Dec 16, 2015

மடி


டிசம்பர் மூன்றாம் தேதியிலிருந்து நேற்று (டிசம்பர் 15) வரை  வெள்ள நிவாரணப் பணிகளுக்கென நாற்பத்தொரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் (ரூ. 4159602) நிதியாக வந்திருக்கிறது. ஏற்கனவே குறிப்பிட்டது போல முதற்கட்டமாக எட்டேகால் லட்ச ரூபாய் (ரூ. 835332) செலவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவரங்களைப் பத்தி பத்தியாக எழுதுவதற்கு எனக்கே குழப்பமாக இருக்கிறது. அதனால் பின்வரும் வடிவம்- 
                                                                                     
அறக்கட்டளையின் கணக்கில் ஏற்கனவே இருந்த தொகை (டிசம்பர் 02 அன்று)
837636.15
வெள்ள நிவாரண நன்கொடை (டிசம்பர் 03 முதல் டிசம்பர் 15 வரை)
4159602.66
நிவாரணப் பணிகளுக்கான முதற்கட்ட செலவு
835332.00
அடுத்த கட்ட நிவாரணப் பணிகளுக்காக பயன்படுத்தப்படவிருக்கும் தொகை
(4159602-835332) = ரூ. 3324270
தற்பொழுது அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருக்கும் தொகை
4279007.81
முதற்கட்ட நிவாரணப் பணிகளுக்கு வழங்கப்பட்ட காசோலைகளில் இன்னமும் டெபிட் ஆகாத தொகை
119135.00
கணக்கு விவரத்தில் உங்களுக்கு ஏதாவது கேள்வி இருக்கிறதா? எப்படியும் கேட்க மாட்டீர்கள் என்று தெரியும். எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. என் சிற்றறிவுக்கு இருநூறு ரூபாய் எங்கேயோ இடிக்கிறது. நீதியரசர் குமாரசாமி மாதிரியான கணக்கு வாத்தியார்கள் யாராவது இருந்தால் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். ஒரு மன்ச் சாக்லேட் அனுப்பி வைக்கிறேன்.

இனிமேல் அனுப்பி வைக்கும் பணத்தை வெள்ள நிவாரண நிதிக்கு பயன்படுத்தமாட்டீர்களா என்று சிலர் கேட்டிருந்தார்கள். அப்படியெல்லாம் எதுவுமேயில்லை. இந்த அறக்கட்டளையில் நீங்களும் நானும்தான். நாம் எடுப்பதுதான் முடிவு. அந்தந்தச் சமயத்தில் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்வோம். வெள்ள நிவாரணத்திற்கு என வாங்கிய தொகையை வேறு காரியங்களுக்குச் செலவு செய்தால் நன்றாக இருக்காது என்பதால் ஒரு கால வரையறை நிர்ணயிக்கப்பட்டது. இந்த முப்பத்து மூன்று லட்சம் வெள்ள நிவாரணப்பணிகளுக்கு மட்டும்தான் பயன்படுத்திக் கொள்ளப்படும். ஆனால் இனி வரும் பணத்தைத் தேவைப்பட்டால் வெள்ள நிவாரணப்பணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது தனிநபர்களுக்கான உதவிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். எல்லோருமே நம் மக்கள்தானே? யாருக்கு உதவினால் என்ன?

அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நிறைய யோசனைகள் இருக்கின்றன. பணம் இருக்கிறது என்பதற்காக துண்டுச்சீட்டு விநியோகிப்பது போல அள்ளி இறைக்க வேண்டியதில்லை. ஒவ்வொரு ரூபாய்க்கும் மரியாதை உண்டு. சில அதிகாரிகள் தொடர்பில் இருக்கிறார்கள். பத்திரிக்கையாளர்கள் அறிவுரை சொல்கிறார்கள். அநேகமாக ஒரு கிராமத்தைத் தத்தெடுக்க முடியும். மிகச் சிறிய கிராமம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதன் அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்து முன்மாதிரியான கிராமமாக மாற்றலாம். இத்தகைய திட்டங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து என்னவிதமான உதவிகள் கிடைக்கின்றன என்பதைப் பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது. உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவர் ஆதரவானவராக இருக்க வேண்டும். ஆனால் இன்னமும் உறுதியாக முடிவு செய்யப்படவில்லை.

வேறு சில பரிந்துரைகளாக- பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் சில பள்ளிகளை மேம்படுத்தலாம் என்று சிலர் சொல்லியிருந்தார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொழில் அமைத்துக் கொடுக்கலாம் என்றார்கள். வேறு சில யோசனைகளையும் சிலர் சொல்லியிருக்கிறார்கள். ஆலோசனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. கூடிய சீக்கிரம் முழுமையான விவரத்தை பதிவு செய்கிறேன். இவை எதுவுமே அனுபவமில்லாத காரியங்கள்தான். அதுவொன்றும் பிரச்சினையில்லை. கற்றுக் கொள்ளலாம். வயது இருக்கிறது. காலமும் இருக்கிறது. எந்தக் காரியமாக இருந்தாலும் சரியான முறையில் செய்யப்பட வேண்டும். அவ்வளவுதான்.


