. சாணத்தினால் மொழுகப்பட்ட சொத்தலான நிலத்தில் பாயில் படுத்தது மட்டும் காரணமில்லை. நல்ல மருத்துவம் செய்து கொள்ள போதுமான வருமானமிருந்ததில்லை. கோட்டக்கல் ஆர்ய வைத்தியசாலாவிலிருந்து ஹைதராபாத் மீன் மருத்துவம் வரை சல்லிசான மருத்துவங்களைத் தேடித் தேடி அவற்றை நோக்கி அலைந்து கொண்டேயிருந்தவர் அவர். வெகு காலம் வரைக்கும் ஆஸ்துமாவுடன் போராடிக் கொண்டேயிருந்தார்.
திருமணத்திற்கு பிறகு நானும் தம்பியும் பிறந்து அம்மாவும் வேலைக்குச் சென்ற பிறகு ஓரளவு மிச்சமான பணத்தில் பார்த்த நல்ல வைத்தியங்களின் விளைவாக கடந்த இருபது வருடங்களாக நிம்மதியாக இருந்தார். ஆரம்ப காலத்தையும் வருமானப் பற்றாக்குறையின் காரணமாக தான் கடந்து வந்த சிரமங்களையும் அவர் மறந்ததேயில்லை. அவருக்கு பணத்தின் அருமை தெரிந்திருந்தது. கணக்கு வழக்கில் ஒரு பைசா பிசிறடிக்காது. தான் கொடுக்க வேண்டியதாக இருந்தாலும் தனக்கு வர வேண்டிய தொகையாக இருந்தாலும் விவரங்கள் தெளிவாக இருக்கும். ‘பணம் இல்லைன்னாலும் மரியாதை இருக்கும்...ஆனா அடுத்தவங்க கைகொடுக்கமாட்டாங்க...பணம்தான் காப்பாத்தும்...கவனமா இரு’ என்று ஒரு முறை சொல்லியிருக்கிறார்.
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் திருமணமாகி கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களாகிறது. நான் முதல் மகன். பிறந்தவுடன் மருத்துவமனையில் என்னைப் பார்த்து ‘மயில்குஞ்சு பார்த்திருக்கியா? படுத்திருக்குது பாரு’ என்று அம்மாவிடம் சொன்னாராம். அதன் பிறகு எனக்கு நினைவு தெரிய அவர் என்னை முத்தமிட்டதில்லை. மடியில் எடுத்து வைத்துக் கொண்டதில்லை. வெளிப்படையாகக் கொஞ்சியதுமில்லை. தம்பியைக் கடிந்து கொள்ளும் அவர் என்னை நேரடியாகக் கண்டிக்க மாட்டார். தாடியும் மீசையுமாக நான் திரியும் போது ‘அவனை ஷேவ் பண்ணச் சொல்லு’ என்று அம்மாவிடம் சொல்வார். ‘எந்நேரமும் லேப்டாப்பில் எழுதிட்டே இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்’ என்று அம்மாவிடம்தான் கேட்பார். என்னிடம் அவர் நேரடியாகப் பேசுவதேயில்லை என்பதை ரசித்துக் கொண்டேயிருப்பேன். அப்பாவின் குரலை அம்மா சில சமயங்களில் காட்டுவார். பல சமயங்களில் ‘நீங்களே அவன்கிட்ட சொல்லுங்க’ என்று அப்பாவைத் திணறடிப்பார். ஆனால் அப்பா சொல்ல மாட்டார். எப்பொழுதாவது சில சமயங்களில் அதுவும் ஊருக்குக் கிளம்பும் தருணங்களில் ‘உடம்பைப் பார்த்துக்க’ என்பதோடு சரி.
ஆயினும் தனது அன்பை அவர் ஏதாவதொரு வழியில் உணர்த்திக் கொண்டேயிருந்தார். அதையெல்லாம் நினைக்கும் போதுதான் உடைந்துவிடத் தோன்றுகிறது.
