தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட அதிமுக தனித்துதான் நிற்கப் போகிறது. பணபலம் மற்றும் அதிகாரபலத்தை நம்பி குருட்டுத் தைரியத்தில் இருக்கிறது. 234 தொகுதிகளிலும் தனது கட்சிக்காரர்கள் அல்லது தனது சின்னத்தில் போட்டியிடக் கூடிய பொடிக்கட்சிகளை நிறுத்தப் போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இப்போதைக்கு தனக்கு எதிரான வாக்குகளை எப்படிச் சிதறடிப்பது என்பது மட்டும்தான் அதன் நோக்கமாக இருக்கக் கூடும்.
திமுகவின் நிலை இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. தேமுதிகவுடனான கூட்டணி உறுதியாகிவிட்டது என்கிறார்கள். ஆனால் வேறொரு தரப்பினர் அதிமுகவின் திட்டப்படி பாஜக தேமுதிகவை வளைத்து தனித்து நின்று வாக்கைப் பிரிப்பார்கள் என்கிறார்கள். குழப்பமான சூழல்தான். அதிமுகவிடம் இவ்வளவு அடி வாங்கிய பிறகும் விஜயகாந்த் அதிமுகவுக்கு பயன்படும்படியான ஒரு கூட்டணி முடிவை எடுப்பாரா என்ற கேள்வி எழாமல் இல்லை. ‘பணம்தான் முடிவு செய்யும். எவ்வளவு சி என்பதுதான் மேட்டர்’ என்று சொல்லி அவரது கேரக்டரைக் காலி செய்கிறார்கள். விஜயகாந்த் நல்லவரா கெட்டவரா என்று நம்மால் கணிக்கவே முடிவதில்லை என்பதால் அவர் முடிவெடுத்து அறிவிக்கும் வரை எந்த முடிவுக்கும் வர முடியாது போலிருக்கிறது.
திமுகவைப் பொறுத்த வரையில் கூட்டணி முடிவு ஒரு பக்கத்திலிருக்க வேட்பாளர் தேர்வு எப்படி அமையப் போகிறது என்பதும் மிக முக்கியமான காரணியாக இருக்கும். மோடிக்கு வேலை செய்த கார்ப்போரேட் நிறுவனங்களின் ஸ்டைலில் தமிழகத் தேர்தலையும் சந்தித்துவிடலாம் என்று களமிறங்கினால் நிலைமை விபரீதமாகிவிடக் கூடும். இந்தியாவின் பொதுத்தேர்தலுக்கும் தமிழகப் பொதுத்தேர்தலுக்குமிடையில் ஏணி வைத்தாலும் எட்டாத வித்தியாசம் இருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்தான் அதையும் பார்த்தோம். அதனால் கார்போரேட் நிறுவனங்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு கலைஞரின் பாணியில்தான் தேர்தலைச் சந்திப்பதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும்.
கடந்த சில தேர்தல்களாகவே கட்சிக்குள் திடீரென்று வந்து சேர்ந்த பணக்காரர்களுக்குத்தான் வாய்ப்புக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிமுகவை எதிர்த்துப் போராட பணம் படைத்தவர்களால்தான் முடியும் என்று ஒருவேளை நினைத்திருக்கக் கூடும். ஆனால் பணம் படைத்தவர்களால் போராட முடிகிறதே தவிர வெல்ல முடிவதில்லை. இந்த முறையாவது பூத் கமிட்டி வரைக்கும் புகுந்து வேலை செய்யக் கூடிய ஆட்களாக, தொகுதியில் கெட்ட பெயர் இல்லாத ஆட்களாகத் தேர்ந்தெடுப்பார்களா அல்லது வழக்கம் போலவே காந்தி நோட்டுக் கட்சிக்காரர்களை வேட்பாளர்கள் ஆக்குவார்களா என்று தெரியவில்லை. திமுக என்பது டீக்கடைக்காரர்கள், சலூன் கடைக்காரர்களின் கட்சி என்பார்கள். எவ்வளவு எளிய மனிதர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இடம் உண்டு என்கிற அர்த்தத்தில் சொல்லப்பட்டவை அவை. அந்தக் காலம் மலையேறிப் போய்விட்டது. ஒருவேளை இந்தத் தேர்தலிலும் வேட்பாளர் தேர்வில் சொதப்பும் பட்சத்தில் அந்தக் கட்சி அடி வாங்கிவிடும்.