முந்தைய பணப்பரிமாற்ற விவரங்களை இணைப்பில் பார்க்கலாம்.

இவ்வளவு விரிவாகக் கணக்கு சொல்ல வேண்டுமா என்று சிலர் கேட்டார்கள். என்னுடைய பணமாக இருந்தால் சொல்ல வேண்டியதில்லைதான். ஆனால் அறக்கட்டளைக்கு வரும் ஒவ்வொரு ரூபாயும் யாரோ ஒரு மனிதனுடைய வியர்வை.  அவரவர் குடும்பத்துக்கு உரிய பணம். தான் உழைத்துச் சம்பாதித்ததை நம்மை நம்பி அனுப்புகிறார்கள். அவர்களுக்கு மனப்பூர்வமான திருப்தி வரும்படியில் கணக்கைச் சொல்லிவிட வேண்டியது அடிப்படையான கடமை இல்லையா? 

பணம் பெரிய விஷயமே இல்லை. ஆனால் நம்பிக்கை மிகப் பெரிய விஷயம். ஐந்து ரூபாயைச் சட்டைப்பையிலிருந்து எடுத்துக் கொடுக்க பத்து முறையாவது யோசிப்போம். ஆனால் லட்சக்கணக்கில் அல்லவா கொடுக்கிறார்கள்? அந்த நம்பிக்கையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அடுத்தவர்களின் பணம் என்று வரும் போது அதீதமான கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதுதான் காரணம்.  எல்லோரும் நினைப்பது போல கணக்கைப் பராமரிப்பது என்பது பெரிய வேலையெல்லாம் இல்லை. தில்லாலங்கடியாக ஏதாவது செய்வதாக இருந்தால் பெரிய வேலையாக இருக்கக் கூடும். இருப்பதை இருப்பது போலச் சொல்வதற்கு சிரமப்பட வேண்டியதில்லை. வங்கியின் ஸ்டேட்மெண்ட்டை அப்படியே திரைச்சொட்டு எடுத்துப் போடுவதற்கு என்ன பெரிய வேலை?

மடியைச் சுத்தம் செய்து வைத்துக் கொண்டால் வழியில் பயம் வேண்டியதில்லை. இல்லையென்றால் நாய் குரைத்தால் கூட பயப்பட வேண்டியிருக்கும்.

20 எதிர் சப்தங்கள்:

ADMIN said...

உண்மைதான் மடியை சுத்தம் செய்து வைத்துக்கொண்டால் வழியில் பயம் இல்லைதான். உன்னதமானவர்களையும் சில நேரங்களில் மன உளைச்சலுக்கு ஆளாக்கும் கொடிய கிருமிகளை கண்டிருக்கிறேன். எது வந்தாலும் உறுதி குலையாமல் உங்கள் பணியைச் செய்திடுங்கள். வாழ்த்துகள்..!

RAGHU said...

difference seems to be 2034. check it up.

Anonymous said...

"மடியைச் சுத்தம் செய்து வைத்துக் கொண்டால் வழியில் பயம் வேண்டியதில்லை. இல்லையென்றால் நாய் குரைத்தால் கூட பயப்பட வேண்டியிருக்கும்." - அருமை

'சொல்வது எளிது செய்வது கடினம்' - என்பார்கள்.
ஆனால், இன்றைய காலகட்டத்தில் "சொல்வதே கடினம் செய்வது அதைவிட கடினம்".

அதிலும் தாங்கள் அதீதமான கவனம் எடுத்துச் செய்வது மிகப்பெரிய காரியம்.
நற்பணி நலமுடன் தொடருங்கள்...

Vaa.Manikandan said...

நிஜமாகவே என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. எந்த இடத்தில் வித்தியாசம் வருகிறது என்று கண்டுபிடித்துச் சொல்லுங்கள் ரகு!

SHARAN said...

The Difference is Rs.2034.00, Not Rs.200

Unknown said...

Yes. The difference is Rs 2034. You should have Rs.4161907 on hand as on specified date. But you have Rs. 4159803 (After deducting the unpaid cheque Rs.119135). So.. Rs.4161907-4159803 = 2034.

Check the 1) total expenses once again 2) total unpaid bills

Sundar Kannan said...

There's a difference of -2034 rupees.
Just a small help from myside by doing some calculations.