பள்ளியில் படிக்கும் போது மிதிவண்டி வேண்டுமெனக் கேட்டிருந்தேன். வெறும் ஐம்பது ரூபாய் குறைவு என்பதற்காக கவுந்தப்பாடியில் வாங்கி அதை பதினெட்டுக் கிலோமீட்டர் மிதித்துக் கொண்டே வந்திருந்தார். வியர்வை பெருக்கெடுத்திருந்தது. ஆனால் அப்பா காட்டிக் கொள்ளவில்லை.‘பத்து பைசா மிச்சமானாலும் பசங்களுக்குத்தானே நல்லது’ என்பது அவர் சித்தாந்தம். தான் அனுபவித்த எந்தக் கஷ்டத்தையும் தனது மகன்கள் பட்டுவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். அப்படித்தான் அவரது வாழ்க்கை முறையும் செலவினங்களும் அமைந்திருந்தது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் மாத்திரை என்ன விலை, மருத்துவருக்கு எவ்வளவு செலவு என்று அவருக்குச் சொல்லியாக வேண்டும். ‘வெட்டிச் செலவு’ என்று தனக்கான அனைத்து மருத்துவச் செலவுகளுக்கும் லேபிள் ஒட்டுவார். அதற்காகவே எந்தச் செலவையும் பாதியாகக் குறைத்துச் சொல்வோம்.
வெற்றிலை கூட குதப்பாதவர். புகை, குடி என்று எதுவுமில்லை. ஆனால் விதி வலியது. கடைசி ஆறு மாதங்களை அது தனது போக்கில் எடுத்துக் கொண்டது. அலோபதியால் கைவிடப்பட்ட பிறகு சித்த வைத்தியத்தில் பெருமளவு நலம் பெற்றிருந்தார். அவரால் வழக்கம்போல இல்லையென்றாலும் நடக்க முடிந்திருந்தது. நடைபயிற்சிக்குச் சென்றார். கடைசிவரைக்கும் சிரமமில்லாமல் உணவு உட்கொண்டார். ஆனால் எல்லோருக்கும் என்றாவது ஒரு நாள் ஆயுள் முடிந்துதானே தீர வேண்டும்?
கடந்த திங்கட்கிழமை ஊரில்தான் இருந்தேன். செவ்வாய்க்கிழமை அதிகாலை நான்கரை மணியளவில் தம்பியும் நானும் பெங்களூருவுக்கு கிளம்பினோம். அப்பா பேசிக் கொண்டுதான் இருந்தார். சேலம் தாண்டிய பிறகு அலைபேசி அழைப்பு வந்தது. அம்மா ‘சிவசங்கர் டாக்டரை வரச் சொல்லு’ என்றார். மருத்துவரை அழைத்தேன். மருத்துவர் வீட்டுக்குச் சென்று பார்த்துவிட்டு ‘பயப்பட ஒண்ணுமில்லை..பிரஷர் கொஞ்சம் குறைவா இருக்கு...நீங்க ஊருக்கு போங்க..நான் பார்த்துக்கிறேன்’ என்றார். தம்பி சேலத்தில் இறங்கி திரும்பவும் ஊருக்குச் சென்றுவிட்டான். எனக்கு ஏதோவொரு நம்பிக்கை இருந்தது. பெங்களூரு அலுவலகத்திலிருந்து மணிக்கு ஒரு முறை அழைத்து விவரங்கள் கேட்ட போது இரத்த அழுத்தம் உயரவே இல்லை. நான்கு மணிக்கு பெங்களூரிலிருந்து கிளம்பி பத்து மணிக்கு ஊருக்கு வந்து சேர்ந்த போதும் அப்பா ஐசியுவில் இருந்தார்.
மாலை வரைக்கும் நினைவு தப்பவில்லை. மதியம் ஹார்லிக்ஸ் கொடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் உணவும் உண்டிருக்கிறார். பேசியிருக்கிறார். நான் வந்து சேர்ந்த போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அல்லது அப்படித்தான் நான் நம்பினேன். அம்மா அழுது கொண்டிருந்தார். தம்பியும் அழுதான். எனக்கு ஐசியூ அறையைத் திறந்து செல்லவே பயமாக இருந்தது. எல்லோரும் வெளியில் காத்திருந்த போது மெதுவாக அருகில் சென்றேன். நெற்றி மீது கை வைத்து ‘அப்பா...தூங்கறீங்களா?’ என்றேன். தலையைத் திருப்பினார். கண்கள் மூடியிருந்தன. ஓரத்தில் ஈரம் கசிந்திருந்தது. அதற்கு மேல் பேசி அவரை மேலும் அழ வைத்துவிடக் கூடாது என மனம் அடித்துக் கொண்டது. அப்பொழுது மணி இரவு பதினொன்று.