கடந்த சில தேர்தல்களாகவே கட்சிக்குள் திடீரென்று வந்து சேர்ந்த பணக்காரர்களுக்குத்தான் வாய்ப்புக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிமுகவை எதிர்த்துப் போராட பணம் படைத்தவர்களால்தான் முடியும் என்று ஒருவேளை நினைத்திருக்கக் கூடும். ஆனால் பணம் படைத்தவர்களால் போராட முடிகிறதே தவிர வெல்ல முடிவதில்லை. இந்த முறையாவது பூத் கமிட்டி வரைக்கும் புகுந்து வேலை செய்யக் கூடிய ஆட்களாக, தொகுதியில் கெட்ட பெயர் இல்லாத ஆட்களாகத் தேர்ந்தெடுப்பார்களா அல்லது வழக்கம் போலவே காந்தி நோட்டுக் கட்சிக்காரர்களை வேட்பாளர்கள் ஆக்குவார்களா என்று தெரியவில்லை. திமுக என்பது டீக்கடைக்காரர்கள், சலூன் கடைக்காரர்களின் கட்சி என்பார்கள். எவ்வளவு எளிய மனிதர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இடம் உண்டு என்கிற அர்த்தத்தில் சொல்லப்பட்டவை அவை. அந்தக் காலம் மலையேறிப் போய்விட்டது. ஒருவேளை இந்தத் தேர்தலிலும் வேட்பாளர் தேர்வில் சொதப்பும் பட்சத்தில் அந்தக் கட்சி அடி வாங்கிவிடும்.
தமது கட்சியோடு தேமுதிக சேருமா, பாஜக சேருமா, காங்கிரஸ் சேருமா என்று தெரியாத குழப்பத்தில் திமுகக்காரர்கள் இருக்கிறார்கள். அதனால்தான் திமுக அனுதாபிகள் விஜயகாந்த் பற்றியும், தமிழிசை செளந்தர்ராஜன் பற்றியும், சோனியா, ராகுல் பற்றியும் வாயைத் திறக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். திமுகவின் இப்போதைய கண்ணுக்குத் தெரிந்த எதிரி அதிமுகவைவிடவும் மக்கள் நலக் கூட்டணிதான். வாய்ப்புக் கிடைத்த இடத்தில் எல்லாம் குத்துகிறார்கள். இது ஒரு வகையில் மக்கள் நலக் கூட்டணிக்கு பலன் அளிக்கும் என்பது போலத் தெரிகிறது. ம.ந.கூட்டணிக்கு என்று எந்த ஊடக ஆதரவும் இல்லை. இப்போதைக்குத் திமுகவினர்தான் இந்தக் கூட்டணியின் செய்திகளைப் பரவலாகப் பேசச் செய்கிறார்கள். மக்கள் நலக் கூட்டணியை வைத்து வைத்து விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் பகடிதான் செய்து கொண்டிருக்கிறார்கள். திமுகவின் மீது வெறுப்பு இருக்கக் கூடியவர்களுக்கு இந்தப் பகடி மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் மீதான Soft corner ஐ உருவாக்குவது போல புரிந்து கொள்ள முடிகிறது.
இப்போதைக்கு பிற எந்தக் கூட்டணியைவிடவும் மக்கள் நலக் கூட்டணிதான் வெகு சுறுசுறுப்பாக களத்தில் இறங்கியிருக்கிறது. ஆனால் இந்த வேகம் வெற்றியைக் கொடுத்துவிடும் என்று சொல்ல முடியாது. கடைசி பனிரெண்டு மணி நேரத்தில் கூட மக்களின் முடிவு மாறக் கூடும். ஆனால் மக்கள் நலக் கூட்டணியின் உற்சாகம் கவனிக்கத் தக்கது. ஆரம்பத்தில் இந்தக் கூட்டணி நிலைக்காது என்றார்கள். தலைவர்கள் தனித்தனி திசையில் செல்வார்கள் என்றார்கள். இப்பொழுது செல்பியெல்லாம் எடுத்து உற்சாகமாக பிரச்சாரப் பயணத்தை ஆரம்பித்துவிட்டார்கள். தலைவர்கள் ஈகோ பார்க்காமல் ஒன்றாக அலைந்து கொண்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இன்றைய சூழலில் அவர்களின் பலத்தை வைத்துக் கொண்டு ஆட்சியமைப்பது சாத்தியமில்லை. ஊடக பலம், பண பலம் என்ற எதுவுமேயில்லாத அணி அது. ஆனால் சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை மறுக்க முடியாது.
