வணக்கம்.
உங்களின் மூன்றாம் நதி நாவல் வசித்தேன். முதலில் வாழ்த்துகள் மணி.
மனத்தில் தோன்றும் கருத்தை பகிர்கிறேன்.
நாவல் படிக்கும் போது கதையுடன் பயணிக்க முடிகிறது. அனைத்து கதாபாத்திரங்களும் (குறிப்பாக பவானி, அமாசை) காட்சிகளும் மனதில் நிற்கின்றன.
பெங்களூரில் நானும் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன். இடங்களையும், நாவல் பயணிக்கும் இடங்களையும் என்னால் உணார்பூர்வமாக உணர முடிகிறது. அத்தியாயம் அத்தியாயம் எழுதி இருப்பது மிக நன்று. ஒவ்வொரு அத்தியாயத்தையும் தனித்தனியாக வாசித்தாலும் சுவாரசியமாக இருக்கிறது.
பவானி இப்பொழுது எப்படி இருக்கிறாள் என பார்க்கணும் போல் ஆர்வம் தோன்றுகிறது. இதுதான் நாவலின் வெற்றி என நினைக்கிறேன்.
பணம் எதை வேண்டுமானாலும் செய்யும்.
வ.பூபதி
*****
நாவல்கள் படிப்பதற்கான ஆர்வம் சிறு வயதில் அதிகமாகவே இருந்தது. ஆனால் ஆன்ராய்டு புரோக்ராம், பிக் டேட்டா, பிசினஸ் இன்டெலிஜென்ட் என்று படிப்பின் பாதை பிழைப்புக்காக தடம் மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
முத்து காமிக்ஸ் படிப்பதில் இருந்து மு.வ வின் அகல்விளக்கு என்று ஆரம்பித்து ஜெயகாந்தன், பாலகுமாரன் ஆகியோர்களின் பல புத்தகங்களை வாசித்தது உண்டு.
நீண்ட நாட்களுக்கு பிறகு வா. மணிகண்டன் எழுதிய மூன்றாம் நதி என்ற குறு நாவலை படிக்க முடிந்தது.
கிராமத்தி்ல் விவசாய கூலியாக இருந்த அமாவாசையில் கதை துவங்கி, நிர்கதியற்று அன்றாடம் வாழ்க்கைக்காக பெரு நகரங்களில் புழுவாய் போன பவானியில் கேள்விக்குறியாய் நிற்கிறது.
மூன்றாம் நதி அருமையான நாவல். என்னை மாதிரி எழுத்து இலக்கியம் அறியாதவனும் படித்து சபாஷ் சொல்லும் வண்ணம் அமைந்தது.
பாராட்டுகள் வா.மணிகண்டன்
- சுவாமிநாதன் அப்பாச்சி
****
நமக்கான வாழ்கையை வாழ்வதற்கு அடுத்தவர்களின் பேச்சுகளை நிராகரித்துப் பழக வேண்டும் என்பதை அவள் கற்று வைத்திருந்தாள். விமர்சனங்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தால் வாழ்நாள் முழுக்கவும் பதில்களை மட்டும்தான் தேடிக் கொண்டிருக்க வேண்டியதாக இருக்கும்.. - மூன்றாம் நதி நாவலில் வா.மணிகண்டன்
வெகு நாட்களுக்குப் பிறகு ஒரே மூச்சில் படித்த புத்தகம் - மூன்றாம் நதி
கடைசில எல்லாரையும் கொன்னுட்டிங்களே ...!
- அதிபன் கவிதைகள்
*****
நான் படித்த முதல் நாவல்- மூன்றாம் நதி.
"இந்த உலகின் வர்ணங்களையெல்லாம் புத்தகத்தின் வழியாக பார்க்க முயல்வது மடத்தனம் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்தாள்" - நாவலின் இவ்வரிகள் என்னையும் உன்னுடன் சேர்த்துக்கொள் என்று எண்ண வைத்தது. ஏனெனில் நானும் பாட புத்தகங்களைத் தொட்டு வருட கணக்கில் ஆகிறதே.
நாவலின் ஒவ்வொரு பத்தியின் முடிவிலும் நினைத்துப் பார்த்திராத கேள்விகளும் ஆச்சரியங்களும் எனக்குள்ளாகவே வந்து போயின.
நகரமயமாக்குதல் இம்மாதிரியான விளைவை ஏற்படுத்த கூடியதா? எனில், நானும் ஏதோ ஒரு வகையில் இந்த வர்ணம் பூசப்பட்ட குகையினுள் எனக்கென்ற இடத்தை பிடிப்பதாக கற்பனை செய்து கொள்வது அடிமுட்டாள்தனம் அன்றி வேறு என்ன?
பெங்களுர் வந்த ஆரம்பத்தில் மனிதர்களை தேடிய நான் நாட்கள் செல்லச் செல்ல அவர்களில் மேலோரின் நடவடிக்கைகளை பார்க்க முடிந்தது. சிரிக்க தெரியாமல் போனதில் தொடங்கி மிச்ச காசு கேட்பதில் உள்ள கூச்சம் வரைக்குமான காரணம் அவர்களின் செயல்பாடுகளிலிருந்து பெறபட்டவையே.
இச்சூழலில் வா.மணிகண்டன் மாதிரியான ஆட்களால்தான் அனைத்திற்குமான என் பங்கினை பற்றி சிந்திக்க முடிகிறது. அதற்கு மேலாக கீழோர் தென்படுகின்றனர்.
- ராஜ் ருஃபாரோ

********
எனக்கு நாவல் மிகப் பிடித்திருந்தது. மூடி வைக்காமல் முழு நாவலையும் வாசிக்க முடிந்தது. மூன்றாம் நதி கச்சிதமான நாவல். open ending ஆக இருக்கிறது. நாவலின் அடுத்த பாகத்தை மனதில் வைத்து முடித்தீர்களா?
மற்றவர்களைப் போல முந்நூறு பக்கங்கள், ஐநூறு பக்கங்கள் என்று எழுதாமல் தொடர்ந்து இத்தகைய அளவிலேயே எழுதவும். short and crisp.
அன்புடன்,
முருகானந்தம்
(மூன்றாம் நதி நாவல் குறித்து வரக் கூடிய விமர்சனங்கள், கருத்துகள், எதிர்வினைகள் - அது நேர்மறையாக இருந்தாலும் சரி; எதிர்மறையாக இருந்தாலும் சரி- நிசப்தம் தளத்தில் தொகுத்து வைக்க விரும்புகிறேன். அந்த வகையில்தான் இந்தத் தொகுப்பு. மூன்றாம் நதி என்ற label ன் கீழாக இது இருக்கும்)

1 எதிர் சப்தங்கள்:
நேற்றுதான் புத்தக கண்காட்சியில் வாங்கினேன். இன்று இரவு எப்படியும் வாசித்துவிடுவேன். வாசித்து பகிர்கிறேன் நன்றி!
Post a Comment