அதிகாலை மூன்று மணிக்கு மருத்துவர் அழைத்து ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிட்டதாகச் சொன்னார். பிறகு ரத்த அழுத்தமும் இதயத்துடிப்பும் படிப்படியாகக் குறைந்தன. 28.12.2016 அதிகாலை ஐந்தரை மணிக்கு தனது இறுதி மூச்சை சுவாசித்தார். ஐசியூ அறையை எட்டிப் பார்த்த போது பல்ஸ் 0 என்று மானிட்டரில் தெரிந்தது. மருத்துவரிடம் அனுமதி கேட்டுச் சென்றேன். கண்கள் மூடியிருந்தன. அப்பாவின் நெஞ்சு மீது கை வைத்த போது சூடு இருந்தது. ஆனால் துடிப்பு இல்லை. அம்மாவிடம் எப்படிச் சொல்வது என்றே தெரியவில்லை. தம்பியை அழ வேண்டாம் என்ற போது அவனால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. முக்கியமானவர்களை அழைத்து அவர்களை மருத்துவமனைக்கு வரச் சொன்னேன். மருத்துவமனைக்கு வெளியில் மார்கழிக் குளிரில் சுப்ரபாதம் பாடிக் கொண்டிருந்தது. எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் அப்பா படுத்திருந்தார். இருள் விலகி வெளிச்சம் விழத் தொடங்கிய போது ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள்.
ஆம்புலன்ஸில் எடுத்து வந்தோம். வீட்டில் ஐந்து மணி நேரம் சலனமில்லாமல் படுத்துக் கிடந்தார். கூட்டத்தில் அழக் கூடாது என்ற சங்கல்பம் உடைந்து போனது. அவரை எடுப்பதற்கு சில நிமிடங்கள் முன்பாக அருகில் சென்று ‘ஒருவேளை அடுத்த ஜென்மம் என்றிருந்தால் நீங்களே எனக்கு அப்பாவா வாங்க’ என்றேன். அது மனப்பூர்வமாகச் சொன்ன சொற்கள். அவரிடமிருந்து நான் கற்றுக் கொள்ள இன்னமும் எவ்வளவோ இருக்கின்றன. என்னைச் செதுக்கியவர் அவர். இன்னமும் சில வருடங்களாவது என்னுடன் இருந்திருக்கலாம். இனி எந்தக் காலத்திலும் அந்தக் கண்களைப் பார்க்கப் போவதில்லை. குரலைக் கேட்கப் போவதுமில்லை.
ஒவ்வோர் உறவும் முக்கியமானவைதான். ஆனால் அப்பாவுடனான உறவு அதிசுவாரசியமானது. தனித்துவமானது. அந்த உறவில் கொண்டாட்டமில்லை. ஆனால் அந்த உறவின் வழியாகத்தான் நாம் நிறையக் கற்றுக் கொள்கிறோம். நம்மை வடிவமைத்துக் கொள்கிறோம். சரியான அப்பா கிடைத்தவர்கள் பாக்கியவான்கள். இன்னமும் கொஞ்ச காலம் அப்பா நம்முடன் வாழ வேண்டும் என்று நினைக்கும் தருணத்தில் அவரை இழந்துவிடுகிறவர்கள் துரதிர்ஷ்டசாலிகள். நான் பாக்கியவான்; அதே சமயம் துரதிர்ஷ்டசாலி.