Amnt Balance as of 02 Dec 837636.15
Donation rcvd from 03 Dec to 15 Dec 4159602.66 (+)
------------
Total credited Amount (A) 4997238.81
------------

Expense on 1st Phase of relief work 835332.00
uncleared cheques 119135.00 (-)
-----------
Amount Debited from A/c (B) 716197.00
-----------

Actual balance in A/c 4279007.81
Calculated Balance (A-B) 4281041.81 (-)
----------
Difference -2034.00
----------

Anonymous said...

=(3324270+837636.15+119135.00-4279007.81)
=(4159602.66+837636.15-835332.00-4279007.81+119135.00)

Vaa.Manikandan said...

இரண்டாயிரமா? அடக் கொடுமையே...ரசீதுகளை ஒரு முறை சரி பார்த்துவிடுகிறேன். நன்றி.

RAGHU said...

bank balance as at 2.12 - 837636.15
add : flood relief donations 4159602.66
------------
4997238.81
less :
relief material 835332
cheques to
be encashed 119135 716197.00
-----------------
4281041.81
less:
item 111.Krishna monthly 2000
item 324.bank charges 34 2034.00
------------------
4279007.81

bank balance 4279007.81
Tallied.

Vaa.Manikandan said...

நன்றி ரகு. நான் கொஞ்சம் மண்டை காய்ந்துவிட்டேன்... அப்படியென்றால் யாருக்கு மன்ச் கொடுப்பது? :)

RAGHU said...

Bank account is tallied.
difference in your post due to non-consideration of item 111 , 342
amt 2000 + 34 = 2034

www.rasanai.blogspot.com said...

dear mani
Honesty is the best policy which you are carrying efficiently by informing all in a transparent manner esply the way you are saying "seeing donated money as Somebody's sweat and blood" -- True. we all have faith on you. carry on the good job. keep it up.

reg the other activities like supporting a village, helping small business people, etc., My vote always goes for our nisaptham's main mission ie., medical help and education to the needy poor people. pl stick on to that. if nisaptham is going to support a whole village, then my suggestion is pick any of the hilly villages in and around dharmapuri, there is a hamlet called "Thellai" in javadhu hills (vellore) where i had been for service a couple of years back. solar electrification in hilly villages can also be considered which helps children study in night and also prevents animals entering hamlets. lot of school children are suffering to go to school in dharmapuri (by crossing a lake daily)-- forgot the village name, there is this "Cuckoo movement" doing a good job in children education around dharmapuri.
my opinion is instead of concentrating on a whole village, spread out the helping net to all over TN for the needy people for medical assistance and education. i understand that going big all over TN requires more volunteers, time and effort whereas concentrating on a small village does not require that much efforts. regular visits to the hilly villages by the volunteers and providing amenities will be an easy task, i agree. definitely hilly village gullible people are so under priviledged as i encounter them during my wildlife census activities. # so pathetic. nothing reaches them because of inaccessible remote areas. life is so miserable, similar to 5 doomsday of chennai -- everyday for them. we are all supporting nisaptham activities whatever be the end product. best wishes
anbudan
sundar g chennai

RAGHU said...

I will collect the Munch when you come to Chennai for book fair in Jan 2016

சேக்காளி said...

//அப்படியென்றால் யாருக்கு மன்ச் கொடுப்பது? //
கணக்கை சரி பார்த்து அதனை உங்களுக்கு தெரியப்படுத்திய அத்தனை பேருக்கும் தான் கொடுக்க வேண்டும்.
இல்லை நான் சரியான கஞ்சன் என்பதை நிரூபித்து தான் ஆவேன் என்றால் மன்ச் ஐ மகிக்கு கொடுத்து விட்டு மகியிடமிருந்து பறக்கும் முத்தத்தை அனைவருக்கும் (கணக்கை சரி பார்த்து கொடுத்தவர்கள்)அனுப்பி விடுங்கள்.

Nandhakumar BALA said...

Dear Manigandan,
I sincerely appreciate your honest reporting of the accounts in the public domain.
Hats Off to you.
Nandhakumar Bala,
Saudi Arabia.

www.rasanai.blogspot.com said...

@ raghu (for info)
i think chennai book fair has been postponed to april 2016. # moondram nathi

sundar g chennai

Vinoth Subramanian said...

Super ragu sir and others!!!!

RAGHU said...

@rasanai , Thanks for the info.

அமலசிங் said...

வா மணிகண்டன், சேவைக்கு நன்றி. ரூ.50,000.19 இப்போது moneygram சேவை மூலம் உங்கள் வங்கிக்கணக்குக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை வாசிகளுக்கு பிரித்தனில் இருந்து https://crowdfunding.justgiving.com/chennaifloodrelief2015 மூலம் வசூலித்து அனுப்பி உள்ளேன். பணம் பெற்றுக்கொண்டதற்கான உறுதிப்பாடு, மற்றும் பயனாளிகள் புகைப்படங்கள் அனுப்பினால் சிறப்பாக இருக்கும்.
amalasingh at gmail dot com