உதாரணமாக பவானிசாகர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுந்தரம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். விசாரித்த வரையில் அவருக்கு தொகுதியில் நல்ல பெயர் இருக்கிறது. இப்பொழுதே களப்பணியை ஆரம்பித்துவிட்டார். ‘வென்றுவிடக் கூடும்’ என்கிறார்கள். ஒருவேளை அவர் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் கூட கணிசமான வாக்கைப் பெற்றுவிடுவார். ஒரு மாவட்டத்துக்கு குறைந்தபட்சமாக இப்படி இரண்டு தொகுதிகள் என்றாலும் கூட கிட்டத்தட்ட அறுபது தொகுதிகளில் மக்கள் நலக் கூட்டணி பாதிப்பை உண்டாக்கக் கூடும். அறுபது தொகுதிகளில் பாதிப்பை உண்டாக்குவார்கள் என்பது சற்றே அதிகபட்சமான கணக்காக இருக்கலாம். ஆனால் திமுக, அதிமுக, பாஜ+தேமுதிக, ம.ந.கூட்டணி என நான்கு முனைப் போட்டி அமையும் போது பெரும்பான்மையுடன் ஆட்சியைமைக்க ஒவ்வொரு தொகுதியும் அவசியமானதாக இருக்கும்.
உதாரணமாக பவானிசாகர் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சுந்தரம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். விசாரித்த வரையில் அவருக்கு தொகுதியில் நல்ல பெயர் இருக்கிறது. இப்பொழுதே களப்பணியை ஆரம்பித்துவிட்டார். ‘வென்றுவிடக் கூடும்’ என்கிறார்கள். ஒருவேளை அவர் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் கூட கணிசமான வாக்கைப் பெற்றுவிடுவார். ஒரு மாவட்டத்துக்கு குறைந்தபட்சமாக இப்படி இரண்டு தொகுதிகள் என்றாலும் கூட கிட்டத்தட்ட அறுபது தொகுதிகளில் மக்கள் நலக் கூட்டணி பாதிப்பை உண்டாக்கக் கூடும். அறுபது தொகுதிகளில் பாதிப்பை உண்டாக்குவார்கள் என்பது சற்றே அதிகபட்சமான கணக்காக இருக்கலாம். ஆனால் திமுக, அதிமுக, பாஜ+தேமுதிக, ம.ந.கூட்டணி என நான்கு முனைப் போட்டி அமையும் போது பெரும்பான்மையுடன் ஆட்சியைமைக்க ஒவ்வொரு தொகுதியும் அவசியமானதாக இருக்கும்.
அதனால்தான் திமுக பதறுகிறது. அதிமுக 234 தொகுதிகளில் நிற்கப் போகிறது. அதில் நூற்று முப்பது தொகுதிகளில் வென்றாலும் கூட போதும். ஆனால் கூட்டணி அமைத்துப் போட்டியிட விரும்பும் திமுக அதிகபட்சமாக நூற்று நாற்பது தொகுதிகளில் நிற்கக் கூடும். அதில் நூறு தொகுதிகளிலாவது வென்றாக வேண்டும். அதில் மக்கள் நலக் கூட்டணியோ பா.ம.கவோ ஓட்டையைப் போடும் போது பதறத்தானே செய்வார்கள்? பா.ம.க என்ன செய்யப் போகிறது என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. பா.ஜ.கவுடன் சேரப் போகிறார்களா தனித்து நிற்கப் போகிறார்களா என்று தெரியவில்லை. வட மாவட்டங்களைப் பொறுத்த வரையிலும் பா.ம.க எடுக்கக் கூடிய முக்கியமானதாக இருக்கும்.