மயானத்தில் அடுக்கி வைக்கப்பட்ட கட்டைகளின் மீது மயில்குஞ்சு போலத்தான் கிடந்தார். ‘மயில்குஞ்சு பார்த்திருக்கியா? படுத்திருக்குது பாரு’ என்று உள்ளூர ஒரு முறை கேட்டுக் கொண்டேன். எனது கையிலிருந்து நீண்ட தீக்கங்கு அவர் உடலின் மீது பெருநடனம் புரிந்தது. கால்களில் ஒட்டியிருந்த மயானத்தின் கரியுடன் வெறுமையாக வீடு திரும்பினோம். அவரது உடைகள், செருப்பு, கண்ணாடி, மாத்திரைகள் என அனைத்தும் வீட்டில் இருக்கின்றன. அவர் மட்டும்தான் இல்லை. எரிந்த பிறகு மிஞ்சிய எலும்புத் துண்டுகளையும் காவிரியில் கரைத்து விட்டாகிவிட்டது. வெற்றிடம் சூழ்ந்திருக்கிறது. அவர் இல்லைதான் ஆனால் என்னுடைய பெயருக்கு முன்பாக எப்பொழுதும் அவர் வாழ்ந்து கொண்டேதான் இருப்பார்.
111 எதிர் சப்தங்கள்:
கண்கள் கலங்குகின்றன. ஈடு செய்ய இயலாத இழப்பு, இட்டு நிரப்ப முடியாத இடம் அப்பாவினுடையது. ஆழ்ந்த இரங்கல்
என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்
குமாரசாமி திருசெங்கோடு
கண்ணில் நிறைந்து கொண்டே வந்த கண்ணீர், படித்து முடித்தபோது மடையுடைத்துக்கொண்டது. ஆழ்ந்த அனுதாபங்கள்,வேறென்ன சொல்லமுடியும்?
//ஒவ்வோர் உறவும் முக்கியமானவைதான். ஆனால் அப்பாவுடனான உறவு அதிசுவாரசியமானது. தனித்துவமானது. அந்த உறவில் கொண்டாட்டமில்லை. ஆனால் அந்த உறவின் வழியாகத்தான் நாம் நிறையக் கற்றுக் கொள்கிறோம். நம்மை வடிவமைத்துக் கொள்கிறோம். சரியான அப்பா கிடைத்தவர்கள் பாக்கியவான்கள். இன்னமும் கொஞ்ச காலம் அப்பா நம்முடன் வாழ வேண்டும் என்று நினைக்கும் தருணத்தில் அவரை இழந்துவிடுகிறவர்கள் துரதிர்ஷ்டசாலிகள். நான் பாக்கியவான்; அதே சமயம் துரதிர்ஷ்டசாலி.//
Feeling Sad Mani
ஆழ்ந்த அனுதாபங்கள், அன்னாரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திகிறோம்.
dear MANIKANDAN,
your dedicated honest, simple, high thinking #APPA# has made you what you are today. \always it is the family conditions chisels onesfuture. every good APPA has always shaped a good citizen . I pray for yr fathers SIVALOKAPRAPTI.
M V Seetaraman ( i am regularly following yr writings).
mani, sorry for your great lose.
ஆழ்ந்த இரங்கல்கள். அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்
My deepest condolences.
ஆழ்ந்த இரங்கல்கள்
மணிகண்டன் சார்! பேசும் போது என்ன பேசன்னு தெரியல. எனக்கு எங்கப்பா ஞாபகம் வந்துவிட்டது. Take care. அவ்வளவு தான்.
Sorry for your great loss,I can't imagine the sadness you must be feeling from your loss. Words fall short of expressing my sorrow for your loss.
Dear Manikandan
I can't imagine the sadness you must be feeling from your loss. Words fall short of expressing my sorrow for your loss.
Please accept my heartfelt condolences on the loss of your loved one.
May his soul rest in peace.. ஆழ்ந்த அனுதாபங்கள்
sorry mani...i have no words say to you. i pary for his peace...
I am just thinking about my father. He left me with my four younger's. But i am thinking he is always with me. I know your father also will be with you in your each and every steps.
RIP.
ஆழ்ந்த இரங்கல்கள்
Mani,
Sorry for your great loss. ஆழ்ந்த இரங்கல்கள். அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
- Ramprasath
My deepest condolences.
என்ன எழுதுவது என்றே தெரியவில்லை, மனம் வெறுமையாக உள்ளது.
RIP
கணினி திரையை வெறித்து பார்த்துக்கொண்டே அமர்ந்திருக்கிறேன்...
ஆழ்ந்த வருத்தங்கள். தந்தை என்றென்றும் நினைவில் நீடித்திருக்கட்டும். அவருக்கான என் மரியாதை கலந்த வணக்கங்கள்.
Mani, ஆழ்ந்த அனுதாபங்கள்
RIP
ஆழ்ந்த அஞ்சலிகள்.வாசிக்க,வாசிக்க கண்கள் கலங்கி விட்டன.
Very sorry to hear about your loss. ஆழ்ந்த இரங்கல்கள். ஈடு செய்ய இயலாத இழப்பு. Hope you & your family members will recover soon. Take care of your mother.
Sorry to hear about your loss. ஈடு செய்ய இயலாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல்கள். Take care of your mother.
இதே மார்கழி குளிரில் தந்தை தாய் இருவரையும் இழந்தேன். வலி குறையலாம் ஆனால் வடு மறையாது. இறைவன் உங்களுக்கு ஆன்ம பலத்தை அருளட்டும்.
மிகுந்த வலியுடன் உங்களின் கட்டுரையைக் கண்கள் பனிக்க படித்துமுடித்தேன். உங்களில் தோன்றிய வெறுமை எனக்குள்ளும் அப்பாவை நினைவூட்டிக்கொண்டே என்னுள்ளும் பரவியது. ஈடுசெய்ய இயலாத இழப்பு இது. தந்தையோடு கல்வி போம் என்பார்கள். உங்களுக்குச் சரியான கல்வியைக் கொடுத்துவிட்டு மலர்மிசை ஏகியிருக்கிறார் அப்பா. ஆழ்ந்த இரங்கல்கள் !! உங்கள் குடும்பத்தார் யாவருக்கும் என் தேற்றுதல்கள். அம்மாவுக்கு ஆறுதல் சொல்லுங்கள் !!
My deepest condolences Mani..Nobody can't replace dad in our lives and parents are our greatest asset..Nothing else..
Dear Mani,
My deepest condolences to you and your family. I pray God to give you strength to overcome this grief. May his soul rest in peace.
ஆழ்ந்த அனுதாபங்கள், Take care!
படிக்கும் சமயம் எனது தந்தை இறந்த போது நான் உணர்ந்த வலியை நீங்களும் இப்போது உணர்ந்து உள்ளீர்கள். என்ன செய்வது. துயரத்தில் உள்ள தாயை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
மணி
எனது ஆழ்ந்த அனுதாபங்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்... நல்ல அப்பா கிடைத்தவர்கள் பேறு பெற்றவர்கள்.
மனதைத் தளர விட வேண்டாம்.
உஷா
அப்பாவின் இழப்பு என்றுமே ஈடு செய்ய முடியாது, ஆழ்ந்த இரங்கல்கள்.
ஆழ்ந்த அனுதாபங்கள்
ஆழ்ந்த இரங்கல்கள் மணி, கடவுளும் காலமும் துணை நிற்க எங்கள் பிரார்த்தனைகள்...
ஆழ்ந்த அனுதாபங்கள் மணி அண்ணா. அப்பா எங்கும் செல்லவில்லை. அவர் உங்கள் எழுத்திலும், நற்செயல்களிலும், சேவை பணியிலும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பார்.
இரண்டு மூணு நாளாவே உங்க வலைப்பக்கத்தில் எந்த பதிவும் இல்லாதது மனதுக்கு நெருடலாவே இருந்தது. அதனால தான் ஏன் பதிவிடலைனு கேட்டேன். ஆழ்ந்த இரங்கல்கள் .
Mani
My sincere condolence to you and your family. You are fortunate to have such a wonderful father, just like he was lucky to have you and your brother as sons.
May his soul rest in peace.
Sincerely
Bala
எனக்கும் என் அப்பா ஞாபகம் வந்துவிட்டது.ஈடு செய்ய முடியாத இழப்பு
.கடவுள் தங்கள் குடும்பத்துக்கு இந்த துயரத்தை தாங்க மன உறுதியை தர வேண்டிக்கொள்கிறேன்.