இப்படி எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால் குட்டை வெகுவாகக் கலங்கிக் கிடக்கிறது. இன்னமும் அதிக காலம் இல்லை. இன்று தேர்தல் தேதி குறித்து ஆலோசனை செய்கிறார்கள். அப்படியும் இப்படியும் கண்களை மூடி முடிப்பதற்குள் தேர்தல் நாள் வந்துவிடும். பணம் புழுதியாகப் பறக்கும். சாராயம் பெருக்கெடுக்கும். வீதிக்கு வீதி நடைவிடுவார்கள். தேர்தலுக்கு முந்தைய நாள் மின்சாரம் தடைபடும். பட்டுவாடா நடக்கும். சத்தியம் வாங்குவார்கள். செய்து கொடுத்த சத்தியத்திற்கு குந்தகமில்லாமல் குத்திவிட்டு வருவார்கள். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு புலம்புவோம்.
9 எதிர் சப்தங்கள்:
வந்தா மலை போனா மயிறு பழமொழிக்கு(?) ஏற்ப எல்லா நிலவரமும் தெரிந்திருந்தும் கட்டி இழுப்பதுபோல போக்குகாட்டிக்கொண்டிருக்கிறார்கள் ம(ந)கூ, கடைசிவரையிலும் கலையாமல் ஒற்றுமையாக தேர்தலை சந்திக்க அவர்கள் முடிவெடுத்திருந்தாலும் அது தைரியம் அல்லது நம்பிக்கை என்ற அர்த்தத்தில் எல்லாம் இல்லை, இரு பக்கமும் கூட்டணி வைத்து வெற்றியோ தோல்வியோ எது அடைந்திருந்தாலும் அதிமுக திமுகவிடமிருந்து ம(ந)கூ விற்கு கிடைத்த அனுபங்கள் அவமரியாதையும் உதாசீனமுமாகத்தான் இருந்திருக்கும், பைசா பிரயோஜனம் இருந்திருக்காது, போதுமான அளவிற்கு இரண்டு பக்கமிருந்தும் அனுபவம் பெற்றுவிட்டபடியால் இந்த குருட்டு முயற்சியில் தெரிந்தே இறங்கியிருக்கிறார்கள், என்ன முடிவாக இருந்தாலும் அவர்கள் கிஞ்சித்தும் கவலைப்படபோவதில்லை, அடுத்த எலக்சனுக்கு தங்கள் பலத்தை மாற்று அணியினரிடம் காட்டவே இந்த தனித்துப்போட்டி,
நீங்கள் எதிர்பார்ப்பதுபோல மக்கள் அந்தளவிற்கெல்லாம் இவர்களை கொண்டாட மாட்டார்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஓட்டு வேண்டுமானால் ஓரளவிற்கு நெருக்கி விழலாம், மற்றபடி கம்மனாட்டி கட்சிகள். ம(ட)திமுக போன்ற கட்சிகளால் ஓட்டுக்களை சேர்க்கமுடியாது, விசிக்கும் கூட அம்மக்களின் ஒரே நம்பிக்கை அவர்தான் என்ற எண்ணத்தை திருமாவளவனும் அதிமுக திமுக போன்ற கட்சிகளும் சேர்ந்தே (மறைமுகமாக) விதைத்துவிட்டன,
தமிழக கம்மனாட்டி கட்சிகளின் தமிழக பிரச்சனைகளின் மீதான பார்வை காங், பாஜக போன்ற தேசியகட்சிகளைப் போன்றே உள்ளது, முல்லைப்பெரியாறு. இலங்கை இனப்படுகொலை. கூடங்குளம் போன்றவை சாட்சி, அதனால் அவர்களால் தமிழக மக்களின் கட்சி என்ற இமேஜை உண்டாக்கவே முடியாது,
பட்டாசை கழுதையின் அருகில் வெடிக்க வைத்து அது கத்தி கதறிக்கொண்டு ஓடுவதைப்பார்க்கும் சில சிறுவர்களின் மனநிலையில்தான் உள்ளனர் ம(ந)கூவினர், அந்தக் கழுதை திமுக, மற்றபடி அதிமுகவின் ஓட்டு வெள்ளநிவாரண பிரச்சனைகளால் மட்டுமே சற்று சரிந்துள்ளது, அதிமுகவின் வாக்குவங்கி மேலும் சரிந்து விடாமல் பாதுகாப்பாது திமுகவின் நாற்பது ஐம்பது ஆண்டுகாலம் பழம்தின்று கொட்டை போட்ட மாசெக்கள் முன்னாள் மந்திரிகளின் செயல்பாடுகள்தான், அவர்களை பற்றி உள்ளூர்மக்களின் மனஓட்டம் நன்கு தெரிந்திருநதும் மறுபடியும் மறுபடியும் அவர்களை முன்னிறுத்தி தேர்தல் வேலை செய்வதே திமுகவின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம், இதைப்போ சிறுபான்மை ஓட்டுவங்கியை சிதறடித்த முஸ்லீம்கட்சிகளும் நடுத்தரவர்க்க அரசு ஊழியர்களின் திமுக மீதான பாசத்தை போக்கிய ஊடக கட்டுரைகள் வாரிசுகளின் அடாவடிகள் என நீண்டு கொண்டே போகும்,
சுருக்கமா சொன்னால் திமுக தனக்கு தானே குழி தோண்டிக்கும் கொண்டிருக்கும் ஒரு பலமான கட்சி,
Excellent post bro
//ஆட்சியமைப்பது சாத்தியமில்லை//
இந்த தேர்தலில் வென்று ஆட்சியமைக்க வேண்டியதில்லை.ஆட்சியமைப்பவர்களுக்கு சரியான எதிரியாக உருவாக வேண்டும். அது போதும்.ஆட்சியமைக்க முடியாத அதிமுக அல்லது திமுக அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்து என்ன நிலைமையில் இருக்கும் என்பதை அந்தந்த கட்சிகளின் தலைமைகளின் வயதை வைத்து யோசித்து பாருங்கள்?.