எனக்கும் என் அப்பா ஞாபகம் வந்துவிட்டது.ஈடு செய்ய முடியாத இழப்பு
.கடவுள் தங்கள் குடும்பத்துக்கு இந்த துயரத்தை தாங்க மன உறுதியை தர வேண்டிக்கொள்கிறேன்.
அப்பாவின் இடத்தை யாரும் நிரப்பமுடியாது.இழப்பை தாங்கும் தைரியத்தை உங்களுக்கு ஆண்டவன் அருள்வானாக.குடும்பத்தில் அனைவருக்கும் எங்கள் ஆறுதல்களை சொல்லவும்.K .N .விஜயன் .
ஐயா, மனம் கனக்கிறது. இத்துன்பச் சூழ்நிலையில்
இருந்து நீங்களும் உங்களுடைய குடும்பத்தினரும்
மீண்டு வர வேண்டுகிறேன்
அருணன்
ஆழ்ந்த அனுதாபங்கள்!!
ஆழ்ந்த இரங்கல்கள்......
உங்கள் அப்பாவின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு...
மணி
மன்னியுங்கள் இது நேரமல்ல எனினும்... சொல்ல வேணும் போல இருக்கிறது.
எல்லாருக்கும் நல்ல மனிதர்கள் சுற்றிலும் இருப்பதில்லை எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும்... உங்களுக்கு எல்லாம் வரமாக அமைந்தது நீங்க செய்த புண்ணியம். எல்லாத் தொடக்கமும் பெற்றவர்களிலிருந்து தொடங்குவது தானே... அது கிடைக்கப் பெறதாவர்கள் என்னதான் தம் கட்டினாலும் மேலே/ ஏதும் கிடைக்காதவர்கள் இதை "பொருட்கள்"(material) ரீதியாகப் பாக்க வேண்டாம். தொடர்ந்து வாசிப்பதினால் என்னால் உங்கள் இழப்பின் விரீயத்தை விளங்கிக் கொள்ள முடிக்கிறது. என்ன ஆறுதல் சொன்னாலும் ஈடு செய்ய முடியாதது. காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றும் என மிகவும் நப்புகிறன். இதைப் பொது வெளியில் வெளியிட வேணாம்.
நன்றி
My deepest condolences Mani.... Nobody can fill up the place left by your father... Let us pray for him n seek blessings from him. Now Appa...Appa has become Appasamy he will care for u n ur family always..... T. K. Hariharan.
Dear Mr Manikandan,
Kindly accept my heartfelt condolences. As a person who lost a Father, I can fully empathise with you.Mother, fatheror brother, each realationship is unique and can never be replaced. Moreso, when you happen to be a emotional type.
You will come out in time to attend your calls.
May his soul rest in peace.
Very sorry to hear. Our deep condolences.
"‘ஒருவேளை அடுத்த ஜென்மம் என்றிருந்தால் நீங்களே எனக்கு அப்பாவா வாங்க’ என்றேன். அது மனப்பூர்வமாகச் சொன்ன சொற்கள். அவரிடமிருந்து நான் கற்றுக் கொள்ள இன்னமும் எவ்வளவோ இருக்கின்றன. என்னைச் செதுக்கியவர் அவர். இன்னமும் சில வருடங்களாவது என்னுடன் இருந்திருக்கலாம்." - ஆழ்ந்த இரங்கல்கள் !! உங்கள் குடும்பத்தார் யாவருக்கும் என் தேற்றுதல்கள். Take Care.
ஆழ்ந்த இரங்கல்கள். அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
Dear Mani, Deepest condolences to you and your family. Pls take care. Praying for his soul rest in peace.
ஆழ்ந்த அனுதாபங்கள்
ஆழ்ந்த இரங்கல்கள். உங்கள் நினைவில் அவர் என்றும் வாழ்வார்.
ஆழ்ந்த இரங்கல்கள். அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
மிகவும் அதிர்ச்சியடைந்தேன், உங்களுக்கும் , குடும்பத்தாருக்கும் எனது
ஆழ்ந்த இரங்கலைந் தெரிவித்துக் கொள்கிறேன்.மடல் தனியாக.
ராதாகிருஷ்ணன்
மதுரை
My deepest condolence sir. Tears rolled out.