மக்கள் நலக்கூட்டணி அறிவிக்க பட்ட போது அவர்கள் மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு அவர்கள் முந்தைய தேர்தலிலிருந்தே இணைந்து போராடியிருக்க வேண்டுமென்பது.
ஒருவேளை விசயகாந்"தூ" மக்கள் நலக்கூட்டணிக்கு வந்தால்?
விசயகாந்த் திமுக உடன் கூட்டணி அமைக்கும் பட்சத்தில் அவரின் முதல்வர் கனவு சாத்தியமில்லை.ஆனால் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்தால் முதல்வர் ஆவதற்கும் வாய்ப்பிருக்கிறதே?
முருகன், தங்களின் சொற்களில் இருந்தே வெறுப்பையும் விருப்பையும் புரிந்து கொள்ள முடிகிறது.
234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் 'நாம் தமிழர்' கட்சியை ஏன் விட்டு விட்டீர்கள் ?
மணிகண்டன்
என் விருப்பு என்றெல்லாம் அரசியல்கட்சிகளில் எதுவும் இல்லை இதில், தனித்தனியாக எல்லாக்கட்சிகளைப் பற்றியும் எழுத ஆரம்பித்தால் பெரிய நாவல் போல ஆகிவிடும் என்பதால் சட்டென்று மநகூ. திமுகவை ப் பற்றி மட்டுமே இங்கு குறிப்பிட்டிருக்கிறேன், என் கருத்தைப் படிக்கும்போது அதிமுகவுக்கு ஆதரவு என்பதுபோல எனக்கே இப்போதுதான் தெரிகிறது, நான் போனசட்டசபை தேர்தலின் போது போட்ட ஓட்டுதான நான் என் வாழ்நாளில் அதிமுகவிற்கு போட்ட ஒரே ஒரு ஓட்டு,
கடைசி பாராவில் சொன்னதுதான் நடக்கப் போகிறது..! மக்கள் எப்பவும் உடனடி நிவாரணத்திற்கு மட்டுமே ஆசைபடுவார்கள்..!!
திருச்செந்தூர் தொகுதியில் ஒரு தொழிலதிபரை நிறுத்தி அனிதா.ராதாகிருஷ்ணனுக்கு(முன்னாள் அதிமுக) செக்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் ஒரு தொழிலதிபரை நிறுத்தி அண்ணன் ஜோயலுக்கு(முன்னாள் மதிமுக) செக்.
தனது மகன் அல்லது மகளுக்கு தூத்துக்குடி தொகுதிய ஏற்கனவே எழுதி வச்சாச்சு..
இப்படியாக தூத்துக்குடி மாவட்ட தொகுதிகள் முழுவதையும் இப்பவே வளைத்துவிட்டார் கருணாநிதியின் முரட்டு பக்தர் எனப்படும் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பெரியசாமி. இப்பவே சர்வாதிகாரம்..
போன தேர்தலில் மாவட்டத்தில் ஒரு தொகுதியில் மட்டும் ஜெயித்தது திமுக. இம்முறை அதுவும் கிடையாது...
Post a Comment