ஆழ்ந்த இரங்கல்கள்
என்ன எழுதுவது என்றே தெரியலை. ஈடு செய்யமுடியாத இழப்பு. ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரது ஆன்மா இறைவனின் திருப்பாதங்களில் இளைப்பாறட்டும். . . .
ஆழ்ந்த இரங்கல்கள். அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்
ஆழ்ந்த அனுதாபங்கள், அன்னாரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திகிறோம்.
sakthikumar/ coimbatore/ 9442920027.
:(
ஆழ்ந்த இரங்கல்கள்
ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா
ஆழ்ந்த இரங்கல்கள்.... No further words to say...
May his soul rest in peace Manikandan
I am deeply saddened by the news of your loss sir. I pray that God will grant you the strength.
Really Sorry to hear this. My Deepest condolences என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்
Dear Mani, Deepest condolences to you and your family
Muthu Kausik
ஆழ்ந்த இரங்கல்கள் மணி
திருமாறன்..
ஆழ்ந்த இரங்கல்கள்.
வருந்துகிறேன்.... உங்களைப் போன்ற ஒரு ஆளுமையை இந்த உலகிற்கு உருவாக்கி தந்துவிட்டு மறைந்துவிட்டார்.
May his soul rest in peace
ஆழ்ந்த அனுதாபங்கள்...அய்யாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன் ...
Thought something went wrong as there were no posts from you. Did not expect such a loss. My deepests condolences..
அப்பாவுடனான உறவு அதிசுவாரசியமானது. தனித்துவமானது. அந்த உறவில் கொண்டாட்டமில்லை. ஆனால் அந்த உறவின் வழியாகத்தான் நாம் நிறையக் கற்றுக் கொள்கிறோம். நம்மை வடிவமைத்துக் கொள்கிறோம். சரியான அப்பா கிடைத்தவர்கள் பாக்கியவான்கள். - உண்மை - மனப்பூர்வமான வரிகள்
Sorry for your big loss. ஆழ்ந்த இரங்கல்கள். அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
ஆழ்ந்த வருத்தங்கள் மணி.
அப்பா நடுத்தர குடும்பத்தின் சிறந்த தகப்பனாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
Sorry and Deep Condolence for the irreplaceable loss
Sorry for the loss in your family . Based on your columns i could very well tell that your family has taken care of him very well and gave excellent support . His Soul will rest in peace for sure .
மணி, வார்த்தைகள் இல்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்.Take Care .
சேக்காளி said...
ஆழ்ந்த வருத்தங்கள் மணி.
அப்பா நடுத்தர குடும்பத்தின் சிறந்த தகப்பனாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
ரொம்ப லேட்டா வந்து இருக்கிங்க நேரா போனிங்களோ
Sorry for the great loss. Please accept my heartfelt condolences on the loss of your loved father. Take care.
அவரது ஆன்மா அமைதி பெற பிரார்த்திப்போம்.
இழப்பீடு ஈடு செய்ய முடியாதுதான். அவர் கடவுளாக இருந்து வழிநடத்துவார்'
நா. செந்தில்குமார்
My deepest condolences, May his soul rest in peace.
Mani,
sorry.words cannot describe the pain we undergo.As days go the emptiness looms large.i share your pain.convey my solid condolence to mom.
kalakarthik
karthik amma
Sorry to hear the news Mr. Manikandan. I thought you were able to bring back your father from the brink with alternate medicine. But it has succeeded only in extending the life span by a short period.God will give you the mental strength to overcome this.
Anna,
Very sorry to hear this. Deep condolences for the demise of your great aspiration. I pray god to give you and your family the strength to go forward and for his soul to rest in peace.
Could not stop my tears after reading your narration. take care.
Hi Mani - My deepest condolences to you and your family.
Dear Mani,
Please accept my sincere condolences!
You have to stay strong for your family, and lead them along the way.
Though he has left the world, he would live forever in the minds of your family.
You will always be Manikandan Vasudevan.
You and your family are in my prayers!
Take care!
- Prabhu Jayaprakasan
Sorry to hear, Mani. Our deepest condolences.
ஆழ்ந்த வருத்தங்கள்.
Daddy's place in one's life s very special and no one can give replace that place...
May god give you and your family strength to withstand this huge grief and loss, Mani anna..
Veru enna solvathenre thonavillai..
Sir, as u said your father is always with u..
What a writing sir, u made me cry..
(உண்மையாகவே....) ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.
ஆழ்ந்த இரங்கல்கள்...கண்களில் நீர் கசிய...
very sad to hear sir, we all pray. may his soul rest in peace.
May his soul rest in peace.
தங்களது தந்தையின் ஆன்மா சாந்தி அடைந்திருக்கும், தந்தைக்கும் மகனுக்குமான பினைப்பு ஓரு விவரிக்கமுடியாத ஓரு பந்தம். தங்களது கட்டுரை என்னை போல் வெளிநாட்டில் வாழும் மகன்களுக்கு ஒரு எச்சரிக்கை, தாய் தந்தை உடன் வாழ மனம் ஏங்கினாலும், மற்ற பொருளாதார தேவை, வேலை எல்லாவற்றிக்காகவும் பிரிந்து வாழ வேன்டி உள்ளது.எது எப்படியோ தினம்தோரும் ஒரு பிதினைந்து நிமிடம் அவர்களிடம் தொலைபேசியில் உரையாட போவதாக முடிவு செய்து இருக்கிறேன்.
ஒரு வாரத்திற்கும் மேலாக எந்தப் பதிவும் இல்லாதபோதே மனதுக்குள் ஏதோ உறுத்திக்கொண்டே இருந்தது. இன்று தலைப்பைக் கண்டவுடனே சுரீர் என்றது.அன்பையும் பாசத்தையும் வெளிப்படையாகக் காட்டாவிட்டாலும் தந்தையின் இழப்பு அத்தனை எளிதாக ஈடுசெய்யக்கூடியதல்ல.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
இவ்வரிகளுடன் தந்தையாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்
Mani,
May all the memories of him Let you find some peace
Stay blessed and be strong
My heartfelt condolences are with you
May his soul rest in peace
May His soul rest in peace. My deep condolences
Hi Mani,
I know from you in our school-hood days. But i'm interacted with your father during your marriage and i realized he is man of simplicity & honest and came to know, he never seeing dignity with anybody. He interacted good with all our friends and relatives. He called our friends as (Kannu and samy).
Really feel very hard to miss your father.
I'm seeing your father from you (simplicity and straight forward attitude).
- Pradeep Ramdas
இன்னமும் சில வருடங்களாவது என்னுடன் இருந்திருக்கலாம். இனி எந்தக் காலத்திலும் அந்தக் கண்களைப் பார்க்கப் போவதில்லை. குரலைக் கேட்கப் போவதுமில்லை.
*********
கடைசி வரிகள் அப்படியே கதற வைத்து விட்டன. இழப்பு .. பேரிழப்பு.. தாங்கவியலாதது..
ஆழ்ந்த இரங்கலுடன் அனுசரணையும்.. துக்கம் தொலைத்து மீண்டு வந்து பணியாற்றிட இறைவனை வேண்டுகிறேன்.
My heartfelt condolences Mani sir
My heartfelt condolences
ஆழ்ந்த இரங்கல்கள் மணி .
//ஒவ்வோர் உறவும் முக்கியமானவைதான். ஆனால் அப்பாவுடனான உறவு அதிசுவாரசியமானது. தனித்துவமானது. அந்த உறவில் கொண்டாட்டமில்லை. ஆனால் அந்த உறவின் வழியாகத்தான் நாம் நிறையக் கற்றுக் கொள்கிறோம். நம்மை வடிவமைத்துக் கொள்கிறோம். சரியான அப்பா கிடைத்தவர்கள் பாக்கியவான்கள். இன்னமும் கொஞ்ச காலம் அப்பா நம்முடன் வாழ வேண்டும் என்று நினைக்கும் தருணத்தில் அவரை இழந்துவிடுகிறவர்கள் துரதிர்ஷ்டசாலிகள். நான் பாக்கியவான்; அதே சமயம் துரதிர்ஷ்டசாலி.//
ஆழ்ந்த அனுதாபங்கள்..
Post a Comment